search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #ModiNomination
    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த முறையும் மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக பாஜகவினர் இரவு பகலாக தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரணாசியில் நேற்று மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் உள்ள காகாலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். 11.30 மணியளவில் வாரணாசி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


    இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். #LokSabhaElections2019  #ModiNomination  #LokSabhaElections2019 #ModiNomination
    மகாராஷ்டிராத்தில் இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    மும்பை :

    மகாராஷ்டிராத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

    4-வது மற்றும் இறுதிக்கட்டமாக வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 17 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) ஓய்கிறது.

    மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.



    இவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வருகிறார்.

    மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பிரதமருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பங்கேற்கிறார்.

    இதற்காக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் செய்ய  மகாராஷ்டிராம் வருகிறார். ஷீரடி பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சங்கம்நேர் பகுதியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

     மகாராஷ்டிராத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

    இதனால் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல்களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #Arvind Kejriwal #RahulGandhi #LokSabhaElections2019
    புதுடெல்லி :

    டெல்லியில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆம் ஆத்மிக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவு இல்லை, ஆனால் நாட்டை காப்பாற்றவே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி அமைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஒருவேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஒரு நபர் தான் அதற்கு பொறுப்பாக இருக்க முடியும், அது ராகுல் காந்தி தான்.

    டுவிட்டரில் எந்த கூட்டணியை அமைத்தீர்கள் என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருந்தால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேஜைக்கு வந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் கருத்துகளை தெரிவிப்பதால் எந்த பிரச்சினையும் தீர்ந்துவிடாது.



    தான் இறுதிவரை ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சித்ததாக ராகுல் காந்தி கூறுவது, அவரது மனப்பாங்கு. அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.

    காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தால், நான் அனைத்து (7) தொகுதிகளையும் காங்கிரசுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு 4:3 தொகுதிகள் என்பது, பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவது போன்றது தான். அதாவது காங்கிரசுக்கு கொடுக்கும் 3 தொகுதிகளும் தோற்று தான் போகும். பா.ஜனதாவுக்கு 3 தொகுதிகளை கொடுக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை.

    கேரளா, அரியானா, கோவா, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வலுவிழக்கச் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு இந்துவின் ஓட்டு கூட கிடைக்காது. நாட்டை காப்பாற்ற விரும்பும் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணந்து ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவார்கள்.

    தொகுதி உடன்பாட்டில் சில நிபந்தனைகளை விதித்தனர். அவை எனக்கு கடினமானதாக இருந்தாலும் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டதும், டெல்லி தவிர வேறு எங்கும் கூட்டணி இல்லை என்று பின்வாங்கினர். அடுத்த ஆட்சி அமைப்பதில் டெல்லியின் 7 தொகுதிகள் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். Kejriwal #RahulGandhi #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார். #LokSabhaElections2019 #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.

    சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



    இதில் 2 தொகுதிகளுக்கு 2 பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கட்சி மேலிட தலைவர்கள், வேட்பாளர்களின் பெயா்களை நாளை (அதாவது இன்று) அறிவிப்பார்கள்.

    அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் டாக்டர் உமேஷ்ஜாதவ்வின் சகோதரர் ராமச்சந்திர ஜாதவ் மற்றும் குந்துகோல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஐ.சிக்கனகவுடர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் உயரும். தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலம் 104-ல் இருந்து 106 ஆக உயரும்.#LokSabhaElections2019 #Yeddyurappa
    உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் மோடி கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இதையொட்டி, பாஜக சார்பில் வாரணாசியில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இதில் பங்கேற்றார்.



    தொண்டர்கள் சூழ பிரதமர் மோடி சாலையில் ஜீப்பில் நின்றபடி தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை அடைந்தார். இதையடுத்து கங்கை நதியை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு கங்கா ஆரத்தி செய்து வழிபாடு நடத்தினார்.  
     
    முன்னதாக, வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Modi
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதால் அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று மாலை பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
     


    வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.  #LokSabhaElections2019 #Modi
    பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம் என சத்பால் சிங் சத்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #SatpalSinghSatti
    சிம்லா:

    பாராளுமன்ற தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இமாசல பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா தலைவர் சத்பால் சிங் சத்தி பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இமாச்சலபிரதேச மாநிலம் மாண்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம்.

    இவ்வாறு சத்பால் சிங் சத்தி பேசினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் ஏற்கனவே காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் பேசி இருந்தார்.



    பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல்காந்தி கூறியதற்காக அவரை கடுமையான வார்த்தைகளில் சத்பால் சிங் விமர்சனம் செய்தார். இதனை அடுத்து ராகுல் காந்தியை பற்றி அவதூறாக பேசியதற்காக 48 மணிநேரம் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.

    தடைக்கு பிறகு சத்பால் மீண்டும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டியுள்ளார். #BJP #SatpalSinghSatti
    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். #LokSabhaElections2019 #Priyanka #Modi
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தியை  வேட்பாளராக நிறுத்தலாம் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. அவர் வரும் 29-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்புஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவார் எனவும், கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரி போட்டியிடுவார் எனவும், கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #Priyanka #Modi
    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiNomination
    வாரணாசி:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். இதனால் வாரணாசியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    முதலில், வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மோடி, அந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பிற்பகல் 3 மணிக்கு பேரணி செல்கிறார்.



    வாரணாசியில் உள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார்.

    நாளை வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு, புறப்படும் அவர், 11.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். #LokSabhaElections2019 #Modi #ModiNomination
    பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். #GauthamGambhir #LoksabhaElections2019
    புதுடெல்லி:

    பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

    கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.

    அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

    டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தனது வேட்புனுவில் தனக்கு ரூ.24 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு ரூ.4.33 கோடிக்கு தான் சொத்துக்கள் இருந்தது. கடந்த 5 ஆண்டுக்குள் அவருக்கு ரூ.20 கோடி சொத்து அதிகரித்துள்ளது.


    தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜேந்திர சிங் ரூ.1.37 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி ரூ.18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் வடக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு ரூ.4.92 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் நிஜாமுதின் பகுதியில் ரூ.1.88 கோடிக்கு பங்களா இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 வயதாகும் ஷீலாதீட்சித் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GauthamGambhir #LoksabhaElections2019
    வாரணாசியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜக ஊடக மையத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார். #AmitSha #BJP
    வாரணாசி:

    குஜராத் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் தனது குடும்பத்தினருடன் பாஜக தேசிய தலைவரான அமித் ஷா வாக்களித்தார்.

    அதன் பின்னர் பிரதமர் மோடி போட்டியிடும்  வாரணாசி தொகுதியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜகவுக்கான ஊடக மையம் மற்றும் பிரதமர் மோடிக்கான தேர்தல் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியதாவது:

    நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவினை காணும்போது, பாஜக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். உத்தரபிரதேசத்தில் பகுஜன் - சமாஜ்வாடி கூட்டணியை விடவும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்த பாஜகவின் கணிப்பை விட தற்போது மிக தெளிவாக உள்ளது.



    வாரணாசி தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். வரும் 25ம் தேதி மாபெரும் ரோட்ஷோ நடைபெறும். அதன் பின்னர் பிரதமர் மோடி 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருப்பார்கள்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ‘இந்து பயங்கரவாதி’,  ‘பகவா பயங்கரவாதி’ என பேசியுள்ளார். நிச்சயம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து மதத்தின் கலாச்சாரம் யாரையும் காயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #AmitSha #BJP 
     
    பா.ஜ.க.வில் இன்று இணைந்த இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அக்கட்சி அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
    புதுடெல்லி:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
     
    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க.வில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, சன்னி தியோல் பா.ஜ.க. தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இன்று இணைந்தார்.



    இந்நிலையில், இன்று இரவு பாஜக சார்பில் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், ஹொசைர்பூர் தொகுதியில் சாம் பிரகாஷும், சண்டிகரில் கிரண் கெர் ஆகியோரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
    ×