search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    இந்திய பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் ஊழல் செய்து குவித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து மம்தா பானர்ஜி பிரதமர் நாற்காலியை விலைக்கு வாங்கி விடுவார் என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PMModi #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக  பாஜக சார்பில் அன்சோல் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட் பேசியதாவது:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் வழிப்பறி மூலம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அவர் முயற்சிக்க திட்டமிட்டுள்ளார். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.



    மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை மம்தா பானர்ஜி தங்களது கட்சிக்காரர்களாக மாற்றியுள்ளார். மேலும், வெளிநாட்டுக்காரர்களை வைத்து தங்களது கட்சிக்கு பிரசாரம் செய்து வருகிறார். இது மிகவும் அவமானகரமானது.

    இந்திய பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் ஊழல் செய்து குவித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து மம்தா பானர்ஜி பிரதமர் நாற்காலியை விலைக்கு வாங்கி விடுவார் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #PMModi #MamataBanerjee
    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் பொய் பிரசாரம் செய்தாலும் நாட்டு மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது மூன்றாம், ஐந்தாம் கட்ட தேர்தலில் பிரதிபலிக்கும். மோடி மீண்டும் பிரதமராவார். தூத்துக்குடியில் தாமரை வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

    ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். அ.தி.மு.க. வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு. அவர்களது வெற்றிக்கு பாடுபடுவேன். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். தூத்துக்குடியில் துப்பாக்கி நடமாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்லியுள்ளார்.

    பயங்கரவாத கலாச்சாரம் எந்த விதத்திலும் தூத்துக்குடியில் தலை எடுத்து விடக்கூடாது. இன்று தி.மு.க.வை சேர்ந்தவர் தனது சகோதரரை சுட்டுக்கொன்று உள்ளார். இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.

    இதே போல் எத்தனை பேர் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. தூத்துக்குடி அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்காக தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம்.

    தூத்துக்குடி மேம்பாட்டிற்கு எனது பணி எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழகத்தில் 40 இடங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அத்திட்டத்தை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. தான். ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் 54 இடங்களில் கையெழுத்து இடும்போதும் தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த யோசனை செய்வோம் என்ற அவர் மக்களுக்கு விருப்பமில்லாத எதையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.  #BJP #TamilisaiSoundararajan #DMK
    கேரள வாக்குப்பதிவில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்திற்கு விளக்கு எரிந்ததால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019

    கோவளம்:

    கேரள மாநிலத்தின் 20 பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. திருவனந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோவளம் சொவ்வரா வாக்குச் சாவடியில் 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித்த போது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள விளக்கு ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார்.

    இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கே.வாசுகி இந்த வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார்.

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்ததா என்பதை பரிசோதித்து பார்ப்பது இப்போது இயலாத காரியம் என்பதால் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மக்கள் வாக்களித்தனர். #LokSabhaElections2019

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகரான சன்னி தியோல் இன்று பா.ஜனதா தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். #BJP #SunnyDeol
    அமிர்தசரஸ்:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜனதா கட்சி சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.

    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜனதாவில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சன்னி தியோல் இன்று பா.ஜனதா தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். முன்னதாக சன்னி தியோல் கடந்த 19ந்தேதி டெல்லி விமான நிலையத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.



    சன்னி தியோல் பா.ஜனதாவில் இணைந்தது பற்றி நிர்மலா சீதாராமன் கூறும்போது ‘சன்னி தியோல் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். சிறந்த தலைவராக விளங்குவார் என்று நம்புகிறோம்’ என்று கூறினார்.

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #BJP #SunnyDeol
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    வாரணாசி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதில் வாரணாசி தொகுதியில், சமாஜ்வாடி போட்டியிடுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

    இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #Gambhir #bjp #parliamenetelection
    டெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் தோனி தலைமயிலான 2011, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடினார். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம். ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருந்தார்.

    பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக இவர் தெரிவித்தார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் லோக்சபா தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். #Gambhir #bjp #parliamenetelection
    சமாஜ்வாடி கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் பா.ஜனதாவில் சேர்ந்ததால் இழந்த கவுரவம் மீண்டும் கிடைத்துள்ளதாகவும் நடிகை ஜெயப்பிரதா கூறியுள்ளார். #ActressJayaPrada
    இந்தி, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. அரசியலில் நுழைந்த இவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

    முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராம்பூரில் ஒன்பதாவது முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆசம் கான். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜெயப்பிரதாவை பா.ஜனதா நிறுத்தியுள்ளது.

    ஆசம்கானால் தனது அரசியல் ஆசானான அமர்சிங்குடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறியவர் ஜெயப்பிரதா. இவருக்கும் ஆசம்கானுக்கும் இடையே ராம்பூரில் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெயப்பிரதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    கேள்வி:- சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    பதில்:- எனக்கு இந்த பகுதி மக்களை 2004 முதல் தெரியும். அவர்களுக்கும் நான் சமாஜ்வாடி கட்சியில் எப்படி இருந்தேன் என்பதும் தெரியும். நான் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து பார்த்ததே இல்லை. என் பிறந்தநாளின் போது கோவிலுக்கு செல்லும் போது மசூதிக்கும் செல்வேன்.

    ஆனால் ஆசம்கான் அப்படி இல்லை. எனக்கு இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு தரப்பிலும் இருக்கும் செல்வாக்கை பார்த்து பயந்துதான் 2009 முதல் அந்த கட்சியில் என்னை தனிமைப்படுத்தினார்.

    கே:- சமாஜ்வாடி கட்சிக்கும் பா.ஜனதா கட்சிக்கும் என்ன வித்தியாசம்?

    ப:- பா.ஜனதா என்பது தேசிய கட்சி. சமாஜ்வாடி மாநில கட்சி. ஒரு பெண் பிரபலமாகவும் அரசியல் வாதியாகவும் பா.ஜனதா கட்சியில் என் கவுரவமும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் நான் அவமானப் படுத்தப்பட்டேன். அங்கே நான் இழந்த கவுரவம் இங்கே கிடைத்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் மோசமான விதி முறைகளால் எனது சினிமா வாழ்க்கையை இழந்தேன்.

    கே:- பொதுக் கூட்டங்களில் சினிமாவில் நீங்கள் பேசிய வசனங்களை பேச சொல்லியோ பாட சொல்லியோ கேட்கிறார்களா?

    ப:- இல்லவே இல்லை. இந்த மக்களுடன் ஒரு அரசியல்வாதியாக 2004 முதல் இருக்கிறேன். தொடக்கத்தில் இதுபோன்ற கோரிக்கைகள் இருந்தன. இப்போது இல்லை. இந்த மக்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆசம் கான் போன்றவர்கள்தான் என்னை சினிமாக்காரராக பார்க்கிறார்கள்.

    கே:- ஒருவேளை நீங்கள் எம்.பி.யாகி, மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தால் உங்களை மோடி அமைச்சரவையில் பார்க்க முடியுமா?

    ப:- அப்படி ஒரு எதிர்பார்ப்போ எண்ணமோ என்னிடம் சுத்தமாக இல்லை. பா.ஜனதாவை பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வைப்பதே என்னுடைய நோக்கம். ஆனால் மோடி பிரதமரானால் எந்த பணி கொடுத்தாலும் அதில் ஈடுபட தயாராக இருக்கிறேன்.

    கே:- ஜெயா பச்சன் சமாஜ்வாடியில் இருக்கிறாரே?

    ப:- அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ActressJayaPrada
    மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்று ஆனந்த்சர்மா கூறியுள்ளார். #anandsharma #rahulgandhi #pmmodi

    பனாஜி:

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன. 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தனர். அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.

    நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மோடியும், பா.ஜனதாவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது.


    அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும், நமது வீரர்களின் தியாகத்தையும் அவமதித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது குறித்து காங்கிரசுக்கு பா.ஜனதா பாடம் நடத்த தேவையில்லை. காங்கிரஸ் பழமை வாய்ந்த கட்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 2 பிரதமர்களை இழந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் கூறும்போது, “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்“ என்றார். #anandsharma #rahulgandhi #pmmodi

    மேற்கு வங்காளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அகதிகளுக்கு உறுதியாக இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என கூறினார். #Amitshah #BJP
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வரும் ஏப்ரல் 23,29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தாவில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    வங்காள தேசத்தில் இருந்து வரும் அகதிகள் இந்து, புத்தம், சீக்கியம், ஜெயின், கிறிஸ்துவர்கள் என எந்த மதத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் பாஜக சங்கல்ப பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.



    முதலில் குடியுரிமை சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்படும். பின்னர் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதன் பின்னர் இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு கொண்டு வரப்படும். எனவே அகதிகள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை.

    இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்கள் தான் கவலை கொள்ள வேண்டும்.  இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு மேற்கு வங்காளத்திற்கு மட்டுமல்ல. நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Amitshah #BJP





    பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களிடம் தேசபக்தி உண்டு. காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என குற்றம் சாட்டினார். #LokSabhaElections2019 #PMModi
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

    பீகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம்ர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது தேசநலனையும், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும் பின்பற்றுகின்றன.

    பல பயங்கரவாத தாக்குதல்களில் ஓட்டு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசைதிருப்பியது. ஆனால் பா.ஜனதா அரசு உரி தாக்குதலுக்காக துல்லிய தாக்குதலையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான் தாக்குதலையும் நடத்தியது. இந்த நாடு தேச பக்தி, ஓட்டு பக்தி ஆகிய இரண்டு விதமான அரசியலையும் பார்த்துள்ளது என தெரிவித்தார். #LokSabhaElections2019 #PMModi
    நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #NDAgovt #NDAbetrayed #Priyanka #Priyankainwayanad
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மனத்தாவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இது என் நாடு, இங்குள்ள மலைகள் என் நாட்டை சேர்ந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என் நாட்டை சேர்ந்தது. குஜராத் என் நாட்டை சேர்ந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த ஒரே காரியம் இந்த நாட்டை பிளவுப்படுத்தியதுதான் என்று குற்றம்சாட்டினார்.



    ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இந்த நாட்டு மக்கள் அந்த அரசின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதிகாரத்தை பிடித்ததும் மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் வஞ்சனை செய்தனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.

    அதிகாரம் மக்களுக்கானது அல்ல; ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.

    பிறந்ததில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். #NDAgovt #NDAbetrayed #Priyanka  #Priyankainwayanad

    டெல்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என தெரிவித்தார். #PMModi #TradersConvention
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள தல்காதோரா மைதானத்தில் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: 

    வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது. 

    முந்தைய காங். ஆட்சி பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் வர்த்தகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தொழில்வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. 

    கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது. நாங்கள் ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தில் கடனை உடனடியாக வழங்கி வருகிறோம். வர்த்தகர்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடனை வெறும் 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். 

    உங்களின் ஓய்வில்லாத உழைப்பு என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கு எந்த பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும். கடன் அட்டையும் அளிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டார். #PMModi #TradersConvention
    ×