search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    அசாம் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி சர்மாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி உள்ளார். #AssamBJPMP #RPSharma
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு உள்ள தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்மா, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இத்தகவலை பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்பில் 15 ஆண்டுகளும், பாஜகவில் 29 ஆண்டுகளும் பணியாற்றிய நான் இப்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மாநில பாஜக குழு அனுப்பிய வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை அவமதித்துவிட்டார்கள்’ என சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகிய அசாம் எம்பி சர்மா - டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா

    செல்வாக்கு மிக்க மாநில அமைச்சரான டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயர் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் உள்ளது. அவர் தேஜ்பூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சர்மா, தேசிய கட்சியில் சேர உள்ளதாக கூறி உள்ளார். அவர் காங்கிரசில் சேர்ந்து தேஜ்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. #AssamBJPMP #RPSharma

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 11-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வெளியிட்டு வருகின்றன. பா.ஜனதாவின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாக உள்ளன.


    பா.ஜனதாவின் தேர்தல் குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முதலாவது வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும் வகையில் மோடி ஆலோசனையின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போதைய பா.ஜனதா எம்.பி.க்கள் மக்களுக்கு செய்த பணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் பா.ஜனதாவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP #NarendraModi
    நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பாஜக முன்னாள் தலைவர்களில் ஒருவரான நானா படோலே அறிவிக்கப்பட்டு உள்ளார். இது நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. #NanaPatole #NitinGadkari
    பண்டாரா- கோண்டியா தொகுதி எம்.பி.யான நானா படோலே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் நானா படோலே நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது பாஜக மூத்த தலைவரான மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சொந்த தொகுதியாகும். நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரி இந்த தடவையும் அந்த தொகுதியிலேயே போட்டியிட உள்ளார். இதனால் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்கு பலத்த போட்டியாக நானா படோலே விளங்குவார் என்று கருதப்படுகிறது.

    நானா படோலே நாக்பூரில் போட்டியிடுவது குறித்து நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது.



    இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    இது நல்லது தான். எந்த வேட்பாளரும் யாரையும் எதிர்த்து போட்டியிட உரிமை உள்ளது. எந்த ஒரு வேட்பாளரையும் பற்றி விமர்சிப்பதிலும், குறைகூறுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

    நான் மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை எடுத்துக்கூறி ஓட்டுகேட்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவில் இருந்தபோது ஒருமுறை நானா படோலே, நிதின் கட்காரியிடம் ஆசி பெற்றார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்காரி, “ஒருவர் கட்சியில் இருந்து விலகியதால் நான் அவருக்கு வழங்கிய ஆசிர்வாதம் விலகி போய்விடாது.

    நான் அரசியலில் ஒருபோதும் பகைமை உணர்வை கடைப்பிடிப்பதில்லை. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். #NanaPatole #NitinGadkari 
    ஒன்று தோற்றுவிட்டது, மற்றொன்று இன்னும் புறப்படவில்லை என்று காங்கிரஸ் குடும்ப அரசியல் பற்றி அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார். #ArunJaitley #Congress #BJP
    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா விளம்பர குழு பொறுப்பாளருமான அருண் ஜெட்லி சமூக வலைத்தளத்தில் ‘2019 குறிப்பேடு’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது:-

    நேரு காங்கிரசில் இருந்த பல்வேறு தேசிய தலைவர்களை புறக்கணித்துவிட்டு தனது மகள் இந்திரா காந்தியை கட்சியின் தலைவராக்கியதன் மூலம் இந்தியாவில் குடும்ப அரசியலுக்கான விதை விதைக்கப்பட்டது. அதிலிருந்து பரம்பரை, பரம்பரையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி அந்த விருப்பமான குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கே ஒதுக்கப்படுகிறது.

    ஜவகர்லால் நேருவிடம் இருந்து இந்திரா காந்தி, அவரிடமிருந்து சஞ்சய் காந்தி, அவரிடம் இருந்து ராஜீவ் காந்தி. எதிர்பாராத வகையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஒரு குறுகிய காலத்துக்கு (நரசிம்மராவ் காலம்) காங்கிரஸ் தன்னை அந்த குடும்ப அரசியல் விலங்கில் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தது. ஆனால் அதன் பிடியிலிருந்து நீண்டகாலம் வெளியில் இருக்க முடியவில்லை.

    பின்னர் சோனியா காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நீண்டகாலம் பணியாற்றினார். அதன்பின்னர் கட்சி தலைவருக்கான செங்கோலை தனது மகன் ராகுல் காந்திக்கு வழங்கினார். கட்சி இப்போது உற்சாகம் இழந்து இருப்பதால், மற்றொரு குடும்ப உறுப்பினர் (பிரியங்கா காந்தி) அரசியலுக்கு வந்துள்ளார்.

    முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த குடும்ப கட்சிகள் 2014 படுதோல்வியில் இருந்து பாடம் கற்றுள்ளதா? 2019-ல் தோல்வியை தவிர்க்க சாத்தியம் உள்ளதா? சாத்தியம் இல்லை. இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தியா ஒரு முடியாட்சி அல்ல. இது என்ன மன்னராட்சியா? அல்லது பரம்பரை ஜனநாயகமா? பரம்பரைவாதிகள் தகுதி, திறமை வாய்ந்த நபர்களை ஏற்றுக்கொள்வதில்லை.



    தகுதியும், திறமையும் வாய்ந்த ஒரு மனிதரால் இறுதியாக இந்த கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு, பரம்பரை கதைகள் குழிதோண்டி புதைக்கப்படும்போது தான் ஜனநாயகத்தின் உண்மையான வலிமை தெரியவரும். அதுதான் இந்தியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும்.

    அடுத்த தலைமுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருக்கலாம். அனைத்து வாரிசுகளுக்கும் தலைவராகும் ஆசை வரும். அப்போது பெற்றோர் பெருந்தன்மையாக வழங்குவார்கள். சமீபத்திய வரலாறு இதனை வேறுவழியில் நிரூபித்துள்ளது.

    அதிகாரத்தை வாரிசுகள் பங்கிடும்போது யார் பெரிய மன்னர்? என்ற கேள்வி எழும். உத்தரபிரதேசம், பீகார், அரியானா, ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற குடும்ப அரசியல் நிலவுகிறது. ஒரு சோதனையாக கர்நாடகாவில் மகன்கள் மாநிலத்தில் பங்கேற்பதும், பேரன்கள் மத்தியில் பங்கேற்பதும் நடைபெறுகிறது. மராட்டியத்திலும் இது தொடங்கி ஆரம்பநிலையில் உள்ளது.

    காங்கிரஸ் சில சோதனை களையும் செய்துள்ளது. ஒரு உரிமையாளரைவிட 2 உரிமையாளர்கள் சிறந்தது என அக்கட்சி நம்புகிறது. ஒன்று தோற்றுவிட்டது, மற்றொன்று இன்னும் புறப்படவில்லை.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #Congress #BJP
    அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளதையடுத்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று வெளியாகிறது. #ADMK #BJP

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க. வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா.வுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1, புதிய நீதிக்கட்சிக்கு 1, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.

    பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகிவிட்டன. 5-வது தொகுதி எது என்பதில்தான் இழுபறி நிலை இருந்தது. வடசென்னை, திருச்சி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் இருந்து ஒன்றை பா.ஜ.க. கேட்டு வந்தது.

    ஆனால், அ.தி.மு.க. தலைமை பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ராமநாதபுரம் தொகுதியை தருவதாக வாக்குறுதி அளித்தது. இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது, ராமநாதபுரம் தொகுதியை பெற பா.ஜ.க. சம்மதம் தெரிவித்துவிட்டது.



    இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இனி யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகும் என தெரிகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியலை வெளியிட இருக்கின்றனர்.#ADMK #BJP
    கேரளா மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். #Congress #ShashiTharoor #relativesjoinBJP
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பான பணிகளில் தேர்தல் கமிஷனும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர். 
     
    இந்நிலையில், கேரள மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூருக்கு நெருங்கிய உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    பாலக்காட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் உறவினர்களான சோபனா சசிகுமார் மற்றும் அவரது கணவர் சசிகுமார் ஆகியோர் பாஜக ஆதரவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இன்று கொச்சியில் உள்ள அலுவலகத்தில் மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னர் அக்கட்சியில் இணைந்தனர்.

    டெல்லி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் நேற்று பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #Congress #ShashiTharoor #relativesjoinBJP
    அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ தனக்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூறினார். #LSPolls #BJP #VirenderSehwag
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்களை களம் இறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக்கை பா.ஜ.க. சார்பில் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக பா.ஜ.க. பிரதிநிதிகள் அவரை சந்தித்துப் பேசினார்கள்.

    “மேற்கு டெல்லி தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம்” என்று ஷேவாக்கிடம் பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மேற்கு டெல்லி தொகுதியில் தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக பர்வேஷ்வர்மா உள்ளார். ஷேவாக் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அந்த தொகுதியை விட்டுத்தர தயார் என்று அவர் கூறியிருந்தார்.

    ஆனால் பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்க கிரிக்கெட் வீரர் ஷேவாக் மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ எனக்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை” என்றார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் ஷேவாக்கை தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி நடந்தது. அப்போதும் ஷேவாக் போட்டியிட மறுத்துவிட்டார். மீண்டும் அவர் பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை போட்டியிட வைக்க முயற்சி நடந்து வருகிறது. கவுதம் காம்பீர் கடந்த டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.

    அப்போது கிரிக்கெட் உலகுக்கு அவர் செய்த சேவைகளை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் ஆதரவாளராக காம்பீர் மாறினார்.

    அவர் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடக்கும் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் காம்பீர் பங்கேற்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஏப்ரல் முதல் வாரம் வெளியிட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். #BJP #VirenderSehwag
    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். #pollachiissue #kanimozhi

    தூத்துக்குடி:

    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

    ஆனால் அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டுள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக் கூடியதாக தோன்றுகிறது.

    7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதுவரை விசாரணையில் தாமதம் செய்து போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடம்பூர் அருகே ஓணமாக்குளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய தாவது:-

    தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தின் எந்த உரிமைகளை இழந்தாலும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் அ.தி.மு.க. அரசு, தமிழ் விரோதிகளான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.

    அந்த கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் தொழில் அதிபர்களை விட்டு விட்டு, சில ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் வாங்கிய மாணவர்களை கடனை திருப்பி செலுத்துமாறு பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று மத்தியில் தி.மு.க. அங்கம்பெறும் ஆட்சியும் அமையும். அப்போது மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #pollachiissue #kanimozhi

    ஒடிசா மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், மூத்த அரசியல்வாதியுமான தாமோதர் ராவத் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். #OdishaFormerMinister #DamodarRautjoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பான பணிகளில் தேர்தல் கமிஷனும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர். 
     
    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், மூத்த அரசியல்வாதியுமான தாமோதர் ராவத் டெல்லியில் இன்று மாலை பாஜகவில் இணைந்தார். 

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக துணை தலைவர் பைஜயந்த் பாண்டா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். #OdishaFormerMinister #DamodarRautjoinsBJP
    ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் உருவாகாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 15ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக விழா, 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண மஹோத்சவ விழா மற்றும் முரளிதர ஸ்வாமிகள் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நேற்று 108சுமங்கலி பூஜை, கோ மாதா திருக்கல்யாணம், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் காலை கணபதி ஹோமம், கோ பூஜை செய்து 108சுமங்கலிக்கு பூஜையும் கோமாதா திருகல்யாணம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ரத்தனகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வதித்து சிறப்பித்தனர்.இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ராகுல் வருகையால் எந்த ஒரு பெரிய மாற்றம் உருவாகாது. ராகுல் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் மக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகிறார்கள். மக்களிடத்தில் அபத்தமான கருத்துகளை முன்வைப்பார்கள். இவர்களுடைய சரக்கு இவ்வளவுதான் என மக்கள் நினைப்பார்கள்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை பா.ம.க. ஒன்று, பா.ஜ.க. ஒன்று, மற்ற அனைத்தும் அதிமுக கைப்பற்றியது. அப்போது யாருயெல்லாம் வெற்றி பெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் கூட்டணி வைத்திருக்கிறோம் மீண்டும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தை பதற்றம் நிறைந்த தேர்தல் களமாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #BJP #WestBengalElection
    புதுடெல்லி:

    பாஜக மத்திய மந்திரிகள் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொண்ட பாஜக குழு, மத்திய தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

    மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றம் நிறைந்த தேர்தல் களமாக அறிவிக்க வேண்டும் எனவும், அனைத்து பூத்களிலும் மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.



    சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த  கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் 100 பேர் பலியாகினர். இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை தேவை. ஊடகங்கள் தேர்தல் நேரத்தில் சுதந்திரமாக செயல்படுவது மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களின் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

    1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பள்ளிகள்,  கோவில்கள் அருகே பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்கிறார்கள். இது மிகவும் தவறான மற்றும் வருந்தத்தக்க செயலாகும். மேற்கு வங்கத்தில் பல்வேறு கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    பாராளுமன்ற தேர்தல்  ஜனநாயகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியது. இந்த தேர்தல் முறைப்படி எவ்வித பாரபட்சமும் இன்றி நடைபெறும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது, மேற்கு வங்கத்தின் பாஜக பொறுப்பாளர்கள் பூபேந்திரா யாதவ், கைலாஷ் விஜயவர்கயா ஆகியோர் உடனிருந்தனர். #BJP #WestBengalElection 
    திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிபெறும் எனவும் தமிழகத்தில் மோடிக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் எதிரான அலை வீசுகிறது எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று அரசு, குற்றவாளியை பாதுகாக்கும் விதத்திலோ, காப்பாற்றும் விதத்திலோ செயல்படக்கூடாது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி திடீரென உருவான கூட்டணி அல்ல. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போராட்டம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் கூட்டணி உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை மோடியால் மிரட்டி வைக்கப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் வெளியில் இருப்பதே கஷ்டம். இதனால் அச்சுறுத்தி கூட்டணிக்கு கொண்டு வந்தார்கள். அதன்பிறகு இரவில் ஒரு கட்சியிடம் பேசிவிட்டு காலையில் மற்றொரு கட்சியுடன் பேசி கூட்டணி அமைக்கிறார்கள். இது கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி மூழ்கும் கப்பல். இதில் ஏறி உள்ள எல்லா கட்சிகளும் மூழ்கும்.

    கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. விவசாயி முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. அதே நேரத்தில் எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. எங்கள் கூட்டணி 39 தொகுதியிலும் மகத்தான வெற்றியை பெறும். ராகுல்காந்தி நாட்டின் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Congress

    ×