search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பாராளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் காஷ்மீர் தாக்குதல் நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee #PulwamaAttack
    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புல்வாமாவில் மத்திய படை மீது கடந்த 14-ந்தேதி தாக்குதல் நடந்திருக்கிறது.

    உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் அதை முறையாக தடுக்காமல் இருந்துள்ளனர். ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அதுவும் பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் தாக்குதல் நடந்திருக்கிறது. நான் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் மீது ஏன் முன்கூட்டியே கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? இதற்கு பதில் சொல்ல வேண்டும்.



    பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில் 2005 வீரர்களை 78 வாகனங்களில் ஏற்றி ஒட்டுமொத்தமாக முகாம் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏன் இவ்வாறு ஒட்டுமொத்த மாற்றம் செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அதற்கான வாய்ப்பு ஏன் அளிக்கப்பட்டது.

    இந்த தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நாம் அமைதியாக இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தினமும் இதைப்பற்றி வித்தியாசமாக பேசுகிறார்கள். அவர்களுடைய பேச்சை வைத்து பார்க்கும்போது அவர்கள் மட்டுமே தேசப்பற்று கொண்டவர்கள் போலவும், நாங்கள் எல்லாம் வெளிநாட்டினர் போலவும் உள்ளது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #PulwamaAttack
    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என்றும் 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.

    கூட்டணி வி‌ஷயத்தில் அ.தி.மு.க. விரைவு ரெயில் வேகத்தில் செல்கிறது. தி.மு.க. சரக்கு ரெயில் வேகத்தில் செல்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு ஏற்கனவே எடுத்த முடிவு சரியானது. அரசாணை வெளியிட்டது கொள்கை முடிவுதான். ஆலை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் செயல்படாது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #DMK
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக சென்னை வருவதாக இருந்த அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வர திட்டமிட்டிருந்தார். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் அமித் ஷா வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்றைய பேச்சுவார்த்தையின்போது கூட்டணி அறிவிப்பை அமித் ஷா வெளியிடலாம்  என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

    ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அவர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எனவே, கூட்டணி அறிவிப்பு வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்றபிறகு, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அதன்பின்னர் சென்னை வரலாம் என தெரிகிறது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கவர்னரை கண்டித்து 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். #PuducherryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.

    6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

    முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக  தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி  செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,  39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவித்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார்.  மேலும்  ஓய்வூதியம், இலவச அரிசி, காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஆளுநர் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக  புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.   மேலும் அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    இதன் மூலம் 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநில உரிமைக்காக நடைபெற்ற 2வது மிகப்பெரிய போராட்டம் இது என கூறினார்.  போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.#PuducherryCMDharna #KiranBedi  #Narayanasamy #GovernorKiranbedi 
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூறினார். அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். #AIADMKBJPpact #Loksabhapolls #amitshah
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் இன்றிரவு தெரிவித்துள்ளன. #AmitShah #AmitShahvisitChennai #AIADMKBJP #AIADMKBJPpact #Loksabhapolls
    மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ShivSena #BJP #LokSabhaelections #DevendraFadnavis #ShivSenaBJPpact
    மும்பை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ரா பகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார். #ShivSena #BJP #LokSabhaelections #DevendraFadnavis #ShivSenaBJPpact 
    பாராளுன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மும்பையில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact
    மும்பை:

    மத்தியிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள சிவசேனா, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. 2019- பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனியாக போட்டியிடுவோம் என அவ்வப்போது கூறிவந்தன.

    ஆனால், அப்படி தனித்து போட்டியிட்டால் விபரீதமான விளைவு ஏற்படும் என இரு கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். இதனால், கூட்டணி அவசியம் என்ற நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டன,

    இதனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது.
      
    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், பன்ட்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலமணி நேரத்தில் இரு தலைவர்களும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. 

    கடந்த 2014-பாராளுமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பாஜக 23 தொகுதிகளையும், சிவசேனா 18 தொகுதிகளையும் பிடித்திருந்தது நினைவிருக்கலாம்.

    அதே ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுக்கு பின்னர் அங்கு பாஜக ஆட்சி அமையை சிவசேனா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact 
    பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் பாதிப்பு இல்லை என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். #kveeramani #parliamentelection

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மூழ்கும் கப்பல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் எந்த பாதிப்பும் இல்லை. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் கலைத்துறையில் மட்டுமே உள்ளார்.

    திராவிடர் கழக சமூக நீதி மாநாடு, வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


    இட ஒதுக்கீடு, சமூக நீதி குறித்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தலில் மக்களின் கடமைகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #kveeramani #parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk #parliamentelection

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே இது போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

    ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துச் சென்றாலும், தமிழகத்தில் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.

    இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதனாலேயே உள்ளாட்சிகளில் தி.மு.க.வை பலப்படுத்துவதற்காக ஊராட்சி சபைக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    தற்போதைய நிலையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk #parliamentelection

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக அனுமதிக்காது. நமது ராணுவம் சரியான பதிலடி தரும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #Modigovernment #sacrificeofjawans #AmitShah
    ஜெய்ப்பூர்:

    பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

    'எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.

    பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகதான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.

    மோடியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மாபெரும் கூட்டணியின் முழக்கமாக உள்ளது. இந்த கூட்டணியின் தலைவர் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும்.


    புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்காது. நமது ராணுவம் இதற்கு சரியான பதிலடியை கொடுத்தே தீரும்’ என இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.  #Modigovernment #sacrificeofjawans #AmitShah #Pulwamajawans #Pulwamaattack
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து வருவது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்து வருவது போல் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

    தீவிரவாத தாக்குதலால் ராணுவ வீரர்களின் இன்னுயிரை இழந்த சோகத்தில் நாடே தவித்து கொண்டிருக்கிறது. அதற்கான பின் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

    ஆனால் இங்கோ மு.க.ஸ்டாலின் பாண்டிச்சேரி முதல்வரின் தர்ணாவை முடித்து வைப்பதில் தீவிர கவனமாக இருக்கிறார். அந்த தர்ணாவை முடித்து வைக்க மோடி அக்கறை காட்டவில்லை என்கிறார்.

    உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் தூத்துக்குடி அருகே வந்த அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல் தூரத்தில் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வீரமகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துக்கூட வரவில்லை. என்னே தேசப்பற்று? உங்கள் ஜனநாயக கடமையை என்னவென்று விவரிப்பது.



    கிராம பஞ்சாயத்து டூர் நடுவே கேள்வி கேட்கிறது அறிவாலயம். மோடி வெளிநாடுகள் டூர் சென்று வந்ததால்தானே உலக நாடுகளே நமக்காக குரல் கொடுக்கின்றன. கேலி பேசிய ஊழல் விஞ்ஞானிகளுக்கு இப்போதாவது புரிந்ததா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கள் கூட்டணி, நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளிவரும்.

    தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே போராட்டம் நடத்துவது ஒன்றையே கலாச்சாரமாக மாற்றி வருகிறார்கள்.

    தமிழகம் அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் பாண்டிச்சேரியில் தொடரும் போராட்டம் இங்கேயும் வரும் என்கிறார். அதாவது தமிழகத்தையும் போராட்ட களமாக்க பார்க்கிறார். மக்கள் இதை அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
    ×