search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக 303 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 350க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

    இதேபோல், காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் டிரம்பின் மகள் இவாங்கா இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் மக்களுக்கு ஆனந்தமான நேரம் இதுவாகும்’ என தெரிவித்துள்ளார்.
    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க பதவி ஏற்பார் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    தேனி:

    தேனியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மக்கள் பணத்துக்கு மயங்கி விட்டனர். நாங்களும் பணம் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இனி வரும் தேர்தல்களில் பணம் கொடுத்தால் மட்டுமே மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இத ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தமிழகம் முழுவதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போது தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது எப்படி? இது தேர்தல் ஆணையத்தின் ஆசியால்தான் நடந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.


    இந்த வெற்றியின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தனக்குள்ள செல்வாக்கை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பார். அதன் மூலம் பா.ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    எங்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கொடுத்தது தேர்தல் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது. இந்த சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. தேர்தலில் எனக்கும் எங்களது கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தோல்வியால் சோர்ந்து போகவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட அமேதியில் தோற்றுப் போயுள்ளார். இதே போல் தமிழகத்தில் தமிழிசை, எச்.ராஜா, அன்புமணி ராமதாஸ் போன்றோரும் தோற்றுப் போயுள்ளனர். தோல்வியில் இருந்து துவண்டு விடாமல் மீண்டும் எங்களது பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபால் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குரும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் போட்டியிட்டனர்.

    இதில் சாத்வி பிரக்யா சிங் 8,66,482 வாக்குகளும், திக்விஜய் சிங் 5,01,660 வாக்குகளும் பெற்றனர். சாத்வி பிரக்யா சிங் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலையில் காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? இது எனக்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் தோல்வி ஏற்பட்டு உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவை மற்ற மாநிலங்களில் மக்கள் ஏற்று இருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஏற்கவில்லை. அவருடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.


    மோடியின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. நீட், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களால் தமிழக கட்சிகள் இரட்டை நிலையில் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி இன்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் வாழ்த்து பெற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்புகளின்படி அபாரமான மெஜாரிட்டியுடன் மத்தியில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும்  முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று ஆசி பெற்றார். அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்றிருந்தார்.



    இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் ‘இவர்களைப் போன்ற மிக உயர்ந்த தலைவர்கள் கட்டமைக்கவும் புதிய சித்தாந்தங்களின் மூலம் மக்களை ஈர்க்கவும் முன்னர் ஆற்றிய அரும்பணிகளால்தான் இன்று பாஜகவின் இந்த வெற்றி சாத்தியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே ராகுல் காந்தி, ஸ்மிரிதி ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும்.  தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி இரானி கூறியதாவது:



    அமேதிக்கு இன்று புதிய விடியல். இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் நம்பிக்கையை வாக்குகளாக செலுத்தியுள்ளீர்கள். தாமரையை அமேதியில் மலர வைத்துள்ளீர்கள். அமேதி தொகுதிக்கு பணியாற்ற என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்று செயல்பட்டோம். தொண்டர்களின் மிகச்சிறப்பான பணிகளால் வென்றுள்ளோம். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
     

     
    பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.



    அதேபோல பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் அந்த கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

    அதற்கேற்ப டெல்லி வரும்படி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி வகித்து உள்ளார். அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய மந்திரியானது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.

    எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது.

    நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.



    தற்போது மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வரும் காலத்தில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்நிலை உருவாகும். பின்னால் அது மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க.ஸ்டாலினால் வெளிநடப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

    தமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். அதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். நாங்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் அதிக கவனம் பெற வேண்டும் என்ற எச்சரிக்கையை பெற்றுள்ளோம். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.
     


    அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 467598 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4,13,394 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ராகுலைவிட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஸ்மிருதி இரானி.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 5,24,926 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யா 4,30, 537 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் முலாயம் சிங் 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    உபியின் அசம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 6,21,578 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான தினேஷ் லால் யாதவ் நிராஹுவா 361704 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

    இதேபோல், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தனக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
    ×