search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. 

    தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

    இதில், கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். தமிழிசையைவிட கனிமொழி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 49,222 வாக்குகள் பெற்றார்.
    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
     வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் 
    வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
    காஞ்சிபுரத்தில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே. மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    நாம் தமிழர் கட்சி 62771 வாக்குகளும், அமமுக 55213 வாக்குகளும் பெற்றன.
    கோவை பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 5,67,741 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    கோவையில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிஆர் நடராஜனும் போட்டியிட்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிஆர் நடராஜன் 5 லட்சத்து 67 ஆயிரத்து 741 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சி.பி. ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 90 ஆயிரத்து 823 வாக்குகள் பெற்றார்.

    நாம் தமிழர் கட்சி 60,391 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 144809 வாக்குகளும், அப்பாத்துரை 37989 வாக்குகளும் பெற்றனர்.
    பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இன்றிரவு டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது தொண்டர்கள் முழக்கமிட்டு எழுச்சியுடன் வரவேற்றனர்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்றிரவு சுமார் 7 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு அமித் ஷா, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பலர் வருகை தந்தனர்.

    அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் மேளதாள இசையுடன் உற்சாகமாக நடனமாடியும் அவர்களை வரவேற்றனர். அமித் ஷா வாழ்க, மோடி வாழ்க என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

    தொண்டர்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷாவும் மோடியும் அவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அமித் ஷா இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.



    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல்கள் இவை அத்தனையையும் கடந்து அங்கு நாம் 18 இடங்களை பெற்றுள்ளோம்.

    50 ஆண்டுகால இந்திய தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த கட்சியும் இதுபோல் தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படிப்பட்ட மகத்தான வெற்றியை பெற்றதில்லை. பிரதமர் மோடி தலைமையிலான நல்லரசு மீண்டும் அமைய வேண்டும் என்று விரும்பி மகத்தான வெற்றியை அளித்த வாக்காளர்களை வணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    அரக்கோணத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் இரண்டரை லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
    அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியும் போட்டியிட்டனர். ஜெகத்ரட்சகன் 5 லட்சத்து 42 ஆயிரத்து 930 வாக்குகளும், ஏ.கே. மூர்த்தி 2 லட்சத்து 82 ஆயிரத்து 618 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜெகத்ரட்சகன் 2 லட்சத்து 60 ஆயிரத்து 312 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி 23,768 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 20,373 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் 55,074 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
    கோவை பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
    கோவையில் அதிமுக கூட்டணியில் சார்பில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிஆர் நடராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    13 சுற்றுகள் முடிவில் சி.பி. ராதாகிருஷ்ணன் 221724 வாக்குகளும், பி.ஆர். நடராஜன் 316913 வாக்குகளும் பெற்றுள்ளனர். நடராஜன் 95189 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றிமுகம் காட்டிவரும் நிலையில் இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கு மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு அக்கட்சியின் மிக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘அபரிமிதமான இந்த வெற்றிக்கு பாஜகவை வழிநடத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    பாஜகவின் கொள்கைகள் ஒவ்வொரு வாக்காளர்களையும் சென்றடையும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷாவும் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் அபாரமான முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

    பன்முகத்தன்மைகளை கொண்ட மிகப்பெரிய நாடான இந்தியாவில் இவ்வளவு வெற்றிகரமான தேர்தலை நடத்தி முடித்தமைக்காக வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட முகமைகளுக்கு வாழ்த்துக்கள். ஒளிமயமான எதிர்காலத்துடன் நமது உயர்ந்த நாடு ஆசீர்வதிக்கப்படுவதாக!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கன்னியாகுமரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை பெற்று வந்தார். 12 சுற்றுகள் முடிவில் வசந்தகுமார் 2 லட்சத்து 76 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 133 வாக்குகள் பெற்றுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7333, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 4201, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் 5901 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மீண்டும் அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

    அவ்வகையில் 17-வது பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்று, தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இந்த இமாலய வெற்றியால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பாஜக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய உள்ளார். 26-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோருகிறார். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    பாஜக கூட்டணி வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
    மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அமோக முன்னிலைப் பெற்றது. 542 இடங்களில் 347 இடங்களை பெற்று அபார நிலையில் உள்ளது.

    டெல்லி (7), ஹரியானா (10) ஆகிய மாநிலங்களில் எல்லாத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே அந்த கட்சியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

    13 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 8-ல் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 2 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை நான்கு தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா மற்றும் சிரோமணி அகாலி தளம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
    ×