search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94589"

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
    செய்முறை :

    விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் படத்தில் உள்ளது போன்று மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

    அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.

    இது தான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது.

    முதலில் கைகளை தளர்த்திய பின்னர் மெதுவாக தரையில் உட்கார்ந்து கால்களை தளர்த்த வேண்டும். பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்வதால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.

    மூச்சின் கவனம்

    கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.

    பலன்கள்


    தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும். அதிக உடல் எடை குறையும்.
    இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பாதாகுஸ்தாசனம் அல்லது கால்விரல்கள் நிலைப்பாடு என்பது உங்கள் உள்தொடைகள், இடுப்பு மற்றும் உங்கள் முழங்கால்களின் பின்புறத்தை நீட்டிப்பு செய்ய சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனம் உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம். இது இனப்பெருக்க அமைப்பு ஒழுங்குபடுத்த மற்றும் செரிமான அமைப்பு சீராக இயங்கவும் உதவுகிறது.

    செய்முறை :

    விரிப்பில் வசதியாக சுகாசனம் அல்லது சுலபமான அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இடது காலை வளைத்து, உங்கள் இடது பாதம் உங்கள் இடது பிட்டத்தின் அருகில் வரும் படி வையுங்கள். பின்பு உங்கள் வலது பாதத்தை வளைத்து அதை உங்கள் இடது பாதத்தின் அருகில் வரும் படி வையுங்கள்.

    மெதுவாக உங்கள் எடை முழுவதையும் உங்கள் கால்விரல்களில் மாற்றி உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் ஆதரவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் முதுகை நேராக வைத்துக் கொள்ள நினைவில் கொள்ளுங்கள்.

    மெதுவாக உங்கள் இடது பாதத்தை தூக்கி அதை உங்கள் வலது தொடை மீது வையுங்கள். உங்கள் வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் முழு உடலின் எடை இப்போது உங்கள் கால்விரல்களில் மற்றும் வலது பாதத்தின் பந்தில் இருக்கிறது. சமநிலை படுத்த முயலும் போது உங்கள் உடலை மிகவும் அதிகமாக நகர்த்தாதீர்கள்.

    நீங்கள் நிலையில் உங்களை சமப்படுத்திய பின், உங்கள் உள்ளங்கைகளை இங்கள் மார்புக்கு முன் இணைத்து சில அடுத்தடுத்த ஆழமான மூச்சுகளை எடுங்கள். நீங்கள் நிலையில் இருக்கும் போது உங்கள் மூச்சை பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

    அதிலிருந்து விடுபட, மெதுவாக உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் எடுத்து மெதுவாக உங்கள் இடது காலை இறக்குங்கள். இந்த நிலைகளை உங்கள் மற்றொரு காலுடன் திரும்ப செய்யுங்கள். இவ்வாறு  3 முதல் 5 முறை செய்யவும்.
    இந்த ஷண்முகி முத்ரா ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.
    செய்முறை

    விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கை மூட்டியைத் தோள் வரை தூக்கி காதுகளை பெருவிரல்களால் மூடிக்கொள்ள வேண்டும்.

    ஆட்காட்டி விரல் மூலம், கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நடுவிரல்கள் மூலம் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு இழுத்து வைத்து, விட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.
    இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகளை குணமாக்குகிறது..
    செய்முறை

    விரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி இடைவெளி விட்டு நிற்கவும். வலது கால் பாதத்தை வலது பக்கமாக திருப்பி வைக்கவும். பின்னர் வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது கால் பாதத்திற்கு முன்பாகவும், இடது கையை வலது காலின் பின்புறமும் வைத்து தலையால் கால் முட்டியை தொட வேண்டும். இவ்வாறு 30 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை மாற்றி இடது காலில் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. மேலும் விந்தணு கோளாறுகள் மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகள் குணமாகின்றன.

    இடுப்பு பகுதியை வலுவூட்டுகிறது, இடுப்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. தொடை, கால்கள், கால் மூட்டுகளுக்கு வலிமை தருகிறது. முதுகெலும்பு வலுவடைகிறது.

    தூக்கமின்மை குணப்படுத்துகிறது. இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 
    இந்த ஆசனம் செய்வதால் முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. முதுகு வலியை குணமாக்குகிறது.
    பிட்டிலாசானா என்பது சம்ஸ்கிருத மொழியில் பசுவின் பெயரான பட்டிலா என்பதிலிருந்து உருவானதாகும். பெயரை போலவே நமது உடலையும் பசுவை போல வைத்து இதனை செய்ய வேண்டும்.

    செய்முறை

    விரிப்பில் கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல செய்ய வேண்டும். பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும். தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

    பலன்கள்

    இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முதுகு வலியை குணமாக்குகிறது.
    மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுபவர்கள் தினமும் தியானம் செய்வது வருவது மிகவும் நல்லது.
    இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

    முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள்.

    மனதை மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.

    மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

    தியானத்தை முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். 
    சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். அந்த ஆசனங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன.

    ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான ஆசனங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    உத்தன்பாதாசனம்

    விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3-லிருந்து 5 முறை செய்யலாம்.

    சர்வாங்காசனம்

    ‘சர்வ’ என்றால் முழுமை, உடல் முழுவதையும் பயன்படுத்தி செய்யும் ஆசனம் என்பதே பொருள். முதுகை தரையில் படுத்த நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறே இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும்.

    கைகள் இரண்டும் இடுப்பைத் தாங்கியவாறு இடுப்போடு, கால்களையும் உயர்த்தவும். கால்கள் இடுப்பு, தோள் நேராக நேர்கோட்டில் இருக்க வேண்டும். தோளுக்கு கீழ் தலையணை முட்டு கொடுக்கலாம். இந்த நிலையில் 2 நிமிடம் முதல் 10 நிமிடங்கள் வரை இருக்கலாம். மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும்.

    விபரீதகரணி

    விபரீதகரணி `விபரீத’ என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும். கால்களை ஒன்றாக நீட்டியபடியே அப்படியே மேலே தூக்க வேண்டும்.

    தூக்கும்போது இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும்.  இப்போது மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

    பலன்கள்

    அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைப்பதால் முதுகுத் தண்டுவடம் உறுதிப்படுத்துகிறது. ரத்த அணு உற்பத்திக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.  பின்பக்க ரத்த உற்பத்திக்கு உதவுவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுகிறது. மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ரத்தசோகையை போக்குகிறது

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். ஞாபகத்திறன் கூடும்.
    செய்முறை:

    விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும், இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.

    இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.

    பலன்கள் :

    மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகுத் தண்டு பலம் பெறும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும்.
    செய்முறை : இவ்வாசனத்தை அர்த்த (பாதி) சக்கராசனம் எனக் கூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளைய வேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.

    பலன்கள்: முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை மேலிடும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். கூன் முதுகு நிமிரும். நெஞ்சுக் கூடு விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம் பெறும்.
    முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். கால்களுக்கு வலு சேர்க்கும் ஆசம் இதுவாகும்.
    செய்முறை : முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும்.

    பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்து படுக்க வைக்க வேண்டும். அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.

    பலன்கள் :
    ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளக்கிறது. தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது. கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும் மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது. மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும்.
    செய்முறை: விரிப்பில் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும், பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக நிமிரவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம். கால் மூட்டு வளையவிடக் கூடாது.

    பலன்கள்: முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். தோள்பட்டை சீரமைப்பு சரிசெய்யவும், கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும். இரைப்பை அழற்சி, முதுகுவலி, அஜீரணம், வாய்வு மற்றும் அமிலத்தன்மை, முதுகு வலி போன்றவைக்கு நிவாரணம் தரும். இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.
    இந்த ஆசனம் செய்வதால் கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும்.
    செய்முறை : விரிப்பில் நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.

    இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.

    பயன்கள் : தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. 
    ×