search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள உன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சந்தனமாரி. இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

    சம்வத்தன்று மாலை சந்தனமாரி கல்லூரி முடிந்து பஸ்சில் ஊருக்கு வந்தார். கள்ளிக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சந்தனமாரியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுட்டதாக கூறப்படுகிறது.

    திடீரென்று அந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இதை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் பலனில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் தந்தை சந்திரன் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை ஆவல்சூரன் பட்டியைச் சேர்ந்த நாகார்ஜூன் என்பவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் குரசாமி-பஞ்சு, சகோதரி அழகு ஆகியோர் உள்ளனர்.

    சந்தனமாரி குறித்து அவர்களிடம் சென்று கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் மாணவியை கடத்திய நாகார்ஜூன், அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #TNMinister #SPVelumani
    சென்னை:

    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கோவை மாநகராட்சியில் டெண்டர்கள் ஒதுக்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

    தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய உறவினர் செந்தில்நாதன் நிறுவனத்துக்கு மட்டும் பெரும்பாலான ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை மாநகராட்சியில் ஊழல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து கடந்த செப்டம்பர் 10-ந்தேதி லஞ்ச ஓழிப்புத்துறை இயக்குனரிடம், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் செய்தார். அந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட கோரி ஆர்.எஸ்.பாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #TNMinister #SPVelumani
    பொன்னேரி பகுதியில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், செப்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் என விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 293 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிக வேகமாக செல்லுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், செப்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட், லைசென்ஸ், ஹெல்மெட் இல்லாமல், விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் பிடிபட்டனர். இது தொடர்பாக 293 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 30 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #tamilnews
    இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து இன்று காலை கருணாஸ் எம்எல்ஏ வெளியே வந்தார். #KarunasMLA #IPLCase #KarunasCase
    வேலூர்:

    நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.



    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று பரிசீலித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த ஜாமீன் உத்தரவு நகல் வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, கருணாஸ் எம்எல்ஏ இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான வழக்குகளில் உண்மை நின்றது, நீதி வென்றது என்றார்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் தன் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறினார். #KarunasMLA #IPLCase #KarunasCase
    கோவை அருகே குடோனில் வைத்திருந்த சாக்குமூட்டையில் பதுக்கிய ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 2½ டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    கோவை:

    கோவை சூலூர் கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தொடர்ந்து சோதனை நடத்தி குடோன்களில், கடைகளில் இருந்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்னூரை அடுத்த மசகவுண்டன் செட்டிப்பாளையத்தில் ஒரு குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு ஏராளமான மூட்டைகளில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மொத்தம் 2,350 கிலோ எடை கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குடோன் அன்னூரை சேர்ந்த சாந்த குமார்(வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த பட்டுராஜன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த தங்கசிங் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இங்கிருந்து வாகனத்தில் குட்கா மூட்டைகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து பட்டுராஜன், தங்கசிங், சாந்தகுமார் ஆகிய 3 பேர் மீதும் புகையிலை பொருட்கள் தடை சட்டம் 2003 மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் சாந்த குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பட்டுராஜன், தங்கசிங் ஆகியோர் மளிகை பொருட்களை வைப்பதற்காக தனது குடோனை கேட்டதாகவும், அதன்பேரில் குடோனை வாடகைக்கு கொடுத்ததாகவும் கூறினர்.

    குடோனுக்குள் அரிசி, உப்பு மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஏராளமாக இருந்தது. தொடர்ந்து சாந்த குமாரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டுராஜன், தனசிங் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்து 1 சொகுசு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    பட்டுராஜா, தனசிங் ஆகியோர் பிடிபட்டால் தான் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்கள்? யார்- யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? என்பது தெரிய வரும். தலைமறைவான இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் ஆசிப். இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    அப்போது 140 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தொழில் செய்து வந்த அலாவுதீன் ஆசிப் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லாவின் உறவினர் முபாரக் அகமது, மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அலாவுதீன் ஆசிப், அவரது தந்தை அலாவுதீன், தாயார் ஜின்னா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பெரியார் சிலை அவமதிப்புக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தூண்டுதலே காரணம் என்று கூறி எச்.ராஜா உருவப்பொம்மையை எரிக்க முயன்றதால் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    திருவாரூர்:

    சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 17-ந்தேதி பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு கிராமத்தில் பெரியார் சிலையில் நேற்று முன்தினம் மர்ம கும்பல் செருப்பு மாலை அணிவித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தி.மு.க., தி.க., ம.தி.மு.க., மற்றும் அனைத்து கட்சியினர், இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தூண்டுதலே காரணம் என்று கூறி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள் திடீரென எச்.ராஜா உருவப்பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு நேற்று தி.க.வினர் பெரியார் சிலை அவமதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்.ராஜா உருவப்பொம்மையை கொளுத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து எச்.ராஜா உருவ பொம்மையை கொளுத்த முயன்ற நீடாமங்கலம் தி.க. நகர தலைவர் அமிர்தராஜ் உள்பட 5 பேர் மீது நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மதுரையில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை வளையங்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 55). இவர் தவிட்டுச் சந்தை தெற்கு வெளிவீதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் முதலீடு செய்தார். இந்த பணத்திற்கு நிதி நிறுவனத்தினர் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தான் முதலீடு செய்த பணத்தை திருப்பித்தரும்படி முத்துகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனால் ரூ.70 ஆயிரம் மட்டும் திருப்பிக் கொடுத்த நிதி நிறுவன உரிமையாளர்கள் மீதிப்பணத்தை கொடுப்பதில் கால தாமதம் செய்துள்ளனர்.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதாக தெற்குவாசல் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நிதி நிறுவன அதிபர் ராஜேந்திரன், அவரது மகன் சந்திரபிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    குமரியில் வாட்ஸ்- அப்பில் பெண்ணுடன் ஆபாசமாக பேசியது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகளிர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஒருவர், இளம்பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசும் காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வாட்ஸ்- அப்பில் பரவியது.

    இச்செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் நடந்த விசாரணையில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசியது கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் என்பது தெரிய வந்தது. அவர் பேசிய பெண், நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வீடியோ காலில் சீருடையில் இன்ஸ்பெக்டர் பேசியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டது.

    போலீஸ் உயர் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசிய பெண், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த பெண் தாக்கல் செய்த வழக்கில் தன்னை அவதூறாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புகாருக்கு ஆளான கருங்கல் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)(டி), பெண்ணை மானபங்கபடுத்தும் விதத்தில் பேசுதல், 506/1 கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்டம் 67 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

    செக்ஸ் புகார் தொடர்பாக பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குமரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறு பரப்பியதாக கைதான முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    அமைச்சர் தங்கமணியை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி வாட்ஸ்-அப்பில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி சரஸ்வதியை கைது செய்தனர்.

    இவர் மீது 505 (பி) பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், 153- ஆத்திரம், கோபம் ஏற்படும் வகையில் தகவல் பரப்புதல், 194(பி)-அசிங்கமாக திட்டுதல், 504- கோபமாக பொதுமக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் பேசுதல், 506(1)-கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, நீதிமன்றத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவையும், தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய கருணாசையும் கைது செய்ய முடியாத நிலையில், வாட்ஸ்-அப்பில் பொய்யான தகவல் பரப்பியதாக கூறி பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தலைமையிடத்தில் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    சங்கரன்கோவில் அருகே பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கோபாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (31). இவர் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி வழியாக ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் போது இருமன்குளத்தை சேர்ந்த மூக்கையா மகன் சந்திரன் என்பவர் முன்வாசல் வழியாக ஏறியுள்ளார்.

    அதற்கு டிரைவர் அழகர்சாமி முன்வாசல் வழியாக பெண்கள் ஏறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பின்வாசல் வழியாக ஏறுங்கள் என சத்தம் போட்டாராம். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேகேட் அருகில் இறங்கிய சந்திரன் நடந்த சம்பவம் பற்றி ஊரில் கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த சுரேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் இருமன்குளம் பஸ்நிறுத்தத்தில் நின்றனர். பஸ் சங்கரன்கோவிலுக்கு திரும்ப வரும் போது அவர்கள் டிரைவர் அழகர்சாமியிடம் இதுபற்றி கேட்டு தகராறு செய்தனர்.

    தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அழகர்சாமியை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இது பற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கடலூர் புதுநகர் போலீசில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் ராஜகோபால சாமி கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கடலூர் புதுநகர் போலீசில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு கொடுத்தார்.

    அதில், பெண்களை இழிவுபடுத்தியும், கோவில் ஊழியர்களை பற்றியும் எச்.ராஜா தவறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×