search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணை நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அருண் பரத்வாஜ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பி.குமார் தரப்பில், தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 29-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உள்ளதாக கூறி, அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகல் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா, பி.குமார் ஆகியோர் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்கள் வருகிற பிப்ரவரி 21-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    மதுரையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4.45 லட்சம் மோசடி செய்த 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    மதுரை:

    மதுரை சமயநல்லூரை அடுத்துள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மோகன் (52). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் மோகனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறோம். யாராவது இருந்தால் வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.

    இதனை நம்பிய மோகன் வெளிநாட்டு வேலைக்காக ரூ.60 ஆயிரமும் அதே பகுதியைச் சேர்ந்த ராணி, ஜானகி, சுந்தரேஸ்வரி, மோகனா, அழகேஸ்வரி, தேவி நித்யா ஆகிய 6 பேரிடம் ரூ.3.85 லட்சம் பணத்தையும் மொத்தம் 4.45 லட்சம் பெற்றுக்கொண்டு வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் மோகன் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தி முத்து, அவரது மனைவி செல்லம்மாள் மற்றும் தமிழரசி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பழனி கோவில் சிலை மோசடி வழக்கை 10 நாட்கள் நேரடியாக விசாரிக்க உள்ளதாக ஐஜி பொன்மாணிக்கவேல் கூறினார். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான நவபாஷான சிலை உள்ளது. இந்த சிலை சேதமடைந்ததாக கூறி புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிலை செய்ததில் மோசடி நடந்ததாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா, ஸ்தபதி முத்தையா உள்பட பலர் இதில் சிக்கினர்.

    இது மட்டுமின்றி நகை மதிப்பீட்டாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தனர். தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மோசடி வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடி வழக்கில் தொடர்புடைய பலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் அவரது பணி காலத்தை ஓராண்டு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் நேற்று உறுதி செய்தது. இதனையடுத்து பழனி கோவிலுக்கு நேற்று இரவு  ஐஜி பொன்மாணிக்கவேல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு விசாரணை ஒரு டி.எஸ்.பி. தலைமையில் நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக நடந்த இவ்வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறாமல் இருந்தது. விரைவில் அந்த வழக்கை நானே நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன்.

    பழனியில் 10 நாட்கள் வரை தங்கி இருந்து இதில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிலை மோசடி வழக்கில் பல அதிகாரிகள் இன்னும் சிக்கவில்லை என பக்தர்களும், பொதுமக்களும் தெரிவித்து வந்தனர். விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றதால் இனி இந்த வழக்கு எப்படி நடக்குமோ? என்ற அச்சமும் பக்தர்களிடையே நிலவியது.

    மேலும் சிலை மோசடி குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள் மட்டுமின்றி கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

    சிலை மோசடியில் மூளையாக செயல்பட்ட நபரை நெருங்கும் சமயத்தில் வழக்கு விசாரணை தொய்வு ஏற்பட்டது. தற்போது தானே நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன் என தெரிவித்திருப்பது மோசடி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  #PonManickavel

    சாயல்குடியில் உள்ள அடகு நிறுவனத்தில் ரூ.24 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்ததாக முன்னாள் மேலாளர் உட்பட 5 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ராமநாதபுரம்:

    சாயல்குடி முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தவர் கமல்ராஜ் (வயது 30) இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி முதல் அக்டோபர் 22-ந்தேதி வரை 15 வாடிக்கையாளர்கள் பெயரில் தங்க நகையை அடகு வைத்ததாக ஊழியர்களின் உதவியுடன் ரூபாய் 24 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

    இது வங்கியில் நடைபெற்ற ஆடிட்டர் ஆய்வில் தெரியவர, இது குறித்து மதுரை மண்டல மேலாளர் சுரேஷ் குமாரிடம் ஆடிட்டர் புகார் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மண்டல மேலாளர் சுரேஷ்குமார் நடத்திய விசாரணையில், பணத்தை விரைவில் கட்டிவிடுவதாக மேலாளர் கமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் குறிப்பிட்டபடி பணம் செலுத்த தவறியதால் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவிடம், மண்டல மேலாளர் சுரேஷ் குமார் புகார் செய்தார்.

    முன்னாள் மேலாளர் கடலாடி கமல்ராஜ், அங்கு பணியாற்றிய சாயல்குடி ராஜேஸ்வரன்(26), கமுதி சரவணக்குமார் (32), சாயல்குடியை சேர்ந்த அரவிந்தராஜ், ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.

    எஸ்.பி.உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பரம குருநாதன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
    அதிமுக பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்கு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). ஊராட்சி செயலாளர். இவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இதற்கு காரணம் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் முத்துமாணிக்கம் தான் என கருதிய சந்திரசேகரன் அவரது வீட்டிற்கு சென்று முத்து மாணிக்கத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பிளஸ்-2 மாணவியிடம் வாலிபர், காதலிக்க கூறி டார்ச்சர் செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவியை சேப்பனவாரியை சேர்ந்த 21 வயது நிரம்பிய வாலிபர், ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் மாணவியை பார்க்கும் சமயங்களில் எல்லாம், தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தி வந்தாராம்.

    இதேபோல் நேற்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாணவியிடம், அந்த வாலிபர் காதலிக்க கூறி தகராறு செய்துள்ளார். இதனால் மாணவியை அவரை கண்டித்து சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது அதை அருகில் நின்றவர்கள் கவனித்து, மாணவியையும், வாலிபரையும் உதவி காவல் மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதற்கிடையே வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை அழுதுக் கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, இன்று கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மார்த்தாண்டம் அருகே 5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து உறவினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி யில் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    அரசு டாக்டர்கள் குழு ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும் தனித்தனியாக பரிசோதனை செய்தனர். அப்போது 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய 2 மாணவிகள் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக அழுது கொண்டே டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

    அந்த மாணவிகளை டாக்டர்கள் தனியாக பரிசோதித்தனர். இதற்கு முன்பு எப்போதெல்லாம் வலி ஏற்பட்டது என்றும் கேட்டனர்.

    மாணவிகள் கொடுத்த தகவல் மற்றும் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் இரு மாணவிகளும் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

    அதிர்ந்து போன டாக்டர்கள் இந்த தகவலை பள்ளி ஆசிரியைகளுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

    குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மஞ்சு, உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் குறிப்பிட்ட சிறுமிகளையும் தனியாக அழைத்து அவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது சிறுமிகள் இருவரும் தங்கள் உறவினர் சரத் (வயது 20) என்பவர் அடிக்கடி இதுபோன்ற சில்மி‌ஷ வேலைகளில் ஈடுபடுவார் என்றனர். பல ஆண்டுகளாக அவர், இதுபோன்ற செயல்களை செய்ததாகவும், தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மஞ்சு, இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சரத் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

    2 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சரத் தலைமறைவாகி விட்டார். அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் மற்றும் போலீசார் சரத்தை தேடி வருகிறார்கள். #tamilnews
    கம்பைநல்லூர் அருகே போலீசாருக்கு தெரியாமல் பெண்ணின் சடலத்தை எரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிரத்தினம். மனைவி கஸ்தூரி (27). இந்த தம்பதியருக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த குழந்தைக்கு இருதயநோய் பாதிப்பு உள்ளதாம். இதனால் மனமுடைந்த கஸ்தூரி, நவம்பர் 29-ந் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

    இதையடுத்து, தற்கொலை செய்துகொண்ட கஸ்தூரியின் சடலத்தை அவரது உறவினர்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் எரித்து விட்டனராம்.

    இது குறித்து வகுரப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் மகன் மாரிமுத்து (34), சின்னசாமி என்பவரது மகன் கோவிந்தராஜ் (31), மாரியப்பன் என்பவரது மகன் சத்தியமூர்த்தி (30), காளியப்பன் என்பவரது மகன் மாரியப்பன் (68) ஆகியோர் மீது கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  #tamilnews
    அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு தேனி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

    தேனி:

    தேனி அருகே வீரபாண்டி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மந்திரி.தேனி யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். உறவினர்களான இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. எனவே இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன், மனைவி தெய்வக்கனி, மகன் ரமேஷ்குமார், உறவினர்கள் செல்வம், செல்வராணி, கோபிகண்ணன், சந்திரா, மலைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

    இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து கோடீஸ்வரன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு நடைபெறும் போது மலைச்சாமி இறந்து போனார்.

    இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரன், ரமேஷ்குமார், தெய்வக்கனி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார். ஆயுள்தண்டனை விதிக்கபட்ட ரமேஷ் குமார் போலீஸ்காரர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாலையோர கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கடைகளை உடைத்துள்ளது குறித்து வியாபாரிகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுடன் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். குமார் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    சோழிங்கநல்லூர் முதல் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டில் நடைபாதையில், மாற்று திறனாளிகள், விதவைகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்மஞ்சேரி போலீசாரின் உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், தனிநபர் ஒருவரும் சேர்ந்து கடைகளை புல்டோசர் மூலம் அடித்து உடைத்துள்ளனர்.

    இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுதிறனாளிகள் கடை வைப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பெங்களூரு ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், அதை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தாலும், வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’.



    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

    மனுதாரர் டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்தன் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த வழக்கு தொடர்ந்த பின்னர், சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து போயஸ் கார்டன் பகுதி மக்களில் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.

    இதற்காக நடந்த கூட்டத்தில், அப்பகுதி மக்கள், வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டை இதுபோல நினைவிடமாக மாற்றினால், அதனால் அப்பகுதியில் வசிப்பவருக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் வந்து சென்றால், எதிர்காலத்தில் போயஸ் கார்டன் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கும் என்று கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
    ஜம்மு காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #JKAssembly #SupremeCourt
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    ஆளுநர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த மாதம் பிடிபி,  தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது. இதேபோல் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில், நவம்பர் 21-ம் தேதி சட்டசபையை கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பாஜக தலைவர் ககன் பாகத் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவர் சட்டசபை கலைப்புக்கு முன்பாக, எம்எல்ஏவாக இருந்தவர்.

    ககன் பாகத்தின் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். #JKAssembly #SupremeCourt
    ×