search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94623"

    நேபாள நாட்டின் ஜனக்புரியில் நடைபெற்ற சீதா கல்யாண உற்சவத்தில் உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு ராமர்-சீதாதேவியை வழிபட்டார். #NepalSitadeviTemple #YogiAdityanath
    காத்மண்டு:

    நேபாள நாட்டின் ஜனகபுரியில் அமைந்துள்ளது சீதாதேவி கோவில். இது ராமரின் மனைவியான சீதாதேவியின் பிறந்த ஊராக கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சீதாதேவி கோவிலுக்கு பலரும் வந்து சென்று வழிபடுவது வழக்கம்.

    விவாஹ பஞ்சமியை முன்னிட்டு இந்த கோவிலில் சீதா கல்யாணம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



    இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சீதா கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் ராமர் - சீதாதேவியை வழிபட்டார். #NepalSitadeviTemple #YogiAdityanath
    இந்தியாவில் இருந்து வெள்ளோட்டமாக வந்த முதல் பயணிகள் ரெயிலுக்கு நேபாளம் நாட்டு மக்கள் இன்று உற்சாகமான வரவேற்பு அளித்தனர். #Passengertrain #IndiaNepal #IndiaNepaltrain
    காத்மாண்டு:

    இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பத்னாஹா என்னுமிடத்தில் இருந்து நேபாளம் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில் நகரமான பிரட்நகர் பகுதியை இணைக்கும் வகையில் 18.1 கிலோமீட்டர் தூரத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 13.1 கிலோமீட்டர் பாதை நேபாளம் நாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்தியாவின் செலவில் சுமார் 448 கோடி ரூபாயில் இந்த அகலப்பாதை அமைந்துள்ளது.

    இந்நிலையில், இந்த புதிய பாதையில் பீகாரில் இருந்து முதல் ரெயில் சேவையின் சோதனை வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இந்திய ரெயில்வே துறையை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும்  அதிகாரிகள் சிலர் இந்த ரெயிலில் சென்றனர்.

    நேபாளம் நாட்டின் மோராங் மாவட்டத்தில் உள்ள கட்டஹரி நிலையத்தை வந்து சேர்ந்தபோது, அங்கே குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இருநாட்டு கொடிகளுடன் காணப்பட்ட இந்த புதிய ரெயிலுக்கு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். #Passengertrain #IndiaNepal #IndiaNepaltrain
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #NepalPM #KPSharmaOli
    காத்மாண்டு:

    நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் மருத்துவ கவனிப்புக்கு பிறகு உடல்நிலை தேறியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலும், இருதயத்தில் நோய்த் தொற்று காரணமாகவும் சமீபகாலமாக அவர் கடும் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில வாரங்களாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
     
    இதற்கிடையே, பிரதமர் கே.பி.ஒலியின் உடல்நிலை மோசமடைந்தது. சளி இருமல் அதிகரித்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் உடனே மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள மன்மோகன் கார்டியோ வாஸ்குலார் மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. ஒலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரையின்படி ஒலி நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், சர்மா ஒலியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அவர் இரண்டொரு நாட்களுக்கு பிறகு அவர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளனர். #NepalPM #KPSharmaOli
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #UP #Accident
    லக்னோ:

    நேபாளத்தின் சிந்தூலி மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுற்றுலா வந்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராஜதேபூர் கிராமம் வழியே கார் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #UP #Accident
    அழிவின் விளிம்பு நிலையில் உள்ள புலிகளின் எண்ணிக்கை நேபாளம் நாட்டில் குறுகிய காலத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. #Nepaltiger #tigerpopulation #tigerpopulationdoubles
    காத்மாண்டு:

    உலகெங்கிலும் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள புலிகளை பாதுகாக்கவும் அவற்றின் இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    புலியை தேசிய விலங்காக அறிவித்துள்ள இந்தியாவிலும் புலிகளை பாதுகாக்க சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனினும், ஓரளவுக்கு மட்டுமே புலிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

    சில நாடுகளில் புலிகளை பாதுகாக்க உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில், நேபாளம் நாட்டில் புலிகள் பாதுகாப்புக்கான உயர்மட்ட குழுவில் அந்நாட்டின் பிரதமர் இடம்பெற்றுள்ளார்.


    இதன்விளைவாக, நேபாளம் நாட்டு வனப்பகுதிகள் கடந்த 2009-ம் ஆண்டு 121 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 235 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு காப்பகங்களின் உயரதிகாரி கோபால் பிரகாஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார். #Nepaltiger #tigerpopulation #tigerpopulationdoubles
    வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள 'பிம்ஸ்டெக்’ நாடுகளின் கூட்டுப் போர் பயிற்சியில் நேபாளம் நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTECmilitarydrill
    காத்மாண்டு:

    வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் கடந்த மாதம் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது, இந்த அமைப்பில் உள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.


    அதன் அடிப்படையில், முதன்முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நாளை தொடங்கும் ராணுவ போர் பயிற்சியில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த போர் பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நேற்று திடீரென்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, கூட்டுப் போர் பயிற்சியில் நேபாள ராணுவத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தின் இந்த திடீர் நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை. #Nepalwithdraws #BIMSTECmilitarydrill #bimstecsummit 
    நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியான நிலையில் பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். #Choppercrashes #NepalChoppercrash
    காட்மாண்டு:

    நேபாள நாட்டில் சமாகான் என்ற இடத்தில் இருந்து நேற்று காலை 7.40 மணிக்கு தலைநகர் காட்மாண்டு நோக்கி ஆல்டிடியூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு நோயாளியும், மேலும் 5 பயணிகளும் இருந்தனர். நிஷால் என்ற விமானி ஹெலிகாப்டரை ஓட்டினார்.

    காலை 8 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.



    இந்த ஹெலிகாப்டர் காலை 8.18 மணிக்கு காட்மாண்டு போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் தாடிங், நுவாகாட் மாவட்டங்களையொட்டிய அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இந்த கோர விபத்தில், விமானி நிஷால் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.

    உடனடியாக அங்கு மீட்பு படையினர் ராணுவ ஹெலிகாப்டரிலும், ஒரு தனியார் ஹெலிகாப்டரிலும் விரைந்தனர். லோ அனி டோல்மா என்ற பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலியான 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விசாரணை நடத்தப்படுகிறது.  #Choppercrashes #NepalChoppercrash
    சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.#Chinaports

    காத்மாண்டு:

    இந்தியா அருகே இமயமலை சாரலில் உள்ள அழகிய நாடு நேபாளம். இதுவரை இந்த நாடு எரி பொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது.

    வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்திய துறை முகங்களை பயன்படுத்தி வந்தது. இது போன்று அனைத்து தேவைகளுக்கும் இந்தியாவை சார்ந்தே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் அங்கு எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பல மாதங்கள் கடும் தட்டுப்பாடு நிலவியது.

    அதை தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நேபாளம் நாடியது. அதன் பின்னர் 2 நாடுகளும் நட்புறவு கொள்ள தொடங்கின. இந்த நிலையில் நேபாளமும், சீனாவும் வர்த்தகரீதியில் உறவை விரிவுபடுத்த முடிவு செய்தன.


     

    அதுகுறித்து 2 நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.

    அதே நேரத்தில் நேபாளம் தன்னிடம் உள்ள லாங்ஷூ, லாசா மற்றும் ஸஸிகாட்ஸ் பகுதியில் சாலைகளை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் நடைமுறைக்கு வருகிறது.

    இது நேபாள வரலாற்றில் முக்கிய மைல்கல் என அந்நாட்டு வர்த்தக மந்திரி ரா ‌ஷங்கர் சஞ்சு தெரிவித்துள்ளார். இந்தியா 2 துறை முகங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கியது. ஆனால் சீனா 4 துறைமுகங்களை வழங்கி உள்ளது.

    இதன் மூலம் ஜப்பான், தென்கொரியா, மற்றும் வடக்கு ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்ப முடியும், செலவும், பயண நேரமும் மிக்சமாகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப 3 மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. #Chinaports

    நேபாளத்தில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்று விபத்து ஏற்பட்டது, இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. #Nepal #PlaneAccident
    காட்மாண்டு:

    நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேபாள்கஞ்ச்சிலிருந்து 21 பயணிகளுடன் ஒரு விமானம் சனிக்கிழமை இரவு வந்தது. விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    ஆனாலும் விமான போக்குவரத்து சுமார் 12 மணி நேரத்துக்கு தடைபட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் சரிசெய்யப்பட்ட அந்த ஓடுபாதையின் மேல் பகுதியில் விரிசல்கள் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.  #Nepal #PlaneAccident 
    நேபாளத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். #BIMSTEC #Modi
    காத்மாண்டு:

    வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் நேற்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேபாளம் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    நாம் ஒன்றுபட்டு நடைபோட வேண்டும். நாம் அனைவரும் வளர்ந்து வரும் நாடுகள். நாம் சமாதானத்தையும், முன்னேற்றத்தையும் விரும்புகிறோம். ஆனால் அவற்றை இன்றைய உலகில், ஒன்றுபடாமல் எந்த ஒரு நாடும் தனிப்பட்ட முறையில் அடைந்து விட முடியாது.

    அண்டை நாடுகளுடனான உறவை இந்தியா எப்போதும் போற்றி பாதுகாக்கும். பிம்ஸ்டெக் நாடுகள் இடையே வர்த்தகம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்திய உறுதி பூண்டுள்ளது.

    பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பிம்ஸ்டெக் நாடுகளை போலவே தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை பேணிக்காக்கும். பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.

    பிம்ஸ்டெக் ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியா சர்வதேச புத்த மத மாநாடு நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் வந்து கலந்து கொள்ளுமாறு பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளை அழைக்கிறேன் என தெரிவித்தார். #BIMSTEC #Modi
    நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஆலோசனை நடத்தினார். #BIMSTEC #Modi #SheikhHasina
    காத்மாண்டு:

    வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTEC #Modi #SheikhHasina
    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi
    புதுடெல்லி:

    வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



    வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இந்த மாநாட்டின்போது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #BIMSTECSummit #Modi

    ×