என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல்"
- இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
- ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
ஈரான் ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கியது.
இதில் ஏவுகணை, டிரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதகிடங்குகள், ராணுவ தளங்கள் சேதமடைந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியானார்கள் என்றும், ராணுவ தளங்கள் சிறிது சேதங்கள் ஏற்பட்டது என்றும் ஈரான் தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
இதற்கிடையே ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் அது போன்ற தவறை செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது.
அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார்.
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறும் போது, ஈரானுக்கு அதன் நலன்கள், அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதில் எந்த வரம்புகளும் இல்லை என்றார். இதன் மூலம் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக கருதப்படுகிறது.
இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். #GonenSegev
சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது.
இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது.
இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.
இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ தலைவர் மோரிஸ்கான் கூறியதாவது:-
“சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்றார்.
இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்புகிறது. இதில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. #Israel #Beresheet
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ தனது டுவிட்டர் தளத்தில், ‘அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு, இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோக மயமான இந்த நேரத்தில், உங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
இதைப்போல பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த ரணம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும், அரசுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடனும், உங்கள் மக்களுடனும் எங்கள் உடனிருப்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இறைவன் இரக்கம் காட்டுவாராக’ என்று குறிப்பிட்டு இருந்தார். #PulwamaAttack #Israel #Plaestine
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேல் படைகளும் அவர்களுக்கு எதிராக தொடந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து காசா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. #PalestianianRocketFire #Isreal
ஏவுகணைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா-இஸ்ரேல் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி உள்ளன. பராக் 8 எனப்படும் இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் இரு நாட்டு படைகளிலும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பராக் 8 குழுமத்தில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. அதன்படி 7 கப்பல்களில் பொருத்துவதற்காக 777 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,600 கோடி) செலவில் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் வாங்க இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன், மத்திய அரசின் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக வரும் அனைத்து அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கப்பலுக்கு ஆற்றல் அளிக்கும் இந்த அமைப்பில், டிஜிட்டல் ராடார், லாஞ்சர்கள், இடைமறிப்பு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் என நவீன கருவிகள் இடம்பெற்று இருக்கும்.
இந்த ஒப்பந்தத்துக்காக பெல் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள இஸ்ரேல் நிறுவனம், இந்த ஒப்பந்தத்துடன் கடந்த சில ஆண்டுகளில் பராக் 8 தளவாடங்களுக்காக மொத்தம் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.43 ஆயிரம் கோடி) அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்