search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவது போல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்.எல்.சி. விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும்.
    • தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறைவைத்துவிட்டு, டி.ஐ.ஜி. மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் போது, என்.எல்.சி. நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த 22 மாத கால விடியா ஆட்சியில் என்.எல்.சி.-யின் மக்கள் விரோதப் போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடலூர் மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

    கடலூர் மாவட்ட மக்களையும், விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

    என்.எல்.சி. நிறுவனத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை தன்னுடைய ஏவல் துறையான காவல்துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.

    பிரதமர், மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவைகளைப் பெருக்குவோம். இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரித் தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

    மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவது போல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்.எல்.சி. விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    சமீப காலமாக, வாரந்தோறும் விடியா அரசின் அமைச்சரும், அதிகாரிகளும் விவசாயிகளை அழைத்து மிரட்டுவதை விட்டுவிட்டு, மத்திய அரசோடும், என்.எல்.சி. நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், சட்டப்படி குழு அமைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையைத் தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

    எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையிலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

    நிலக்கோட்டை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ் ஏராளமான நிர்வாகிகள் சேர்ந்து வருகின்றனர். தற்போது அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே வார்த்தை யுத்தம் எடுத்துள்ள நிலையில் சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! அ.தி.மு.க. தோல்வியடைய காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு. சமத்துவ பேரியக்கத்தை சமுதாய கட்சியாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேறு என்ற வகையில் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. இவண் நிலக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் என்று எழுதப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.வான தேன்மொழி சேகர் உள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலின்போது இவர் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே மீண்டும் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நிலக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கருத்து
    • செல்லூர் ராஜூ தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என அமர் பிரசாத் ரெட்டி பதில்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை, வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி. "இத்தனை நாட்கள் தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது", என அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன், செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மோகோல் மிதக்கவிட்ட படத்தையும் அமர் பிரசாத் ரெட்டி பகிர்ந்துள்ளார்.

    • பாஜகவிலிருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும் என செல்லூர் ராஜூ வலியுறுத்தல்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்களை பாஜகவில் சேர்த்தபோது இனித்தது. இப்போது அங்கே இருந்து இங்கே வரும்போது கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது.

    கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதையெல்லாம் அதிமுக பொறுத்துக்கொண்டிருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

    • தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என ஜெயக்குமார் விமர்சனம்
    • தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி என விளக்கம்

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுக கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதித்தோம். மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டியது குறித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே இந்த ஆட்சியின் அவலங்களையும், எங்கள் முந்தைய ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது.

    பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அதுபற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம்.

    பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிமுக, பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை. மோதல் இருப்பதாக யார் சொன்னது? அப்படி எதுவும் இல்லை. ஏதோ ஐடி பிரிவில் உள்ள சிலர், பக்குவப்படாத சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். அதற்கு நாங்களும் பதில் கருத்து கூறி விட்டோம். அதனால் கூட்டணி தொடர்கிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி. இந்த கூட்டணி தொடரும்.

    அண்ணாமலை, தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

    கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

    சென்னை:

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்பு செயலாளர் செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் சற்றுமுன் அறிவித்தார்.

    இந்நிலையில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

    செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்
    • கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்

    கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கவும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

    • ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை தேர்தல் மூலமாக முறைப்படி தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாகவும், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகவும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி விவகாரத்தை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தினர்.

    அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • யாரும் போகாத பாதையில் பா.ஜ.க. பயணிக்கிறது.
    • ஆன்லைன் ரம்மியை பா.ஜ.க எதிர்க்கிறது.

    கோவை :

    மகளிர் தினத்தையொட்டி நேற்று கோவை சிட்ரா அரங்கில் ''பெண்மையை போற்றுவோம் - மாதர்களில் ஒற்றுமை மலரட்டும்'' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது பெயருக்கு பின்னால் எம்.எல்.ஏ, எம்.பி. என்று போட நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சி வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. நேற்று நான் பேசிய எனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை.

    யாரும் போகாத பாதையில் பா.ஜ.க. பயணிக்கிறது. எங்களது பாதை தனித்தன்மையான பாதை. நான் இப்படி தான் இருப்பேன். நான் இருக்கும் வரை கட்சி இப்படி தான் இருக்கும்.

    ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை. எல்லோருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அட்ஜெஸ்ட் செய்து நான் அரசியல் செய்ய மாட்டேன். அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் எந்த சங்கடமும், வருத்தமும் இல்லை. உரசலும், மோதலும் இல்லை. நாங்கள் யாருக்கும் சாமரம் வீச மாட்டோம். ஆயிரக்கணக்கானோர் தினமும் பா.ஜ.க.வில் இணைகிறார்கள்.

    ஒரு கட்சியில் பலர் இணைவதும், விலகுவதும் சகஜம். எங்கள் கட்சிக்கு ஆயிரம் பேர் வந்தால், நூறு பேர் போகிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் பலர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள்தான். ஒரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேரலாம்.

    இடைத்தேர்தல் வரும் என்று கருதி அதனை விரும்பவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் தவறாக பேசுவது புதிதல்ல. பொன்முடி தொடர்ந்து அதைத் தான் பேசி வருகிறார்.

    ஆன்லைன் ரம்மியை பா.ஜ.க எதிர்க்கிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய அந்த மசோதாவை சரி செய்து தர ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அண்ணாமலை மேடை ஏறும் போது ஒலி பெருக்கி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அவரது புகைப்படத்தை பார்த்ததும், அதனை பெயர்த்து எடுத்து காவலரிடம் கொடுத்து விட்டு மேடை ஏறினார். இந்த சம்பவத்துக்கு மேடையில் பதில் அளித்த அண்ணாமலை, ''மகளிர் தின நிகழ்ச்சியில் எனது புகைப்படம் வேண்டாம் என்பதற்காக அதனை எடுத்தேன்'' என்று தெரிவித்தார்.

    • எழுச்சி, வலிமை, பலத்துடன் அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளருவதால்தான் எல்லோரும் வந்து சேருகிறார்கள்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. பெருந்தன்மையோடு இருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கல் வீசினால் உடைவதற்கு அ.தி.மு.க. என்பது கண்ணாடி அல்ல. அ.தி.மு.க. என்பது ஒரு சமுத்திரம், பெருங்கடல். அதில் கல் வீசினால் கல்தான் காணாமல் போகும். ஆனால் சமுத்திரம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இன்று எழுச்சியுடன் உள்ளது. அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளர்வதால் பா.ஜ.க.வினர் விருப்பப்பட்டு தாமாக முன் வந்து இணைகிறார்கள்.

    நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. தாமாக முன்வந்து இணைவதை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும்.

    அந்த பக்குவம் அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும். இதேபோல் எல்லா கட்சியில் இருந்தும் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். எழுச்சி, வலிமை, பலத்துடன் அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளருவதால்தான் எல்லோரும் வந்து சேருகிறார்கள். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. பெருந்தன்மையோடு இருக்க வேண்டும்.

    நான் ஜெயலலிதா ஆட்சியின்போது முதல்வராக ஆசைப்பட்டதால் என்னை பதவியைவிட்டு நீக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். அப்படி நீக்கி இருந்தால் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்திருப்பாரா? என்னை ஜெயிக்க வைத்து அமைச்சராகவும் ஆக்கினார்.

    எனது நண்பராக இருந்த வைத்திலிங்கம் தரந்தாழ்ந்து பேசுகிறார். அவர் வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார். அவர் வஞ்சத்தில் இருந்து மீண்டு இங்கு வந்தால் நன்றாக இருக்கும்.

    ஜெயலலிதா போல ஒரு தலைவர் இனி யாரும் பிறக்கப்போவது கிடையாது. ஆற்றல், நிர்வாகத்திறமை, அரவணைத்து செல்லும் பண்பு, அன்பானவர்களுக்கு மென்மை கரம், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு இரும்பு கரம் கொண்டவர் அவர்.

    ஒரு கட்சியில் இருப்பவர்களிடையே உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகளை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். தலைவரே அந்த உணர்ச்சிகளை தூண்டக்கூடாது.

    கூட்டணி தர்மம் என்ற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அதை உணர்ந்து அந்த வகையில் நடவடிக்கை எடுத்தால் நல்லது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் சொல்லி விட்டனர்.

    அதில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரத்தில் கட்சியில் இருந்து விலகிய சிலர் அவர்களின் ஆதங்கத்தை சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா நீடிப்பதால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
    • அ.தி.மு.க. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே உணர்ந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அரசியல் களத்தில் அதிரடியாக பல்வேறு முடிவுகளை எடுத்தார். குறிப்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய 2 கட்சிகளுமே தேவையில்லை என்கிற முடிவில் அவர் இருந்தார்.

    இதன்படி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிய நேரத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரம் அவருக்கு பெருமளவில் கை கொடுத்தது.

    அந்த மோடியா? இந்த லேடியா? என்கிற பிரசாரத்தில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வென்றது.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கட்சி கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்த கூட்டணியால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும் அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. பா.ஜனதா கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க. பல தொகுதிகளில் குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசத்திலேயே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளிடம் தோற்றுப்போய் இருந்தது.

    இதுதொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த அரசியல் நிபுணர்கள் அ.தி.மு.க.வின் இந்த தோல்விக்கு பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததே முக்கிய காரணம் என்று விமர்சித்து இருந்தனர்.

    இதன் பின்னர் அ.தி.மு.க. மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி சொல்வதைத்தான் அ.தி.மு.க. கேட்கிறது என்கிற பேச்சுக்கள் அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டு பல்வேறு பஞ்சாயத்துக்களை செய்துள்ளதாகவும் பேசப்பட்டது. இப்படி அ.தி.மு.க. மீது பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவே மற்ற கட்சிகள் குற்றம் சுமத்தி வந்துள்ளன. இதுவும் அ.தி.மு.க.வின் தனித்தன்மையை பாதிப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் நிர்மல்குமார் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட விவகாரம் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் திடீர் சலசலப்பையும், மோதலையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பா.ஜனதாவினரை இழுத்தே கட்சியை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் திராவிட கட்சிகள் இருப்பதாக ஆவேசமாக குற்றம் சாட்டினார்.

    எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை என்பது நிச்சயம் உண்டு என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியிலும் புயலை கிளப்பியது. இப்படி பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கட்சி தாவலால் ஏற்பட்ட மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவப்படமும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதற்கு எதிராக அ.தி.மு.க. வினரும் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தினார்கள்.

    தமிழகத்தின் பல இடங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதனால் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தமிழகத்தில் வலுவான கட்சியாகும். தற்போது எதிர்க்கட்சி வரிசையிலும் அந்த இயக்கம் அமர்ந்துள்ளது. நாளை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தகுதியான இயக்கமாகவும் அ.தி.மு.க. உள்ளது.

    இதுதெரியாமல் பேசுபவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வு மான கடம்பூர் ராஜூ அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காரசாரமான கருத்துக்களை தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று.

    அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர். அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள்.

    கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.

    இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொருத்து இருந்து பார்க்கலாம்.

    அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம். ஒன்றிய அரசு என்று கூறும் தி.மு.க. விற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை. அ.தி.மு.க. வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள்.

    இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர்.

    1996-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது.

    இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளரான வக்கீல் சேலம் மணிகண்டன் கூறும் போது, 'அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா நீடிப்பதால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனை அ.தி.மு.க. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே உணர்ந்துள்ளனர்.

    கூட்டணியில் பாரதிய ஜனதா இல்லை என்றால் அ.தி.மு.க.வுடன் கைகோர்க்க தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தயாராகவே உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலே கூட அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கு சேர பல கட்சிகள் தயாராக உள்ளன.

    இப்படி பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியையே அ.தி.மு.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு பாரதிய ஜனதா கட்சி தடையாக இருப்பதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருக்க கூடாது என்பதே அ.தி.மு.க.வினரின் கணக்காக உள்ளது. பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரையில் அரசியல் பக்குவம் இன்றி பேசுவதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன' என்று தெரிவித்தார்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்பட்ட இந்த திடீர் மோதல் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் தனியார் அரங்கில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றார். பின்னர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் சென்றார். அங்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி. உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது பற்றியும், அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    ×