search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
    • பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யாவு நகர் பகுதியில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • மதுரை அருகே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பக தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகனேரி, ராஜுவ் காந்தி நகர், சோலை மலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி. நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.மேற்கண்ட தகவலை வடக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

    வாடிப்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் 2 மணி வரை ரிஷபம், மோகன் பிளாட், திருமால் நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா, பரவை, பரவை காலனி, கோவில் பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழ நெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, கல்லணை, அலங்காநல்லூர் பகுதி முழுவதும் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அருள்புரம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின்தடை

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை 22-ந்தேதி மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில்.

    ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்:இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு. காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்.

    அருள்புரம் துணை மின் நிலையம்:அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம். செந்துாரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகர், அய்யாவு நகர், நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர், சின்னக்கரை, சேடபாளையம் மற்றும் ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர் மற்றும் மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

    • மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தேவசேரி பீடர், அலங்காநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள தேசிய சர்க்கரை ஆலை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மலைப்பட்டி, தேசிய சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, டி.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    செந்துறை:

    செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (22-ந்தேதி) வியாழக்கிழமை நடைபெறுகிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, , ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, பிள்ளையார்நத்தம்,

    மாதவநாயக்கன்பட்டி, கோசுகுறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்காட்டூப்பட்டி, மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மதுரை அனுப்பானடி மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின் நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை அனுப்பானடி மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின் நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு, சேவுகப் பெருமாள் கோவில் பகுதிகள்.

    மாரியம்மன் தெப்பகுளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பகுளம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிஷர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அெவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • எசனை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    பெரம்பலூர், செப்.19-

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (20-ந் தேதி) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை செய்யப்படும் இடங்கள்: ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னங்காளிவலசு.

    • நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பழங்கரை,பெருமாநல்லூர் ஆகிய துைண மின்நிலையங்களில் நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபிஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம்,வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிப்பாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமிநகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும்,

    பெருமாநல்லூர், கணக்கம்பாளையம்,காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர்,எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மேட்டுப்பாளையம், -

    மேட்டுப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி பேரேஜ் , மருதூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பவானி மேரேஜ் 1, சுக்குகாப்பி கடை, சமயபுரம், ராமேகவுண்டன்புதுார், பத்திரகாளியம்மன் கோவில் பகுதிகள், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்ஜேகவுண்டன்புதூர், கெண்டேபாளையம், தொட்ட தாசனுார், மற்றும் குந்தா பீடரில் உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் அதில் உள்ள மின்நுகர்வோர்கள்.

    மருதூர் துணை மின்நிலையம்: காரமடை லாரி உரிமையாளர் பங்கிற்கு தென்புரம் உள்ள பகுதிகள் முழுவதும், சின்ன காரனூர், சர்வால் பீடர் கண்ணார்பாளையம் ரோடு மட்டும், அர்ச்சனா கார்டன், எஸ்.ஆர்.எஸ்.ஐ பீடரில் படியனூர் வாட்டர் பம்பு அவுஸ் வரை மற்றும் காரமடை மேற்கு பகுதிகளான குந்தா காலனி, திம்மம்பாளையம், புங்கம்பாளையம், செல்லப்பனுார், மருதூர் , தேவனாதபுரம், சுள்ளி பாளையம், புஜங்கனுார், பிளிச்சி கவுண்டனூர், கணுவாய் பாளையம், தாயனூர், தோலம்பாளையம், பணப்பாளையம், சீளியூர், நீலாம்பதி, மேல்பாவி, சாலைவேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கொரை, முத்துக்கல்லூர், பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துறை குடிநீர், தேக்கம்பட்டி குடிநீர் காரமடை, தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகள் போன்ற இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மேட்டுப்பாளையம் மின் செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (13-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.

    மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×