search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • ராஜபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவிப்பு

     ராஜபாளையம்

    ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (7-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.கே நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜ.என்.டி.யு.சி.நகர், பாரதிநகர்,கே.ஆர்.நகர், சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை,வ.உ.சி நகர்,பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம்,எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம்,ராம்கோ நகர்,

    பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி,வரகுணராமபுரம்,அம்மன்கோவில்பட்டி, போலீஸ்காலனி,ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பம்ப ட்டி, சங்கரபாண்டியபுரம்ம ற்றும் தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம்,தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி,கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள்கோவில், விஷ்ணுநகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    • குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
    • குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.

    கன்னியாகுமரி:


    குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் பராமரிப்பு பணிக்காக முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைக ளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது
    • மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஒட்டன்சத்திரம், மினுக்கம்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

    ஒட்டன்சத்திரம் :

    ஒட்டன்சத்திரம் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட தழையூத்து மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-பழனி சாலை, தென்றல்நகர், காந்திநகர், சோதனைச்சாவடி, உழவர்சந்தை, சம்சுதீன் காலனி, கருவூலக காலனி, அண்ணாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தழையூத்து பம்ப் ஹவுஸ் ஆகிய பகுதியில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    மினுக்கம்பட்டி

    இதேபோல் பராமரிப்பு பணிகள் காரணமாக மினுக்கம்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், தேக்கம்பட்டி, தோப்புபட்டி, குன்னம்பட்டி, குட்டம், எஸ்.குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை(7-ந்தேதி) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என உதவிசெயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • வண்டிக்காரத்தெருவில் தொடர் மின்தடை ஏற்பட்டது.
    • நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரு கேயுள்ள ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சக்கரக்கோட்டை, பட்டணங்காத்தான், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று 10 மணிக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகே மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையப் பகுதி, வண்டிக்காரத் தெரு, இளங்கோவடிகள் தெரு உள்பட முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் மாலை 4 மணி வரையில் இல்லை. நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்டக் கிளைச் சிறை, வங்கிகள், மருத்துவமனை அமைந்துள்ள வண்டிக்காரத் தெரு பகுதி யில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டதாகப் புகாா் கூறினா்.

    இது குறித்து உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேட்டபோது, ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆகவே வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட பகுதி களில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்றனா்.

    காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூர் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 29-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு, காங்கயம்பாளையம், ராசாபாளையம், வீணம்பாளையம், காட்டுப்பாளையம், கடலைக்காட்டுப்புதூர், அகஸ்திலிங்கம்பாளையம், ராமபட்டினம், மருதுறையான்வலசு ஆகிய பகுதிகள் ஆகும். 
    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே இடையர்பாளையம் துணை மின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்திற்கு  உட்பட்ட கள்ளபாளையம், சின்னகுயிலி, சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி ஒரு பகுதி மற்றும் இடையர்பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை (25-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:

    செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக் கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, அந்தியூர்பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும். 
    பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், பெரியாயிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம், பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மறுநாள் 10-ந்தேதி ( புதன்கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், பெரியாயிபாளையம், கே.ஆர்.சி. அமிர்தவர்ஷிணி நகர், கே.ஆர்.சி. பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், 15.வேலம்பாளையம்: வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகர், அணைப்புதூர், டிடிபி மில்.

    பெருமாநல்லூர்: பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூர்.

    பழங்கரை: அவிநாசிலிங்கம்பாளையம், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர்ஒருபகுதி, ரங்கா நகர் ஒருபகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர் ஆகிய பகுதிகள் ஆகும்.
    ×