search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறபோதும், தலீபான்களின் அட்டூழியம் குறைந்தபாடில்லை.

    தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் அவர்களின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் சாய்வாரா என்ற நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

    இதில், 10 பயங்கரவாதிகள் பலியாகினர். அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிர் இழந்தனர். 3 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் பால்க் மாகாணத்தின், பால்க் மாவட்டத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் உள்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
    ஜலாலாபாத்:

    ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

    அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அவர்கள் அங்கு நடத்தி வந்துள்ளனர்.

    இந்தநிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகரில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகளை பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்புகளால் ஜலாலாபாத் நகரம் அதிர்ந்தது. இவற்றில் சிக்கி 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர்.

    இந்த குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை
    ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு அலுவலகத்திற்கு தாலிபான் பயங்கரவாதிகள் தீ வைத்ததில் 10 போலீசார் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். #Taliban
    காபூல் :

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வர்டாக் மாகாணத்தில் உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகதிற்கு தாலிபான் பயங்கரவாதிகள்  தீ வைத்ததால் கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில், மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி உள்பட 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    மேலும், தலைநகர் காபூலில் இருந்து தெற்கு மாகாணங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளையும் பயங்கரவாதிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாலைகளை பயங்கரவாதிகள் வசமிருந்து மீட்க்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Taliban
    ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் உள்ள மல்யுத்தம் பயிற்சி மையம் ஒன்றில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. #KabultwinSuicideAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியதாகவும். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.  

    இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீட்பு குழுவினர் மற்றும் நிருபர்களை குறி வைத்து மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது.

    இதில், அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் சிலர் உள்பட 20 பேர் பரிதபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்  70-க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #KabultwinSuicideAttac
    ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷியா விடுத்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பை நிராகரித்துள்ளது. #Afghanistan #Taliban
    காபுல் :

    முன்னர் சோவியத் யூனியனாக இருந்த தற்போதைய ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் குழாய் பதிப்பதற்காக ஆப்கானிஸ்தானை பகடைகாயாக பயன்படுத்தி அந்நாட்டிற்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியனை வெளியேற்ற திட்டம் தீட்டியது.

    இதனால், பாகிஸ்தானின் மதரசாக்களில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அமெரிக்காவின் துணையோடு ஆயுதப் பயிற்சி அளித்து சோவியத் யூனியன் படைகளை எதிர்த்துப் போரிடத் தயார் செய்தது பாகிஸ்தான் அரசு. அவர்களே பின்னாளில் தலிபான்களாக மாறினர்.

    தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். பின்னர், 90-களில் அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு  அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வந்தது. இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் சிக்கி நாடு சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பிறகுதான் அமெரிக்காவிற்கு எதிரியாக மாறிப்போனது தலிபான் அமைப்பு.

    அப்போது முதலாக ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் தினம்தோறும் பாதுகாப்பு படையினருடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கும் போர் நிறுத்தங்களுக்கும் சம்மதிக்காமல் ரத்த வெறியுடனே தலிபான் பயங்கரவாதிகள் சுற்றித் திரிந்தனர். சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர்.



    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை ரஷியா செய்யும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தவுள்ளதாக ரஷியா அறிவித்தது.

    ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் இதில், மூன்றாவது நபரின்(நாட்டின்) தலையீடு தேவையில்லை என அந்நாடு ரஷியாவிற்கு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தான் அரசு அழைக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் வேண்டுமானால் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க தலிபான் அமைப்புக்கு ரஷியா அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் என கூறி ரஷியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    இதற்கிடையே, ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தலிபான்கள் அந்த கூட்டத்திற்கு தங்களது தரப்பின் மூத்த உறுப்பினரை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு ரஷியா வான்வழி உதவிகளை வழ்ங்கி வருகிறது என சமீபத்தில் அமெரிக்க தளபதி ஒருவர் குற்றச்சாட்டை கூறியிருந்த நிலையில் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Afghanistan #Taliban
    ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் உள்ள பள்ளி வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kabul #Afghan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பலியான அனைவருக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேய உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தாக்குதல் நடந்த பாரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் முகமது நாசர் மேஹ்ரி ஊடகங்களிடம் கூறுகையில், பாலா பலக் மாவட்டத்தின் சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாதுகாப்புப்படை எதிர்த்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது தலிபான் இயக்கம் தான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
    காபூல் :

    ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஞ்சசீர் மாகாண மலைகளில் உறைபனி ஏரி அமைந்துள்ளது. இதில் உள்ள பனி உருகி ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியாகிய காரணத்தால் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு  பணிகளில் ஈடுபட மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பேரிடர் மேலாண்மைத்துறை செய்தித்தொடர்பாளர் ஓமர் முகமதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
    ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AfghanBlast
    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே திடீரென இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தற்கொலைப்படை நடத்திய இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanBlast
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Nangarharsuicidebombing
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Nangarharsuicidebombing  
    இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது ஆப்கான் வீரர்களையும் இந்திய வீரர்கள் கோப்பை வழங்கப்படும் போது அழைத்ததை பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார். #MannKiBaat #PMModi #INDvAFG
    புதுடெல்லி:

    கடந்த வாரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால், கோப்பை வழங்கப்பட்ட பின்னர், போட்டோவுக்கு போஸ் கொடுக்கையில், இந்திய அணி கேப்டன் ரஹானே, ஆப்கான் வீரர்களையும் அழைத்தார்.

    இந்த செயல் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்திய அணியின் இந்த செய்கையை பாராட்டி பேசினார். சமுதாயத்தை ஐக்கியப்படுத்தவும், இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் விளையாட்டு சிறந்த வழியாகும் என அவர் கூறினார்.



    மேலும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடியதற்கு நாம் பெருமை பட வேண்டும். அந்த அணியின் வீரர் ரஷித்கான் உலக கிரிக்கெட்டின் சொத்து, அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார் என மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சியாச்சின் உச்சி, போர்க்கப்பல்கள், ஆகாயம் மற்றும் நீர் என அனைத்து இடங்களிலும் நமது வீரர்கள் யோகா செய்தது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் எனவும் மோடி கூறினார். 
    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா பாஸல் உல்லா அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #USDroneAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள குனார் பகுதியில் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தாலிபன் என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தின் தலைவனாக தற்போது இருக்கக்கூடிய முல்லா பாஸல் உல்லா வசிக்கும் இடத்தை குறிவைத்து நேற்று அமெரிக்க ராணுவம் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

    இந்த தாக்குதலில் முல்லா பாஸல் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட  முல்லா பாஸல் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவரில் இருக்கும் ராணுவ பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தானிலும் இந்த இயக்கத்தினர் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். 
    ×