என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94715
நீங்கள் தேடியது "ஒமிக்ரான்"
புதிய வகை ஒமிக்ரான் தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
வங்காளதேசம்:
தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வகை தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் எதிரொலியால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் புதிய மாறுபாட்டு தொற்று பரவலின் எதிரொலியால் தென் ஆப்பிரிகாவில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு வங்காள தேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்காச தேசத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜாகித் மாலே கூறியதாவது:-
ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா தொற்று மிகவும்ஆக்ரோஷமானது. அதனால், தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வங்காள தேசத்திற்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும், அனைத்து துறைமுகங்களிலும் தீவிர சோதனை நடைமுறைகளையும் அரசு வலுப்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. அரசுப் பெண்கள் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
ஜெர்மனி நாட்டிலும் முதல் முறையாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.
லண்டன்:
உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரசானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவத் தொடங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இதேபோல், ஜெர்மனியிலும் முதல் முறையாக 2 பேருக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...சாலமன் தீவில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் - ஐ.நா. பொதுசெயலாளர் வேண்டுகோள்
நவம்பர் 1 முதல் 26-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர் என பெங்களூரு ஊரக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இதற்கிடையே, இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது தெரியவரும். இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...மிகவும் ஆபத்தானது உருமாறிய கொரோனா வைரஸ் - ராகுல் காந்தி எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, அரசின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
அடுத்த மாதம் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள சூழலில், புதிய வகை கொரோனா மிரட்டுவதால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதை ஆய்வுசெய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய வகை கொரோனா மிகவும் அச்சுறுத்தலானது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக இருக்கவேண்டும். குறைந்தளவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை வெளியிடுவதில் எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...எனது கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவேன் -உமர் அப்துல்லா சூளுரை
தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.
புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வருகின்றன.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரசுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வழங்கி இருக்கிறார்கள். புதிய வைரசுக்கு கிரேக்க பெயர் சூட்டப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்தான ஒமிக்ரான் என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசை 'கவலைக்குரிய வைரஸ் வகை என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X