search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94747"

    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

    சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 106.66 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 5.26 குறைந்து 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 11.16 குறைந்து 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 106.66 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

    நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. 

    சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 106.66 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 106.66 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

    நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. 

    சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 106.35 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 106.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 106.35 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

    நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. 

    சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 106.04 ரூபாய், டீசல் லிட்டர் 102.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 106.35 ரூபாய்க்கும், டீசல் 34 காசுகள் அதிகரித்து 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.
    தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி ஒவ்வெரு நாளும் பெட்ரோல்- டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வருகிறது.

    கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் விலை ஒருநாள் குறைவதும், மறுநாள் உயருவதுமாக இருந்தது. 1-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.90-க் கும், டீசல் ரூ.70.44-க்கும் விற்பனை ஆனது. 5-ந்தேதி வரை ஏற்ற, இறக்க நிலையே நீடித்தது.

    இந்நிலையில் 5-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை இறங்குமுகத்தை சந்தித்தது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்து கொண்டே வந்தது. இது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை நீடித்தது. 16-ந்தேதி வரை பெட்ரோல் விலை ரூ.2.04-ம், டீசல் விலை 80 காசும் குறைந்தது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி இருக்கிறது. 17-ந்தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.74.40-க் கும், டீசல் ரூ.70.45-க்கும் விற்பனை ஆனது. நேற்று லிட்டருக்கு 11 காசு உயர்ந்து பெட்ரோல் ரூ.74.51-க்கு விற்பனை ஆனது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. அந்தவகையில் 16-ந்தேதி முதல் பெட்ரோல் 63 காசும், டீசல் 79 காசும் உயர்ந்துள்ளது.



    அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் இரும்பு, டயர், ஆயில் போன்ற போக்குவரத்துக்கு தொடர்புடைய பொருட்கள் 4 சதவீதம் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    கடந்த 57 நாட்களாக இறங்குமுகமாக இருந்து வந்த பெட்ரோல் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. #PetrolPriceHike
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இடையிடையே சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    5 மாநில தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை குறையத் தொடங்கியது. கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



    இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெட்ரோல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று 72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் பெட்ரோல் ரூ.70.20, டீசல் ரூ.64.66, மும்பையில் பெட்ரோல் ரூ.75.91, டீசல் ரூ.67.66, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.72.38, டீசல் ரூ.66.40, ஐதராபாத்தில் பெட்ரோல் ரூ.74.55, டீசல் ரூ.70.26, பெங்களூருவில் பெட்ரோல் ரூ.70.86, டீசல் ரூ.65.00 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. #PetrolPriceHike
    பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்டது.

    இந்த வரிவிதிப்பினால் ஏற்பட்ட டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.



    இதேபோல், பிரான்ஸ் முழுவதும் சுமார் 1,600 இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்நிலையில், நடுத்தர மக்களின் சுமையை குறைப்பதற்காக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவர்ட் பிலிப் இன்று அறிவித்துள்ளார்.

    தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய எடோவர்ட் பிலிப், மக்களின் கோபத்தை பார்க்காமலோ, கேட்காமலோ இருக்க வேண்டுமானால் நாம் குருடாகவோ, செவிடாகவோ இருக்க வேண்டும். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தகுதி எத்தகையை வரிவிதிப்புக்கும் இருக்க கூடாது.

    எனவே, மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து வரும் 6 மாதங்களுக்கு எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை அரசு ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax #fueltaxincrease #Parisprotests
    மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #Petrol #Diesel #GST
    சண்டிகார்:

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சண்டிகாரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.



    ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை குறையும். இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கான தங்கள் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

    ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். பா.ஜனதா கட்சி மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RamdasAthawale #Petrol #Diesel #GST 
    இந்திய தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SC #Delhi #AirPollution
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது.

    தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. #SC #Delhi #AirPollution
    பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார். #PetrolDiesel #PriceHike #Modi
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

    கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய மந்திரி காலித் அல் பாலி, ஐக்கிய அரபு மந்திரி மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



    மேலும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். எரிசக்தி துறையில், வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலைக்காக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. பணவீக்கம் உயருகிறது. இவ்விஷயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவை.

    வளரும் நாடுகளில், அதிக நிலப்பரப்பில் எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இதில், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் வளர்ந்த நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எரிவாயு துறையில் வினியோக பணியில் தனியாரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

    எண்ணெய் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி நாடுகளே தீர்மானிக்கின்றன. போதுமான உற்பத்தி இருந்தபோதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எண்ணெய் விலை குறைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மற்ற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கூட்டு நிலவுகிறது. அதுபோல், எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி நாடுகளுக்கும், நுகர்வு நாடுகளுக்கும் இடையே கூட்டு நிலவினால், மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து, விலை குறைய வாய்ப்புள்ளது.

    மேலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #PetrolDiesel #PriceHike #Modi 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். #PetrolDiesel #Modi #IndianOil
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.



    இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது. நிதி ஆயோக் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா மந்திரி அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி பிரதமர் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

    குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு கூட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும், எனத் தெரிகிறது.

    கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.   #PetrolDiesel #Modi #IndianOil
    சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.50-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருதல், கச்சா எண்ணெய் உற்பத்தி சற்று குறைதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.
     
    மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 



    இதையடுத்து, கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.

    சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் ரூ.78.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 24 காசுகள் உயர்ந்து, 85.50 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
    ×