search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    அரசியல் வாரிசு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், சின்ன நம்பர் நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம்.
    அரசியல் வாரிசு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், சின்ன நம்பர் நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம். அவர் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், வாரிசு நடிகரின் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டு, ‘பால்’ நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.

    தனக்கு வந்த பட வாய்ப்பை, பால் நடிகை வேண்டும் என்றே தட்டி பறித்திவிட்டார் என்று நடிகை மீது கோபமாக இருக்கிறாராம்.
    வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை, வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம்.
    வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை, வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம். புது பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்ற நுட்பத்தை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறாராம், அவர். 

    அதன்படி, தனக்கு பட வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் உதவி டைரக்டர்களுக்கு, நிறைய ‘கமிஷன்’ வெட்டுகிறாராம். மேலும் பிரபல கதாநாயகர்களுடன் அலைபேசியில் அடிக்கடி பேசி, புது பட வாய்ப்புகளை கைப்பற்றுகிறாராம். 
    வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம்.
    வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். அதன்பின் சில சுமாரான படங்களில் நடித்து வந்த நடிகருக்கு சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றதாம். குறிப்பாக அடல்ட் படம் ஒன்று இளைஞர்களை கவர்ந்ததாம்.

    இளம் இயக்குனர்கள் சிலர் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்களாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தினாராம். சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தாராம். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டதாம்

    கைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், கடல் நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறாராம்.
    முதல் படம் இளைஞர்களிடம் வெற்றி பெற, இரண்டாவது படத்திலேயே தளபதியாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்த ஒல்லி இயக்குனர்,
    முதல் படம் இளைஞர்களிடம் வெற்றி பெற, இரண்டாவது படத்திலேயே தளபதியாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்த ஒல்லி இயக்குனர், குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானாராம். மேலும் அடுத்த படத்திலும் தளபதியாரே நடிக்க புகழின் உச்சிக்கே சென்றாராம் இயக்குனர்.

    இருந்தாலும், அந்த படம் நஷ்டம் என்று ஒரு பக்கம் கூறுவதால், இயக்குனர் அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லையாம். மேலும் நடிகர்களும் அவருடைய படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். 

    இந்த நிலையில், சுமார் மூஞ்சி நடிகரின் படத்தை பாராட்டி கூறியிருக்கிறாராம். இதை பார்த்த பலரும் நடிகருக்கு கொக்கி போடுவதாக பேசிவருகிறார்களாம்.
    பிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம்.
    பிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம். இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றாலும், பாலிவுட்டில் நடிகைக்கு வாய்ப்பு குறைந்து வருகிறதாம். இதனால் போட்டோ ஷூட் எடுத்து அனைவருக்க அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம்.

    ஆனால், இந்த போட்டோ ஷூட் வழக்கமாக இல்லாமல், அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறாராம். இந்தப் போட்டோ வெளியில் லீக் ஆகியிருக்கிறதாம். பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

    சுமார் மூஞ்சி நடிகர் நடிக்கும் படங்களில் ப்பா... யாருடா இது என்ற நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அடிக்கடி சிபாரிசு செய்து வந்தாராம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடிக்கும் படங்களில் ப்பா... யாருடா இது என்ற நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அடிக்கடி சிபாரிசு செய்து வந்தாராம். நடிகையும் நடிகருடன் பல படங்களில் நடித்து விட்டாராம். 

    ஆனால், நடிகர் தற்போது பிரேம நடிகைக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறார். தற்போது உருவாகி இருக்கும் படத்திலும் நடிகை நடிக்க இவர்தான் காரணமாம். மேலும் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் நடிகை பற்றி சொல்லி, நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

    இரண்டு நடிகைகளும் சிறந்த நடிகைகளாம். சரியான வாய்ப்பு இல்லாததால் ஜொலிக்காமல் இருக்கிறார்களாம். அந்த வாய்ப்பைதான் நடிகர் ஏற்பாடு செய்து கொடுக்கிறாராம்.
    கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தாராம்.
    கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தாராம். யார் கண்பட்டதோ... அவர் நடித்து வெளிவந்த 2 படங்கள் தோல்வி அடைந்து விட்டதாம். அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்று புரிந்து கொண்ட ‘இசை-நாயகன்,’ அதற்கான முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டுள்ளாராம்.

    அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் வரை, ‘கைப்பேசி’யை பயன்படுத்துவதில்லை என்று சபதம் எடுத்து இருக்கிறாராம். அவருடைய ‘கைப்பேசி’ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது!
    சின்ன நம்பர் நடிகை சமீப காலமாக தான் நடித்த படங்களின் புரமோஷனில் கலந்துக் கொள்ளாமல் இருந்தாராம்.
    சின்ன நம்பர் நடிகை சமீப காலமாக தான் நடித்த படங்களின் புரமோஷனில் கலந்துக் கொள்ளாமல் இருந்தாராம். இதனால், அந்த படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவர் மீது கோபமடைந்தார்களாம். நடிகை நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு இனிமேல் வரமாட்டார் என்ற செய்தி வைரலாக பரவியதாம்.

    இதனால் நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். இதனால், நடிகை தற்போது நடித்திருக்கும் படத்தின் புரமோஷனுக்கு கலந்து கொண்டிருக்கிறாராம். இனிமேல் எல்லா படத்தின் புரமோஷனுக்கும் செல்லவும் நடிகை திட்டமிட்டுள்ளாராம்.
    நட்சத்திர நடிகர் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டார்களாம்.
    நட்சத்திர நடிகர் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டார்களாம். முன்னாள் கதாநாயகிகள், இந்நாள் கதாநாயகிகள் அனைவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார்களாம். கடைசியில் ரன் நடிகை வென்று விட்டாராம். நட்சத்திரத்துடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற அவருடைய நீண்ட நாள் வருத்தம் தற்போது நீங்கி இருக்கிறதாம். 

    இவருடன் போட்டி போட்ட சின்ன நம்பர் நடிகை கடுங்கோபத்தில் இருக்கிறாராம். எப்படியாவது இந்த படத்தில் நடித்து விடலாம் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கிறதாம். இந்த வாய்ப்பை தட்டிப் பறித்த ரன் நடிகை மீது மிகவும் கோபத்தில் இருக்கிறாராம்.
    இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.
    இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.

    ‘வாரிசு’ நடிகர் தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்தாராம். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததாம்.

    எனவே சொந்த படம் எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றார், நடிகர். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டதாம். முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்!
    விவேகமான நடிகையின் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் நடிகை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாமலிருக்கிறாராம்.
    விவேகமான நடிகையின் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் நடிகை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாமலிருக்கிறாராம். இந்த ஆண்டு 3 படங்களில் நடிக்கும் அவர் அடுத்த ஆண்டிற்கும் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இந்நிலையில் தெலுங்கு நடிகரின் வாழ்க்கை படத்தில் நடிகை நடிப்பதாக இருந்ததாம். முதலில் இப்படத்தை வேறொரு இயக்குனர் இயக்கவிருந்தாராம். 

    ஆனால் ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து அப்படத்திலிருந்து இயக்குனர் விலகினாராம். தற்போது வேறொருவர் இயக்குகிறாராம். பழைய இயக்குனரின் நட்சத்திர தேர்வில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். அதன்படி நடிகருக்கு ஜோடியாக இந்தி நடிகை நடிக்கிறாராம். முக்கிய வேடமொன்றில் நடிப்பதாக இருந்த விவேகமான நடிகைக்கு அந்த வேடத்திலிருந்து மாற்றப்பட்டிருக்கிறாராம். 
    தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருகிறாராம் சின்ன நம்பர் நடிகை.
    தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருகிறாராம் சின்ன நம்பர் நடிகை. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் வெளியீட்டு தயாராகி வருகிறதாம். இவரிடம் யாராவது போய், “எப்ப கல்யாணம்?” என்று கேட்டால், ‘டென்ஷன்’ ஆகிவிடுகிறாராம். “என் கல்யாணத்தில் உங்களுக்கு என்ன அக்கறை?” என்று கேட்டு சண்டை போடுகிறாராம்.

    திருமணமே செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடலாம் என்று நடிகை நினைக்கிறாரோ... திருமண வாழ்க்கையில் அவருக்கு என்ன வெறுப்போ? என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    ×