search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94876"

    பேரையூர் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    பேரையூர் அருகே உள்ள புதுரெங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி லதா (வயது 39). சரவணகுமார் செக்கானூரணியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். லதா நேற்றுமுன்தினம் இரவு அருகில் உள்ள அவருடைய மாமியார் வீட்டில் சென்று தங்கியிருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு பீரோவை உடைத்து அதிலுள்ள 10 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    திருவட்டார் அருகே ஒரே நாளில் 3 கடைகளில் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவட்டார்:

    திருவட்டார் சந்தை அருகே சசி என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கடையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது, பலசரக்கு கடையின் எதிர்புறம் உள்ள பத்மராஜ் என்பவரின் பழக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்து 14 வாழைக்குலைகள் மற்றும் பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    மேலும், இந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் ஒரு தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் விஜயகுமார் என்பவரின் டீக்கடை பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1,500 திருட்டு போயுள்ளது. அதன் அருகில் உள்ள சுவாமிதாஸ் எனபவரின் பேன்சி ஸ்டோர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    கோவை அருகே மடிக்கணினி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். காரில் இவரது மடிக்கணினி இருந்தது. இதனை மர்ம நபர் காரை திறந்து மடிக்கணினியை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில்சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி பகுதியில் திருட்டு போன 41 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சூளகிரி:

    சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி தனிப்படை போலீசார், சூளகிரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பர்கூர் அருகே குண்டியால் நத்தம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது26), திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசன் (24), சந்தோஷ் (19) மற்றும் திருவேங்கடம் (31), வேலூர் மாவட்டம் பனந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஓசூர், சூளகிரி, குருபரப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல ஊர்களில் இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வேறு மாவட்டங்களில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். இதையடுத்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளிலும், மெயின் ரோடுகளிலும் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தக்கூடாது.

    மேலும் இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது, ஆவணங்கள் சரியாகஉள்ளதா? என்று சரிபார்த்து வாங்கவேண்டும். திருட்டு வாகனங்களை பணம் கொடுத்து வாங்கி ஏமாறக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
    மதுரையில் இருந்து நாகைக்கு பஸ்சில் வந்த போது மூதாட்டியிடம் 19 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்த உச்சா தேவர் மனைவி ஜெயலட்சுமி (வயது71). இவர் கடந்த 12-ந்தேதி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றார். பின்னர் மதுரையில் இருந்து மறுநாள் 13-ந்தேதி பஸ் மூலம் நாகைக்கு வந்தார். அப்போது தனது பையில் 19 பவுன் நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி ஜெலட்சுமியிடம் இருந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஜெயலட்சுமி நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வெவ்வேறு இடங்களில் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38). நேரலகிரி அரசு பள்ளி ஆசிரியரான இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கொல்லபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை குருபரப்பள்ளியில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. ஓசூர் துர்கா நகரை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. மேலும் ஓசூர் குமுதேப்பள்ளி எல்லம்மாகொத்தூரை சேர்ந்த மஞ்சுநாத் (36) என்பவரது மோட்டார் சைக்கிளும், தேன்கனிக்கோட்டை தாலுகா மாடக்கல் பக்கமுள்ள திம்மனப்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் (39) என்பது மோட்டார் சைக்கிளும், பர்கூர் வெங்கடசமுத்திரம் பையனூரை சேர்ந்த அல்தாப் உசேன் (29) என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலயைங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 67). இவர் சுகாதாரத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10-ந் தேதியன்று இவரது குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர்.

    பின்னர் நேற்று காலை பக்தவச்சலம் குடும்பத்தினர், வாழப்பட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் தங்க நகைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு ஒன்றும், வெள்ளி குங்குமச்சிமிழ் ஒன்றும் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    தரகம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3¼ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரகம்பட்டி:

    கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டியை சேர்ந்தவர் அஜ்மல் ரகுமான் (வயது 27). இவர் குளிர்பானம் மற்றும் பிஸ்கெட் வியாபாரம் செய்து வருகிறார். அஜ்மல் ரகுமான் தனது குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள தனது அத்தை மகன் திருமணத்திற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே கடையின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடியை சேர்ந்தவர் ரகு (வயது 37). இவர் வல்லவாரி கிழக்குகடை தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பின் பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 3 பவுன் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பூண்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் அடகு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் அடகு நகையை எடுத்துக்கொண்டு ஒரு துணிப்பையில் ரூ.32 ஆயிரத்து 714 வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது முகத்தை கழுவுவதற்காக வண்டியில் பணம் மற்றும் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார். முகத்தை கழுவி விட்டு வந்து பார்த்த போது வண்டியில் வைத்திருந்த பணம்-நகை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகானந்தம் தஞ்சை மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்தணியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகர் பகுதியில் வசித்து வருபவர் சைலஜா. நேற்று முன்தினம் இரவு இவரும் இவரது மகளும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டு பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சைலஜா மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எதிர் வீட்டில் இருக்கும் நண்பருக்கு போன் செய்து ‘திருடன்’ வந்திருப்பதாக கூறி கூச்சலிட்டார்.

    இதைக்கேட்டு மர்ம ஆசாமி அங்கிருந்து ஓடிவிட்டான். அதே போல், பக்கத்து தெருவில் வசித்து வருபவர் ராதா. இவர் மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி கொண்டு தனது சகோதரி ரமணி வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் மர்ம ஆசாமி பூட்டியிருந்த ராதாவின் வீட்டு பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று, கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க தாலி மற்றும் ரூ.50 ஆயிரத்தை அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச்சென்றான். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பாப்பாரப்பட்டி அருகே வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வேன் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாப்பாரப்பட்டி:

    பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 41). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு முன்பு வேனை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்த போது வேன் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×