search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரரசு"

    திருப்பாச்சி, திருப்பதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு, தமிழக முதல்வருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

    குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாட்டில் கல்லூரிகளிலும், பள்ளிகளும் மேலும் தொழில் மையங்களிலும் பாலியல் தொல்லையும், பாலியல் பலாத்காரமும் தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    பேரரசு

    இதற்கொரு தீர்வு கிடைக்காத என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அதிகரித்திருக்கும் வேளையில் ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதல்வர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

    முதல்வரின் உணர்வோடு அதிகாரிகளும் செயல்பட்டால் நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பலாத்காரங்களும் நம் நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது. பெண் குழந்தைகள் தன்னை காத்துக்கொள்ள முதல்வர் அறிவித்திருக்கும் தொலைபேசி எண் 1098 அனைத்து பெண்களும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்

    1098 என்ற எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்க வேண்டும்.. நன்றி முதல்வரே! விட்ராதீங்க முதல்வரே!!’

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டதாக இயக்குனர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திருப்பாச்சி படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வந்தனர். 

    சமூக வலைதளங்களிலும் இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்ணாத்த படத்தை விமர்சிப்பவர்களை இயக்குனர் பேரரசு கடுமையாக சாடி உள்ளார்.

    அண்ணாத்த படத்தின் போஸ்டர்
    அண்ணாத்த படத்தின் போஸ்டர்

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும், வக்கிரத்தோடும், நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது. இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற விழிப்புணர்வு படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுவதாக கூறினார்.
    இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’.

    திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

    இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சினிமா நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகக் கூறினார்.

    எத்தனை படங்கள் எடுத்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே இணையத்தில் வெளியாகிறது. அவன் சொல்லி அடிக்கிறான்.

    இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.


    அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம். சினிமாக்காரர்களின் ஓட்டு அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை.

    அதை அவர்கள் கள்ள ஓட்டாகப் போட்டுக் கொள்வார்கள். பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது.

    அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் நாம் எல்லோரும் காவியை கட்டிக்கொண்டு தான் அலையப் போகிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஹீரோக்களிடம் நாங்கள் கதை சொல்லபோய், இப்போ அவர்கள் மேடையில் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்று படவிழாவில் கலந்துக் கொண்ட பேரரசு கூறியிருக்கிறார். #Perarasu
    சமூக வலைதளங்களின் பாதிப்புகள் பற்றி விளக்கும் வகையில் வேறென்ன வேண்டும் என்ற படம் உருவாகி இருக்கிறது. நரேன் ராம்தேஜ், பியர்னா கன்னா, தர்‌ஷன் நடிப்பில் பாரதிகுமார் இயக்கத்தில் அனுமனி, சலாதிமா ரெட்டி தயாரிப்பில் இப்ப்படம் உருவாகி இருக்கிறது. 

    இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பேரரசு பேசும்போது ‘இந்த படத்தின் இசை, டிரெய்லரை பார்த்தால் சின்ன படம் போலவே தெரியவில்லை. சிறிய பட இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

    புதுமுகங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுங்கள். முன்பெல்லாம் நடிகர்கள் கதை கேட்பார்கள். ஆனால் இப்போது மேடையில் கதை சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். டைரக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறோம். இந்த படம் மக்களுக்கு பெரிய விழிப்புணர்வு படமாக இருக்கும்’ என்று பேசினார். 

    இந்த படத்தின் கதாநாயகி பியர்னா டெல்லியை சேர்ந்தவர். அறிமுகமாகும் வேறென்ன வேண்டும் படம் வெளிவரும் முன்பே 3 தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
    ×