search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan #DMK

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி. தமிழகத்தில் முதலில் உருவான கூட்டணி. தி.மு.க. கூட்டணி 9 கட்சிகளை கொண்டதாக விளங்குகிறது.

    இந்த கட்சியில் சுமூகமாக, இணக்கமான முறையில் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது.

    இரண்டொரு நாட்களில் தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்படும். நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் சனாதன சக்திகளுக்கு எதிரான தர்ம யுத்தம்.

    அகில இந்திய அளவில் பல சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்ற வகையில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்போம்.

    ஆளும் கட்சியான பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு எதிரான உளவியல் மக்களிடையே உள்ளது.

    எனவே இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.

    உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாக விளக்கம் கூறியுள்ளார்.

    நண்பர் என்ற முறையில் நானும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. உடல் நலம் குறித்து விரைவில் விசாரிப்பேன்.

    தே.மு.தி.க. தேர்தல் தொடர்பாக எந்த நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தி.மு.க. தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #DMK

    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    வேலூர்:

    வேலூர் ஊரிசு கல்லூரியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வேலூர் வந்தார்.


    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

    கூட்டணியை உருவாக்கி பல மாதங்களாக தி.மு.க.வுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே தி.மு.க. கூட்டணியில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தி.மு.க கூட்டணியில் நாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை வழங்கி உள்ளோம்.

    இறுதி பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளதால் இன்னும் 1 வாரத்தில் தொகுதி எண்ணிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #dmk #parliamentelection #mkstalin

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுமே கூட்ணி பேச்சு வார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    இதில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி உள்ளது.

    கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு வராத அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்ற விபரத்தை தெரிவித்து விட்டதாகவும், அதை இப்போது வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

    எனவே இன்னும் 1 வாரத்தில் ஒவ்வொரு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #dmk #parliamentelection #mkstalin

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழிசை சவுந்தரராஜன்

    பாராளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

    அஜித், ரஜினி அறிக்கை வெளியிட்டால் உடனே பா.ஜனதாவுக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது.

    மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.

    திருமாவளவன்


    ரஜினியின் அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது.

    கே.பாலகிருஷ்ணன்

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி தெரிவித்திருப்பது அரசியல் செயல்பாடாக இல்லை. ரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால்தான் தண்ணீர் பிரச்சனை தீரும். அதற்கு எங்கள் கூட்டணி மூலம்தான் தீர்வு கிடைக்கும்.

    நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால் எதிரானவர்களுக்கு ஆதரவா? என புரிந்து கொள்ளப்படும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும்.

    வைகைச் செல்வன் (அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்)

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்து போய் விட்டது. 1996 முதல் ஒவ்வொரு முறையும் அரசியலில் நுழைவேன் என்று கூறுவதை இந்த அறிவிப்பு மூலம் நீர்த்து போக செய்து விட்டார்.

    கே.பி. முனுசாமி (அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்)

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறி இருப்பது அவரது முடிவு. ஆனால் அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். பிறகு தேர்தலை சந்திக்கலாம்.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறுவது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என தெரிகிறது.

    பட்டிதொட்டி எங்கும் தடையில்லா தண்ணீர் கிடைக்க அ.தி.மு.க. அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.#Rajinikanth #LSPolls
    ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #PulwamaAttack #Thirumavalavan
    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருப்பது புலனாய்வு களத்தில் மத்திய அரசு பலவீனமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    எனவே மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்தி பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து ஆராய வேண்டும்.



    ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி தலைமையிலான அரசு பதவியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறது. இதனால் மோடிக்கு கட்டுப்பட்ட அரசாக அச்சத்தில் உறைந்திருக்கிறது.

    மத்திய அரசின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு தமிழக அரசு சுதந்திரமாக செயல்படாதது வேதனை தருகிறது.

    பாரதிய ஜனதாவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அ.தி.மு.க -பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணி அல்ல.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #PulwamaAttack #Thirumavalavan
    பா.ம.க.வை சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தான் முடிவு செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #Mutharasan #PMK #DMK
    சென்னை:

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    பா.ம.க. குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்து பேசுவது அவர்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனையாகும்.

    தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் இடம் பெற்றுள்ளார். இதில் பா.ம.க.வை சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தான் முடிவு செய்யும்.



    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கிண்டல், கேலியாக பேசக்கூடியவர். கூட்டணி குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறது.

    வருகிற 27-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு கோவையில் நடைபெறுகிறது.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் உள்பட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Mutharasan #PMK #DMK
    பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சட்டப் பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.

    காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், காலவிரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டு மின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan

    தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு சதி முயற்சியில் ஈடுபடுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். #VCK #Thirumavalavan #DMK #PMK
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலைமலருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தி.மு.க கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக சொல்லப்படுகிறதே?

    பதில்:-தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க.வை பலவீனப்படுத்த சிலர் திட்டமிட்டு இவ்வாறான சதி முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

    பா.ம.க.வுக்கும், விடுதலை சிறுத்தைக்கும் உள்ள முரண்பாட்டை பயன்படுத்தி தி.மு.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ம.க.வை பொறுத்த வரையில் அரசியலில் தமக்கான முதல் எதிரியாக தி.மு.க.வைத்தான் குறி வைத்து செயல்பட்டு வருகிறது. இது ஊரறிந்த உண்மை. விடுதலை சிறுத்தைகளை முதல் எதிரிகளாக அவர்கள் பார்க்கவில்லை. எங்களை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புகின்றனர்.

    தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மேலும் சில கட்சிகளும் அதே யுக்தியை கையாள்கின்றன. அதாவது அவர்களுக்கு தி.மு.க.வை வீழ்த்துவதுதான் இலக்கு. விடுதலைசிறுத்தைகளை அல்ல.

    தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகள் இடையேயும் பேசி கொண்டு இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் தங்களின் பேரத்தை உயர்த்தி கொள்ள முடியும் என்பதே அவர்களின் தந்திரம்.

    அத்துடன் விடுதலை சிறுத்தைகளையும் சீண்டி அதன் மூலம் தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைக்கும் இடையில் ஏதேனும் ஒரு முரண்பாட்டை உருவாக்கலாமா? என்றும் பகல் கனவு காண்கின்றனர்.

    விடுதலைச் சிறுத்தைகளை பற்றியும் பா.ம.க.வை பற்றியும் தி.மு.க. தலைமைக்கு நன்கு தெரியும். எனவே தி.மு.க. கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது.

    கேள்வி:- தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுடன் கூட்டணி பற்றி பேசுவதாக கூறப்படுகிறதே?

    பதில்:- அது உண்மையாக கூட இருக்கலாம். பா.ம.க.வுக்கு இது வாடிக்கைதான். அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக கொஞ்சம்கூட கூச்சப்படாமல் எதையும் செய்வார்கள்.

    ஆனால் உண்மையில் பா.ம.க.வின் நோக்கம் தி.மு.க.வை வீழ்த்துவதுதான். அதிலும் குறிப்பாக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குள் தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படக்கூடியவர்கள். இது கலைஞர் காலத்தில் இருந்து தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சியை பிடிப்பதற்கு தி.மு.க.தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று ராமதாஸ் நினைக்கிறார். எனவே தி.மு.க.வுடன் பா.ம.க. உறவு வைத்து கொள்ள விரும்புவது உண்மை என்றாலும் அது நஞ்சு கலந்த நயவஞ்சக உறவாகத்தான் இருக்கும்.

    கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் உங்கள் நிலை என்ன?

    பதில்:- தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணியை சிதற விடாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில்தான் இடம் பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.



    கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது என்று சொல்கிறீர்களா?

    பதில்:- ஆமாம், தி.மு.க.- பா.ம.க. கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லை. பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் பா.ம.க.வோடு பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவில் அ.தி.மு.க.வுடன் பேரம் படியாததால் அவர்களே திட்டமிட்டு இந்த நாடக அரசியலை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அ.தி.மு.க.வை அவர்கள் இழுத்த இழுப்புக்கு பணிய வைப்பதற்கு தான் இந்த நாடக அரசியல்.

    கேள்வி:- ஒருவேளை தி.மு.க., பா.ம.க.வையும், விடுதலை சிறுத்தையையும் ஒரே அணியில் வைத்து கொள்ள முயற்சி செய்தால் உடன்படுவீர்களா?

    பதில்:- இதுகுறித்து ஏற்கனவே பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம். பா.ம.க. ஒரு சனாதன கட்சி. அதற்கும், பா.ஜனதாவுக்கும் வேறுபாடு இல்லை. சாதி கலவரங்களையோ, மத கலவரங்களையோ தூண்டி விட்டு ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களை பலி கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் குறியாக இருப்பவர்கள்.

    எனவே சனாதன சக்திகளுடன் தேர்தல் யுக்தி என்ற அடிப்படையிலும் ஒரு போதும் சமரசம் ஆக மாட்டோம். அதாவது பா.ம.க., பா.ஜனதா இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. இந்த அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

    கேள்வி:- பிரதமர் மோடி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளாரே?

    பதில்:- அந்த அளவிற்கு எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு மோடி நடுக்கம் அடைந்து இருக்கிறார். தனி நபர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள்கிறது என்பதை விட மோடியை இயக்கும் சனாதன பயங்கரவாத அரசியலை வீழ்த்த வேண்டும் என்பதற்காகதான் ஒன்று சேர்கின்றனர்.

    கேள்வி:- பா.ம.க.வை சேர்த்தால் தி.மு.க. கூட்டணி மேலும் வலுப்பெறத்தானே செய்யும்?

    பதில்:- ஒருவேளை கூட்டணி வலு பெறலாம். ஆனால் தி.மு.க. பலவீனமாகும். ஏனென்றால் தற்போது உள்ள கூட்டணி பலத்தை வைத்தே தி.மு.க. வெற்றி பெறக்கூடிய பல தொகுதிகளை பா.ம.க.வுக்கு விட்டு கொடுக்க நேரிடும். அதனால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தி.மு.க.தான் பலவீனம் அடையும்.

    தி.மு.க.வால் பா.ம.க.வுக்கு பயன் கிடைக்குமே தவிர பா.ம.க.வால் தி.மு.க.வுக்கு எந்த பயனும் கிடைக்காது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #VCK #Thirumavalavan #DMK #PMK
    திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். அது எனது சொந்த தொகுதி. 1999-ம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். அங்கு நிற்கவே விரும்புகிறேன்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க.தான் முதலில் கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்று இருந்தாலும் புதிய கட்சிகள் வந்தால் வரவேற்பதாக தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    வலுவான கூட்டணியாக உள்ள தி.மு.க. தலைமையில் புதியவர்கள் வந்தால் மேலும் வலு சேர்க்கும்.

    மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்துள்ள யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

    தமிழக பட்ஜெட்டில் ஒன்றுமே கிடையாது. எந்தவித புதிய அறிவிப்புகளும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை என்பதை பட்ஜெட்டில் விமர்சித்து இருக்கிறார்கள்.

    பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு கூட முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பது நல்லதல்ல.

    ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பிரதமர் மீது ஆதாரம் இல்லாமல் அவர் வெளிப்படையாக பேச மாட்டார். தேர்தல் தேதி அறிவித்தவுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்.

    விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மதவாதத்தை திணிக்க கூடாது. காவல் துறை நேர்மையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரபேல் ஊழலில் பிரதமர் மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #Thirumavalavan #PMModi
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரபேல் விமான பேர ஊழலில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டதும் அதனால் இந்திய அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதும் ஆதாரப்பூர்வமாக ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் உண்மை முழுமையாக வெளிப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் மீண்டும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    ரபேல் விமான பேரத்தில் அதற்கென நியமிக்கப்பட்ட குழு மட்டும்தான் ஈடுபட்டது வேறு எவரும் அதில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.



    ஆனால் மத்திய அரசு கூறியதற்கு மாறாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளோடு பிரதமர் அலுவலகம் பேரத்தில் ஈடுபட்டதும், அதனால் ஏற்கனவே இந்தியாவின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நட்டம் ஏற்படும் நிலை உருவானதும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆவணங்களின் சான்றுகளோடு ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே, மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan #PMModi
    2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் வருகிற 15-ந் தேதி நேரில் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Thirumavalavan
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 84 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார்.

    இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஓட்டுகளை முறையாக எண்ணவில்லை என்பதால், மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, 2 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு எந்திரம் கோளாறு என்று கூறி பல வாக்காளர்களை ஓட்டுபோட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டி இருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.சீனிவாசராவ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக திருமாவளவன் வருகிற 15-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். #Thirumavalavan
    கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #hraja #bjp

    கும்பகோணம்:

    மதம் மாற்றம் செய்வது குறித்து எதிர்த்து பேசியதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து திருபுவனம் பகுதியில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை திருபுவனம் வந்தார். பின்னர் ராமலிங்கம் வீட்டுக்கு சென்று அவரது மகன்கள், மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத மாற்றம் குறித்து கேள்வி கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர் பேசியது நியாயமாக தான் பேசி உள்ளார். கொலை குற்றவாளிகளை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.

    நான் ராமலிங்கம் வீட்டுக்கு செல்லும் வழியை போலீசார் தடை செய்தனர். மாற்று வழியில் செல்லும் நிலைமை ஏற்பட்டது. கொலை குற்றவாளிகளை போலீசார் பதுக்கி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.

    தமிழகத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் குரல்கொடுக்க மாட்டார்கள். ராமலிங்கம் கொலையை கண்டித்து இவர்கள் ஏதும் கூறவில்லை. திராவிட கட்சிகள், இந்து மதத்தை அழிக்கும் செயலை செய்து வருகின்றன.

    கேரளாவில் நடந்த தேர்வில் இஸ்லாமிய மதம் குறித்த கேள்வியை தயாரித்த ஜோசப் என்பவரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது. இதேபோல் தான் ராமலிங்கத்தின் கொலையும் நடந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள், சமுதாய அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×