search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94931"

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. புதிய எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது.

    வெற்றி பெற்றவர்களில் சில எம்.பி.க்கள் சென்னையில் இன்று தி.மு.க. புதிய தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
    திருநெல்வேலி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    திருநெல்வேலி தொகுதியில் 15,46,212 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,31,547 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் 62 ஆயிரத்து 209 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 49 ஆயிரத்து 898 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெண்ணிமலை 23 ஆயிரத்து 100 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 14,88,944 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,56,841 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தனுஷ் எம்.குமார் 4,70,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணசாமி 3,54,216 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் 91 ஆயிரத்து 130 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 58 ஆயிரத்து 855 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனீஸ்வரன் 23 ஆயிரத்து 844 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    விழுப்புரம்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் 15,28,539 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,98,064 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் 3,21,794 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் 50 ஆயிரத்து 179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சர்பூதீன் 30 ஆயிரத்து 246 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கணேஷ் 14 ஆயிரத்து 587 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    நாகை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மயிலாடுதுறை தொகுதியில் 14,84,348 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,91,921 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி 3,26,136 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் செந்தமிழன் 66 ஆயிரத்து 401 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 39 ஆயிரத்து 270 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 16 ஆயிரத்து 463 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்கு பின்னர், திமுக தேசிய அளவில் என்ன சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்.
    புது டெல்லி:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக, பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது.

    தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.



    தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள், திமுகவின் நிரந்தர சின்னமான 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட்டனர்.

    திமுகவுடனான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய அளவில் பாஜக, 'தாமரை' சின்னத்தில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.

    இதையடுத்து காங்கிரஸ் 'கை' சின்னத்தில் 52 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ளது.

    மற்ற மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றிப்பெற்று  தேசிய அளவில் அதிக மக்களவை தொகுதி உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    திமுகவையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றிப்பெற்று நான்காவது இடத்திலும், ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகள் அடுத்தடுத்தும் இடம் பெற்றுள்ளன.  

     



     
    சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 5,69,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    சேலம்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    சேலம் தொகுதியில் 16,11,982 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,48,809 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் 5,68,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,32,040 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 49 ஆயிரத்து 435 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா 32 ஆயிரத்து 219 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 57 ஆயிரத்து 191 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    வேலூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    அரக்கோணம் தொகுதியில் 14,94,929 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,45,831 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. சார்பில் எஸ்.ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. இத்தொகுதியில் போட்டியிட்டது. பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3,40,574 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் 66 ஆயிரத்து 360 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாவேந்தன் 28 ஆயிரத்து 897 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் 23 ஆயிரத்து 530 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    8 முறை வென்ற அ.தி.மு.க.வை வீழ்த்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றது. மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடைசி வரை பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளில் டாக்டர் சரவணன் 85 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்றார்.

    எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி 83 ஆயிரத்து 38 ஓட்டுகளும், அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல் 12 ஆயிரத்து 610 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி 5 ஆயிரத்து 467 ஓட்டுகளும் பெற்றனர்.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 2 ஆயிரத்து 396 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடினார்.

    ஓட்டு எண்ணிக்கையின்போது இந்த தொகுதியில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 8 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அ.தி.மு.க.வை விட கூடுதல் வாக்குகளை பெற்று வந்தார்.

    9 முதல் 11 சுற்றுகள் எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி கூடுதல் வாக்குகளை பெற்றார். அதுபோல 12 முதல் 16 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூடுதல் வாக்குகளை பெற்ற வண்ணம் இருந்தனர். மாறி மாறி முன்னிலை வகித்ததால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே அவ்வப்போது சலசலப்பும், பரபரப்பும் நிலவியது.

    அடுத்ததாக 17 முதல் 19 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். 20-வது சுற்றில் மீண்டும் அ.தி.மு.க. பக்கம் முன்னிலை கிடைத்தது. ஆனால் 21, 22 ஆகிய சுற்றுகளில் தி.மு.க. கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

    திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை அ.ம.மு.க. 31 ஆயிரத்து 119 வாக்குகளை பெற்றுள்ளது. இது அ.தி.மு.க.வின் வெற்றியை தடுத்து விட்டதாக அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர். ஆனாலும் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் கிடைத்த திருப்பரங்குன்றம் வெற்றிக்கனி பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொகுதியில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று அ.தி.மு.க. தனது கோட்டையாகவே வைத்திருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வுக்கு கிட்டவில்லை.

    கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், வாக்குகள் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதால் அ.தி.மு.க.வினரும் வெற்றியை தவற விட்டதில் சோகமாகவே உள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22,53,041, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,88,666 வாக்குகள் பதிவானது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,91,220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,69,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 53,027, அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் 25,804, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் 80,058 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    காஞ்சிபுரம் தொகுதியில் 16,43,656, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,14,086 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சினி 62,771, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 55,213 வாக்குகள் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை. 
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

    பெரம்பலூர் தொகுதியில் 13,91,011 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,94,659 வாக்குகள் பதிவானது.

    இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி 53,545, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 45,591 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேலுசாமி 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் வேலுசாமி, பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து, அ.ம.மு.க. சார்பில் ஜோதிமுருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான், மக்கள் நீதிமய்யம் சார்பில் டாக்டர் சுதாகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி முன்னிலையில் இருந்தார். 23 சுற்றுகள் முடிவில் அவர் 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு விபரம் வருமாறு:-

    தி.மு.க - 7,46,523

    பா.ம.க. - 2,07,551

    ம.நீ.ம. - 38,784

    பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகளை அடுத்த 3-ம் இடத்தை அ.ம.மு.க. பிடித்திருந்தது. சில தொகுதிகளில் 3-ம் இடத்தை மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் கைப்பற்றி இருந்தன. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் 3-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர்அலிகான் பிடித்திருந்தார்.

    ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது நூதன முறையில் சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்தும், டீக்கடைகளில் டீ போட்டும், புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்ததும் பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×