search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து மத்திய அரசு பெண் வக்கீல் ரேணுகாவுக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை கோர்ட்டு வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை கோர்ட்டு உள்ளது. இங்கு நீதிபதியாக பணியாற்றி வருபவர் சஞ்சய்பாபா. ஹெராயின் போதை பொருள் கடத்தல் தொடர்பாக இந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய அரசு வக்கீல் ரேணுகா ஆஜராகி வாதாடி வருகிறார். தான் கோர்ட்டில் ஆஜராகாதபோது, வழக்கில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றதற்கு ரேணுகா எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர், நீதிபதியின் அறைக்கு சென்று தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் ரேணுகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி பதிவு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் வக்கீல் ரேணுகா இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வக்கீல் ரேணுகாவுக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். #tamilnews
    பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவுதி அரசு அறிவித்துள்ளது. #SaudiArabiaGovt #OnlineSatire
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டின் புதிய மன்னராக முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் கடும் நடவடிக்கைக்கும் தண்டனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.

    இதற்கு மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணையதளங்கள் வழியாக கேலி, கிண்டல் மற்றும் விமர்சனங்கள் என்னும் போர்வையில் நையாண்டித்தனமான தகவல்களை பரப்பும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.


    இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 3 மில்லியன் ரியால் (சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும்” என கூறப்பட்டு உள்ளது.  #SaudiArabiaGovt #OnlineSatire
    வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்ததில் தாமதம் ஏற்படுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. #SupremeCourt #IncomeTax
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் (எச்.பி.டி.ஏ.) என்ற அமைப்பு, வருமான வரிச்சட்டத்தில் விலக்கு கேட்டு வருமான வரித்துறைக்கு மனு செய்தது. இதை காசியாபாத் வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2006-ம் ஆண்டு நிராகரித்தார்.

    இதை எதிர்த்து அந்த அமைப்பு வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடியது. இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயமும், மானிய பதிவுக்கு ஒப்புக்கொண்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி தள்ளுபடி செய்தது.



    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு, மேல்முறையீட்டுக்கு 596 நாட்கள் தாமதமானது ஏன்? என விளக்கம் கேட்டது. இதற்கு போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, ‘தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்டு என்பது சுற்றுலா தலம் அல்ல. இந்திய சுப்ரீம் கோர்ட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், ‘வேறுவகையில் சொல்ல வேண்டுமானால், மனுதாரர்கள் (வருமான வரித்துறை) முற்றிலும் தவறான தகவல்களை கோர்ட்டுக்கு வழங்கி இருக்கின்றனர். வருமான வரித்துறை ஆணையர் வழியாக மத்திய அரசு இந்த பிரச்சினையை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்றும் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தாமதத்துக்கான காரணம் குறித்து கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவை குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.  #SupremeCourt #IncomeTax
    மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாத 16 பேருக்கு அபராதம் விதித்தனர்.

    ராயபுரம்:

    சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்கு வரத்து அலுவலர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா, சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    எண்ணூர் விரைவுச் சாலை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 38 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாத 16 பேருக்கு அபராதம் விதித்தனர்.

    அரசு பேருந்துகளில் சீட் பெல்ட், சொகுசு இருக்கை போன்றவற்றை செய்து பேருந்துகளின் தரம் உயர்த்தக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ChennaiHC
    சென்னை:

    மக்களின் தேவைகளை சமூக ஆர்வலர்கள் சிலர் பொதுநல வழக்குகளாக நீதிமன்றங்களில் முறையிட்டு, எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி சமூக சேவை செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் பொதுநல வழக்குகள் தொடர்வதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுபோல் விளம்பரத்துக்காக பொதுநல வழக்கு தொடர்பவர்களை நீதிமன்றம் கண்டிப்பதுடன் அபராதமும் விதித்து தக்க பாடம் புகட்டி வருகிறது.

    இந்நிலையில், அரசு பேருந்துகளில் சீட் பெல்ட், சொகுசு இருக்கை போன்ற வசதிகள் செய்து கொடுத்து, பேருந்துகளின் தரம் உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து, இந்த வழக்கு முற்றிலும் விளம்பரத்துக்காக தொடரப்பட்டது என கண்டித்ததுடன், ஜவஹர்லால் சண்முகத்துக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ChennaiHC
    அம்மாபேட்டையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அம்மாபேட்டை:

    இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சேதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    தற்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்மாபேட்டையில் இன்று காலை பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில் வாகன சோதனை நடந்தது.

    இதில் லைசென்சு இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் எப்.சி. புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களும் சோதனையிடப்பட்டன. இதில் 2 ஆடடோக்கள் எப்.சி. புதுப்பிக்காமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.32 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #Helmet #tamilnadu
    கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Helmet #Tamilnadu
    கோவை:

    இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதி என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1400 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 760 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 640 பேர் ஆவர்.

    மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 600 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 280 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 320 பேர் ஆவர். மொத்தத்தில் 2 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை முழுவதும் 3-வது நாளாக இன்றும் தீவிர வாகன சோதனை நடந்தது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், வால்பாறை என மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    இதேபோல காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரை ஓட்டுபவரும், டிரைவர் இருக்கை அருகே முன்னால் இருப்பவரும், பின்னால் இருப்பவர்களும் அணிந்திருக்கிறார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

    காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். #Helmet #Tamilnadu
    மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால், உணவு, நச்சுத்தன்மையாக மாறுவதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன” என்று கூறப்பட்டு இருந்தது.



    அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் தங்களது இணையதளத்தில் 3 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், நேற்று இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களும் இத்தகவல்களை வெளியிடாதபோதிலும், இப்போதைக்கு அவற்றுக்கு அபராதம் விதிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர். அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல சிறப்பு அனுமதி பெறாத ஆட்டோ, வேன்களுக்கு வட்டார போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
    திருச்சி:

    திருச்சி மண்டல போக்குவரத்து இணை ஆணையர் சிவகுமார் உத்தரவின்பேரில் பறக்கும் படை வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழிய பாண்டியன், முகமது மீரா, குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதை அருகில் வாகன ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, வேன்களை அதிரடியாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டன.

    அப்போது பல ஆட்டோ மற்றும் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வாகனங்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி சென்றதும், முறையான தகுதிச்சான்று பெறாமல் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பிடிபட்ட ஆட்டோக்கள், வேன்களுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள் அதற்குரிய சிறப்பு அனுமதி சீட்டினை பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாத வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளும்படி பறக்கும் படை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    பயணிகள் ஓய்வறையை பூட்டி வைத்திருந்த ரெயில் நிலைய அதிகாரிக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு கிராமத்தை சேர்ந்தவர் வி.ஏ.மார்கபந்து (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி தனது மனைவியுடன் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து கடலூருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தார். அதன்படி மார்கபந்து, மனைவியுடன் ரெயில் நிலையத்துக்கு 23-ந் தேதி வந்தார்.

    ரெயில் வருவதற்கு சுமார் 1½ மணி நேரம் இருந்ததால், அங்குள்ள முன்பதிவு பயணிகள் அறையில் ஓய்வு எடுக்க மார்கபந்து, தனது மனைவியுடன் சென்றார். ஆனால் முன்பதிவு பயணிகள் அறை பூட்டப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர், ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராமனை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். அதற்கு அவர் ரெயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் முன்பதிவு பயணிகள் அறை திறக்கப்படும் என்று கூறி, அறையை திறக்க மறுத்து விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மார்கபந்து மற்றும் அவரது மனைவியும் ரெயில் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

    இந்த சம்பவத்தால் மனஉளைச்சல் அடைந்த மார்கபந்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், முன்பதிவு பயணிகள் அறையை திறக்க மறுத்தது மற்றும் உரிய சேவை வழங்காததால் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிள்ளிவளவன், ரெயில் பயணிகளுக்கு உரிய சேவை வழங்காததற்காக ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜனுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை மார்கபந்துக்கு வழங்கும்படி தீர்ப்பு கூறினார்.

    ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜன் தற்போது கணியம்பாடியில் பணிபுரிந்து வருகிறார்.
    ஆண்டிப்பட்டி அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அரிய வகை மூலிகைகளும், மரங்களும் நிறைந்து காணப்படுகிறது. வனப்பகுதியில் சில சமூக விரோதிகள் மரங்களை வெட்டிக் கடத்துவது, வன விலங்குகளை கன்னி வைத்து வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் வனப்பகுதியில் பசுமை இழந்து வறட்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளது. குல்லூத்து பாறை பகுதியில் முயல் வேட்டையாடப்படுவதாக கண்டமனூர் வனச்சரகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் வனத்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் அந்த நபர்கள் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (வயது 40). ராஜசேகர் (32), சிவம் (30) என தெரிய வந்தது. அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட முயல், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மீண்டும் முயல் வேட்டையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    பெண்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நவேதிதா என்பவர் தனது நண்பர்கள் ஹரினி, சுமதி, ஷீலா உள்ளிட்டோர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

    அவர்கள் அங்குள்ள ரீசார்ட்டில் இரண்டு அறைகள் எடுத்து தங்கி இருந்தனர். அப்போது டி.எஸ்.பி. மோகன்குமார், கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அறைகளில் இருந்த நிவேதிதா உள்பட பெண்களை ஓட்டலில் நடனம் ஆட வந்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதுகுறித்து நிவேதிதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில், நான், எனது தோழிகளுடன் கொடைகானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி. மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் எங்களை ஆபாச நடனம் ஆடவந்ததாக கூறி வெளியே இழுத்து வந்து தாக்கினர். நாங்கள் சுற்றுலாவுக்கு வந்து இருக்கிறோம் என்று கூறியும் கேட்கவில்லை. எங்களை டி.எஸ்.பி. அலுவலகம் வெளியே இரவு முழுவதும் அமர வைத்தனர்.

    விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.

    ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
    ×