search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95018"

    மலேசியாவுக்கு எதிரான ஆக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-0 என முன்னிலை வகிக்கிற்து. #India #Malaysia #WomenHockey
    கோலாலம்பூர்:

    மலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், மலேசியா, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.

    இந்த போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5 - 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய தரப்பில் நவ்ஜோத் கவுர், வந்தனா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, நிக்கி பிரதான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

    இதன்மூலம் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது. #India #Malaysia #WomenHockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 - 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

    வருண் குமார் 18, 25-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 50, 51-வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்தனர். விவேக் பிரசாத் (1), சுமித் குமார் (7), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜித் (29), நீலகண்டா ஷர்மா (36), அமித் ரோஹிதாஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். #AzlanShahhockey
    விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #MissionShakti
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு இன்று தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகம் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தி உள்ளது. விண்ணில் செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி அடைந்துள்ளது.



    நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல.

    செயற்கைக் கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு பலம் சேர்க்கும். இந்த சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Modi #Mission Shakti

    அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
    இபோக்:

    6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் சுமித் (17-வது நிமிடம்), சுமித் குமார் (27-வது நிமிடம்), வருண்குமார் (36-வது நிமிடம்), மன்தீப் சிங் (58-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மலேசிய அணியில் ராஸி ரஹிம் (21-வது நிமிடம்), முகமது பிர்ஹான் (57-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினார்கள்.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை (பிற்பகல் 3.35 மணி) சந்திக்கிறது.
    சர்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF
    புதுடெல்லி:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒருவர் நேற்று மாலை நுழைய முயன்றுள்ளார். இதனைக் கவனித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.

    சிந்தி மொழி பேசிய அந்த நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்ச் மாவட்டம் பலசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடம் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.



    இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. கடந்த 6ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானியர், எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF

    மலேசியாவில் தொடங்கிய அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஜப்பானை 2 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. SultanAzlanShahCup #India #Japan
    இபோக்:

    28-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் இன்று தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்தியா, தென்கொரியா, கனடா, ஜப்பான், போலந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். 

    தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.



    ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் இந்திய அணியின் வருண்குமார் ஒரு கோல் அடித்து அணியை 1- 0 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டுவந்தார். 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேப்டன் மன்பிரித் சிங் அபாரமாக ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

    ஆட்டத்தின் இறுதியில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த லீக் போட்டியில் கொரியாவுடன் நாளை மோதுகிறது. #SultanAzlanShahCup #India #Japan
    உலக மகிழ்ச்சி தினைத்தையொட்டி, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியர்கள் மகிழ்ச்சி ஓராண்டு காலத்தில் தொலைந்ததாக தெரியவந்துள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness
    வாஷிங்டன்:

    மகிழ்ச்சி எது என கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது.

    மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.

    இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலினை சர்வே எடுத்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமூக ஆதரவு மற்றும் பெருந்தன்மை ஆகிய  காரணிகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நேற்று ஐ.நா வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், சர்வதேச அளவில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளில் பின்லாந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அறிக்கையில் 133வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 140வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #PulwamaAttack #DonaldTrump #India #US
    வாஷிங்டன்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.

    அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தலையீட்டால் சற்று அமைதி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கூறியிருப்பதாவது:-

    இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உருவானதுமே அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் படியும், அந்த மண்ணை பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

    அதன்படி சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. சில பயங்கரவாதிகள் கைது, அவர்களது சொத்துக்கள் முடக்கம் போன்றவற்றை பாகிஸ்தான் எடுத்தது.



    ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக அமையும்.

    எனவே ஜெய்ஷ்-இ- முகமது, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கம் மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் தாக்குதல் நடக்காது என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.

    அங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இது பற்றி ஆய்வு செய்வோம். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும். தெற்கு ஆசிய பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பது எங்கள் எண்ணமாகும். அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #DonaldTrump #India #US
    ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. #ICC

    துபாய்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாக ஒரு சில சர்வதேச விளையாட்டுகளை இந்தியா நடத்த முடியாமல் போனது.

    உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, காம்பீர், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.

    அதே நேரத்தில் தெண்டுல்கர், கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆடாமல் 2 புள்ளிகளை இழப்பதைவிட விளையாடி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்று தெண்டுல்கர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவின்படி செயல்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கூறி இருந்தது.

    உலககோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

     


    இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் கூறியதாவது:-

    ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டு உள்ளனர்.

    2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடாமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடாமல் போனால் அதற்கான புள்ளிகள் எதிர் அணிக்கு வழங்கப்படும்.

    இந்திய வீரர்கள் சமீபத்தில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது.

    நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சம்மந்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ICC

    ஆரோக்கியமான உறவு தொடர வேண்டு மானால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. #India #DawoodIbrahim #SayeedSalahudeen
    புதுடெல்லி:

    காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இந்தியாவில் தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது:-

    இந்தியாவுடனான ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வை நிரூபிக்க பாகிஸ்தான் அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த இந்திய நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.

    இப்போதைக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது இது ஒன்று தான். இவர்கள் இந்தியாவில் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்.

    ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவரான சையது சலாவுதீன் என்கிற முகமது யூசுப் ஷா அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது, கடத்தல், ஹவாலா பணபரிமாற்றம் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

    ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை பொறுத்தவரை, பாகிஸ்தான் குறைபாடுள்ள வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருகிறது.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை இந்தியா பெற்றுள்ளது. #FIFAWomensWorldCup #U17WWC #IndianFootball #SAFF
    மியாமி:

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.



    ‘இந்திய கால்பந்து சங்கம், 2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்த உள்ளது’ என பிபா தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் இதனை உறுதி செய்தார்.

    2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவின் தேசிய பெண்கள் அணி நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறது. அங்கு புதன்கிழமை நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. #FIFAWomensWorldCup #U17WWC #IndianFootball #SAFF
    இந்தியாவில் 73% இளைஞர்கள் ஆழ்ந்து நிம்மதியாக தூங்குவதையே விரும்புவதாக ஒரு சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. #SleepHealthSurvey #IndianAdults
    புதுடெல்லி:

    இந்தியாவில் தூக்கம் குறித்து இளைஞர்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை சுகாதார தொழில்நுட்பத்தின் சர்வதேச தலைவர் ராயல் பிளிப்ஸ் வெளியிட்டுள்ளார்.

    அதில், 73 சதவீதம் பேர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த ஆவலாக உள்ளதாகவும், 55 சதவீதம் பேர் நிம்மதியாக தூங்குவதாகவும் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதில் 38 சதவீத இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் தூக்கம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது உயர்ந்துள்ளது.



    இந்தியாவில் 31 சதவீதம் இளைஞர்கள் தூக்கத்தினை அதிகரிக்க யோகா செய்வதாக கூறியுள்ளனர்.  மேலும் டெல்லி (47%), மும்பை(84), பெங்களூர்(88), லக்னோ(70%) என குறிப்பிட்ட இடங்களில் தூக்கத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது.

    இந்தியாவில் தூக்கத்தின் ஆரோக்கியம், முக்கியத்துவம் மற்றும் சதவீதத்தினை அதிகரிக்க  பிலிப்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட தூக்கத்திற்கான ஆய்வுக் கூடங்களையும், 400 தூக்கத்தில் சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது.

    இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 11,006 பேரிடம் இது குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SleepHealthSurvey #IndianAdults

    ×