search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95018"

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #DelhiMetro
    புதுடெல்லி: 

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
     
    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதேபோல், பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், ரெயில் நிலையங்களில் சந்தேகத்துக்கு உரிய விதத்தில் பொருட்கள் கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #DelhiMetro
    பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்தியா-பாகிஸ்தானில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #Surgicalstrike2 #Indiaclosesairports #Pakistanclosesairports
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
     
    பாகிஸ்தான் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்கள் எதையும் சமாளிக்கும் துணிச்சலுடன் தயார்நிலையில்  உள்ளனர்.

    இதற்கிடையில், இந்தியாவின் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    இதனால் இருநாடுகளும் எல்லைப்பகுதியில் மீண்டும் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன.

    இமாச்சல பிரதேசத்தின் சிம்லா, பூந்தார், காகல் விமான நிலையங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், டெல்லிக்கு வடக்கே வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பாகிஸ்தானின் உள்ள இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், பைசலாபாத், சிலால்கோர் ஆகிய விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

    இவ்விரு நாடுகளின் உள்நாட்டு விமானச் சேவைகள் மட்டுமின்றி, பிறநாடுகளில் இருந்து மேற்கண்ட விமான நிலையங்களில் இறங்கி வேறு விமானங்கள் மூலம் மற்ற இடங்களுக்கு செல்லும் ‘டிரான்சிஸ்ட்’ சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பல வெளிநாட்டு விமானங்கள் இங்கு தரையிறங்க அனுமதி அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே மிக வீரியமான விமானப்படை தாக்குதலும், அதற்கு எதிர்தாக்குதலும் விரைவில் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. #Surgicalstrike2 #Indiaclosesairports #Pakistanclosesairports 
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    பெங்களூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். அதே நேரத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

    பும்ரா கடந்த ஆட்டத்தில் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 50-வது விக்கெட்டை தொட்டு 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    பெங்களூர் போட்டியில் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவர் சர்வதேச ஆட்டத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அஸ்வின் 46 ஆட்டத்தில் 52 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.

    ரோகித் சர்மா 94 ஆட்டத்தில் 102 சிக்சர்கள் அடித்து சர்வதேச அளவில் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மார்டின் குப்தில் (நியூசிலாந்து) தலா 103 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியிலாவது அவர் சிறப்பாக விளையாடி 2 சிக்சர் அடித்து புதிய சாதனை நிகழ்த்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்றிரவு 2-வது 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது. #AUSvIND
    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் திணறினர். லோகேஷ் ராகுல் (50 ரன்) தவிர வேறு யாரும் மெச்சும்படி ஆடவில்லை. மூத்த வீரர் டோனி கடைசி கட்டத்தில் (29 ரன், 37 பந்து) நிறைய பந்துகளை விரயம் செய்து விட்டார். அணி வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் இந்திய வீரர்கள் போராட தவறவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிக்கனி கனியும் சூழல் கூட வந்தது. கடைசி ஓவரில் எதிரணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பி விட்டார். ஜஸ்பிரித் பும்ரா அளவுக்கு துல்லியமாக பந்து வீசக்கூடிய பவுலர் இருந்திருந்தால் முடிவு நிச்சயம் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும்.

    எது எப்படியோ இப்போது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் தப்பிக்க முடியும். முதல் ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது.

    இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தொடக்க ஆட்டத்தில் குறைந்த ரன்களே எடுத்த போதிலும் நாங்கள் முழுமூச்சுடன் போராடினோம். நமது பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. ஒவ்வொருவரும் அளித்த பங்களிப்பு காரணமாக கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்புக்கு வந்து தான் தோல்வியை தழுவினோம். பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் நிலையில் இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் எங்களது உத்வேகம் தளர்ந்து விடவில்லை. நிச்சயம் சிறப்பாக ஆடுவோம்.

    என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் முன்வரிசையில் ஆட வேண்டும் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். விசாகப்பட்டினத்தை விட பெங்களூரு ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிகிறது. அதனால் இங்கு நிறைய ரன்கள் எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் பந்து வீச்சில் அமர்க்களப்படுத்தியது. ஆனால் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து வெளியேறியதும் தடுமாற்றத்திற்குள்ளானது. பிறகு ஒரு வழியாக தட்டுத்தடுமாறி கடைசி பந்தில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணியினர், அதற்கு பழிதீர்க்கும் ஆர்வமுடன் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.

    பெங்களூரு மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் எடுபடும். இங்கு இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும் (இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (பாகிஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் 2016-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது. 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா குவித்த 202 ரன்களே, இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இங்கு இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 20 ஓவர் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

    கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாரிகள் கூறுகையில், ‘ஐ.பி.எல். போன்று பெரிய அளவில் ரன் மழை பொழியும் ஆடுகளமாக இது இருக்காது. ஆனாலும் கணிசமான ரன்கள் குவிக்க முடியும். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு கடந்த 2 மாதங்களாக இந்த ஆடுகளம் எந்த போட்டிக்கும் பயன்படுத்தப்படவில்லை. 180 ரன்கள் வரையிலான இலக்கு இங்கு சவாலான ஸ்கோராக இருக்கும்’ என்றனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, குருணல் பாண்ட்யா, உமேஷ் யாதவ் அல்லது சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹல், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மார்கஸ் ஸ்டோனிஸ், டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், நாதன் கவுல்டர்-நிலே, கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரேன்டோர்ப், ஆடம் ஜம்பா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #AUSvIND
    இந்தியாவின் எல்லைதாண்டிய வரம்புமீறல் பற்றி ஐ.நா.வில் புகார் செய்யப்போவதாக பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. #IAFAttack #UN
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் துரிதமான, துல்லியமான வான் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் என அதிக அளவிலான எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.



    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அவசரமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மக்கள் சமுதாய தலைவர்கள், ராணுவ தலைவர் ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா உள்ளிட்ட ராணுவ தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவின் தாக்குதல் குறித்தும், தற்போது அங்குள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.

    பின்னர் கூட்டத்தில், “இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வரம்புமீறல் குறித்து உடனடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளிடம் புகார் தெரிவிப்பது” என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை எழுப்பும் வகையில் அவர்களை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவு மந்திரி குரேஷி ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதோடு பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கூட்டுக்கூட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    உயர்நிலை கூட்டத்தையொட்டி முன்னதாக வெளியுறவு மந்திரி குரேஷி தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்ததும் அவர் கூறும்போது, “தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடவும், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக திருப்பி தாக்கவும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது” என்றார்.

    தேசிய பாதுகாப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தையும் பிரதமர் இம்ரான்கான் கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் கூறும்போது, “ஆயுத படைகளும், பாகிஸ்தான் மக்களும் எந்த நடவடிக்கைகளுக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.

    தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா அறிவிப்பின்றி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதால், இதற்கு பாகிஸ்தான் உரிய நேரத்தில், உரிய பதிலடி தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. #IAFAttack #UN

    ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியான ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். #JammuKashmit #CeasefireViolation
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கியது. நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.

    இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.

    இதனிடைய இந்தியாவின் தாக்குதலையடுத்து ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களது வீடுகளில் இருந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.  

    பாகிஸ்தான் கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறியரக குண்டுகளை வீசி இந்திய எல்லையில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்  இந்திய ராணுவத்தினரும் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தனர்.
    இங்கிலாந்து எதிரான T20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20


    இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசி ஆட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    அதை தொடர்ந்து மார்ச் 4,7,9 ஆகிய தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் காயம் அடைந்ததால் மந்தனா கேப்டன் பொறுப்பை வகிப்பார். அணிவிவரம்:-

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ‌ஷர்மா, தனியாபாட்டியா, பார்திபுல்மாலி, அனுஜா பட்டேல், ஷிகாபாண்டே, ஹோமல், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதாயாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல். #WomensWorldT20 #WomenInBlue #WWT20

    பயங்கரவாத முகாம்களை அழித்ததையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால், இந்திய விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #IAFAttack #LOC #PakistanAction
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



    இதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால், பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்கும்படி விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானங்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #IAFAttack #LOC #PakistanAction
    பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியா, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்த திட்டம் நிறைவேறாது என பாகிஸ்தான் கூறி உள்ளது.

    இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரேசி பேசியதாவது:-

    வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். மார்ச் 23ம்  தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர்  முகம்மது பங்கேற்க இருக்கிறார். அதேபோல், ஜெர்மன் மந்திரி ஹீகோ மாஸ் மார்ச் 12 ஆம் தேதி பாகிஸ்தான் வர உள்ளார். ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார். எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவது இல்லை.



    மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ, அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது.  புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister
    இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமான அளவு இல்லை என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறினார். #NitinGadkari #Water #India
    புதுடெல்லி:

    இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் ‘தேசிய தண்ணீர் விருதுகள்’ வழங்கி வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

    விழாவில் மத்திய நீராதாரத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மராட்டிய மாநிலம் முதல் பரிசையும், குஜராத் 2-வது பரிசையும், ஆந்திரா 3-வது பரிசையும் பெற்றன.

    இதைப்போல மாவட்டங்கள் வரிசையில் நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றன.

    இதில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரை மாவட்டத்துக்கு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தன. மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மதுரை மாவட்டத்துக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இதைப்போல நதி மீட்டெடுத்தல் பணிக்காக நெல்லை மாவட்டம் 3-வது பரிசை பெற்றது.

    இந்த பரிசுகளை மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜே.ஜெயகாந்தன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர், முன்னாள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியதாவது:-

    இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை. தேசிய அளவிலான தண்ணீர் விருதுகளை வழங்கும் அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவந்ததில், நீர் சேகரிப்பில் மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும்படி ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தெரியவந்துள்ளது.

    பிரதம மந்திரி வேளாண் பாசன திட்டம் மூலம் பல திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இப்போது தண்ணீரை சேமிப்பதற்காக பாசனத்துக்கு தண்ணீரை கால்வாய்கள் மூலம் அனுப்புவதற்கு பதிலாக குழாய்கள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க மற்ற கால்வாய்களும் குழாய்களாக மாற்றப்படும்.

    கும்பமேளா விழாவையொட்டி கங்கையில் தொடர்ச்சியாகவும், தூய்மையானதாகவும் தண்ணீர் சென்றுகொண்டுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் தண்ணீர் சுத்தமாக இருந்ததாக பாராட்டி உள்ளனர். கங்கையில் டால்பின்கள், ஆமைகள், நீர்ப்பறவைகள் காணப்படுவதால் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளது தெரிகிறது.

    நீர் சேகரிப்பு பிரச்சினையில் மக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்தப்படுவது அவசியம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீர்நிலைகளை புதுப்பிப்பது ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு நிதின்கட்காரி பேசினார். 
    இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் அவர்கள் 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் எச்சரித்துள்ளார். #IndiafinishPakistan #IndiaattackPakistan #Indiaattackbombs #Musharraf
    துபாய்:

    புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

    நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம் எனவும் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் மோடி எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் துபாய் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.

    புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பூசல் அதிகரித்துவரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்குமா? இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற செய்தியாளர்களுக்கு பதிலளித்த முஷரப், ‘இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக 20 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே இந்தியா அழித்துவிடும்.

    எனவே, அணு ஆயுதப்போர் என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த முடியாதவாறு நாம் முதல் தாக்குதலை நடத்த வேண்டும். 50 அணுகுண்டுகளை வீசி முதல் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தயாரா?’ என எதிர்கேள்வி எழுப்பினார்.

    1999-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அதிபராக பதவிவகித்த பர்வேஸ் முஷரப், அதற்கு முன்னர் 1999-ம் ஆண்டில் இந்தியா நடத்திய கார்கில் போர் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருந்து போரை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiafinishPakistan #IndiaattackPakistan  #Indiaattackbombs #Musharraf
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்த டோனியின் ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர். #MSDhoni #INDvAUS

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டோனி 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்தார். இதில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடங்கும்.

    அவரது இந்த மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

    ராகுல், வீராட்கோலியின் சிறப்பான ஆட்டத்தை பார்க்கும் போது இந்திய அணி 160 முதல் 180 ரன்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் 46 ரன்களே மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவரில் 126 ரன்களே எடுக்க முடிந்தது.

    டோனியின் ஆமை வேக ஆட்டத்தால் ரன்களை அதிக அளவு குவிக்க முடியவில்லை. விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆடுகளம் மோசமாக இருந்தாலும் அவர் பந்துகளை அடித்து ஆடாமல் விட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

    டோனியின் இந்த ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர்.

    டோனி கிட்டத்தட்ட பாதி பந்துகளில் (18) ஒரு ரன்கூட எடுக்காமல் ‘டாட்’ பந்துகளாக மாற்றினார். அதுவும் கடைசி ஓவரில் 4 டாட் பந்துகள் என்பது மிகவும் கொடுமையானது. டோனியின் மிகவும் மோசமான பேட்டிங் என்று அவரது ரசிகர்களே பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஒரு ரசிகர் கூறும்போது, “டோனி ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த போட்டியால் பலரும் அவரது ஓய்வு குறித்து பேச வைத்துவிட்டதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் இருந்து அவர் நாகரீகமான முறையில் ஓய்வை அறிவித்துவிட வேண்டும்” என்றார்.

    மற்றொரு ரசிகர் கூறும்போது, “அடுத்த போட்டியுடன் டோனி தனது ஓய்வு முடிவை அறிவித்துவிடுவார்” என்றார்.

    கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “டோனியின் ஆலோசனை வீரர்களுக்கு வேண்டு மானால் அவரை அணியில் ஆலோசகராக மட்டும் வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

    சமூகவலை தளங்கள் முழுவதும் டோனியை வைத்து டிரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் ஒருசில ரசிகர்கள் மட்டும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். #MSDhoni #INDvAUS

    ×