search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணசாமி"

    புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #governorkiranbedi #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை போல் முழு அதிகாரம் வழங்கப்படவில்லை.

    மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் புதுவை இயங்கி வருகிறது. எனவே, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுவை மாநிலம் மீது மத்திய அரசு சமீப காலமாக அதிக அதிகாரம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் புதுவை கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டு வருகிறார்.

    எனவே, புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தை எதிர்க் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

    டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 21 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதற்காக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்பும் தொண்டர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்கள் ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    புதுவையில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் நேற்று முன்தினம் 380 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை புதுவை ரெயில் நிலையத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். இதே போல் காரைக்காலில் இருந்து 40 தொண்டர்கள் டெல்லி சென்றனர்.

    இதையடுத்து நேற்றைய தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் கரோல் பார்க்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.


    இதற்கிடையே புதுவையில் இருந்து டெல்லி சென்ற ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைந்தது. அங்கு கட்சி தொண்டர்களை புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    டெல்லியில் உள்ள புதுவை, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

    அங்கிருந்து இன்று காலை 10 மணி அளவில் பஸ்கள் மூலம் ஜந்தர் மந்திர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். ஜந்தர் மந்திரில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கலக்கண்ணன், தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனபால், விஜயவேணி ஆகியோரும் பங்கேற்றனர்.

    தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராஜா மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையையும், கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் பதாகைகள் வைத்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். #governorkiranbedi #narayanasamy

    மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk #centralgovernment

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றவர். பாராளு மன்றத்தில் சிறப்புடன் பணியாற்றியவர். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களோடு நட்புணர்வோடு பழகக்கூடியவர். அவர் புதுவைக்கு முதல்- அமைச்சராக வருவதை பெருமையாக நினைத்தோம்.

    அவர் மூலம் புதுவைக்கு பல முன்னோடி திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் யானைக்கு அங்குசம்போல நாராயாணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி திகழ்கிறார்.

    நடைமுறையில் உள்ள திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. நாராயணசாமி தனது சாதுர்யத்தால் கவர்னரை எதிர்த்து திறம்பட செயல்பட்டு வருகிறார்.

    கல்வி, சுகாதாரம், சட்டம்- ஒழுங்கு, வளர்ச்சி பெறும் மாநிலம் ஆகியவற்றில் புதுவைக்கு விருது பெற்றது நாராயணசாமியின் திறமைக்கு சான்று.

    தனக்கு சால்வை கொடுத்த அதிகாரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டவர் கிரண்பேடி. வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய அதிகாரியை கண்டித்து கீழ்த்தரமாக நடந்து கொண்டவர். பா.ஜனதா நாடு முழுவதும் தாங்களே ஆள வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். இதற்காக பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.


    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசை சார்ந்துதான் உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுவை, தமிழகத்திற்கு தர வேண்டிய எந்த முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை. மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை இதே ஒற்றுமையுடன் வீறுகொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம், வீட்டுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #dmk #centralgovernment

    மாநில அந்தஸ்து கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு நீண்ட பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும் மட்டுமே சட்ட மன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அங்கமாகவே புதுவை யூனியன் பிரதேசம் கருதப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை சட்ட சபைக்கு மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க் களை நியமித்தது. மத்திய அரசின் நேரடி நியமனம் செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அதோடு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து நீடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். சட்ட மன்ற ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் புதுவை கவர்னராக இருக்கும் கிரண்பேடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கே அதிகாரம் உள்ளது என கூறி மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.


    நியமன எம்.எல்.ஏ. விவகாரம், கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை ஆகியவற்றால் புதுவை மாநில உரிமைக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநில உரிமைகளை பெற மாநில அந்தஸ்தே தீர்வு என ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    புதுவை மாநில அந்தஸ்து வழங்க வேண்டு. கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக டெல்லியில் ஜந்தர் மந்தர் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு புதுவை அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதுவையில் இருந்து டெல்லி செல்லும் வாராந்திர டெல்லி ரெயிலில் 21 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 420 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாளை அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைகின்றனர்.

    இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மந்திரிகள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி சென்றுள்ள அரசியல் கட்சி தொண்டர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு, போக்குவரத்திற்கு பஸ் வசதி ஆகியவற்றை புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

    ஆளும் கட்சிக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து விவகாரத்தை பெரிதுபடுத்துவதாக புதுவை சட்டமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் குற்றம் சாட்டியது. அதோடு டெல்லி போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் அறிவித்தன. இதன்படி என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் மேலும் 4 கவர்னர்கள் செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார். #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    2018-ம் ஆண்டு மத்திய அரசில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்காவிட்டாலும், மாநிலத்தில் இருந்து நாம் திட்டத்திற்காக, திட்டமில்லா செலவினங்களுக்காக ஒதுக்கிய தொகையை செலவிட தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளோம்.

    நம் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத தன்மை, மாநிலத்தில் கவர்னர் அதிகார வரம்பு மீறி செயல்படுவது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களின் சம்பளத்தை தவிர மற்றவற்றை முறையாக நிறைவேற்றி வருகிறோம்.

    விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, நகர சுத்தம் என பல விருதுகளை பெற்றுள்ளோம். மத்திய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். இந்த அங்கீகாரமானது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது.

    இப்போது நிதி அயோக், உலக வங்கி இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் புதுவை மாநிலம் மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து வசதியும் பெற்ற மாநிலங்களில் இந்திய அளவில் 5-வது இடம் பெற்றுள்ளது. இது நிர்வாகத்தை எப்படி செம்மைப்படுத்தியுள்ளோம்? என்பதை தெளிவாக காட்டுகிறது.

    திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படாவிட்டால், கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்காவிட்டால் 2018-ல் இன்னும் பல சாதனைகளை படைத்திருப்போம். தடைகளை உடைத்தெறிந்து 2019-ல் மாநில வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம்.

    சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு கிடைக்காததால், புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தற்போது இவ்வி‌ஷயம் தீவிரமாகியுள்ளது.

    முன்பு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், அரசியல் கட்சிகள் வலியுறுத்துவார்கள், பொதுக்கூட்டத்தில் பேசுவார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல முயற்சி எடுத்தாலும் மாநில அந்தஸ்து தரப்படவில்லை.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்து மாநில அந்தஸ்து தேவை பற்றி எடுத்துக்கூறியுள்ளோம். மத்திய அரசு நிதி கமி‌ஷனில் சேர்க்காத நிலை, நமக்கு கிடைக்க வேண்டிய வரி விகிதாச்சாரப்படி கிடைக்காதது. அதிகாரம் இருந்தும் திட்டங்களை செயல்படுத்த தடை என பல கஷ்டங்கள் உள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவது ஏற்புடையது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இதையெல்லாம் நாங்கள் வலியுறுத்தினோம்.

    முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை எங்கள் ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளோம். இது மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்.

    அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், சமூக அமைப்புகள் இணைந்து வருகிற 4-ந்தேதி பாராளுமன்றம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 21 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கிறது. பா.ஜனதா, சிவசேனா தவிர அனைத்து அரசியல் கட்சிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தர கடிதம் அனுப்பியுள்ளோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன்சமாஜ் போன்ற அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.



    ஜனாதிபதி 2016-ம் ஆண்டு கவர்னர் கிரண்பேடியை புதுவை மாநிலத்திற்கு கவர்னராக நியமித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலகம் அரசு ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் செயலகம் என மாற்றி கடிதம் அனுப்புகிறார். கிரண்பேடி கவர்னரா? அல்லது 5 கவர்னர்கள் அங்கு பணிபுரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    தேவநீதிதாஸ் பதவிக்காலம் முடிந்ததும் அவரை பதவி நீட்டிப்பு செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி தரவில்லை. அதை மறைத்து கவர்னர் தேவநீதிதாசை ஆலோசகராக நியமித்துள்ளதாக எனக்கு கடிதம் அனுப்பினார். அதை நான் மறுத்து கன்சல்டன்டாகவே தேவநீதிதாசை நியமிக்க வேண்டும் என நான் கூறினேன்.

    ஆனால் கவர்னர் உள்துறை அமைச்சக உத்தரவை மீறி தேவநீதிதாசை நியமித்துள்ளார். நான் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை.

    ஓ.எஸ்.டி. அண்ட் கன்சல்டன்ட் என தேவநீதிதாசை நியமித்தது தவறானது. கவர்னர் அலுவலகத்திற்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் செயலாளராக நியமிக்கலாம் என கடிதம் அனுப்பினேன். ஆனால் கவர்னர் யாரையும் நியமிக்காமல் தேவநீதிதாசை செயலாளர் போல நியமித்துள்ளார். அதிகாரிகளை அழைப்பது, கூட்டம் நடத்துவது என கவர்னர் வேலையை தேவநீதி தாஸ் செய்ய முடியாது. அவர் 2-வது கவர்னராக செயல்படுகிறார்.

    மற்றொரு அதிகாரியான ஸ்ரீதர் அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கிறார். இவர் 3-வது துணைநிலை ஆளுநர். 4-வது துணைநிலை ஆளுநராக காவல்துறை அதிகாரி உள்ளார். 5-வதாக கேர்டேக்கர் ஒருவர் உள்ளார். அவர் 5-வது துணைநிலை ஆளுநராக செயல்படுகிறார். அதிகார துஷ்பிரயோகம் மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வரும்.

    கவர்னர் கிரண்பேடி 3 மாதம் இருப்பார். அதன்பிறகு மற்ற அதிகாரிகள் எங்கே செல்வார்கள்? புதுவை சிறிய மாநிலம். அவர்கள் பணியை அவரவர் செய்ய வேண்டும். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு 3 மாதத்தில் விடை கிடைக்கும். புதுவையில் அரசு ஆட்சி நடக்கிறதா? கோமாளிகள் ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை.

    பொய்யான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது என்பதை புதுவை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    கவர்னரால் திட்டத்தை தள்ளிப்போட முடியும். தடுத்து நிறுத்திவிட முடியாது. மக்களுக்கு செய்ய முடியவில்லையே என்றுதான் நாங்கள் வருந்துகிறோம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து வருகின்றன. எனவே 2019-ம் ஆண்டு புதுவை மாநில மக்களுக்கு நன்மைகளை அளிக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #CMNarayanasamy

    பொங்கல் பரிசு விவகாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தவறான தகவல்களை வெளியிடுகிறார் என்று கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டி உள்ளார். #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்.

    தமிழகத்தில் 14 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதுபோல புதுவையிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதற்கு ரூ.5 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால இந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கோப்பை அனுப்பி உள்ளோம்.

    பொங்கலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் பொருட்களை வாங்க வேண்டியுள்ளதால் விரைவில் கவர்னர் அனுமதி அளிப்பார் என நம்புவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்திருந்தார்.



    பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு எதை முதல்-அமைச்சர் சொல்ல மறந்து விட்டார் என்பதை மக்கள் அறிய வேண்டும்.

    27.1.2018-ல் முதல்-அமைச்சரின் ஒப்புதல்படி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுக்காக பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்படவில்லை. மாறாக இலவச அரிசி திட்டத்துக்கான நிதியில் இருந்து தான் பொங்கல் பரிசு தொகுப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

    நிகழ் நிதியாண்டு நிறைவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஏற்கனவே சமூக நலத்துறைக்கு ரூ.52 கோடி பற்றாக்குறையாக உள்ளது. இதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இலவச அரிசி திட்டத்துக்கே நிதி பற்றாக்குறை இருக்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நிதி எங்கே இருக்கிறது.

    ஏழைகளுக்கான நிதியை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் நாராயணசாமி விரும்புகிறார்.

    இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார். #GovernorKiranbedi


    டெல்லியில் பாராளுமன்றம் முன்பு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுவை அனைத்து கட்சியினர் வருகிற 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். #PondicherryAllparties
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மத்திய பா.ஜனதா அரசு தனது கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நேரடியாக நியமித்தது.

    மாநில அரசின் பரிந்துரையின்றி நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது என சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால், வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.

    தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்தது.

    அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் ஓட்டுரிமையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவை அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏனெனில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருப்பது மத்தியில் ஆளும் கட்சியின் தயவில்லாமல் புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சி ஆட்சியில் தொடர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அனைத்து கட்சி கூட்டத்தை புதுவை சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தது.


    அனைத்து கட்சி கூட்டத்தில் இதற்கு நிரந்தர தீர்வாக புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்பது என முடிவு செய்யப்பட்டது. கவர்னர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டெல்லி சென்று போராடவும் முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி வருகிற 4-ந்தேதி டெல்லியில் ஜந்தர் மந்திர் அருகில் புதுவை அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த தகவலை புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று தெரிவித்தார்.   #PondicherryAllparties
    அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
    புதுச்சேரி:

    அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் கண்காணிக்க சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இது, தனி மனிதரின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-


    கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கம்ப்யூட்டரை கண்காணிப்பது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறி உள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி, எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். #Prabhanjan
    புதுச்சேரி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

    மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


    இதனை ஏற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். பிரபஞ்சனின் உடல் தற்போது மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியின் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அருகிலேயே எழுத்தாளர் பிரபஞ்சன் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருக்கும். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. #Prabhanjan
    புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக பணிகளில் தலையிட்டு வருகிறார்.

    இதன் காரணமாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர். புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க அதிகாரம் உள்ளது.

    கடந்த காலங்களில் மாநில அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமித்தது. ஆனால் இந்த தடவை மாநில அரசு பரிந்துரை இல்லாமலேயே மத்திய அரசு நேரடியாக பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது.

    இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் நியமனம் செல்லும் என்று தீர்ப்பை உறுதி செய்தது.

    இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் வக்கீல் கே.கே. வேணுகோபால் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அந்த மாநிலம் மத்திய அரசின் சொத்து. எனவே அங்கு எந்த நியமனத்தையும் மத்திய அரசு செய்ய முடியும் என்று கூறினார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மேலும், சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பிலும், பட்ஜெட் ஓட்டெடுப்பிலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    3 எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரம் புதுவை அரசியலில் புதிய குழப்பங்களை உருவாக்கி உள்ளது.

    புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்தினாலும், நியமன எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. இதன் மூலம் புதுவையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

    மேலும், புதுவை மத்திய அரசின் சொத்து என்று கூறப்பட்ட விவகாரத்தில் புதுவையின் தனித்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் கூறிவருகின்றன.

     முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். இதில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகியவை பங்கேற்கவில்லை.

    தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும், மக்களாட்சி அமைப்புக்கும் பாதகமானதாகும்.

    * இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது. அதில் புதுவை அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து மாநில உரிமையை காப்பது.

    * புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. ஆனால் கொல்லைப்புறம் வழியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். இது ஜனநாயகத்திற்கு முரண்பாடானது.

    இந்த கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் ஏகமனதாக பதிவு செய்துள்ளார்கள்.

    3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நானும், எம்.எல்.ஏ.க்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மத்திய அரசு புதுவை மாநிலத்தை வஞ்சித்து வருகிறது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே வழி என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முன்மொழிந்திருக்கிறார்கள்.


    கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு 2 ஆண்டுகளாக மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்.

    எனவே அவர் புதுவையில் இருந்து வெளியேற வேண்டும். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், புதுவைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் வகையிலும் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இவ்வாறு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.  #Kiranbedi #Narayanasamy
    புதுவையில் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் வாங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ரூ.4 லட்சமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.2 லட்சமும் வீடு கட்டுவதற்கு மானியமாக வழங்கப்படுகிறது.

    பிற்படுத்தப்பட்டோர் தங்களுக்கு ரூ.2 லட்சம் போதாது, கூடுதலாக பணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று கரியமாணிக்கத்தில் நடந்தது. விஜயவேணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயண சாமி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    புதுவையில் 2½ ஆண்டுகள் ஆட்சியை கடந்து வந்துள்ளோம். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அரசை நடத்தி வருகிறோம். பல்வேறு வகையிலும் ஏராளமான முட்டுக் கட்டைகள் போடப்படுகின்றன. அவற்றை யெல்லாம் முறியடித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கடன்களை அடைத்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் 70 சதவீதம் வரை மானியம் வழங்கிய நிலையில் இப்போது 26 சதவீதமாக குறைத்து விட்டார்கள்.

    ஆனாலும் நிதி நிலைமையை சமாளித்து ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில் குடிசை மாற்று வாரிய செயலாளர் ஜவகர், தலைமை செயல் அதிகாரி லாரன்ஸ் குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மடுகரையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டி யார் சிலைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

    பா.ஜனதா ஆட்சியில் முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #BJP
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டத்தில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தின் மீது புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரில் விகிதாசார அடிப்படையில் 7 டி.எம்.சி., தண்ணீரை புதுவைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும் 4,500 ஹெக்டேர் குறுவை சாகுபடிக்கு புதுவைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை. புதுவை மாநில விவசாயிகள் நலனை காப்பது அரசின் கடமை. விவசாயிகள் நலனுக்காக போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

    அணை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு உள்ளது. அப்படி இருந்தும் ஒருதலைபட்சமாக கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.

    காவிரி நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டிற்கும் தனித்தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை எதிர்த்து, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு புதுவை அரசு சார்பில் தொடுக்கப்படும்.



    மாநிலத்தில் எந்த ஆட்சி நடப்பது என்பது முக்கியமல்ல. மாநில மக்கள் நலன்தான் முக்கியம். ஆனால் புதுவையில் உள்ள பா.ஜனதாவினர் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட டெல்லி செல்கின்றனர். பிரதமர், அமைச்சர்களை பார்க்கின்றனர். பிரதமரை சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கி கொடுப்பதில்லை. நான் பிரதமரின் இணை அமைச்சராக இருந்திருக்கிறேன். பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன்.

    ஆனால், முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லாது போனது தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் தான் நடக்கிறது. காரியம் எதுவும் செய்ய வேண்டாம். முதல்-அமைச்சர்கள் கூறுவதையாவது காது கொடுத்து கேட்க வேண்டும் பாதிநேரம் வெளிநாட்டிலேயே பிரதமர் இருந்தால் நாடு என்ன ஆவது.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy #BJP

    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார். #ElectionResults #Narayanasamy
    புதுச்சேரி:

    5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றியை புதுவை மாநில காங்கிரசார் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    இந்த வெற்றி கொண்டாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் இளையராஜா, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபரிடம் கூறிதாவது:-


    5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, இளம் தலைவர் ராகுல்காந்திக்கு பெருமை சேர்ப்பதாகும்.

    கடந்த 4½ ஆண்டு ஆட்சி கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலின்போது பா.ஜனதா கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனையெல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி மக்களிடம் விளக்கி கூறினார்.

    இந்த தேர்தல் வெற்றி 2019-ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம். ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற அணியின் ஆட்சி அமையும். பா.ஜனதாவின் அஸ்தமனகாலம். பா.ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ElectionResults #Narayanasamy
    ×