search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95080"

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பை பகுதியை நிறைவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மறைந்த எஸ்பிபி-யின் 77வது பிறந்தநாளான இன்று பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
    • இவரை நினைவுகூர்ந்து நடிகர் கமல் பதிவிட்டிருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 16 இந்திய மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை தன்வசம் படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி.பி, ஜூன் 4ம் தேதி 1946 வருடம் பிறந்தார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி செப்டெம்பர் 25ம் தேதி மறைந்தார்.


    எஸ்பிபி 

    எஸ்பிபி 

    இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பியின் பிறந்தநாளான இன்று திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பியின் பிறந்தநாளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல், அவரது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.


    எஸ்பிபி - கமல்

    எஸ்பிபி - கமல்

    அதில், இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம்.
    • இப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து நடித்திருந்த படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருந்தது. மேலும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.


    சூர்யா - ரோலக்ஸ்

    சூர்யா - ரோலக்ஸ்

    இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ரோலக்ஸின் காணப்படாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சிம்பு
    சிம்பு

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு, 'எஸ்.டி.ஆர். 48' பட லுக்கில் லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • இவ்விழாவில் தனது 234வது படம் குறித்து கமல் பேசியுள்ளார்.

    இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.




    இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார்.




    இந்நிகழ்வில் நடிகர் கமல், மணிரத்னம் இயக்கும் தனது 234வது படம் குறித்து பேசியுள்ளார். தனது 234வது படத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு சற்று பதற்றமடைய வைப்பதாகவும், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், எங்களது கூட்டணியின் முதல் படமான நாயகன் படத்தில் பணியாற்றியதை போன்று கூலாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

    • அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கமலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

    இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். கமல் விருதை பெற்றவுடன் அரங்கத்தில் இருந்த நடிகர் சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவாரப்படுத்தினர்.

    • கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
    • இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.


    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • நெல்சன் திலிப்குமார் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கியிருந்தார்.

    அதன்பின்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    தனுஷ் - கமல் - நெல்சன்

    தனுஷ் - கமல் - நெல்சன்

    இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல்சன்-தனுஷ்-கமல் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சிம்பு - கமல்

    சிம்பு - கமல்

    இந்நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த மாமன்னன் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    மாமன்னன்

    மாமன்னன்

    நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    எஸ்கே21

    இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எஸ்கே21' திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனோபாலா.
    • மனோபாலா இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

    சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபாலா (69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.


    மனோபாலா

    மனோபாலா


    மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


    மனோபாலா

    மனோபாலா


    இந்நிலையில் மனோபாலாவின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.


    ×