search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95080"

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'.
    • இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    விக்ரம்

    விக்ரம்


    இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக வழங்கினார். கமல் லோகேஷ் கனகராஜுக்கு காரின் சாவியை அளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்களுக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸாக பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன்-2.
    • இந்தியன்-2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    இந்த நிலையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்,.ஏ., டான் படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து முக்கிய தகவலை அவர் வெளியிட்டார். அதாவது இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறாம் என்று கூறினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரமிட்டனர். இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'.
    • விக்ரம் படத்தின் வெற்றியை, நன்றி தெரிவிக்கும் வகையில் கமல், லோகேஷ் கனகராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கமல் - லோகேஷ் கனகராஜ்

    கமல் - லோகேஷ் கனகராஜ்

    விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல். விக்ரம் படத்தின் வெற்றியை, நன்றி தெரிவிக்கும் வகையில் கமல், லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
    • அடுத்த படத்தில் சூர்யா குறித்து கமல் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, தரமான தமிழ் படத்தையும், திறமையான நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் திரைப்படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

    விக்ரம் - சூர்யா

    விக்ரம் - சூர்யா

    இசையமைப்பாளர் அனிருத், சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவு என தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது தான் நியாயம். விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இருந்ததும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். கடைசி மூன்று நிமிடம் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்று இருக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீதும், என் மீதும் உள்ள அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது என்று கமல் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1986-ல் வெளிவந்த 'விக்ரம் திரைப்படம் பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது. தற்போது 2022-ல் வெளியாகியுள்ள புதிய 'விக்ரம்' திரைப்படம் போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டதாக உருவாகி இருக்கிறது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் சூர்யா வந்தாலும் தன் முத்திரையை அழுத்தமாக பதித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

    விக்ரம்

    விக்ரம்

    கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது. வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் ஆனால், படத்தின் ஹிந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பெரிய எதிர்பார்ப்புகளிடையே திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    விக்ரம் - சூர்யா

    விக்ரம் - சூர்யா

    இந்நிலையில், கமலின் 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஐந்து நிமிடங்களே வரும் காட்சியில் நடிப்பதற்காக ஒரு நாள் செலவழித்த சூர்யா எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் - கமல்

    லோகேஷ் கனகராஜ் - கமல்

    ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார். அதில், நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. எனக்கும், விக்ரம் படத்திற்காக நீங்கள் வழங்கி வரும் பேராதரவு வியப்படைய வைக்கிறது. இந்த அன்பை நான் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை என்றும் கமல்ஹாசன் சாருக்கும் மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    கமல்

    இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் கமல் தனது பிறந்தநாளை முன்கூட்டியே விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

    விக்ரம்

    நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், தற்போது விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×