search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் நான் கூட்டணி அமைப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

    மேலும் அதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவல்ல. மக்கள் நீதி மய்யம் அதில் தெளிவாக இருக்கிறது. எங்களுடைய முக்கிய நோக்கமே தமிழகம் தான். எது எது நல்ல வி‌ஷயங்களோ அங்கே நான் போவேன்.

    கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அந்த அரசு கடைபிடித்துக் கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதுகாப்பது ஒரு அரசின் கடமை. அந்த மலை தமிழத்தில் இருந்து இருந்தாலும் நாமும் அந்த தீர்ப்பை கடை பிடித்திருப்போம். அந்த தீர்ப்பை செயல்படுத்த கடமைப்பட்டு இருப்போம்.

    மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தீர்மானித்து அதை செய்தால் எந்த கோர்ட்டும் ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் நான் கூட்டணி அமைப்பேன். ஊழல் இல்லை என்றுதான் எல்லா கட்சிகளும் சொல்வார்கள். நிரூபிக்கப்பட்ட பின்தான் தெரியும். அதில் நாங்கள் முன் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.

    ரஜினியின் பேட்ட படம், அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் போட்டி என்பது ஒரு வியாபாரம். ஒரு விளையாட்டை எப்படி ஸ்போர்ட்டிவாக எடுத்து கொள்கிறோமோ அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நான் 40 வருடமாக செய்து வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    டெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-



    மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    பொள்ளாச்சி:

    மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதியம் பொள்ளாச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் கார் மூலம் பொள்ளாச்சி வந்தார். மாலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 7.30 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெற்ற பலூன் திருவிழாவை பார்வையிட்டார். இரவு மக்கள் நீதி மய்ய துணைத் தலைவரும், வேட்பாளர்கள் தேர்வுக் குழு தலைவருமான டாக்டர். மகேந்திரன் வீட்டில் தங்கினார்.

    இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று அலுவலகத்தை திறந்துவைத்தார். 11 மணிக்கு பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் பல்வேறு துறைகளில் சேவை புரிந்த 12 பேருக்கு சான்றோன் விருதை வழங்கினார்.

    டாக்டர்கள் உத்தர்ராஜ், கண்ணகி உத்தர்ராஜ் ஆகியோருக்கு மருத்துவ துறைக்காகவும், லட்சுமி டெக்டைல்ஸ் நிறுவனத்திற்கு சமூக நிறுவனத்திற்காகவும், கல்கி சுப்ரமணியத்திற்கு சமூக செயற்பாட்டிற்காகவும் விருது வழங்கப்பட்டது.

    தாகம் அமைப்பிற்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், பியூஜன் டிரஸ்ட் அமைப்புக்கு இளைஞர் சேவைக்காகவும், இயற்கை விவசாயத்திற்காக மது ராமகிருஷ்ணனுக்கும், பலவகை பயிர் விவசாயத்திற்காக ஓ.வி.ஆர். சோம சுந்தரத்திற்கும், கிராமப்புற வளர்ச்சி உதவிக்கு மணி சுந்தருக்கும், கலை மற்றும் இலக்கியத்திற்காக கவிஞர் சிற்பி பாலசுப்ர மணியத்திற்கும், விருது வழங்கப்பட்டது.

    கட்டபொம்மன் பன்னாட்டு கலைக் குழுவிற்கு பாரம்பரிய கலைகளுக்காகவும், நேயத்திற்காக சந்திர சேகர் சண்முகசுந்தரத்திற்கு, சமூக சேவைக்காக சுகுமாருக்கும் என மொத்தம் 12 பேர்களுக்கு சான்றோன் விருதை கமல்ஹாசன் வழங்கினார்.

    இந்த சான்றோன் விருது பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. கட்சி சார்பில் வழங்கப்படும் சான்றோன் என்ற விருது முதலில் பொள்ளாச்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் இந்த விருதுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது.

    இன்று மதியம் 12 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். இதில் மேற்கு மண்டல அளவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மண்டல அளவிலான கட்சியின் முதல் கலந்துரையாடல் கூட்டமும் முதன்முதலாக பொள்ளாச்சியில்தான் நடைபெற்றது.

    இன்று மாலை பொள்ளாச்சி சிங்காநல்லூரில் தேவர் மகன் படப்பிடிப்பு எடுத்த வீட்டை கமல்ஹாசன் பார்வையிடுகிறார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    ஆனைமலையில் மக்கள் சந்திப்பும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

    பின்னர் இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஏற்கனவே கூறி விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி கருத்து கூற முடியாது. சினிமாவில் நடித்ததால் நடிகர் கமல்ஹாசனுக்கு எல்லாமே கதையாக தெரிகிறது. கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. கோடநாடு பிரச்சினையில் முதல்வருக்கு துளி கூட சம்பந்தம் இல்லை.



    அரசியலுக்கு லாயக்கு இல்லாமல், சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன், தி.மு.க. நல்ல வி‌ஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்ததை பாராட்டியது கிடையாது.

    கஜா புயலின்போது தமிழக அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர், இதனை அனைவரும் பாராட்டினார்கள்.

    ஆனால் தி.மு.க. பாராட்டவில்லை. குற்றம் சொல்லியே பேர் வாங்கவேண்டும் என்ற பட்டியலில் மு.க.ஸ்டாலின் உள்ளார். மேலும் கூட்டணி பற்றி முதல்வர், துணை முதல்வர், தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள், கற்பனையான, ஊர்ஜிதம் இல்லாத தகவலுக்கு கருத்துக்கூற முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆரம்பத்தில் ஆணை கொடுக்கப்பட்டபோது தூத்துக்குடி மாவட்டம் இடம்பெறவில்லை, இனிமேல் மேல்முறையீடு செய்து உத்தரவு வாங்கும்போது போட்டிகள் நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KadamburRaju #KamalHaasan

    கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #KadaramKondan #HappyPongal2019
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவை செய்துள்ளார்கள். படத்தை வருகிற ஏப்ரல் 2019-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KadaramKondan #HappyPongal2019
    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன்2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. #KamalHaasan #Senapathyfirstlook #Indian2firstlook
    கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996-ம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றிப்படமான ‘இந்தியன்’ பலதரப்பினரின் கவனத்தை கவர்ந்தது. 

    தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் தனிக்கட்சியை கமல்ஹாசன் தொடங்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் சங்கர் தீர்மானித்தார். இதில் கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளார்.

    இதைதொடர்ந்து, சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் ‘சேனாபதி’ கதாபாத்திரத்துக்கான மேக்அப் டெஸ்ட் முடிந்து படக்குழுவினருக்கு திருப்திகரமாக அமைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் வயதான சேனாபதி கதாபாத்திரத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வர்மக்கலை முத்திரையான இருவிரல் ஆக்ரோஷத்துடன் முகம் ‘ஜூம்’ செய்யப்பட்ட நிலையில் வெளியான இந்தப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

    இந்தியன்2 படப்பிடிப்பு வரும் 18-ம் தொடங்கும் என்ற அறிவிப்பையும் இந்த ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படத்துடன் இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார். #KamalHaasan #Senapathyfirstlook #Indian2firstlook
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து சிம்பு வெளியேறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Kamalhaasan #Simbu #STR #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 



    அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் தற்போது கூறுகிறார்கள். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கிறது. 2021-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
    மலையாள பட உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலா, கமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆர்வம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Kamal #Shakila
    மலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.

    தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து ஷகிலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. 15-வது வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். 



    குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன். நான் கமல்ஹாசன் ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது.”

    இவ்வாறு ஷகிலா கூறியுள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Kamal #Kamalhaasan #Simbu #STR #Shankar #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது சிம்புவின் கதாபாத்திரம் லீக்காகி உள்ளது.



    இதில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், விக்ரம் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அவரது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    கடாரம் கொண்டான் படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் மகாவீர் கர்ணா படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram

    கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கும் ஷங்கர், இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ஹிருத்திக் ரோ‌ஷனை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Shankar #HrithikRoshan #Indian2
    ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ‌ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளது.

    ‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து, ஒரு சயின்ஸ்பிக்‌‌ஷன் கதை ஒன்றை இயக்க திட்டம் வைத்திருப்பதாக இயக்குநர் ‌ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த கதையில் ஹிருத்திக் ரோ‌ஷன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன. #Shankar #HrithikRoshan #Indian2


    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.



    இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    ×