search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசப்பொருட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    தர்மபுரி:

    தர்மபுரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், வணிகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

    சினிமாத்துறையில் இருந்த நான் யதார்த்த வாழ்வியலை நம்பி அரசியலில் இறங்கி உள்ளேன். அதுவும் மக்களாகிய உங்களை நம்பிதான் களத்திற்கு வந்துள்ளேன். நிச்சயம் நீங்கள் என்னை கரை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். வணிகர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. நீங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தால் நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    தீவிர மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது கடினம். படிப்படியாகத்தான் மதுவிலக்கை கொண்டு வர முடியும். ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்களை பொதுமக்களே ஒருங்கிணைந்து தூர்வார முன் வர வேண்டும். அவற்றில் குப்பைகளை கொட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

    உழைக்கும் மக்களின் பணம் தான் அரசின் கஜானாவை நிரப்புகிறது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் எடுத்து காலி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. மக்களின் பணத்தை ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை தேர்தலின்போது ஓட்டுக்களை பெறுவதற்காக மக்களுக்கே திருப்பி கொடுக்கும் கலாசாரம் பரவி விட்டது.

    இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர மக்கள் நீதி மய்யம் போராடும். பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை. உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம். இந்த கொள்கைக்கு பொதுமக்கள் உரிய ஆதரவு அளிக்க வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக தனிப்படை அமைக்க உள்ளோம். அந்த படையில் பொதுமக்களையும் இடம்பெற செய்வோம்.

    தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்று தெரியவில்லை. 2 தொகுதிக்கு மட்டும் முதலில் தேர்தல் நடத்துவார்களா? அல்லது 20 தொகுதிகளுக்கும் சேர்த்து நடத்துவார்களா? நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்துவார்களா? என்பது தெரியவில்லை.



    இதேபோல் உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் நீதி மய்யம் நிச்சயமாக போட்டியிடும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #KamalHaasan
    கிருஷ்ணகிரி:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடைபெறும் கூட்டங்களில் வேனில் நின்றபடி பேசுகிறார்.

    இதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.

    நாளை மறுநாள் (10-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் பேசுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ராயக்கோட்டையிலும், 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து பேசுகிறார். #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 

    கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால், ரிலீசுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன. காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அக்‌‌ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்றும் செய்தி வருகிறது. 



    இந்நிலையில் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ படங்களில் நடித்துள்ளார்.
    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.

    அ.ம.மு.க. சார்பில் அத்தொகுதிகளில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இதனையும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் காரணம் தேடி தேர்தலை நிறுத்த முயன்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் வென்றாலே போதும் என பேசுகின்றனர்.


    தமிழகத்தில் 234 தொகுகளிலும் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயந்து வருகிறது.

    கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #HBDKamalHaasan
    சென்னை:

    நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இதையொட்டி கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கிறோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் சீர்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.

    தேர்தல்களை முறைகேடுகள் இல்லாமல் முறையாக நடத்துவதற்கான எல்லா பணிகளையும் எங்கள் கட்சி செய்து வருகிறது. நாங்கள் பயணிக்கும் இடங்களில் சந்திக்கும் மக்களிடம் அந்த நம்பிக்கை தெரிகிறது.

    மக்களிடம் நான் வாக்குறுதி பெற்று வருகிறேன். இனி வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற வாக்குறுதி தருகிறார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

    ஆளவேண்டிய கட்சி மக்கள்தான். அவர்களுக்காக தான் நான் அரசியலுக்கே வந்துள்ளேன். அவர்கள் நன்றாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன்.


    மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் நாட்டு அரசியலையே நாம் சரியாக செய்யவில்லை. பிற நாடுகளின் அரசியலில் நாம் தலையிட வேண்டியதில்லை. நான் யாருக்கும் குழலாகவோ ஊதுகுழலாகவோ இருக்கமாட்டேன்.

    நாங்கள் மற்றவர்களை கடுமையாக விமர்சிக்கும் அரசியலை செய்ய வரவில்லை. நான் மக்களின் கருவி. எந்த கட்சிக்கும் கருவி கிடையாது. நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் இருக்கிறது.

    ஆனால் திட்டமிட்டதை விட வேகமாக பயணிக்கிறோம். அடுத்தகட்ட பயணம் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #HBDKamalHaasan
    உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், “தாயாய் மாற அழகு குறிப்பு...” என்ற தலைப்பில், கமல்ஹாசன் குரலில் பதிவு செய்த கவிதை வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள். #KamalHaasan #HappyBirthdayKamalHaasan
    சென்னை:

    கமல்ஹாசன் 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு 15-ந் தேதி சென்னை மருத்துவக் கல்லூரியில் தன் உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருக்கிறார்.

    இந்த ஆண்டு தன் பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்புதானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள், உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் வலியுறுத்திருந்தார்.

    அவர் உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், “தாயாய் மாற அழகு குறிப்பு...” என்ற தலைப்பில், அவருடைய குரலில் பதிவு செய்த கவிதை வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள்.

    தாயாய் மாற அழகு குறிப்பு...

    மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

    சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

    எத்தகைய நியாயம்! ஏது, இதில் லாபம்.

    எனக்குப் பின்னால், எலும்பும் தோலும் உறுப்பும் எல்லாம்...

    எவருக்கேனும் உயிர் தரும் என்றால்...

    அதுவே ஷித்தி; அதுவே மோட்சம் என்றே நம்பும் சொர்க்கவாசி நான்.

    மனிததோல் பதினைந்து கஜத்தில், ‘ஏழு ஜோடி செருப்புகள்’ தைத்தால்

    அவை அத்தனையும் என்னைச் சொர்க்கம் சேர்க்கும்.

    காண இன்பம் தொடர்ந்து காண்போம்; கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்.

    காற்றடைத்த பையின் இடத்தில், இன்னொரு உயிரை வாழவிட்டால்...

    ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்துவிடலாம்.

    மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

    சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

    எத்தகைய நியாயம். ஏது இதில் லாபம்!



    தானம் செய்வது தாய்மை நிகரரே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உடல் உறுப்புகளை தானம் செய்ய இணையதள இணைப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அந்த இணைப்பில் சென்று உடல் தானத்துக்குப் பதிவு செய்த பிறகு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. #KamalHaasan #HappyBirthdayKamalHaasan
    சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Indian2
    சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். 

    படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா படத்தில் தனக்கு போதிய முக்கியத்துவம் இருக்காது என்று எண்ணி மறுத்துவிட்டார் என்கிறார்கள். 



    தற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். தென்னிந்திய மொழியின் முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார். இப்போது கமலுடனும் நடிக்க இருக்கிறார்.
    20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #ministerrajendrabalaji #admk

    ஸ்ரீவில்லிப்புத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:-

    இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்து வருகிறார். அவரவர் கட்சிகள் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். இரட்டை இலை ஜெயிக்கும்.

    8 தொகுதி வெற்றி பெற்றால் போதும் என பத்திரிக்கையில் வெளியானது. எங்கள் இலக்கு 20 தொகுதி என முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர். இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.


    தினகரன்-மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. நான் பார்க்க வில்லை. தினகரன் வந்தால் இணைத்து கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் அ.தி.மு.க. வில் உள்ளவர்களை அழைத்துள்ளோம் என்பதை தெளிவாக சொல்லி விட்டோம்.

    பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. துணை போகிறதா? என்று பலரும் கேட்கின்றனர். நாட்டை ஆளுவது பா.ஜனதா தான். பிரதமர் நரேந்திர மோடி தான்.நிதி வேண்டும் என்றால் அமெரிக்க அதிபரையா பார்க்க முடியும்? மாநிலத்துக்கு எது தேவை என்றாலும் மோடியிடம் தான் கேட்க வேண்டும். எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது. அ.தி.மு.க- தி.மு.க. தான். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். மற்றவைலெல்லாம் கட்சியாக இருக்கும் களத்தில் இருக்காது.

    கமல்ஹாசன் 20 தொகுதிகளிலும் களம் இறங்குவாரா? என்பது தெரியாது. அவர் பாவம் அவரை விட்டுவிடுங்கள். ரஜினி ஆடியோ வெளியீட்டு விழாவில் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சுருவோம் என தெரிவித்துள்ளார். நாங்களும் அதையே சொல்கிறோம். கரெக்டா அடிச்சுருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk 

    தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவ. 7-ந்தேதி வருகிறது.

    இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கமல்ஹாசன், பள்ளி மாணவிகள் 2 பேருக்கு படிப்பை தொடர நிதி உதவி வழங்கினார்.


    சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ், கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12-ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11-ம் வகுப்பு படித்து வந்த மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர்.

    மாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று இருந்ததாக செய்தி வெளியானது.

    மாணவிகள் படிப்பை நிறுத்திய தகவலறிந்த கமல் ஹாசன், இருவரையும் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அபாயகரமான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த மாதிரியான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று கூறியதற்கு பதிலாக அந்த மாதிரி பட்டாசுகளை தயாரிக்க அரசு தடை விதிக்க வேண்டும்.

    பட்டாசு வெடிக்க நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழக அரசு நேரம் ஒதுக்கியுள்ளது. இது எப்படி நடைமுறைக்கு சாத்தியம் ஆகும்? தீபாவளி பண்டிகை என்றாலே அது குழந்தைகளுக்கான பண்டிகைதான். காலங்காலமாக தீபாவளி பண்டிகை முழுவதும் குழந்தைகள் தங்கள் விரும்பிய பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.


    இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காலையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதை எப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க முடியும்.? பட்டாசு மாசு என்று கூறுபவர்கள் வாகனங்களால் ஏற்படும் மாசு, சாயக் கழிவுகளால் ஏற்படும் மாசுகளும் பற்றி ஏன் பேசுவதில்லை?

    மேலும் குறிப்பிட்ட நேரம் போக பட்டாசு வெடிக்கும் ஒவ்வொரு வீட்டையும் போலீசார் சென்று ஆய்வு நடத்த முடியுமா? பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியுலகத்துக்கு சொல்லுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் தங்கள் சுய விருப்பதற்காக ஒருவர் மீது பொய்யாக புகார் தெரிவிக்க கூடாது.

    ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது, ஜெயிக்க முடியாது, அவர்கள் நிச்சயமாக தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பார்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் ஏமாந்துதான் போவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    மீடூ புகார்களை யாரும் கேலி செய்ய வேண்டாம் என்று பெரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
    சென்னை:

    இசை அமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கி இருக்கும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆல்பமான ‘கெட் யுவர் ப்ரீக்கிங் ஹேண்ட்ஸ் ஆப் மீ’ என்னும் இசை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்பே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார்.

    பெண்ணுக்கு தலைவர் பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.

    மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரசாக எழுகிறது.

    இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். உடன்கட்டை ஏறுதல் என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான். எப்போது கேட்டால் என்ன. நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது.

    வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி. நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான்.


    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது.

    நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிகழ்வுக்கு பிறகு பெரும்பாக்கம் அருகே எழில் நகரில் உள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியை குடியிருப்பு வளாகத்துக்கு கமல்ஹாசன் சென்றார்.

    அப்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள், புகார் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின் வில்லன் வேடம் மிக முக்கியமானது.

    எனவே இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகி இருக்கிறார்கள். அர்னால்டும் ஆர்வமாக இருந்து இருக்கிறார். ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்குமான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போயிருக்கிறது.



    அடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலை அணுகி இருக்கிறார்கள். அவர் சங்கரிடம் இந்தியன் 2 நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக சொல்லிவிடவே அக்‌‌ஷய் குமாரிடம் சென்று இருக்கிறார்கள். இந்த வேடம் ரஜினியுடன் மோதினாலும் வில்லன் வேடமாக இருக்காது.

    அவரது மோதலிலும் ஒரு நியாயம் இருக்கும் என்கிறார். 2.0 படத்தில் மொத்தம் 2100 கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். #2Point0 #Rajinikanth #KamalHaasan #Shankar

    ×