search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்கிறார்.

    ஏற்கனவே ஈரோடு, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுடனும் கலந்துரையாடினார்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    12-ந்தேதி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, மல்ல சமுத்திரம், இளம்பிள்ளை ஆகிய இடங்களிலும், 13-ந்தேதி ஓமலூர், மேட்டூர், கங்கவள்ளி, ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், பள்ளப்பட்டி, கோட்டை பாளையம் ஆகிய இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    14-ந்தேதி நாமக்கல், மல்லூர், ராசிபுரம், புதுசத்திரம், திருச்சேங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய இடங்களில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #Kamalhaasan #Rahulgandhi

    புதுடெல்லி:

    டெல்லியில் ஒரு ஆங்கில பத்திரிகை சார்பில் தலைமைக்கான கருத்தரங்கு நடந்தது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது இலக்குகள் குறித்து பதில் அளித்தனர்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உண்டா?

    பதில்:- அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை. எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் பா.ஜ.க. வுடனும் கூட்டணி சேரலாம். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை மரபணு மூலக்கூறு எண்ணங்களையும் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.


    கே:- சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நீங்கள் வரவேற்றது ஏன்?

    ப:- அது எனது சொந்தக்கருத்து மட்டுமே. கட்சியின் கருத்தோ கொள்கையோ அல்ல.

    கே:- ராகுல் காந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- நாட்டு மக்களின் சாத்தியப்படும் நபராக அவர் திகழ்கிறார். என்னை எப்படி தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வாய்ப்புள்ளவராக பார்க்கிறீர்களோ அதேபோல் நானும் அவரை நாட்டின் சாத்தியமாக பார்க்கிறேன். அவர் பிரதமர் ஆவதற்கான தகுதியும் வாய்ப்பும் உள்ளது.

    கே :- காவி அரசியல் பற்றி?

    ப :- அரசியல் என்பதே மக்களுக்கானது. அவர்கள் கடைபிடிக்கும் மதத்துக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் கொடுத்து கொடியில் இடம் கொடுத்திருக்கிறோம். மூன்று நிறங்கள் கொண்ட கொடியில் மூன்றுக்குமே சமமான முக்கியத்துவம் உண்டு. எந்த ஒரு நிறமும் மற்றவர்களை ஆக்கிரமித்துக்கொள்வதை நான் விரும்பமாட்டேன். 70 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொடி அது.

    கே:- கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பீர்களா?

    ப:- எங்களுடைய அடிப்படை கொள்கைகள் எல்லோருக்கும் தெரியும். மக்கள் நீதி மய்யம் என்பது எங்கள் கொள்கைகள் தான். எங்கள் கொள்கைகளை வைத்து மக்கள் எங்களை சுத்தமானவர்களாக, நேர்மையானவர்களாக பார்க்கிறார்கள்.

    ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று நம்புகிறார்கள். கறை படிந்த ஊழல் கட்சிகளுடன் நாங்கள் கைகுலுக்கினால் அந்த நம்பிக்கையை சிதைப்பது போல் ஆகிவிடும். எனவே கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழல்வாதிகள் யாருடனும் நாங்கள் கூட்டாளியாக இருக்க மாட்டோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Kamalhaasan #Rahulgandhi

    நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மெகா ஐகான்’ நிகழ்ச்சியில், கமல்ஹாசனின் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், என் தந்தை விதியை எதிர்த்து நின்றவர் என்று கூறினார். #KamalHaasan #ShrutiHaasan
    நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் நாடு முழுவதிலும் பிரபலமானவர்கள் பற்றி புதிதாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ‘மெகா ஐகான்’.

    இந்த தொடரில் பிரபலங்களின் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், அவர்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்க மானவர் களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை கொண்டு விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் முதல் 5 பிரபலங்களின் பட்டியலில் கமல்ஹாசன், விராட் கோலி, தலாய் லாமா, அப்துல் கலாம், கிரண் பேடி ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.



    இந்தத் தொடரின் முதல் 5 எபிசோடுகளை தொகுத்து வழங்குகிறார் நடிகர் மாதவன். இந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் அரசியல் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், “சினிமாவில் அப்பா தனக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கொண்டாடினார்.

    எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார். இதுதான் விதி என்றால் அதை எதிர்த்து நின்று துணிந்து கேள்வி கேட்பார். இந்த குணங்களைத் தான் அரசியலிலும் பிரதிபலிக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்’ என்று கூறி இருக்கிறார். #KamalHaasan #ShrutiHaasan

    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை படித்து விட்டு மக்களிடத்திலும் சென்று அவர்களிடம் கலந்து பேசியதினால் மக்கள் நீதிமய்யம் தங்கள் கருத்தை முன்வைக்கிறது.

    அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் நாங்கள் வேண்டுவது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு எதிரானது அல்ல மக்களுக்கு உயிர்ச் சேதம் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு சேதம் இல்லாமல் தொழிற்சாலைகள் வர வேண்டும்.

    இப்போது விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கும் 8 லட்சம் டன் என்பதால் உலகத்தில் சட்டதிட்டங்களை மீறிய முதல் காப்பர் ஆலையாக இது இருக்கும். இந்த ஆலை தமிழகத்தில் இருந்து விடக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள் முன்னேற்றத்தை என்றும் மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

    ஆனால் அது மக்களுக்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். தனி வியாபாரியின் முன்னேற்றமாக இருக்கக் கூடாது. அது தொடர்பான மனுவை அரசு செயலாளரிடம் மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகள் கொடுக்க உள்ளனர்.

    பெட்ரோல் விலையை தினம் தினம் என நிறைய நாட்கள் ஏற்றிவிட்டு கொஞ்சமாக குறைத்திருப்பதற்கு பெயர் குறைப்பது அல்ல ஏறித்தான் இருக்கிறது என்பதுதான் அதற்கான அர்த்தம். பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும். வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் இது பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விலை ஏற்றம்.



    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான். அவர் சொன்னது போல் ஊழலுக்கு எதிரானது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தி விட்டாரேயானால் கண்டிப்பாக என்னுடைய சகோதர மனப்பான்மையுடையவர் அவர். அவரை வரவேற்கிறோம்.

    இப்போது 6000 கிராம சபைகளை தொட்டுக் கொண்டிருக்கிறோம். 12500-க்கும் மேல் கிராம சபைகள் உள்ளன. அதை தொட்டு விட்டால் அனைவருக்கும் தெரியக் கூடிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும். பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இணையான பலம் கிராம சபைக்கு உண்டு என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு யாரிடம் ஒப்புதல் வாங்கினார்கள். மக்கள் இருக்கும் இடத்தில் மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது அவர்களிடம் தான் பேச வேண்டும். எங்கேயோ ஒரு அலுவலகத்தில் பேப்பரை நகர்த்திவிட்டால் அது தமிழகத்துக்கான முன்னேற்றமாக இருக்காது.

    எங்களுக்கு பூத் கமிட்டி இல்லை என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் எங்களின் பூத் கமிட்டி இயங்கும் போது தெரியும். நாங்கள் ரொம்ப அழுத்தமாக, படிப்படியாக எப்படி செய்ய வேண்டுமோ அதை நியாயமாக செய்து கொண்டிருக்கிறோம். இதை பணம் கொடுத்து செய்ய நாங்கள் முயலவில்லை. எல்லாவற்றையுமே உழைப்பால், வியர்வை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான வேலை அழுத்தமாக நடந்து கொண்டிருக்கிறது.

    கன மழைக்கு முன்பு எடுத்தது போல இல்லாமல் தற்போது நல்ல படியான நடவடிக்கையை எடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி இருக்கிறார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் நடிகர் கமல் பாராட்டி இருக்கிறார்.



    படம் பார்த்து கமல்ஹாசன் தனது நண்பர்கள் பலர் போன்செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.
    கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan

    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு பரப்பி வருகிறார். இன்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைகள் கூட்டப்பட வேண்டும். உத்திரமேரூரில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று இருக்கும் கமல்ஹாசன் அதற்கு முன் திறந்த ஜீப்பில் இருந்து மக்களிடம் பேசினார்.

     


    அப்போது ‘நான் உங்களுடன் கிராம சபையில் பங்கேற்க வந்துள்ளேன். நான் பங்கேற்கும் முதல் கிராமசபை உத்திரமேரூர் கிராம சபை. இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த ஊர் பிரச்சனையை தெரிந்துக்கொள்ள வந்திருக்கிறேன். கிராம சபை காத்துக்கொண்டு இருக்கிறது’

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கிய நிலையில், இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் பிக் பாஸ் டைட்டிலை வென்றார் ரித்விகா. #BiggBoss2 #Riythvika #KamalHaasan
    சென்னை:

    தொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம்(?) தருபவை மக்களுக்குக் காட்டப்படும். `பிக் பிரதர்' என்று சர்வதேச அளவிலும், `பிக் பாஸ்' என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிற இந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் கான்சப்ட் இது.

    தமிழகத்துக்கு முதல் முறையாகக் கடந்த ஆண்டு வந்தது, இந்த நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் தொடங்கப்பட்டு சென்ட்றாயன் வெளியேற்றம், ஐஸ்வர்யா எவிக்‌ஷனுக்கு வராதது, மகத் அட்டகாசம் என பல சர்ச்சைகளுக்கு இடையே இன்று நிறைவடைந்துள்ளது.



    ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

    பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இடைப்போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.

    ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார், ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும்,  பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

    வாழ்த்துக்கள் ரித்விகா. #BiggBoss2 #Riythvika #KamalHaasan

    அமிதாப்பச்சன், அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் டிரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். #Kamal #ThugsOfHindostan
    வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்திப்படங்களை தயாரித்த நிறுவனம், யாஷ்ராஜ் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்திப்படம், ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்.’ இது, அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட படம். இது, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் கத்ரினா கைப், பாத்திமா சனாசேக் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா டைரக்டு செய்திருக்கிறார். நவம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாக இருக்கிறது.

    இந்திப்பட உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் ஆகிய இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். படத்தை பற்றிய தகவலை அமிதாப்பச்சன், அமீர்கான் இருவரும் வீடியோ ஒன்றில் பேசி, வெளியிட்டனர்.

    இந்த படத்தின் டிரைலர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று கூறுவதை நிச்சயமாக நான் மறுக்கிறேன். அவர் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #Kamalhaasan
    சென்னை:

    சென்னை தங்க சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே?



    பதில்:- அழைப்பிதழ் எல்லோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாறுபட்ட கருத்து இல்லை. இது அரசு விழா.

    எம்.ஜி.ஆர். கலை உலகில் யாரெல்லாம் அவரோடு நெருங்கி இருந்தார்களோ அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

    எனவே அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று கூறுவதை நிச்சயமாக நான் மறுக்கிறேன். அவர் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை.

    இது அரசு விழா என்ற காரணத்தினால் கட்சி சார்பாக எல்லோரையும் அழைக்க முடியாது. அருமை நண்பர் தொல்.திருமாவளவன் கூட விழாவுக்கு அழைத்தால் வருவேன் என்று சொன்னார்.

    நிச்சயமாக இது நல்ல விசயம். எங்களோடு அவர் நெருங்கி வருகிறார் என்பதைத்தான் எடுத்து காட்டுகின்றது. எனவே அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால் இதை அரசு முடிவு செய்து அழைப்பிதழ் அனுப்புகிறது. நான் முடிவு செய்ய முடியாது. அந்த அடிப்படையில் தொல். திருமாவளவனாக இருந்தாலும், அதே போன்று மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, அரசு முடிவு செய்கிற பட்சத்திலே திருமாவளவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே அழைப்பிதழ் கொடுப்பது பற்றி அரசு ஆலோசித்து முடிவு செய்யும்.

    கே:- நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் அனுமதியின்றி அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதே?

    ப:- பேனர்கள் அனைத்தும் அனுமதி பெற்றுதான் வைக்கப்பட்டுள்ளது. எல்லோருமே அனுமதி வாங்கித்தான் பேனர் வைத்துள்ளோம்.

    எங்கேயாவது அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தால் அதை அகற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #Kamalhaasan

    நான்கு அமாவாசைக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போகும் என்று கூறிய அமைச்சர்களுக்கு கமல் ஹாசன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டி விபரம்:-

    கே:- தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு பற்றி?

    ப:- அதை வரவேற்கிறேன். கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்.

    கே:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2, 4 அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறி இருக்கிறாரே?

    ப:- அவர்களுக்கு வைக்க வேண்டிய கெடு அதிகமாக உள்ளது. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

    கே:- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

    ப:- இல்லை.

    கே:- அரசியல் ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

    ப:- மாட்டேன். ஏனென்றால் நாங்களும் அரசியலுக்கு வந்துள்ளோம்.

    கே:- மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு இல்லை என்று அமைச்சர்கள் பேசுவது?

    ப:- மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அது தெரிந்திருக்கும்.



    கே:- சினிமா பாடல்கள் வைத்து கிண்டல் பேசுகிறார்களே?

    ப:- சினிமா பார்த்து கற்றுக்கொண்டோம் என்று ஒப்புக்கொண்டார்கள் அதுவே போதும்.

    கே:- கிராம சபை கூட்டத்திற்கான விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளது?

    ப:- ‘மக்கள் நீதி மய்யம்’ கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்கும். அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னரே தண்டோரா இசைக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

    ஆனால் அது முறையாக நடத்தப்படுவது இல்லை. கிராம சபை கூட்டத்தில் வெற்றி கிடைத்ததாக நம்புகிறோம். ஆனால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அது கிடைக்க வேண்டும். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய தந்தை கமல்ஹாசன் வழியை பின் பற்ற இருக்கிறார். #ShrutiHaasan #Kamal
    சினிமாவில் பிசியாக இருப்பவர்கள் எல்லாம் டிவி பக்கம் வரும் காலம் இது. பிக்பாஸ் மூலம் டிவிக்கு வந்தார் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 வது சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து விஷால் தனியார் டிவி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்க இருக்கிறார்.

    இவர்கள் வரிசையில் ஸ்ருதிஹாசனும் விரைவில் ஒரு டிவியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை பேசும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.



    சமீபத்தில் லண்டனில் தனது முதல் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியிருக்கும் ஸ்ருதி அதே உற்சாகத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டார்.
    தனி மனித உரிமைகளை பாதிக்கும் வகையில் அரசு பொதுமக்களை நோட்டமிடுவதும், ஜன்னலை எட்டி பார்ப்பதும் சரியானது கிடையாது என்று ஆதார் தீர்ப்பு பற்றி கமல் கருத்து தெரிவித்துள்ளார். #KamalHaasan #AadhaarVerdict
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை வந்து இருக்கும் ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டி வருமாறு:

    பதில்:- மிகப்பெரிய சிறந்த அரசியல் ஆளுமையை சந்தித்து வந்திருக்கிறேன். புதிதாக வந்தவர். அரசியல் தெரியாது என்று விமர்சனங்கள் செய்தபோது தனக்கு தெரியும் என்று செய்து காட்டியவர். புதிய புதிய நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து இருக்கிறார்.

    அவர் கொண்டு வந்த திட்டங்களில் பல இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்கள். மற்ற மாநில முதல்வர்கள் பொறாமைப்படும் அளவுக்கு மக்களுக்கு தேவையான வி‌ஷயங்களை செய்து வருகிறார். முக்கியமாக வெள்ள பாதிப்பு போன்ற பேரிடர்களில் மக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கிறார். அவரை பாராட்டிவிட்டு சில அறிவுரைகள் கேட்டுக்கொண்டேன்.

    கே:- பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பற்றிய தீர்ப்பு?

    ப:- தீர்ப்பு வந்து இருக்கிறது. ஆனால் திறமைக்கு நாம் பதவி உயர்வு கொடுத்தே ஆக வேண்டும். சாதி அடிப்படையில் அதை மறுக்க முடியாது.

    கே:- ஆதார் சட்டம் பற்றி வந்துள்ள தீர்ப்பு?

    ப:- கண்டிப்பாக. தனி மனித உரிமைகளை மீறுவதாக எந்த திட்டமும் இருக்க கூடாது. அரசு மக்களுக்கு செய்யும் நல்ல திட்டங்கள் எல்லாமே போற்றுதலுக்குரியது.


    ஆனால் தனி மனித உரிமைகளை பாதிக்கும் வகையில் அவர்களை நோட்டமிடுவதும், ஜன்னலை எட்டி பார்ப்பதும் சரியானது கிடையாது. எப்போதுமே கண்காணிக்கும் அரசாக இருக்க கூடாது.

    கே:- மக்கள் நீதி மய்யம் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதில்லை என்ற குற்றச்சாட்டு?

    ப:- நாங்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். சுட்டுக்கொல்லும் வரை போராட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். இப்படியும் போராட்டங்கள் செய்யலாம். கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்வது மக்கள் நீதி மய்யம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan  #AadhaarVerdict
    ×