search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டெல்டா கிராமங்களில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    கடலூர்:

    கொள்ளிடம் வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் வள்ளம் படுகை, பழநெல்லூர், வெங்காயமேடு, அகரநல்லூர், நடுத்திட்டு, பைபூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் இது குறித்து அறிந்து டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்களை வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    மக்கள் தங்குவதற்கான முகாம்கள் அமைத்தல், உணவுப்பொருட்கள், போர்வை முதலிய அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. அணைக்கரை பகுதியில் கொள்ளிடக்கரை ஓரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கரையோரப்பகுதி மக்கள் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் அவர்களுக்கு உணவு, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் மகத்தின் காதல் முறிந்துள்ளது. #Mahat #BiggBossTamil
    பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.

    பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.



    நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று காலை வாலிபர் ஒருவர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    அரசியல் தொடர்பான முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றையும் கமல் அந்த வீட்டில் வைத்தே வெளியிட்டு வருகிறார்.

    2 மாதத்திற்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தார்.

    இருப்பினும் தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கமலின் வீட்டில் இன்று காலை மேலும் ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.

    பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    அவரது பெயர் மலைச்சாமி என்று விசாரணையில் தெரிய வந்தது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.


    கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ள மலைச்சாமி அவரை பார்ப்பதற்காகவே சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசியலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கமலின் செயல்பாடுகள் உள்ளன.

    அரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் அடுத்தடுத்து 2 வாலிபர்கள் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

    இன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக மூன்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தில் கமல்ஹாசன், மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில் இயக்குநர் விஜய் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

    இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்றாவதாக இப்போது பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம். இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

    மற்ற இரு படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன், வித்யாபாலன், நித்யா மேனன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 3 படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் நாளை கூடுகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (19-ந் தேதி) கலைவாணர் அரங்கில் மதியம் 2 மணிக்கு நடக்கிறது. சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.

    பொதுச்செயலாளர் விஷால் வரவேற்கிறார். துணைத்தலைவர் கருணாஸ், வரவுசெலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். நடிகர் சங்கத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. ஆனால் அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

    இதனால் பரபரப்பு நிலவுகிறது. விஷால் அணியே மீண்டும் களம் இறங்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக களம் இறங்க டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் தயாராகி வருகிறார்கள்.


    கோப்புப் படம்

    பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளனர். அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றனர். நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு நடைபெறுவதால் நாளை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. #NadigarSangamMeet #Vishal

    கமல் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவள்ளூர்:

    நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கூறும் போது, ‘‘சுதந்திரதினத்தை யொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் அதே போல், பகுதி நேர ரே‌ஷன் கடைக்கு நிரந்தர கடை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் ஊராட்சி தலைவி சுமதி சிதம்பரநாதன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா பிரசாத் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    கமல் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் 3ம் பாகம் வெளியாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். #Kamal
    விஸ்வரூபம் 2 படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் ரா அமைப்பில் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கமல் காட்சி முடிந்ததும் பேசினார்.

    அப்போது விஸ்வரூபம் 3 வருமா? என்று கேட்டதற்கு ‘சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்’ என்றார். மேலும் ‘இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய. இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    படத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது. ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத மாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன்.



    எனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.
    கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூம்-2 படத்தின் தொடக்கத்தில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசார பாடல் இடம்பெற்றது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #MNMPartySong
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி என்றும் வலம் வருகிறார்.

    கமல்ஹாசன் இயக்கி நடித்து இருக்கும் விஸ்வரூபம்-2 படம் நேற்று வெளியானது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி இது. ஏற்கனவே தயாராகி 3 ஆண்டுகளாக வெளியீட்டுக்கு காத்திருந்த படம் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தெலுங்கில் மட்டும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

    கருணாநிதி மறைவு காரணமாக படத்தின் இறுதிகட்ட விளம்பர வேலைகள் பாதித்தன. இதனால் நேற்று வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. படமும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்து பரவியது.

    படம் தொடங்குவதற்கு முன்னர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பிரசார பாடல் அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.



    கடந்த வாரம் கமல் அளித்த பேட்டியில், படத்தில் தனது கட்சி தொடர்பான வசனங்களையோ காட்சியையோ சேர்க்க மாட்டேன் என்று கூறி இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சியை வளர்க்க சரியான ஊடகங்கள் இல்லை. அதனால் சினிமாவை பயன்படுத்தினார். ஆனால் தான் அப்படி பயன்படுத்த மாட்டேன் என்று விளக்கி இருந்தார். ஆனால் படத்தில் பிரசார பாடல் இடம்பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் இரவு ராயப்பேட்டையில் உள்ள வணிக அரங்கில் படத்தை ரசிகர்களோடு பார்த்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது, ‘படம் ஆரம்பிக்கும் முன் ‘மக்கள் நீதி மய்யம்‘ கட்சியின் பாடல்கள் திரையிடப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த கமல், “படத்திற்கு இடைவேளையில் முதல்வர் பத்தின வீடியோவை திரையிடுறாங்க. அது விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. நான் இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்கேன். கிடைக்கிற மேடைகள் எல்லாத்துலையும் அரசியல் பேசுவேன். எங்களுடைய முன்னேற்றத்தை நான் எடுத்து வைப்பேன். அதுக்கான மேடை கிடைச்சது பேசிட்டு இருக்கேன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதைத் தான் பண்ணிட்டு இருக்கேன்” என்றார்.

    கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை நீங்கள் வலியுறுத்துவீர்களா? என்றதற்கு, “அவர்களாக மனம் உவந்து கொடுக்கட்டும். அப்போதுதான் தமிழனுக்கு பெருமை. வலியுறுத்தி கொடுக்கிறது தமிழனுக்கு பெருமை இல்லை” என்று கூறியுள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #MNMPartySong

    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் 22 இடங்களில் சென்சார் போர்டு கட், மியூட், காட்சி மாற்றம் ஆகிய இடங்களில் கை வைத்துள்ளது. #Vishwaroopam2
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விஜய் நடிப்பில் உருவாகி வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan #Vijay #Sarkar
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். `சர்கார்' படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 



    மேலும் கருணாநிதி மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, `சர்கார்' படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டதாக படக்குழுவி அறிவித்துள்ளது. 

    முன்னதாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தும் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan #Vijay #Sarkar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன் பேசும் போது, இது நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல என்றார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது,

    ஒரு நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது, ஒரு கமா என்று தான் நினைக்க வேண்டும். உணர்வும், இந்த சூழலும் எனது குரலை இந்த நிலைக்கு உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. கலைத்துறையில் ஒரு கடைக்குட்டி நான். நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் ஒரு பெரியவரை, குடும்பத்தின் தலைவரை இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது. 



    கலைத்துறையில் அவரது ரீங்காரம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் ஆயிரமாயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். அந்த தமிழை பார்த்து மேலே ஏறி வந்திருக்கின்றேன். அவரை வணங்க வந்திருக்கிறேன். அவருக்கு வணக்கமும், மரியாதையும் தொடரும். இவ்வாறு பேசினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan

    கமல்ஹாசன் பேசிய வீடியோ: 

    ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படக்குழுவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாரா இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
    கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்களின் பாடல் வரி அடங்கிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அதன் சண்டைக் காட்சிகள் உருவான விதத்தை வீடியோவாக நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

    அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

    நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். சமீபகாலமாக இந்தி நடிகர்களை தமிழில் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் வில்லனாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கமலும் அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்.



    லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்-2 உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Indian2 #KamalHaasan

    ×