search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடித்த விஸ்வரூபம்-2 படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதற்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும். அதற்கு ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதே எனது முக்கிய நோக்கம். அதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் வகையில் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன்.



    அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மாநிலத்தில் நிலவும் லஞ்ச, ஊழலை அடியோடு ஒழித்து விடலாம். தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதே எனது முழுநேர பணியாக இருக்கும். எனக்கு இதைவிட சினிமா முக்கியம் அல்ல.

    நடிப்பு திறமை அரசியலுக்கு உதவுமா என்று கேட்கிறீர்கள், விலங்குகளுக்கு கூட நடிப்பு திறமை இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கின்றன.

    நடிப்புத் திறமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பலன் அடையும் போது, அதை ஏன் அரசியல்வாதிகள் மட்டும் பயன்படுத்தக்கூடாது? எனக்கு கிராமப்பகுதிகளில் தான் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு என்னை சினிமா நபராக தான் அதிகம் தெரியும். அவர்கள் என்னை ஒரு சினிமாக்காரனாக மட்டும் அல்லாமல் அரசியல்வாதியாகவும் ஏற்றுக்கொள்வார்கள்.

    அந்த நம்பிக்கையை அவர்களுக்கு உண்டாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதை நோக்கி பணிபுரிவேன் அதன்மூலம் நடிகனாக எனக்கு அவர்கள் தந்த அன்பையும் ஆதரவையும் அரசியல்வாதியாகவும் தரும் அளவிற்கு பணிபுரிவேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    `விஸ்வரூபம்-2' படத்துக்கு தடை விதிக்கக் கோரி பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    சென்னை:

    கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் மூன்று வருட போராட்த்திற்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரூ.100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பணமாக ரூ.4 கோடி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.



    ஆனால், அந்த பணத்தை கொண்டு, மர்மயோகி படத்தை எடுக்கும் வேலைகள் எதையும் செய்யாமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.

    இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம்-2’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ள வருகிற 10-ந் தேதி வெளியிடப்போவதாக தகவல் வெளியாக உள்ளது.

    எனவே, மர்மயோகி படத்துக்காக எங்களிடம் வாங்கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். எனவே, விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



    இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கமல்ஹாசன் உள்பட பலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கின் விசாரணையை 6-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Vishwaroopam2 #KamalHaasan

    அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்தியன்-2 படத்தில் நடிப்பதாக கூறினார். #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. 

    படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஐதராபாத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. 

    இந்த நிலையில், அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசினார். இந்தியன்-2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கேட்டபோது,

    ‘‘இந்தியன் படத்துக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பலவருடங்களுக்கு முன்பே நான் விரும்பினேன். அதை இயக்குனர் ‌ஷங்கரிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் ‌ஷங்கருக்கு தயக்கம் இருந்தது. வெற்றி பெற்ற படத்தை எதற்காக மாற்றி எடுக்க வேண்டும் என்று யோசித்தார். 



    நான் அவரிடம், நீங்கள் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை என்றால் அந்த தலைப்பை என்னிடம் தந்து விடுங்கள் நான் எடுக்கிறேன் என்று கூறினேன். அதன்பிறகு சமீப காலமாக அரசியல் சம்பந்தமாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பிறகு இந்தியன்-2 படத்தை எடுக்கலாம் என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது. 

    என்னுடையை அரசியல் பிரவேசம் என்ற புள்ளியில், இருவரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுக்க தயாராகி உள்ளோம். அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்த படத்தில் நடிக்கிறேன்.’’

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Indian2 #KamalHaasan

    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், என் ரசிகர்கள் புத்திசாலிகள் என்று பேட்டியளித்திருக்கிறார். #Kamal #Vishwaroopam2
    கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

    இதற்காக கமல் அளித்த பேட்டி ஒன்றில் ’முன்பு எல்லாம் நேபாளத்திலிருந்து நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் எனச் சொன்னாலும் யாரும் அதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை.

    தஜிகிஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்ற போது கதைப்படி பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டதால் அதையே ஒரிஜினலாக பயன்படுத்தினோம். வேறு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் புத்திசாலியான என்னுடைய ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.



    நாட்டை விட்டு ஓடியவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை சிறப்பாக செய்ய விடாமல் தடுத்ததற்காகத் தானே தவிர பயந்து அல்ல’ என்று கூறி இருக்கிறார். #Kamal #Vishwaroopam2
    தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு போட்டியாக அதில் பங்கு பெற்றவர்களே களமிறங்க இருக்கிறார்கள். #Kamalhaasan
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’. இதில் இவருடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

    அன்றைய தினத்தில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

    கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் உருவாகியுள்ளது. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது.



    இந்நிலையில், இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Vishwaroopam2 #KamalHaasan #PyaarPremaKaadhal 
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி நேரில் சென்று முதல்வர் விசாரித்தது நல்ல மாண்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் பாராட்டியுள்ளார். #Karunanidhi #karunanidhiHealth #KamalHassan
    சென்னை :

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திமுக தலைவர் கலைஞரை சந்திக்க முடியவில்லை. என்னுடைய ஆதங்கத்தின் காரணமாக போனேன். கலைஞர் நலம் பெற்றுவிட்டதாகவும், இல்லை என்றும் கூறுவதும் பற்றி எனக்கு தெரியாது.

    சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது. கலைஞர் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோரையும் போல் என்னுடைய ஆசையும் ஆகும்.

    ரஜினிகாந்த் வெளியூரில் இருப்பதால் சந்திக்கவில்லை. நல்ல செய்தியாக இருக்கும் என்பதால் வெளியூர் செல்கிறேன். 
    கலைஞரை, முதல்வர் உள்பட அதிமுகவினர் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தது நல்ல மாண்பு. 19 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் பெரும் தலைவர். அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது முக்கியமல்ல. இது போன்ற நிகழ்வுகளில் மாண்பு காண்பிப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். #Karunanidhi #karunanidhiHealth #KamalHassan
    அரசியலில் தன்னுடைய எதிரி யார் என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் அந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். கமல் கலந்துகொண்ட நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு ஒளிபரப்பானது. இதில் கமல் கேள்வி பதில் பாணியில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



    கேள்வி:- “இந்தியன்-2க்கு அப்புறம் நடிக்க மாட்டீர்கள் என்று சொல்கிறார்களே?”

    பதில்:- “அவர்கள் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதை காலம்தான் அதை முடிவு செய்யும். அப்ப முழு நேர அரசியல்வாதியாக ஆக மாட்டீங்களா என்று கேட்கிறார்கள்.

    கே:- இங்கு முழு நேர அரசியல்வாதி யார்?.

    ப:- ஒருத்தரை சொல்லுங்கள் பார்க்கலாம். நான் முதலில் மனிதன் பிறகு கலைஞன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல தியாகம் செஞ்சு அரசியல் செஞ்சது வேற. இப்போது அப்படி நடிக்க அவசியமில்லை. இது துறவு அல்ல.. எனக்கும் கொஞ்சம் மிஞ்சணும்’

    கே:- ‘‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?”

    ப:- “நம் பழைய சடங்குகளின் ஒவ்வொன்றுக்கு பின்னாலும் நிறைய காரணங்களும் நோக்கங்களும் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும் ஒரு செய்தி இருக்கிறது. நேரடியாக சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மதம் வழியாக சொல்லியிருக்கிறார்கள்..

    ‘மன்னர் சொல் கேளா மக்களை வழிதிருப்ப மதம் வழி சொல்லி வைத்த மார்க்கம்தானே’ன்னு நானே சின்ன வயசுல எழுதியிருக்கேன். எனவே நிச்சயம் சம்பந்தம் இருக்கு. அதனால்தான் நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

    கே:- “பிடித்த போட்டியாளர் யார்?”

    ப:- ‘உங்களுக்கு பிடிச்சவங்க ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லையா? எப்படி சொல்ல முடியும்? இரண்டு வருடங்களாக தாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தான் எனக்குப் பிடித்தவர்கள்”

    ‘எந்தவொரு விளையாட்டிலும் தன்னுடைய எதிரியார் என்பதை தேர்வு செய்தாக வேண்டும். இன்னமும் கொஞ்ச நாள்ல நானும் அதை செய்தாக வேண்டும்’ (கமல் இப்படி சொல்லிவிட்டு கேமராவைப் பார்க்க புரிந்து கொண்டு கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள்.) #KamalHaasan #MakkalNeethiMaiyam
    லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை நடிகை சுருதிஹாசன் காதலிப்பதாக செய்தி வந்த நிலையில், அவர்களது திருமணம் பற்றி சுருதி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். #KamalHaasan
    கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார்.

    கமல் முன்பு கூட காதலருடன் வலம் வருகிறார். இது குறித்து கமலிடம் கேட்டபோது ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று பதில் அளித்தார். #KamalHaasan #ShrutiHaasan
    “ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வதுடன், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார். எந்த சட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் பதவி விலக வேண்டும் என்று கூறப்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார். அவர் அரசியலுக்கே லாயக்கற்றவர். ஒருவர் மீது யார்  வேண்டுமானாலும் குற்றச்சாட்டு கூறலாம். அது நிரூபணமானால்தான் குற்றவாளியாக கருத முடியும். சட்டமன்ற கூட்டத்தொடர் 46 நாட்கள் நடந்தபோதும்கூட தமிழக அரசின் மீது யாரும் எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவும், விலைவாசி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பஸ்களில் விவசாயிகள் கட்டணமின்றி விளைபொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. பசுமை பண்ணை காய்கறி அங்காடிகளில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MinisterKadamburRaju
    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் சாதி மதம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். கமல்ஹாசன் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

    இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நடந்த தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.

    இந்தியாவின் வலிமையே கிராமங்களில்தான். கிராமங்கள் வாழ்ந்தால் நாடு வாழும் என்று சொல்லி உள்ளனர். எனவே கிராமங்கள் நவீனமயமாக வேண்டும்.



    கிராமங்கள் வளர்ச்சி பெறும்போதுதான் முன்னேற்றம் உருவாகுகிறது. இதற்கு இந்திய தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை உதாரணமாக சொல்லலாம். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும் செல்போன் வாங்கிய பிறகுதான் தொலைத்தொடர்பு துறை உயர் வளர்ச்சியை அடைந்தது.

    கிராமங்களின் ஆற்றலை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் கிராமங்களை மேம்படுத்த மக்கள் நீதி மய்யம் ஆர்வம் காட்டுகிறது.

    மக்கள் நீதி மய்யம் மூலம் ஸ்மார்ட் வில்லேஜ்ஸ் (கிராமங்கள்) உருவாக்கப்படும். ஸ்மார்ட் கிராமங்கள் உருவானால் மக்கள் கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை மாறும்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் விரைவில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். அதில் கிராமங்கள் மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

    கிராமங்கள் உண்மையிலேயே ஸ்மார்ட்டாக மாறினால் மக்கள் இடம் பெயர்வதில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். கிராமத்து மக்கள் நகர் பகுதிகளுக்கு எப்போது செல்ல வேண்டும்? எதற்காக செல்ல வேண்டும்? என்பதை எல்லாம் தாங்களே தீர்மானிப்பார்கள்.

    என்னை நான் அரசியலில் மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுடன் கலந்து இருக்க ஆசைப்படுகிறேன். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பானவர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    நான் பல்வேறு விதமான பங்களிப்பை அளித்த பிறகு தான் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளேன். எனவே தயவு செய்து என்னையும் அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

    அரசியலில் நான் எடுத்து வைத்திருக்கும் அடி மிகவும் ஆபத்தானது என்பதை நான் நன்கு அறிவேன். அரசியலில் நேர்மைக்கு இடமே இல்லை. ஆனால் அரசியலிலும் நான் நேர்மையை ஏற்படுத்த முயல்வேன்.

    தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தயவு செய்து அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் எனது கட்சிக்குதான் வரவேண்டும் என்பதில்லை. அரசியலுக்கு வந்தால் போதும்.

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். அரசியலில் உள்ள அழுக்குகளை விரட்ட வேண்டும். அதற்கு நாம் ஒன்று சேர்ந்தால் பெரிய ஆறாக மாறி அந்த அழுக்குகளை அகற்ற முடியும்.

    எனக்கு இப்போது 63 வயதாகிறது. என்னிடம் எந்த லட்சியமும் இல்லை. அதுபோன்று எந்த தியாகமும் இல்லை. ஆனால் கடமை இருக்கிறது.

    அந்த கடமையின் பலன்களை பார்ப்பதற்கு நான் இல்லாமல் கூட போகலாம். ஆனால் அடுத்த தலைமுறையினர் அந்த கடமையின் பலனை நிச்சயம் அனுபவிக்கும்.

    எனவே உங்களுக்கும் அந்த கடமை உள்ளது. அந்த கடமையை நிறைவேற்ற நீங்களும் முன் வந்தால். இந்த மாநிலத்தை சிறப்பான மாநிலமாக மாற்ற முடியும்.

    எனது நற்பணி மன்றத்தில் சுமார் 8 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக நற்பணிகளை செய்து வருகிறார்கள். அந்த நற்பணி இயக்கத்தின் மீது மக்கள் நீதி மய்யம் வலுவாக உருவாக் கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த பக்கமும் சாயாத நடுநிலையான கட்சியாகும். இடது பக்கமோ, வலது பக்கமோ நிச்சயம் சாயாது. ஆனால் சாமானிய மக்களின் குரலை பிரதிபலிக்கும் கட்சி யாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழும்.

    உலக அளவில் குறிப்பாக ஐரோப்பாவில் நடுநிலை கட்சிகள்தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டுமே நடுநிலை கட்சியாக உள்ளது.

    மாற்றங்கள் நிச்சயம் வரும். தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, சாதாரண மக்களிடமும் மாற்றங்கள் வரும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ×