search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam
    சென்னை:

    அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாநாடு நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.

    கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கேவலு அறிவிக்கப்பட்டார்.

    மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமீலா நாசர், சவுரி ராஜன், ராஜசேகரன், சி.கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜ நாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோரை உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரத்துக்காக டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தது.

    இதையடுத்து முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

    இதற்காக கட்சி அலுவலகம் முன் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையைச் சுற்றிலும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கூடி இருந்தனர். நடிகர் கமல்ஹாசன் காலை 11 மணிக்கு மேடைக்கு வந்தார்.

    அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்பு நடைபெறும் இந்த கொடியேற்ற பெரு நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    பின்னர் மேடையில் இருந்தவாறு அருகில் கம்பத்தில் இருந்த கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில், “கட்சியின் உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டு புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா என்ற சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ண குமார், குமாரவேல், மவுரியா, மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரி ராஜன், தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

    கொடியேற்றி வைத்து கமல்ஹாசன் பேசுகையில் கூறியதாவது:-

    இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.

    அக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரும், தொகுதி வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் கார் வாகனங்களில் வந்ததால் ஆழ்வார்பேட்டை சிக்னலில் கடும் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் ஸ்தம்பித்து நின்றன. #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam #MNMFlagHoist
    #MNMHeadquaters 
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

    கடந்த மாதம் அவர் அந்த கட்சியை டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்தார். தேர்தல் கமி‌ஷனும் கமல்ஹாசனின் கட்சியை அங்கீகாரம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கட்சித் தொடங்கிய 4 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் கட்சியின் செயல்பாடுகளில் தேக்க நிலை உருவாகி இருப்பதாக அதிருப்தி எழுந்தது. அதோடு கட்சியில் மேல் மட்டத்துக்கும் கீழ் மட்டத்துக்கும் தொடர்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) அமாவாசை தினத்தன்று அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடிமட்டம் வரை வலுவான தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த தொண்டர்களுக்கும் கட்சி தலைமைக்கும் முறையான இணைப்பு இல்லை என்று பேச்சு நிலவுகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை.

    மேலும் கட்சியின் அனைத்து முடிவுகளையும் கமல்ஹாசன் மட்டுமே எடுப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. கட்சியில் யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் கதை கதையாக பேசப்படுகிறது. இந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் அமையும்.

    கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் நீதி மய்யம் கட்சியை மிக, மிக வலுவான உள்கட்டமைப்புடன் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தன்னை தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுத்தியுள்ளார். அதோடு ஆலோசனைகள் பெற 3 குழுக்களையும் வைத்துள்ளார்.

    சென்னை, பெங்களூரு, அமெரிக்கா ஆகிய மூன்று இடங்களில் அந்த குழுக்கள் செயல்படுகிறது. அந்த குழுவினருடன் கமல்ஹாசன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 12-ந்தேதி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த நியமனம் கட்சி தொண்டர்கள் மத்தியில் நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி கட்சியில் புதிய வேகத்துடன் செயல்பட நிர்வாகிகள் நியமனம் கை கொடுப்பதாக அமையும். எனவே கமலின் அறிவிப்பை தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் 12-ந்தேதி அன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசவும் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அன்று அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியையும் ஏற்றி வைப்பார். அந்த கட்சி கொடிக்கு தலைமை தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் மேல் மட்டத்தில் மட்டும் இயங்குவதாக ஒரு கருத்து பரவி உள்ளது. 12-ந்தேதி அதற்கு விடை கிடைக்கும். கடை கோடியில் உள்ள தொண்டனிடமும் கமல்ஹாசன் காது கொடுத்து கேட்டு கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பது தெரியவரும்.

    நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு கட்சி புதிய எழுச்சி பெறும்.

    இவ்வாறு அந்த செயற்குழு உறுப்பினர் கூறினார். #MakkalNeedhiMaiam
    சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன் என்று கமல்ஹாசன் கூறியிந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருப்பது குறித்து கமல் விளக்கியுள்ளார். #KamalHaasan
    நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேள்வி ‘விஸ்வரூபம்’ வெளியீட்டின்போது படத்தை ‘டிடிஎச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?

    பதில் இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எல்லாம் அப்படித்தான். ஆனால் கள்ள மார்க்கெட் அது இது என்று சலவை செய்யும் இடமாகத் தமிழ் சினிமா இருப்பதை நான் விரும்பவில்லை.

    கேள்வி:- உங்கள் தொலை நோக்குப் பார்வையை உங்கள் துறைசார்ந்தவர்களே புரிந்துகொள்ளாதபோது எப்படி உணர்வீர்கள்?”

    பதில்:- மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும். எதிரில் இருப்பவனை மனிதனாகப் பார்க்காமல் இரையாகப் பார்த்த காலம் மாற எத்தனை லட்சம் வருடங்கள் கடந்தன? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’னு சொல்ல நன்றாக இருக்கிறது. ஆனால் மாற்ற முயற்சி பண்ணினால் ‘உங்க வீட்ல என்ன பண்றீங்க?’னு கேட்கிறார்கள். நான் எதற்கும் முன்னுதாரணமா இருக்கிறதைத்தான் விரும்புகிறேன். நீ பண்ணுனு சொல்ல மாட்டேன். நான் பண்றேன்னு பண்ணிக்காட்டுவேன். எல்லாரும் அதைப் புரிஞ்சு கூடவர தாமதம் ஆகத்தான் செய்யும்.”



    கே:- ரசிகர்கள் சினிமாவையும் அரசியலாகப் பார்ப்பது குறித்து?

    ப:- அண்ணாவின் ‘வேலைக்காரி’யில இருந்து, கலைஞரின் ‘பராசக்தி’யில இருந்து அப்படித்தானே. இப்போது இன்னும் அதிகமாகியிருக்கு. அது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் கேள்வி கேட்கறாங்க. இந்த ‘எல்லாரும் விழித் திருத்தல்’தான் நான் எதிர்பார்த்தது.

    கே:- விஸ்வரூபம் 2 டிரெய்லர்ல தமிழ்ல வசனம் மாற்றியது எதிர்ப்புகளைத் தவிர்க்கவா?

    ப:- அப்படியெல்லாம் இல்லை. படம் பார்த்தா உங்களுக்குப் புரியும். தவிரவும் நம்ம வாக்கியத்தொடர் வேற. இந்தியில் வேற. அதுக்காகச் சில வசனங்கள் மாறலாம். அதுபோக டிரெய்லர்ல மிகக்குறைந்த நேரம்தானே. அதையெல்லாம் பெரிசு படுத்துவாங்கனு நினைக்கவில்லை. சோஷியல் மீடியா காலமில்லையா; அதான் சர்ச்சை ஆயிடுச்சு. ஆனால், நான் இதைவிட காட்டமாக அரசியல் பேசியிருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.



    கே:- சபாஷ் நாயுடு எந்த நிலையில் இருக்கு? ‘சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன்’ என்று சொல்லும் உங்கள் படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருக்கே?”

    ப:- 40 சதவீதம் முடிஞ்சது. டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை.

    கே:- உங்க அரசியல் வருகை எப்படி திடீர்னு நடந்தது?”

    ப:- எனக்கு சினிமா தான் எல்லாம்னு நினைச்சுட்டிருந்தேன். நான் சினிமாவில் நினைச்சதெல்லாம் செய்ய முடியலைங்கறது உண்மை. ஏன்னு யோசிச்சேன். அஸ்திவாரமே சரியா போடாம, சிகையலங்காரம் பண்ணிட்டிருக்கோம்னு தோணிச்சு. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது. ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. நாடெங்கிலும் ஸ்ரீராம் அய்யங்கர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ சாகேத்ராம்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #SabashNaidu

    கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் அவரது காதலரை பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், சுருதி, அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். #Vishwaroopam2 #ShrutiHaasan
    கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி, விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் என சினிமாவிலும் கால் ஊன்றியபடியே உள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா' பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கமலிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு பதில் அளித்து கமல் நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன்.

    எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவது தான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. “என் சீட்ல உக்காருன்னு” உத்தமவில்லன் படத்துல வர்ற காட்சியை பாலச்சந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்தி விடாதீர்கள்”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார். சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும், அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது. இடையில் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் வந்தது.

    இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியதை மைக்கேல் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #Vishwaroopam2 #BiggBoss2 #ShrutiHaasan

    விஜய்யை அரசியல் களத்திற்கு அழைப்பதாக ட்விட்டரில் கூறிய கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KamalHaasan #Vijay #VijayPolitics
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

    விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்கிற கேள்விக்கு பதில் அளித்த கமல் ’எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்தமான தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

    இது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ‘தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.

    கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக அரசியலில் விஜய் களமிறங்குவார் என ஒரு யூகம் கிளம்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வருகைக்கு அடித்தளம் போட்டார் விஜய். ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த முடிவை தள்ளிவைத்தார்.



    கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதுபற்றி கூறும்போது, அந்த வசனம் சர்ச்சையாகும் என்று தெரிந்தே பேசியதாக குறிப்பிட்டார்.

    அவர் நடித்துக் கொண்டிருக்கும் சர்கார் படத்திலும் நடப்பு அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ள விஜய் கிடைக்கும் வரவேற்பை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என காத்திருக்கிறார்.

    இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை பெற விஜய்யை தன் பக்கம் இழுக்க கமல் முயற்சிக்கிறாரோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன்மூலம் அரசியலில் கமலும், விஜய்யும் இணைந்து பயணிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #KamalHaasan #Vijay #VijayPolitics

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார். #Kamal #Vijay
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமில்லாமல், இவரது நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’, ஆகிய படங்களின் வேலையையும் பார்த்து வருகிறார். டி.வி. நிகழ்ச்சியிலும் பிசியாக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், அரசியலுக்கு ஆயுதமாக பயன்படுத்தி வரும் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர், நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று கேட்க, நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்’ என்றார்.



    உங்களின் தம்பி விஜய் அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா? என்றதற்கு, எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
    எனது தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamalhaasan #Vijay
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.



    இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    #Kamalhaasan #Vijay
    நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள்களான ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கு அறிவுரை கூறுவதில்லை என்று கூறியிருக்கிறார். #Kamal #Kamalhaasan
    கமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌‌ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்டது. கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன? மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே சின்ன பயம் அவர்களுக்குள் இருந்தது. நான் தைரியம் கூறினேன்.

    அது இயல்பாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம்தான். அவர்களுக்கு நான் எந்த அறிவுரையோ ஆலோசனையோ கூற மாட்டேன். ஏதாவது தேவைப்பட்டு அவர்களே கேட்டால் மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய இளவயதில் யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்று நடந்ததில்லை.

    எல்லாமே என்னுடைய சுயமுடிவு தான். நான் என் மகள்களுக்கு என்ன சுதந்திரம் கொடுத்து இருக்கிறேனோ அது என் பெற்றோர் எனக்கு கொடுத்தது’ என்று கூறி இருக்கிறார்.
    சென்னையில் ட்விட்டர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட #வணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். #VanakkamTwitter #AskKamalHaasan
    ட்விட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் #வணக்கம்ட்விட்டர் என்ற நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்வி கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் கூறிய பதில்களும் பின்வருமாறு:-

    கேள்வி: ட்விட்டரில் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், தங்களுடைய சொந்த கருத்தை சொல்லும் படியாக இருக்கிறதே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்: ட்விட்டரில் சுதந்திரமும், பொறுப்பும் இருக்கிறது. இந்த பொறுப்பானது சுதந்திரத்தை சற்று குறைக்கிறது. ட்விட்டரை சிறப்பாக கையாள வேண்டும்.

    கேள்வி: ட்விட்டரில் நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். புதியதாக ட்விட்டரில் இணைபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லுவிங்க?

    பதில்: குறிப்பிட்ட வயது வரைக்கும் நான் யாருக்கும் அறிவுரை சொல்லுவது இல்லை. அதற்கு நாம் தகுதியானவர்களாக என்று நினைப்பேன். 

    கேள்வி: முகம் தெரியாதவர்கள் உங்களைப் பற்றி பேசும்போது என்ன நினைப்பீர்கள்?

    பதில்:மொட்டை மாடியில் நின்று எச்சில் துப்புவது போன்று, நடப்பவர்கள் மீது சில நேரம் படும், சில நேரம் படாது. அவர்களுக்கு துப்பி விட்டோம் என்ற சந்தோஷம் மட்டும். கொஞ்ச நாளில் இந்த விளையாட்டும் தீர்ந்து விடும். 



    கேள்வி: ட்விட்டரில் ஒருவரை பற்றி பேசும்போது, அவர்களை விட எழுதியவர்கள் மீதே அதிகம் பார்க்கப்படுகிறது. அது பற்றி?

    பதில்: அது மனித இயல்பு. 

    கேள்வி: உங்களுக்கு எப்போது ட்விட்டரில் ஆர்வம் வந்தது. உங்கள் மகள் உதவினாரா?

    பதில்: மருது சகோதரர்களுக்கு சுவர் கிடைத்த மாதிரி, எனக்கு ட்விட்டர் கிடைத்திருக்கிறது. அரசியலுக்கு அவர்கள் சுவரை பயன்படுத்தினார்கள். நான் ட்விட்டரை பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு கோபம் தாங்க முடியவில்லை. தனிப்பட்ட கோபம், மக்களுக்கு ஏற்படும் அநிதி ஆகியவற்றை பதிவு செய்தேன். எனக்கு நோட்டீஸ் போர்டாக ட்விட்டர் இருக்கிறது. ட்விட்டர் எனக்கு பொழுதுபோக்கு இல்லை.

    கேள்வி: ட்விட்டரில் பலர் பலவிதமான கேள்விகளை கேட்கிறார்கள். எப்படி நீங்கள் அமைதியாக இருக்கீற்கள்?

    பதில்: சிலருடைய கேள்வியை பார்க்கும் போது, பதிலளிக்க தோணாது. நமக்கு பதில் சொல்லக் கூடிய கேள்வியை தான் ரசிப்பேன். இந்த கேள்வி ஏன் எனக்கு தோன்ற வில்லை என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

    கேள்வி: நீங்கள் சக நண்பர்களின் டிரைலர்களை ட்விட்டரில் பார்த்திருக்கீற்களா?

    பதில்: என் படத்திற்கு டிரைலரை உருவாக்கும் போது, மற்ற டிரைலர்களை பார்ப்பேன். 

    கேள்வி: உங்கள் கட்சியில் இணைபவர்களை ஊழக்கு எதிரானவர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

    பதில்: என் அப்பா ஊழலுக்கு எதிரானவர். அதுபோல்தான் என்னை வளர்த்தார். அதுபோல் உள்ளவர்கள் என்னுடன் இணைவார்கள்.
    பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.#KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

    கடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.

    விவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்?.

    கடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KamalHaasan #MakkalNeethiMaiyam  #Tamilnews
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI
    திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.



    அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.



    கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

    குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

    தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI 

    கமல்ஹாசன் தயாரிப்பில் `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படம் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #Vikram #Ghibran
    விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 

    இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணியை துவங்கிவிட்டதாக ஜிப்ரான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `மஹாவீர் கர்ணா' என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vikram #Ghibran

    ×