search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் குடும்பத்தினருடன் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பயணித்து வந்த அரசு பஸ் மண்டேலா நகர் பகுதியில் வந்தபோது, அந்த நபரின் மனைவி அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போயி ருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், உடனே பஸ்சில் இருந்து இறங்கி அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விமலா நகை திருடியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்.

    பஸ்சில் பயணித்து வந்தவர்களில் யாரோ தான் நகையை திருடிவிட்டு சென்றிருக்கவேண்டும் என்று கருதிய போலீசார், பஸ் நிறுத்தப்பட்ட நிறுத்தங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள், மண்டேலா நகர் பஸ் நிறுத்தத்தில் அவச ரமாக இறங்கிச்செல்வது அதில் பதிவாகியிருந்தது.

    அந்த நபர்கள் தான், பெண்ணிடம் நகைகளை திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் நகையை பறி கொடுத்தவரும், அந்த 2 நபர்களும் பஸ்சில் தங்களின் அருகில் நின்றி ருந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யதில் அவர்கள் அப்பன் திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம் பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது48), அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த பாண்டித்துரை(42) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வீடு புகுந்து ரூ.48 ஆயிரம் திருட்டப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் காமராஜ புரம் வட பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது30), பத்திர எழுத்தர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடக்கோவில் கிராமத்தில் இவரது தாத்தா உடல் நலக்குறைவால் இறந்ததால் குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.48 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

    இதுகுதித்து பெரியசாமி கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தொட்டியம் அருகே நூதன திருட்டு
    • பெண் உட்பட 3 பேருக்கு வலை

    திருச்சி,

    தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கவரப்பட்டி குயவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ( வயது 40). இவர் பொன்னர் சங்கர் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பாலசுப்பிரமணி கரூர் மாவட்டம் பவித்திரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். வீட்டில் அவரது மனைவி சரஸ்வதி தனியாக இருந்தார். காலை 11 மணியளவில் அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அவரிடம் ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி கேட்டு வந்தனர். அப்போது சரஸ்வதி வீட்டில் தமது கணவர் இல்லை. வெளியூர் சென்றிருக்கிறார். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள் என கூறிவிட்டு வீட்டின் முன்பக்க கதவை சாத்திவிட்டு அருகாமையில் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றார். பின்னர் மாடுகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ. 30,000 பணத்தை காணாமல் திடுக்கிட்டார். மேலும் பீரோவும் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் லாக்கரை பார்த்தபோது அதில் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. உடனே ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி கேட்டு வந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்து வெளியே வந்து பார்த்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.மாட்டு கொட்டகைக்கு சரஸ்வதி சென்ற உடனேயே வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று அந்த நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணி காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி திரட்டுவதாக நடித்து வீடு புகுந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    மேல்மருவத்தூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா. கணவரை இழந்த இவர் வெளியூரில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார்.

    இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள்தான் வீட்டில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள தனனுடைய மாமா வீட்டில் தூங்கி விட்டனர். நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. மகள்களின் திருமணத்திற்காக பரிமளா நகை, பணத்தை சேமித்து வைத்திருந்தார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    • திருச்சி அரியமங்கலத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு போனது
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருச்சி,

    திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கோகிலா தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை ஸ்விட்ச் போர்டு அருகில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பிறகு வேலை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அரியமங்கலம் போலீசில் கோகிலாவின் தாய் மஞ்சுளா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பணம், நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடை உரிமையாளர் கடையினுள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது ‘டிப்-டாப்’ நபர் செல்போனை எடுப்பது பதிவாகி இருந்தது.
    • பாவூர்சத்திரம் போலீசில் நகை கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் பிரதான சாலையில் குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    கடைக்கு பல வாடிக்கையாளர்கள் வந்து நகைகள் வாங்கி சென்ற நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பேண்ட் சட்டை அணிந்த 'டிப்-டாப்' நபர் ஒருவர் ரூ.350-க்கு பெண்கள் காலில் அணியும் வெள்ளி மெட்டி வாங்கி உள்ளார்.

    அப்போது ரூ.500 கொடுத்து விட்டு மீதி சில்லறையை நகைக்கடையின் உரிமையாளர் சந்திரசேகரன் எடுத்து கொடுக்கும் சில விநாடி இடைவெளியில் மேசையில் இருந்த கடைக்காரருக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தனது செல்போன் போன்று எடுத்து சட்டை பையில் வைத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டார்.

    இதுகுறித்து சில நிமிடங்கள் கழித்து தெரிந்து கொண்ட கடை உரிமையாளர் கடையினுள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது 'டிப்-டாப்' நபர் செல்போனை எடுப்பது பதிவாகி இருந்தது.

    ஒரு மணி நேரமாக தனது செல்போன் எண்ணிற்கு மற்றொரு செல்போன் மூலம் கடையின் உரிமையாளர் சந்திரசேகர் போன் செய்த பொழுது முழுமையாக ரிங் சென்ற நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் நகை கடையின் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    • பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.
    • திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் தோட்டைடேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.

    இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் தோடை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் பண் ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இதேபோல நெய்வேலி இந்திரா நகரில் உள்ள நகைக்கடை மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள நகைகளை ஒன்றில் நகை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து கடை மேலாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேலுஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். டி.எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கேவல் தனிப்படை போலீ சார் ஆனந்த், ராஜி, கணேச மூர்த்தி, ஹலீமாபீவி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கைது

    தனி படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடை யில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாக வில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள நகைகடைகளில் பர்தா அணிந்து கொண்டு 10 கிராம் தோடை திருடிச் சென்றது மயிலாடுதுறை மாவட்டம் கொரநாடு மேல ஒத்த சரகு தெரு கவிதா (வயது 50), மயிலாடுதுறை கொர்க்கை மாரியம்மன் கோவில் தெருஷீலா தேவி (37 ) என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வேறு ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து திரு டிய நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர் நகை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பண்ருட்டி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

    • வீடு புகுந்து பணம்-காமிரா திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நித்யா(வயது42). இவர் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், காமிராவை திருடிக்கொ ண்டு தப்பினார். மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரான்மலை பாப்பாபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர் சம்பவத்தன்று அங்குள்ள மங்கைபாகர் ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தெங்கம்புதூர் அருகே உள்ள சாஸ்தான் கோவில் விளை பகுதியை சேர்ந்தவர் சரவண முருகன் (வயது 61), இவர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சரவண முருகன் தற்போது பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சரவண முருகனின் தந்தை தானு இறந்துவிட்டார்.

    இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார். இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார்.

    வீட்டின் பின்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது பேக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் பர்சில் இருந்து ரூ.4,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வீட்டில் இருந்த குத்துவிளக்குகளை திருடி சென்றனர்.

    இதுகுறித்து சரவண முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்டது வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த மன்னன் (வயது 21), ரஞ்சித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வெள்ளாடிச்சி விளை பகுதியில் இருந்த மன்னன், ரஞ்சித்குமார் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

    இதில் மன்னன், ரஞ்சித்குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • மேல கடையநல்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் ரவி வசித்து வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது ரவி திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    திருவண்ணாமலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 36). தற்போது இவர் மேல கடையநல்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யப்பன்(45) என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றுவிட்டார். வீட்டுமுன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதை அறிந்த அய்யப்பன் கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காமிரா க்களை ஆய்வு செய்தபோது ரவி திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • அன்பழகன். இவர் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகிலுள்ள மளிகை கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
    • இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு கீழே கிடந்ததை பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து கடை உரிமையாளர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் விக்கிரவாண்டி பஸ் நிலையம் உள்ளே மளிகை கடையை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டி விட்டுவீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு கீழே கிடந்ததை பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து கடை உரிமையாளர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர். அன்பழகன் கடைக்கு வந்து பார்த்த போது இரும்பு கதவினை கட்டப்பா ரையால் கொண்டு நெம்பி 3 பூட்டை உடைத்து கடைக்குள்ள இருந்து பணம் ரூ. 40 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் ,காத்தமுத்து ஆகியோர் கொள்ளை நடந்த கடைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் விக்கிரவாண்டியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்துணவு ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்;

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி சசிகலா (வயது 37). இவர் தழுதாழை அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். சிவசுப்பிரமணியன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சசிகலா தனது மகளுடன் அ.மேட்டூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது தாயார் சித்ரா வீட்டில் மகளுடன் தங்கியுள்ளார்.

    பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ெபாருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தோடுகள், 2 பவுன் சங்கிலி, வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசில் சசிகலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×