search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம் என்று கூறி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். #MGR #MGRMemorialDay
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். சமாதியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

    ஏழைக்கு இரங்குவதும், எளியோர்க்கு உதவுவதும் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட கடவுள் உள்ளம், கருணையின் ஊற்றாம் எம்.ஜி.ஆரின் உள்ளம் என்று சரித்திரம் சொல்லும். அத்தகைய மகத்தான மாமனிதர், காட்டிய பாதையில் வாழ்ந்து, அ.தி.மு.க.வை காத்திட உறுதி ஏற்போம்.

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

    ஏழை, எளியோரும், தாய்க்குலமும், நாளை உலகை ஆளப்போகும் தமிழ்ச் சந்ததியும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்நாளும் காப்போம், காப்போம்.

    புரட்சித்தலைவி அம்மாவை அடையாளம் காட்டிய எம்.ஜி.ஆர்., திராவிட இயக்க வரலாற்றின் நிகரில்லா மாதரசி புரட்சித்தலைவி அம்மாவை போல, புரட்சித் தலைவரின் இயக்கம் மக்களுக்கான மக்கள் இயக்கமாய் தொடர்ந்து தொண்டாற்றிட, துணை நிற்போம், துணை நிற்போம்.

    மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்-அமைச்சரான சரித்திர சிறப்புக்குரிய எம்.ஜி.ஆரைப் போலவே, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மகத்தான மக்கள் செல்வாக்கால் வெற்றி சிகரத்தில் கழகத்தை வீற்றிருக்க செய்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா.

    கழகத்தின் கண்களாய் திகழும் நம் இருபெரும் தலைவர்களின் சாதனைகளை தொடரும் வகையில், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “எம்.ஜி.ஆருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்றார். அதை ஏற்று தொண்டர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay

    எம்.ஜி.ஆரின் 31-வது நினைவுநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.



    இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். #MGR #MGRMemorialDay

    நள்ளிரவில் தனது காரை சுற்றிவளைத்த கொள்ளையர்களை எம்.ஜி.ஆர். அறிவுரை கூறி திருத்தியது மறக்கமுடியாத அனுபவம் என ஜானகி அம்மாளின் மகன் சுரேந்திரன் நினைவு கூர்ந்துள்ளார். #MGR #MGRMemorialDay
    இன்று (டிசம்பர் 24-ந்தேதி) எம்.ஜி.ஆர். நினைவு தினம். எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் ஒரு தெய்வப்பிறவி.

    வி.என்.ஜானகியின் 13-வது வயதில், அவருக்கு ஒப்பனைக்காரராக இருந்த கன்னடத்தைச் சேர்ந்த கணபதி பட்டுடன் திருமணம் நடந்தது. 1939-ல் அவர்களுக்கு மகனாக நான் பிறந்தேன். எனக்கு சுரேந்திரன் என பெயர் வைத்தனர். என் அம்மாவுக்கும், கணபதி பட்டுக்கும் அம்மாவின் தாய்மாமனான நாராயணன் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துகொண்டு என் தாயாரான வி.என்.ஜானகிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். காரணம் எம்.ஜி.ஆரோடு பழகுவதை அவர்கள் விரும்பவில்லை. அதன் விளைவாக கணவரிடமிருந்து என் அம்மா விவாகரத்து பெற்றார்.

    1950-ல் மருதநாட்டு இளவரசி படத்தில் இருந்து எம்.ஜி.ஆருக்கும் எனது தாயாருக்கும் இடையே நட்பு வளர்ந்தது. அது திருமணத்தில் முடிந்தது. நானும் அம்மாவும் எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் புது வாழ்வை தொடங்கினோம். அப்போது எனக்கு வயது 11. என்னை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்தது எல்லாமே என் தந்தை எம்.ஜி.ஆர்.தான். என் குழந்தைகளை நல்லபடியாக வாழ வைத்ததும் எம்.ஜி.ஆர்.தான். நான் என்னை பெற்ற தந்தை கணபதிபட்டை விவரம் தெரிந்ததிலிருந்து பார்த்ததேயில்லை. எம்.ஜி.ஆரை தந்தையாக ஏற்றுக்கொண்டேன்.

    எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாளுடன் சுரேந்திரன் (பழைய படம்)

    திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழ் மக்கள் ஆதரவைப் பெற காரணமாக இருந்தது. 1977-ல் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரானார். எம்.ஜி.ஆருடனான மலரும் நினைவுகள் மறக்கமுடியாதது.

    கள்ளக்குடி ரெயில் மறியல் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். சிறுவர்களாக இருந்த என்னையும், சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியையும் அவருடன் அழைத்துச்சென்றார். நடிகர் திருப்பதிசாமியும் உடன் வந்தார். எம்.ஜி.ஆருடன் எம்.எஸ்.ஒய். 2248 பிளேமவுத் காரில் சென்றோம். விழுப்புரம் தாண்டி நள்ளிரவிற்குப்பின் 1.30 மணி அளவில் நடுரோட்டில் இருள் சூழ்ந்த வேளையில் ஒரு வெள்ளி கூஜா மினுமினுத்தது. காரை டிரைவர் ராமசாமி ஓட்டி வந்தார். கூஜாவை பார்த்த ராமசாமி எம்.ஜி.ஆரிடம் அதை தெரிவித்து அண்ணே காரை நிறுத்தலாமா எனக் கேட்டார். தலையில் மப்ளர் கட்டி தூங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். திடீரென விழித்து ஏதாவது கார் முந்தி சென்றதா? என்றார். ராமசாமி இரண்டு கார்கள் வேகமாக முந்தி சென்றன என்றதும், உடனே எம்.ஜி.ஆர். காரை நிறுத்தச்சொல்லி அவர் இறங்கி விட்டார். அந்த கூஜாவை எடுத்துவரச் சொன்னார்.

    ராமசாமி அருகில் காரை நிறுத்திவிட்டு கூஜாவை எடுத்து காரில் ஏறும்போது 10 பேர் கொண்டகொள்ளைக் கும்பல் நெற்றி உயர சிலம்ப கம்பை வைத்து சுற்றி வளைத்தனர். “மரியாதையாக காரில் இருக்கும் பொருள்களை எடுத்து வெளியே வைத்துவிடுங்கள். உங்களை விட்டு விடுகிறோம்” என குரல் கொடுத்தனர். அப்போது எம்.ஜி.ஆர். பொருட்களை வெளியே எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்றார். அதற்கு கும்பலில் ஒருவன், ‘ஒருவரும் உயிருடன் போகமுடியாது’ என்று மிரட்டும் தொனியில் கூறினார். இதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அந்த கம்பை எடுங்கள் அண்ணே என ராமசாமியிடம் கேட்டார். ராமசாமி காரில் இருந்த பூண் கட்டிய பிரம்பை எடுத்து எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார். அதை கம்பீரமாக பிடித்துகொண்டே ‘சரி ஒவ்வொருவராக வாரீங்களா அல்லது மொத்தமா வாரீங்களா’ என்றார், எம்.ஜி.ஆர். இதை எதிர்பார்க்காத கொள்ளையர்கள் திகைத்துப்போய் நின்றனர்.

    திடீரென ஒருவர் தீக்குச்சியை கொளுத்தி எம்.ஜி.ஆரின் முகத்தருகில் காட்ட எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டுகொண்டனர். உடனே எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து வாத்தியாரே, எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் தெரியாமல் செய்துவிட்டோம் என்றனர். எம்.ஜி.ஆர். தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு நீங்கள் எல்லாம் என்ன தொழில் செய்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் வேலையே இல்லை. அதனால் இப்படி நடந்து கொண்டோம் என்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். ராமசாமியை அழைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து அனுப்புங்கள் என்றார். பணம் கொடுக்கப்பட்டது. இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார். அவர்கள் எம்.ஜி.ஆரிடம் இனிமேல் தவறே செய்யமாட்டோம் என்று கூறி காரை அனுப்பி வைத்தனர். எங்கள் இருவருக்கும் அப்போதுதான் உயிரே திரும்பியது. இது எம்.ஜி.ஆரின் துணிச்சலுக்கு ஒரு சிறு உதாரணம்.

    லாயிட்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். மாடியில் உள்ள அறையில் தங்கி இருப்பார். அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். அதிகாலையில் அவர் மாடியில் இருந்து கீழே வரும்போது நானும், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் ராமுவும் வராந்தாவில் படுத்து இருப்போம். எம்.ஜி.ஆர். வரும் சத்தம் கேட்டதும் ராமு புத்தகத்தை எடுத்து சத்தமாக படிப்பார். நான் தூங்கிக்கொண்டு இருப்பேன். கீழே வந்ததும் எம்.ஜி.ஆர். கட் ஷூவால் என் இடுப்பில் ஒரு உதை கொடுத்தார். நான் அம்மா என்று அலறினேன். அவர் உன்னைப்போல பையன் ராமு படித்துக்கொண்டு இருக்கிறான். உனக்கு தூக்கமா? என்று கேட்டு, மதியம் நான் சாப்பிட வீட்டுக்கு வரும்போது 1 முதல் 20 வரை வாய்ப்பாடு படித்து என்னிடம் ஒப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். நான் படிக்காமல் விளையாடச் சென்றுவிட்டேன். மதியம் 1 மணிக்கு எம்.ஜி.ஆர். கார் வந்த சத்தம் கேட்டு நான் பாத்ரூமுக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டேன்.

    வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர். மனைவி சதானந்தவதியிடம், ‘சுரேந்திரன் எவிட’ என்று மலையாளத்தில் கேட்டார். அதற்கு அவர் உங்கள் கார் சத்தம் கேட்டதும் சுரேந்தர் பாத்ரூம் சென்று விட்டான் என்று கூறினார். அவன் வந்ததும் மேலே வரச்சொல் என்று கூறிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார்.

    சதானந்தவதி என்னிடம் வந்து எம்.ஜி.ஆர். மாடிக்கு வரச்சொன்னதாக கூறினார். நான் பயந்துகொண்டே மேலே சென்றேன். என்னை பார்த்ததும் அருகில் வரவழைத்து வாய்ப்பாடு ஒப்பிக்க சொன்னார். நான் 8-ம் வாய்ப்பாடு வரை சொன்னேன். அதற்கு மேல் தெரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர். ‘ஏல படிச்சியா இல்லையா’ என்று கேட்டு கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார். பயத்தில் சிறுநீர் கழிந்துவிட்டேன். இதைக் கவனித்த அவர் கீழே சென்று நிக்கரை மாற்றிக்கொண்டு வா என்று கூறினார். அதன்படி வேறு நிக்கர் அணிந்து கொண்டு மேலே சென்றேன்.

    அங்கே எம்.ஜி.ஆர் பெரிய தட்டில் சாதம் வைத்து, அதில் மீன் குழம்பை விட்டு பிசைந்து உருண்டையாக உருட்டி கொண்டு இருந்தார். அருகில் வரும்படி அழைத்தார். பயந்து கொண்டே போனேன். என்னை அருகில் வைத்து, ‘ஆ’ காட்டு என்று கூறி எனக்கு ஊட்டிவிட்டார். பிறகு ‘சுரேந்திரா! நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வருனுமுன்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? ஏன் படிக்க மாட்டேங்கிற. வீணா அடி வாங்குறே’ இனிமேல் நல்லா படிக்கணும். அப்போதுதான் உன் அம்மாவுக்கும் பெருமை. எனக்கும் சந்தோஷம் என்று வாஞ்சையுடன் கூறினார். அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்ட பொன்மனச்செம்மல் அவர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தோட்டத்தில் எங்களுக்கு சிலம்பம், நீச்சல் கற்றுத்தருவார்.

    தான் சினிமாவில் சம்பாதித்த சொத்தில் ஒரு பகுதியை கண் தெரியாத, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு சர்வதேச தரத்தில் தன் தோட்டத்துக்குள்ளேயே ஒரு ஆசிரமம் அமைத்து அவர்களுக்கு தரமான கல்வி, உணவு கொடுத்து அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க செய்தவர் எம்.ஜி.ஆர். #MGR #MGRMemorialDay

    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார்.

    ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

    அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

    "ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன்.

    உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

    இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம்.

    அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்!

    எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

    உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."

    இவ்வாறு லதா கூறினார்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

    இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

    "உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

    ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார்.

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

    இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு.

    இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

    இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆருடன் லதா, மஞ்சுளா, சந்திரகலா ஆகியோர் ஜப்பான் பயணம் ஆனார்கள்.

    அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

    "நடனம், நடிப்பு என்று 4 மாத கால பயிற்சிக்குப் பிறகு ஜப்பானுக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு எம்.ஜி.ஆர். எங்களை அழைத்துச் செல்வதாக இருந்தார்.

    பயணத்துக்கு சில நாட்கள் இருந்த நிலையில், திடீரென ஒரு நாள் நடிகர் அசோகனின் படத்தில் நான் நடிக்க வேண்டியிருக்கும் என்றார்கள்.

    எனக்கு குழப்பம். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தை தொடங்குவார்கள் என்று அதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். அதனால், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படம் பற்றி பேசுவார்கள் என்று நினைத்த நேரத்தில், நடிகர் அசோகன் "நேற்று இன்று நாளை" என்றொரு படம் தயாரிக்கிறார். அதில் எம்.ஜி.ஆருடன் நானும் மஞ்சுளாவும் கதாநாயகிகளாக நடிக்கிறோம் என்றார்கள்.

    இதுபற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்த ஒருநாளில் திடீரென "நாளையே படப்பிடிப்பு" என்றார்கள். அதுவும் பாடல் காட்சி படப்பிடிப்பு என்றார்கள்.

    மறுநாள் கார் வந்து அழைத்துப் போனது. சத்யா ஸ்டூடியோவில் இறங்கியபோது அங்கே பிரமாண்ட செட் போட்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். மேக்கப்பில் தயாராக இருந்தார். டைரக்டர் ப.நீலகண்டன் என்னைப் பார்த்ததும், "இப்போது ஒரு பாடல் காட்சி எடுக்கப்போகிறோம். நீயும் எம்.ஜி.ஆரும் பாடி நடிக்கிறீர்கள்" என்றார்.

    ஏற்கனவே, நடனப்பயிற்சி இருந்ததால், டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த 'மூவ்மெண்ட்'களை சுலபத்தில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'ரோமியோ ஜுலியட்' என்ற அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. 'ரோமியோ ஜுலியட்' என்ற வசன வரிகளைத் தொடர்ந்து 'இன்னொரு வானம் இன்னொரு நிலவு' என அந்தப் பாடல் தொடங்கும்.

    குறித்த நேரத்தில் பாடல் காட்சி முடிந்ததும், ஜப்பான் போகும் தேதி உறுதியாகிவிட்ட தகவலை தெரிவித்தார்கள்.

    நாளைக்கு புறப்பட இருந்த நேரத்தில் ஒருநாள் முன்னதாக அம்மாவையும் என்னையும் கம்பெனிக்கு வரச்சொன்னார் எம்.ஜிஆர். நாங்கள் போய் அவரைச் சந்தித்தபோது, அம்மாவிடம், "உங்கள் மகள் என் படத்தில் நடிப்பது தொடர்பாக 5 வருடம் காண்டிராக்ட் போட்டுக்கொள்வோம்" என்றார்.

    அம்மா இந்த மாதிரியான விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது விழிகளில் தெரிந்தது. சட்டென அதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நான் ஒரு புது ஹீரோயினை என் செலவில் கஷ்டப்பட்டு உருவாக்குவேன். ஒரு படத்தில் நடித்ததும் கிடைத்த பெயருக்கு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க அழைப்பு வரும். நடிகைகளும் உடனே நடிக்கப் போய்விடுகிறார்கள். கடைசியில் பெரிய ஹீரோயின் ஆக்கிய எனக்கே கால்ஷீட் கிடைக்காது. இது எனக்கு தேவையா?"

    இப்படிச் சொன்னவர், மிகவும் கனிந்த குரலில், "ஒருவரின் வளர்ச்சி என்பது என் மூலமாகவே இருந்தாலும், அவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு நான் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன். இந்த காண்டிராக்டு என்பது, ஒரு பாதுகாப்புக்காகத்தான். என் படங்கள் தவிர மற்ற படங்களில் வாய்ப்பு வந்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு நடியுங்கள். நான் தடுக்கப் போவதில்லை" என்றார்.

    அதன் பிறகு சந்தோஷமாக அந்த காண்டிராக்ட்டில் கையெழுத்து போட்டார், அம்மா.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நான், மஞ்சுளா, சந்திரகலா என 3 நாயகிகள். மூவருமே ஒன்றாகத்தான் ஜப்பானுக்கு பயணம் ஆனோம்.

    பார்த்த மாத்திரத்திலேயே மஞ்சுளா படபடவென பேசி என்னை கவர்ந்து விட்டார். சந்திரகலா அமைதியாக தெரிந்தார். ஓரளவு பழகிய பிறகு தொடர்ந்து நட்பு பாராட்டினார். விமானப் பயணத்துக்கு முன்பே நாங்கள் மூவரும் நல்ல தோழிகளாகி விட்டோம்.

    விமானப் பயணத்தின்போது என்னை வழியனுப்ப வந்த அம்மாவை தன் அருகில் அழைத்த எம்.ஜி.ஆர், "கவலைப்படாதீங்கம்மா. உங்க பொண்ணை எப்படி கூட்டிட்டுப் போறேனோ அப்படியே திரும்ப உங்களிடம் ஒப்படைப்பேன்" என்றார். அம்மாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன. எம்.ஜி.ஆருடன் அவரது மனைவி ஜானகியம்மாவும் வந்திருந்தார். "உங்க குழந்தையை நான் பார்த்துக்கறேன்" என்று அவரும் அம்மாவிடம் சொன்னார்.

    வெளிநாட்டில் நாங்கள் போனது படப்பிடிப்புக்காக என்பதை மறந்து விட்டோம். பள்ளி நாட்களில், கல்லூரிக் காலத்தில் 'சுற்றுலா' வருபவர்கள் எப்படி ஜாலியாக அதைக் கொண்டாடுவார்களோ அந்த நிலையில்தான் நான், மஞ்சுளா, சந்திரகலா மூவருமே இருந்தோம்.படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சதா ஜாலிதான். மஞ்சுளா எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பார். நான் அமைதி என்றால் அமைதி... அப்படி ஓர் அமைதியாக இருப்பேன்.

    சந்திரகலா எங்கள் இருவருக்கும் அப்பாற்பட்டு 'மெச்சூர்டாக' இருப்பார்.படப்பிடிப்பினூடே ஒருமுறை எங்கள் இருவரையும் பார்த்த எம்.ஜி.ஆர், "ஒண்ணு (நான்) பேசவே மாட்டேங்குது. ஒண்ணு (மஞ்சுளா) பேச்சை நிறுத்த மாட்டேங்குது" என்று கிண்டலாக சொல்லிவிட்டுப் போனார். அதற்குப்பிறகு நான் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    ஜெயலலிதா இல்லாததால் திரைத்துறையினருக்கு குளிர்விட்டு போய்விட்டதாகவும், ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar #Sarkar
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ‘சர்கார்’படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் இல்லை என்று தினகரன் கூறி இருக்கிறாரே?

    பதில்:- திரைப்படம் எடுப்பவர்கள், நடிகர்- நடிகைகளுக்கு இப்போது ஒரு பே‌ஷனாகி விட்டது. அம்மா இல்லாததால் அவர்களுக்கு குளிர்விட்டு போய் விட்டது. அம்மா இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா? என்று யோசியுங்கள்.

    இவர்கள் எல்லாம் அம்மா இருக்கும்போதே எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். திரைப்படத்தில் முதல்-அமைச்சர் கேரக்டர் எடுத்து நல்லது செய்ய வேண்டும் என்பது போல பல ஆசைகள் இருக்கும். அது தவறு இல்லை. ஆனால் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் தீர்மானம் செய்வதுதான்.

    அவரவர் கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த கருத்துக்களை பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய வி‌ஷயம்.

    ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஒரு திரைப்படம் மக்களுக்கு நல்ல வி‌ஷயங்களை சொல்லுகின்ற சாதனமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் எந்த காலத்திலும் விமர்சனம் எழுந்ததில்லை.

    இந்த உலகம் உள்ள வரை எல்லோராலும் போற்றப்படக் கூடிய ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். இவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். போல வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு காலத்திலும் முடியாது.


    ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவாரோ என்பது போல இவர்கள் அழுது புரண்டாலும், தலை கீழாக நின்றாலும் இவர்களுக்கு எம்.ஜி.ஆர். போன்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுக்க மாட்டார்கள். உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அதற்காக மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். அப்படி செய்யும் பட்சத்தில் இந்த திரைப்பட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை இருக்கும்.

    கேள்வி:- கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரா இல்லையா?

    பதில்:- எங்களை பொறுத்தவரை கதைகளை பலர் எழுதி இருக்கிறார்கள். அதை குறை சொல்லவில்லை. ஆனால் எதற்காக தேவையில்லாமல் அந்த பெயரை வைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கேள்வி. எவ்வளவோ பெயர் இருக்கிறதே. அப்படி இருக்கும் போது ஏன் அந்த பெயரை வைக்க வேண்டும். காழ்ப்புணர்ச்சியுடன் இழிவுபடுத்தும் செயலாகவே அதை கருத முடிகிறது. எனவே மனதை புண்படுத்தும் செயலை எந்த நிலையிலும் ஏற்க முடியாது.

    கேள்வி:- பண மதிப்பிழப்பு நடந்து இன்றுடன் 2 வருடம் முடிந்துள்ளது. என்ன மாற்றம் வந்துள்ளது என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- சிறந்த தீர்ப்பு வழங்குபவர்கள் மக்கள்தான். சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விடை 2019-ம் ஆண்டு தெரியும்.

    ப:- அது அவர்களின் கனவாக இருக்கலாம். ஆனால் அது கானல்நீர்தான். அது நடக்காத ஒன்று.

    கே:- தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நாளை சசிகலாவை சந்திக்கப்போவதாக தகவல் வந்துள்ளதே?

    ப:- அவர்கள் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முடிந்தால் உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் சந்திக்கட்டும்.

    கே:- சந்திரபாபுநாயுடு எதிர்க்கட்சிகளை திரட்டி பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முயன்று வருகிறாரே? அதை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க. தயாராக இருக்கிறதா?

    ப:- 2016-ம் ஆண்டு கூட வலுவான கூட்டணிதான் வைத்தார்கள். ஆனால் என்ன ஆச்சு? ரிசல்ட் ஜீரோ. அதேபோல் 2019-லும், 2021-லும் ஜீரோ தான் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #Sarkar
    எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajinikanth #RajiniPolitics
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- வளர்ந்துவரும் காலங்களில் பிற நடிகர்களின் கட் அவுட்களை பார்த்து உங்களுக்கும் கட்-அவுட் வைக்கும் கனவுகள் வந்ததா?

    பதில்:- ஆமாம். ஆனால் அவை நிஜமாக மாறும்போது பெரிய மகிழ்ச்சி இல்லை. எப்போதுமே கனவாக இருப்பது நிஜமாகும் போது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். கல்யாணத்தையும் சேர்த்து. எல்லாமே மாயை தான்.

    கே:- 2.0 படத்தில் ரோபோவில் ஸ்டைல் கொண்டு வந்தது எப்படி?

    ப:- எல்லா பெருமையும் ‌ஷங்கரையே சேரும். நல்லவேளை என்னோட நல்ல நேரம் அவர் நடிப்பு பக்கம் வரவில்லை. அவரது கடின உழைப்பு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை. ஸ்டைல் பண்ணவேண்டும் என்று நான் இப்போது எதையும் செய்வது கிடையாது.

    கே:- மக்களிடம் உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்?

    ப:- (மேலே கையை காட்டி) ஆண்டவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

    கே:- நீங்கள் சாதாரண நபர் இல்லை என்பதை உணர்ந்தது எப்போது?

    ப:- திடீர் என்று பணம், புகழும் வந்தது. அப்போது நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. பின்னர்தான் எல்லாமே நேரம் என்று உணர முடிந்தது. 60களில் நடிக்க வந்திருந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்பு நம்மால் நிலைத்து நின்று இருக்க முடியாது. இந்த உண்மை புரிந்தபிறகு இயல்பாகி விட்டேன்.

    கே:- எந்த கதாநாயகனுக்காகவாவது முதல் நாள் முதல் காட்சிக்கு சிரமப்பட்டு பார்த்தது உண்டா?

    ப:- பெங்களூருவில் எம்ஜிஆர் படம் ஒன்றுக்கு சவால் விட்டு அப்படி காலை 4.30 மணிக்கு சென்று டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கிறேன்.

    கே:- எந்த வி‌ஷயம் உங்களை மிகவும் பாதிக்கும்?

    ப:- குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது மனதை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுயநலத்துக்காக பயன்படுத்துகிறவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும்.


    கே:- எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப வருகிறீர்களா?

    ப:- இல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது.

    கே:- கமலை பாராட்டிக் கொண்டே இருப்பது எப்படி?

    ப :- கமல் எனக்கு முன்பே பெரிய நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு உள்பட அனைத்து துறைகளிலுமே அவரை பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் கமலுடன் ஒரே காரில் பயணித்ததையே பெருமையாக நினைத்து இருக்கிறேன். எப்போதுமே அவரை அந்த இடத்தில் தான் வைத்து இருக்கிறேன். அவரை முந்தியதாக நினைக்கவில்லை.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Rajinikanth #RajiniPolitics

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை வைக்கப்படுவதால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் புதிய சிலை வைக்க முடிவெடுத்துள்ளனர். #ADMK #Jayalalithaa #MGR
    சென்னை:

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 7 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை கடந்த 24.2.18 அன்று வைக்கப்பட்டது.

    இந்த சிலையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த சிலை ஜெயலலிதா முகசாயலில் இல்லை என்று பலர் குறை கூறினர். சிலையை வடிவமைத்த ஆந்திராவை சேர்ந்த சிற்பி பிரசாத் கூறுகையில் தனக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு புதிய சிலை அமைக்க முடிவு செய்து ஆந்திராவை சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலையை வடிவமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் ஜெயலிதாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து வழங்கி உள்ளார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா சிலை நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

    இந்த சிலை இப்போது ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு புதிய சிலை வைக்கப்படுவதால் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆருக்கும் புதிய சிலை வைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர். சிலையும் ஆந்திராவில் தயாராகி வருகிறது.

    இந்த சிலையும் இன்னும் ஓரிரு நாளில் தலைமை கழகத்துக்கு வந்து விடும் என தெரிகிறது.

    எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இருவரின் சிலைகளையும் புதிதாக நிறுவி ஒரே நாளில் திறப்பு விழா நடத்த தலைமை கழகம் முடிவெடுத்துள்ளது. அனேகமாக 28-ந்தேதி சிலை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். #ADMK #Jayalalithaa #MGR
    அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம் என்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் சைதை துரைசாமி பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
    திருச்சி:

    திருச்சி, திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

    இதில் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். குறித்த புத்தகத்தை வெளியிட்டும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். பொதுமக்களுக்காகவே கடைசி வரை உழைத்த மனிதர். சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காகவே பாடுபட்டவர். திராவிட இயக்கத்தை அடித்தட்டு மக்கள் வரையில் கொண்டு சேர்த்ததுடன் மட்டுமின்றி தேர்தலில் வெற்றிப்பெற்று தி.மு.க. ஆட்சியமைக்க இரவு, பகல் பாராமல் கடந்த 1971-ம் ஆண்டு வரை கடுமையாக உழைத்தவர்.

    கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை சுயநலத்துக்காக சூழ்ச்சியின் மூலம் கட்சியில் இருந்து வெளியேற்றியவர் கருணாநிதி. இவரின் வழி வந்து குறுக்கு வழியில் தற்போது தி.மு.க. தலைவராக இருப்பவர் ஸ்டாலின்.

    இவர் அ.தி.மு.க. துரோகத்தின் தொடக்கம் என்று கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளார். 1965-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க. தலைவர்களின் கடைசி பட்டியலில் இருந்தவர் கருணாநிதி. இவர் அண்ணாதுரையுடன் நெருக்கமாக இருந்த அறிவு ஜீவிகளை கட்சியில் இருந்து தனது சுய நலத்துக்காக வெளியேற்றியவர்.

    கட்சியை விட்டு எம்.ஜி.ஆரை வெளியேற்றிய கருணாநிதிதான் துரோகத்தின் தொடக்கம். அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம். கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பின்னர் தமிழகத்தில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. மக்களிடம் புரட்சி வெடித்தது. இதன்மூலம் உருவான கட்சி தான் அ.தி.மு.க. ஆகும்.

    கருணாநிதி செய்த துரோகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டுதான் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரையில் தி.மு.க.வை தோல்வியடைய செய்தனர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கிய போது கருணாநிதியின் வாரிசாக மு.க.முத்து மட்டுமே இருந்தார். பின்னர் தனது சூழ்ச்சியால் தலைமை பதவிக்கு வந்திருப்பவர் ஸ்டாலின். இவர் அ.தி.மு.க. குறித்து பேச தகுதியில்லாதவர். தி.மு.க.வை பொறுத்த வரையில் மூத்த தலைவர்களுக்கு தான் தலைவர் பதவி கொடுக்கவேண்டும்.

    அன்பழகன் இருக்கும் போதே, ஸ்டாலின் தான் தலைவர் என்று குடும்ப அரசியலுக்காக சுய நலத்துடன் கடைசி வரையில் இருந்தவர் தான் கருணாநிதி. இவர்கள் மக்களுக்காகவே உழைத்த எம்.ஜி.ஆர்.மீது தற்போது சேற்றை வாரி இறைக்கின்றனர். எம்.ஜி.ஆர்.மீது குறை சொல்லும் யாரையும் பொது மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா தலைமை கழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி முதல்- அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் தலைமை கழகத்திற்கு வந்திருந்தனர்.

    தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து வணங்கினார்கள்.


    பின்னர் ஜெயலலிதாவின் சிலையின் காலை தொட்டு கும்பிட்டனர். அதன் பிறகு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள்.

    அதைத் தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்ட போது மரணம் அடைந்த 7 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் குடும்ப நல நிதியையும், சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு தலா ரூ.50 வீதம் ஆயிரம் ரூ.1 லட்சம் நிதியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்கள்.

    இதே போல் சாலை விபத்தில் லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு நிதிஉதவியாக ரூ.2லட்சத்து 90 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனிசாமியிடம் வழங்கினார்கள்.

    ஜெயலலிதாவால் கல்வி நிதி உதவி பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவ-மாணவியர் 2 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் நிதியை வழங்கினர்.

    ரத்த தானம் செய்வதற்காக அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் உருவாக்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே என்ற செயலியும் தொடங்கி வைக்கப்பட்டது. நலிந்த கட்சி தொண்டர்களுக்கு நிதியும் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திருத்தணி ஹரி, பொன்னையன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வளர்மதி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், சரோஜா, பாண்டியராஜன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சண்முகநாதன், விருகை ரவி, ஜே.சி.டி.பிரபாகரன், வாலாஜாபாத் கணேசன், ராஜேஷ், தி.நகர் சத்யா, மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் நீதிய மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    நாமக்கல்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    நாமக்கல் என்பது இந்தியாவின் பேருந்து நிலையம். இங்கு பெட்ரோல், டீசல் விலை குறித்து சில உண்மைகளை மக்களிடம் தெரிவித்தாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 44 டாலராக இருந்த போது பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

    கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இப்போது 100 டாலரை தாண்டி நிற்கிறது. பெட்ரோல் விலை ரூ.87 வரை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.4.5 லட்சம் கோடி என்பது எனக்கு வந்த தகவல். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.4.5 லட்சம் கோடி சம்பாதித்து வருகின்றனர்.

    இது மக்களுக்கு சென்றடைய வேண்டும், அதை நீங்கள் கேட்க வேண்டும். மக்களுக்கான புரட்சி தொடங்கிவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்கான அடையாளங்கள் இங்கே தெரிகிறது. அதற்கான தகவல்களை தர வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாகிறது.

    நான் சொல்லும் புரட்சி கத்தியின்றி, ரத்தமின்றி தான். நம் போராட்டங்கள் எல்லாம் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக் கொண்டிக்கிறது. இன்றும், என்றும் அப்படித்தான் இருக்கும்.

    என்னை முழு நேர அரசியல்வாதியா என சந்தேகப்பட்டு கேட்கின்றனர். நான் சென்ற பல இடங்களுக்கு, அரியணையில் ஏறி அமர்ந்திருக்கும் பலர் செல்வதில்லை என்பது தான் உண்மை. நான் தொடந்து திரைப்படங்களில் நடிப்பதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ என தலைப்பு போட்டு எத்தனை திரைப்படங்கள் வந்துள்ளன.

    அவரை விடவும் என்னை கேள்வி கேட்பவர்கள் முழு நேர அரசியல் வாதியா? எனக்கும் வைத்துக் கொண்டு, மக்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காகதான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

    முழு நேரமும் அரசியல் செய்து கொண்டு வேறு போக்கிடம் இல்லை என்றால், அவன் மக்கள் பணத்தில் அல்லவா கைவைப்பான். அரசியல்வாதி முழு நேரம் மக்களோடு தான் இருப்பான் என எதிர்பார்க்க கூடாது. அரசியல்வாதிகளுக்கும் தனியாக தொழில் இருக்க வேண்டும். திரைப்படத்தொழில் இருந்த என்னுடைய நேர்மை, அரசியலில் தொடரும்.

    மேடைப் பேச்சு அலங்காரத்தில் உண்மையை மறைக்க முடியாது. அவர்களை விட தெளிவாக பேசி விட முடியும் என்று நம்பவில்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களை விட கண்டிப்பாக என்னால் பல மடங்கு நேர்மையாக இருக்க முடியும். அதற்கு ஏதுவாக நீங்களும் நேர்மையாக இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாக இருந்தால் தான் நேர்மையான தமிழகம் உருவாகும்.

    பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடாதீர்கள். இதனால் அரசிடமிருந்து மக்களுக்கு சேர வேண்டியவை சென்று சேருவதில்லை. ஓட்டை பணத்துக்கு விற்கும் நிலை மாறினால், மக்களுக்கான தேவைகளை உரிமையோடு கேட்டுப்பெற முடியும்.

    கிராம சபை என்பது, சட்டமன்றம், பாராளுமன்றங்களில் எடுக்கும் முடிவு அளவிற்கு இணையான பலம் கொண்டது. என்னால் இயன்றவரை நான் என் கடமைகளை செய்கிறேன். உங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் செய்ய வேண்டும். படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்துவிட்டது. நீங்கள் உங்கள் கடமையை செய்தால், என் கடைமையை நான் ஆற்றுவது மிக, மிக எளிதாகும். நான் எதிர் பார்க்கும் நாளை நமதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருச்செங்கோடு பழைய பஸ்நிலையத்தில் அவர் பேசும்போது, இந்த ஊரில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலநிலை உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இந்த நிலை மாற மக்கள் நீதிமய்யம் பாடுபடும். தமிழகத்தில் நேர்மையை மதிக்கும் காலம் நெருங்கி வருகிறது, என்றார்.

    ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    எனக்கு ராசிபுரம் புதிது அல்ல. நற்பணி மன்றத்தினர், தொண்டர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். 3 தலைமுறை தொண்டர்கள் என இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடும்பத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததான முகாமை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். என்னுடன் 17 வயதில் நற்பணிகளை ஆரம்பித்தவர்கள், இப்போது அதே உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.

    ராசிபுரத்தில் 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துகிறோம் என்று கூறி ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாக காணப்படுகிறது. இதுவே அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி இருக்க வேண்டும்.

    தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூட பார்க்க முடிகிறது. நான் போகும் இடமெல்லாம், வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று பொதுமக்கள் கோபத்திலும், பொறுமையுடன் இருக்கிறார்கள். அதற்கான காலம் வந்துவிட்டது. குருசாமிபாளையம், அத்தனூர் பகுதியில் நெசவு தொழில் முடங்கி கிடப்பதாக எங்களுக்கு சேதி வந்து கொண்டு இருக்கிறது. அதை சரி செய்யும் காலம் விரைவில் வரும்.

    கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து போராட்ட களத்தில் குதிக்கும். அந்த போராட்டம் அமைதியாகவும், நியாயமாகவும் இருக்கும். புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி அன்று 47-வது ஆண்டு தொடங்குவதை அடுத்து அன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) அன்று 47-வது ஆண்டு தொடங்குகிறது.

    அன்று காலை 10 மணி அளவில், கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

    கழகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்படும்.

    கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் வழங்க உள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    ×