search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"

    அண்ணா, எம்.ஜி.ஆருக்குப்பின் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக ரஜினிகாந்த் இருக்கிறார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
    சென்னை:

    புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.

    புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றியும், கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

    அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கை கண்டியில் அவருக்கு நினைவகம் மற்றும் சிலை அமைக்க கோரி அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் எம்.ஜி.ஆர். பேரன் வலியுறுத்தினார்.
    கொழும்பு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கையின் கண்டியில் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, கல்வி மந்திரி வேலுப்பிள்ளை ராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதல்-மந்திரி சரத் ஏகநாயகே, கண்டி எம்.பி. வேலுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் நடிகர்கள் பாண்டியராஜன், ரமேஷ் கன்னா, நடிகை மதுமிதா கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் உள்ள அவரது டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் சந்தித்தார்.


    அப்போது கண்டியில் எம்.ஜி.ஆர். நினைவகம் மற்றும் திருவுருவசிலை அமைக்க வேண்டும். இதனால் 2 நாடுகளுக்கு இடையே அதிக நல்லுறவு வளரும்.

    மேலும் இங்கு லட்சக்கணக்கில் தமிழக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கண்டி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு புனித தலமாக மாறும் என்றார்.

    அதை உன்னிப்பாக கேட்ட விக்ரமசிங்கே, திரையுலகிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். மேலும் குமாரின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

    பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எம்.ஜி.ஆர். உருவம் பதித்த பட்டு சால்வையை குமார் அணிவித்தார்.

    இச்சம்பவத்தின்போது அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    பிரபல இயக்குனர் பி.வாசு, எம்.ஜி.ஆரை வைத்து அதிக பொருட் செலவில் தயாராகும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். #MGR #PVasu
    எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு அனிமே‌ஷன் படமாக ஒரு படமும் உருவாகி வருகிறது. என் பேஸ் என்ற அதிநவீன தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

    இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி விமலாநாதன் இருவரும் படம் பற்றி கூறும்போது, ‘இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. 

    அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பதால் இத்திரைபடத்திற்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார். இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர். குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது’ என்றனர்.
    திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றும் அப்படி கனவு காண்பவர்களுக்கு தன்னுடைய அனுதாபங்களை தெரிவிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #NajilSampath
    திருவாரூர்:

    திருவாரூரில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.டி.வி.தினகரன் அணியில் நான் இணைய போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். அழகிரி தி.மு.க.வின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே கட்சியில் அழகிரியை இணைத்தால் தி.மு.க. வலுப்பெறும் அந்த முடிவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.

    தமிழகத்தில் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் புதைந்து கிடக்கிறது. இதனை தடுத்தாக வேண்டும் என்பதை விட இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    விஷால் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. திரையுலகை சேர்ந்தவர்கள், தமிழக அரசியலில் காலூன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் என்றார்.

    நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடம் இல்லை என்றார். #NajilSampath
    சத்துணவு திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். என்று நூல் வெளியீட்டு விழாவில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.
    சென்னை:

    வண்டலூர் தலைநகர் தமிழ் சங்கத்தில் நடந்த ஐ.ஆறுமுகம் எழுதிய ‘திருமுறை அமிழ்தம்’ நூலை வெளியீட்டு திரைப்பட இயக்குனரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் பேசியதாவது:-

    கடலானது கதிரவனின் வெப்பம் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டு தான் பொங்கும். அது போல் கடலால் சுற்றி வளைக்கப்பட்ட பரந்த உலகில் வாழும் மக்கள் இன்சொற்களுக்கன்றி சுடும் சொற்களைக் கேட்டு மகிழமாட்டார்கள்.

    பசி நினைத்தால் மனிதன் ஒருவனை மிருக மாக்க முடியும். ஒரு மிருகத்தைத் தாலாட்டித் தூங்க வைக்கவும் முடியும். பசிக்காகப் பள்ளிக்கு வந்தவர்கள் பின்பு பதவிகளால் இளைப்பாற் வைத்து மகத்தான மாற்றத்தை சாமானியர்களிடம் ஏற்படுத்தியது சத்துணவுத் திட்டம். இந்த திட்டத்தைப் பிரசவித்தவர் காமராஜர், சீராட்டி வளர்த்தவர் எம்.ஜி.ஆர். இந்த மகத்தான மனிதர்களின் கருணையால் தான் அரை நூற்றாண்டுத்தமிழர்கள் ரத்த சோகையை வென்று சத்துணவில் வாகை சூடினார்கள்.

    தமிழ் உரை நடையின் பிரசவ வடிவத்தை சிலப்பதிகாரத்திலும், கவிதை வடிவின் நீரோட்டத்தை கம்பராமயாணத்திலும் காணலாம். மொட்டாக இருந்த திருக்குறளை மலரவைத்து, மனம் பறப்ப வைத்தது பரிமேலழகரின் உரைநடையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஒன்றை சொல்கிறேன்.

    மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நான் (தம்பித்துரை) ஆகிய 3 பேரும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதை இல்லையென யாராவது சொல்ல முடியுமா? தமிழக அரசின் சார்பில் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ? அது எல்லாம் கருணாநிதிக்கு செய்யப்பட்டது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? எனவே பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. புதைக்க இடம் கொடுக்காமலா? மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


    அண்ணா, எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்ட சிக்கல்கள் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்தார்கள். அதற்கு மேல் தமிழக அரசும் ஆட்சேபனை செய்யவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்.

    கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை கட்சியில் இருந்து தி.மு.க.வினர் நீக்கியதால் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் ரஜினி பேசியிருப்பதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசியிருப்பாரா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். #MinisterJeyakumar #Rajinikanth
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.

    இந்நிலையில்  அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

    ரஜினிக்கு தமிழக அரசியல் மற்றும் வரலாறு தெரியாது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசியது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் வரவில்லை.



    எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? அப்போது பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு இப்போது பேசுவது கோழைத்தனமானது. மறைந்த தலைவரின் இறப்பை சாதகமாக்கிக்கொள்ள ரஜினி நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJeyakumar #Rajinikanth
    மதுரையில் இன்று காலமான சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் களப்பணியாற்றியவர் ஆவார். #ADMK #AKBose #MLABose #RIP
    சென்னை:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69) மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    மதுரையில் ஜீவா நகரில் வசித்து வந்த ஏ.கே. போஸ் டிராவல்ஸ் அதிபர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தாலும் பரபரப்பான அரசியல்வாதியில்லை என்பதால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாது.

    ஏ.கே. போஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை பெயர் கருப்பத்தேவர். இவரது மனைவி பெயர் பாக்யலட்சுமி.

    டிராவல்ஸ் அதிபரான போஸ் கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சித்தலைவி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.
     
    2011ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறை எம்.எல்.ஏவானார். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார், கூடவே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடவும் விரும்பினார். ஆனால் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை.



    இந்த நிலையில் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏ.கே.போஸ். எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #AKBose #MLABose #RIP 
    கர்ணனை பின்பற்றி எம்.ஜி.ஆர். கொடை வள்ளலாக வாழ்ந்தவர் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
    சென்னை:

    உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. மாநாட்டு கொடியை பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஸீனா (ஜேப்பியார் மகள்), முருக பத்மநாபன், எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா, முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம் உள்ளிட்டோரும் குத்துவிளக்கேற்றினர்.

    அதைத்தொடர்ந்து பேச்சுப்போட்டி, எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. கவிஞர்கள் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இசையமுது, பூங்குழலி, அசோக், சுப்பிரமணி, ரவிபாரதி மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். ‘மேயர் சைதை துரைசாமியின் 5 ஆண்டு கால பணிகள்’ என்னும் எஸ்.கே.முருகன் எழுதிய ஆய்வு நூலையும், சைதை துரைசாமி தயாரித்த ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற நூலையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இதனை முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து எம்.ஜி.ஆர். உடன் பணியாற்றியவர்கள், உதவியாளர்கள், உறவினர்கள் என அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய முகவரி ரமேஷ், காமாட்சி சுப்பிரமணியம், பாலம் கல்யாணசுந்தரம், லீலாவதி (எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கியவர்), டாக்டர் ராஜாமணி, பழனிசாமி, எம்.கே.ஆர்.ராஜா, டாக்டர் சமரசம், ப.மோகன், மகாலிங்கம், துரை கர்ணா, எம்.பி.நிர்மல், துக்ளக் ரமேஷ், ஜே.பிரபாகரன், நெற்றிக்கண் மணி, மேகலா சித்திரைவேல், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி, சங்கரசுப்பு, போஸ், நடிகர்கள் விஜயகுமார், ராஜேஷ், பாக்யராஜ் ஆகியோர் கவர்னரால் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தூண், கவர்னரால் திறக்கப்பட்டது.

    பின்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார். பல்வேறு புதிய மற்றும் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். இதுபோன்ற நிர்வாக சாதனைகளால் சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரை இன்றும் நேசித்து வருகின்றனர்.

    எம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரையிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலம் பள்ளி கல்வித்துறையில் சாதனை படைக்கும் சிறந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகமும் இணைந்திருக்கிறது. உயர்கல்வியில் அவர் கொண்டு வந்த கொள்கைரீதியான மாற்றம் காரணமாக 2 ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன.

    துன்பப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய அவருடைய கவலை மிகவும் நேர்மையான ஒன்றாக இருந்தது. கர்ணனை பின்பற்றி பெருந்தன்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றால் ஒரு மாபெரும் கொடை வள்ளலாகவே எம்.ஜி.ஆர். வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர். அளித்த உதவியால் பலர் வக்கீல்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளாக உருவெடுத்திருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். படங்களில் இல்லாதவர்கள் இல்லாத நிலையை அடையவேண்டும் என்பதையே எடுத்துக்கூறின. நீதி பாட்டுகள் மூலம் அரசியல் தகவல்களை தெரிவித்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அரும்பாடு பட்டார். உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

    மாநாட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார், தொப்பி, கண்ணாடி, கைக்கெடிகாரம் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.

    எம்.ஜி.ஆர்., மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் வாழ்க்கை முழுவதும் சேவையாக செய்து, முன் மாதிரி தலைவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை வருங்கால தலைமுறை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கவர்னர் தெரிவித்தார்.

    விழாவில் ஐசரி கணேஷ் பேசும்போது, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் இருக்கை அமைக்கப்படும். கவர்னர் கையால் அந்த இருக்கை தொடங்கி வைக்கப்படும் என்றார்.

    எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியில் அவர் பயன்படுத்திய கார், தொப்பி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் சங்கர் கணேசின் இசை நிகழ்ச்சி, திரைப்பட சண்டை பயிற்சி நிபுணர் ஜாக்குவார் தங்கம் குழுவினரின் வீர விளையாட்டு சாகசங்களும் நடந்தது.

    மாநாட்டில் இலங்கை கல்வித்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், எம்.ஜி.ஆரின் உடை அலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, நடிகை லதா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

    இங்கு கூடியுள்ளவர்கள் எம்.ஜி.ஆரால் பயன்பெற்றவர்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பயன்பட்டவர்கள். இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகும் கூட ஒரு மனிதனின் பெயர் மங்காமல் இருக்கும் பாக்கியம் யாருக்கும் கிடைத்ததில்லை.

    3-ம் வகுப்பை தாண்டாத மனிதர், தமிழுக்கு தமிழகத்தில் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு உயர்ந்தார். இன்றைக்கு அமெரிக்கா வரைக்கும் பொறியியல் படிப்பில் நம் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள் என்றால், அது எம்.ஜி.ஆர். போட்டுக்கொடுத்த கல்வித்திட்டத்தால் தான்.

    எம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன். அவர் தனது சிறிய வயதில் சோற்றுக்கு கஷ்டப்பட்டவர். அதனால் தன்னை தேடி வரும் அனைவரையும் ‘சாப்பிட்டீங்களா?’, என்று கேட்பார். எம்.ஜி.ஆரை பற்றி பாட்டெழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எழுதியது, அவருக்கான இரங்கல் பாட்டு மட்டுமே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் மாலையில் கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

    சைதை துரைசாமி, ஏசி சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோர் ஆடியோவை வெளியிட நடிகர்கள் பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சைதை துரைசாமி முன்மொழிந்து வாசித்தார்.

    தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    * மும்பை ரெயில் நிலையத்துக்கு ‘சத்ரபதி சிவாஜி’ பெயர் சூட்டியது போன்று, எம்.ஜி.ஆரின் பெயரை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மத்திய அரசு சூட்ட வேண்டும்.

    * வருகிற ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.

    * எம்.ஜி.ஆரை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், அவரை பற்றிய அனைத்து ஆவணங்களையும் முழுமையாக திரட்டி காலப்பெட்டகமாக பாதுகாத்திட வேண்டும்.

    * எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ந் தேதியை மனிதநேய நாளாக அறிவித்து அரசு ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டது. எம்.ஜி.ஆரை போல யாராலும் ஆட்சியை வழங்க முடியாது. ஆகவே எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன்.

    இதற்காக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். ஆதரவாளர்கள் கருத்துப்படி விரைவில் கட்சி தொடங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
    ×