search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, பழைய பேட்டை நரசிம்மசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் செரீப்(55). இவர் 15-ம் தேதி இரவு 9 மணியளவில்ல புதுப்பேட்டை - குப்பம் ரோட்டில் மேல் தெரு பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததுள்ளார். 

    இதில் உஸ்மான் செரீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த டவுன் போலீசார் உஸ்மான் செரீப் உடலைப் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதேபோல் கர்நாடகா மாநிலம் பெங்களூர், ஜெக்கசந்திரா கோரமங்கலா பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (47). இவர், கடந்த 15-ம் தேதி மாலை 7 மணியளவில், கிருஷ்ணகிரியிலிந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூர் ஜங்ஷன் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்கத்தினர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். #MaliAttack
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி-நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பயங்கரவாத தாக்குதல் மினாகாவிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. இப்பகுதியில் கடந்த  2018 ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதிகளின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலான மக்கள் புலானி இனத்தவர்கள் ஆவர்.

    தற்போது நடந்த தாக்குதலுக்கு எம்எஸ்ஏ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான மோதலின் முடிவில் முதியவர்கள் உள்ளிட்ட 20 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம், இது குறித்து வல்லுனர்கள் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில், “பயங்கரவாத குழுக்களுக்கும், சர்வதேச மற்றும் மாலி  அரசுப் படைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான மோதல்களால் பொது மக்களிடையே  பதற்றம் அதிகரித்துள்ளது”, என கூறப்பட்டது.

    2012-ல் முக்கியமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகளின் எழுச்சியை தடுப்பதற்கு மாலி படைகளுக்கு பிரான்ஸ் உதவி செய்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட 2015 ம் ஆண்டின் சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.

    அப்போதிலிருந்து, மாலியின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள், அண்டை நாடான பர்கினா பாசோ மற்றும் நைஜர் எல்லைகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. #MaliAttack
    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    நல்லூர்:

    திருப்பூர் செரங்காடு எம்.ஜி.பி.தியேட்டர் பிள்ளையார் கோவில் 3–வது வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகன் செல்வராஜ் (வயது 30). இவர் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (23). இவர் தாராபுரம் ரோடு புதூர்பிரிவு பகுதியில் உள்ள இருசக்கர வாகன கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து தாராபுரம் சாலையில் கோவில் வழி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரகாஷ் ஓட்டினார். பின் இருக்கையில் செல்வராஜ் அமர்ந்து இருந்தார்.

    தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த குப்பை லாரி ஒன்று இவர்களது மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே பிரகாசும் பலியானார்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்த சென்று இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குஜராத்தில் மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்து 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியாகினர். #Gujarat #KiteString #SlitThroat
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் காற்றாடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஏராளமானோர் கட்டிடங்களின் மேலே நின்று காற்றாடிகளை பறக்க விட்டனர். மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்ததில் அவன் உயிரிழந்தான்.

    இதேபோல் மாஞ்சா நூல் அறுத்து மேலும் 4 பேர் பலியாகினர். ஆமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்பட பல இடங்களில் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.  #Gujarat #KiteString #SlitThroat
    மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 3 போலீசார் மற்றும் டிரைவர் பலியாகினர். #MPAccident #MPDySpeaker
    பாலகாட்:

    மத்திய பிரதேச சட்டமன்ற துணை சபாநாயகரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஹீனா கான்வரே, நேற்று இரவு தனது தொகுதியான லாஞ்சியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்கள் தனி காரில் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சேல்டேகா கிராமம் அருகே வந்தபோது, எதிரே ஒரு லாரி அதிவேகமாக வந்தது.

    அப்போது லாரி மீது மோதாமல் இருப்பதற்காக துணை சபாநாயகரின் கார் டிரைவர், ஸ்டியரிங்கை சாலையோரம் திருப்பினார். இதனால் அந்த கார் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள வயலுக்குள் இறங்கியது. ஆனால், பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மீது லாரி பயங்கரமாக மோதியது. 

    இந்த விபத்தில் காரில் இருந்த 3 போலீஸ்காரர்கள் மற்றும் டிரைவர் என 4 பேர் உயிரிழந்தனர். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MPAccident #MPDySpeaker
    அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். #USSnowStorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியது.

    இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, சோரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலவிமானங்கள் தாமதமாக வருகின்றன.  அனேகமான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. விர்ஜீனியாவில் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.  #USSnowStorm
    கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். #Fishermendeath

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரும், கருப்பையா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்ததாக கூறி 28 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மீனவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

    அப்போது கருப்பையா படகில் இருந்த முனியசாமி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை காப்பாற்ற கடலில் குதித்தனர். ஆனால் பலனில்லை.

    இதற்கிடையில் முனியசாமியின் உடல் யாழ்பாணம் அருகே கரை ஒதுங்கியது. இந்த தகவலை இலங்கை அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

    இந்திய அதிகாரிகள் ராமேசுவரம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் இலந்தை கூட்டத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இன்று காலை சண்முகப்பிரியா, அவரது கணவர் சண்முகநாதன் மற்றும் உறவினர்கள ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு உதவி இயக்குநர் யுவராஜிடம், இலங்கையில் கரை ஒதுங்கிய தனது தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். #Fishermendeath

    பொங்கலூர் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    பொங்கலூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 35). அதே ஊரைச்சேர்ந்தவர் ஸ்ரீராம்(26). இவர்கள் இருவரும் அவினாசியில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று அவினாசியில் இருந்து பொள்ளாச்சிக்கு வேலை விஷயமாக காரில் சென்றனர்.

    காரை பெருமாநல்லூரை சேர்ந்த டிரைவர் நவநீதகிருஷ்ணன்(26) என்பவர் ஒட்டினார். பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் வெங்கிட்டாபுரம் அருகே தனியார் கல்லூரி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சுடன் கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் அமர்ந்திருந்த பிரகாஷ், ஸ்ரீராம் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த அரியலூரை சேர்ந்த ராஜவள்ளி(23) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். #Palestinian #WomanKilled #GazaProtest
    காஸா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காஸா முனைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் காஸா பகுதி போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலும் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காஸா முனைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது ஒரு குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மேற்கண்ட தகவலை பாலஸ்தீன சுகாதாரத்துறை மந்திரி அஷரப் குவத்ரா தெரிவித்தார். #Palestinian #WomanKilled #GazaProtest 
    கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Canada #Ottawa #BusCrash
    ஒட்டாவா:

    கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மாடி பஸ் வெஸ்ட்போரோ பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதியது.



    இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆவர். ஒருவர் பஸ்சில் பயணம் செய்தவர்.

    மேலும் இந்த விபத்தில் 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Canada #Ottawa #BusCrash 
    கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சினேகபிரியா (வயது 18). தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முதலாம் ஆண்டில் ஒரு பாடத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சினேகபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை ஆடீஸ் வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மாரிசெல்வி (வயது 24). இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் மாரிசெல்வி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது மாரிசெல்வி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என மாரிசெல்வி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    மாரிசெல்வி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
    ×