search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    எகிப்து நாட்டின் காசா மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்த தாக்குதலை தொடர்ந்து 40 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Egypttouristbusattack #40militantskilled #touristbusattack
    கெய்ரோ:

    எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர்.

    அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மரியோத்தியா என்ற பகுதி வழியாக சென்றபோது சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.


    இதில் அந்தப் பேருந்து சின்னாபின்னமாகச் சிதறியது. பேருந்தில் இருந்த வியட்நாம் நாட்டினர் மூன்றுபேர்  மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலை தொடர்ந்து கிசா, வடக்கு சினாய் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பயங்ரவாதிகளை குறிவைத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Egyptpolice #Egypttouristbusattack #40militantskilled  #touristbusattack
    எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். #EgyptBlast #EgyptPyramids
    கெய்ரோ:

    எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மரியோத்தியா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

    இதில் பேருந்து சின்னாபின்னமாகச் சிதறியது. பேருந்தில் பயணம் செய்த 3 சுற்றுலாப் பயணிகள், மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். எகிப்தைச் சேர்ந்த டிரைவர் உள்ளிட்ட 11 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


    எகிப்தில் பிரமிடுகள் உள்ள பகுதியில் திறந்தவெளியில் ஒலி ஒளி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒளி வெள்ளத்தில் பிரமிடுகள் மூழ்கியிருக்கும் காட்சியை காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #EgyptBlast #EgyptPyramids
    கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். #KodaikanalFireAccident
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். அவரது மனைவி மஞ்சுளா தேவி (45). இவர்களது மகள் விஷ்ணு பிரியா (10). இவர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் தங்கி தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

    தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊருக்கு வந்திருந்தார். இவர்களது வீடு மலைப்பகுதியில் உள்ளது. எனவே காட்டு யானைக்கு பயந்து வீடானது தகர கொட்டகையால் வேயப்பட்டு இருந்தது. சுற்றிலும் மரப்பலகையால் அடைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு கணேசன் தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கினார். இன்று காலை 6 மணி ஆனதும் மஞ்சுளா தேவி காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது சிலிண்டரில் உள்ள கியாஸ் கசிவாகி இருந்தது.

    இதை கவனிக்காத மஞ்சுளா தேவி நெருப்பை பற்றவைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் நெருப்பு பற்றியது.


    வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. எனவே அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தண்ணீரை எடுத்து நெருப்பை அணைத்தனர். ஆனால் வீட்டுக்குள் கணேசன், அவரது மனைவி மஞ்சுளா தேவி, மகள் விஷ்ணு பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்ததும் ஏராளமானோர் திரண்டனர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் எட்டியது. அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன கணேசன் அந்த பகுதி மக்களுக்கு பரிட்சயமானவர். எனவே அவர் இறந்ததால் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.  #KodaikanalFireAccident

    மும்பை செம்பூர் திலக்நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானார்கள். இது தொடர்பாக போலீசார் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #Mumbai MumbaiFire
    மும்பை :

    மும்பை செம்பூர் திலக்நகர் பகுதியில் சர்கம் என்ற 16 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இந்த மரத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து மளமளவென 10-வது மாடிக்கும் பரவியது.

    இதையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கீழ் மாடிகளில் இருந்த மக்கள் தரை தளத்திற்கும், மேல் மாடிகளில் இருந்த மக்கள் மொட்டை மாடிக்கும் ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். எனினும் குறுகிய சாலை மற்றும் அந்த பகுதியில் நிறுத்தியிருந்த வாகனங்களால் விபத்து நடந்த கட்டிடத்திற்கு அவர்களால் உடனடியாக செல்ல முடியவில்லை. இந்தநிலையில் தீப்பிடித்த ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மேலும் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.


    தீ விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி.


    இந்தநிலையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்ளை மீட்டனர். இதில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள் ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சுனிதா ஜோஷி (வயது72), பால்சந்திர ஜோஷி (72), சுமன் ஜோஷி (83), சரளா (52), லெட்சுமி பென் (83) ஆகிய 5 பேர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதில் 5 பேரும் மூச்சுத்திணறலால் பலியானதாக ராஜவாடி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வித்யா தாக்கூர் கூறினார். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிடத்தில் உரிய தீத்தடுப்பு கருவிகள் இல்லாததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 5 ஆண்டுகளாக அதன் ஒப்பந்ததாரரிடம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துவந்ததாகவும், ஆனால் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து திலக்நகர் போலீசார் தீ விபத்து குறித்து கட்டிட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Mumbai #MumbaiFire
    மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். #MumbaiFire
    மும்பை:

    மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் பி- பிரிவு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியது.

    தகவல் அறிந்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுஒருபுறமிருக்க மீட்பு பணியும் நடைபெற்றது. தீப்பிடித்த தளத்தில் இருந்து முதியவர்கள் உள்ளிட்ட சிலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.



    நள்ளிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கடுமையான வெப்பம் நிலவியதால் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கும் பணிகள் நடைபெற்றன.

    தீ அணைக்கும் பணியின் போது, தீ அணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் போது, குடியிருப்பில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்ததால், தீயின் உக்கிரம் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #MumbaiFire
    மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் சிக்னல் அருகே சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் இதில் கம்பி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை வேலை நடந்து கொண்டிருந்த போது திடீரென வடமாநில தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இறந்து போன தொழிலாளியின்பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர். #KabulAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    உள்ளே செல்லும்போது பொதுமக்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டபடியே சென்றதால், பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.


    இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர்.

    மூன்று போலீஸ்காரர்கள் உள்ளிட்ட சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #KabulAttack
    காங்கயம் அருகே கார் விபத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபர் பலியானார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காங்கயம்:

    சேலம் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 62). ரியஸ் எஸ்டேட் அதிபர். இவரது மகள் சுதா (36), மருமகன் பழனிமுருன் (41) ஆகியோருடன் நேற்று மாலை திருப்பூர் மண்ணரை சத்யா காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டனர். காரை பழனிமுருகன் ஓட்டினார். கார் ஊத்துக்குளி- திருப்பூர் இடையே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு வந்தபோது அங்கு நின்ற லாரி மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ரியஸ் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிமுருகன், சுதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் அருகே விபத்தில் 3  பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    சென்னை போரூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ஜெகதாம்மாள் (வயது 58).

    இவர்களது உறவினரான காஞ்சீபுரத்தை அடுத்த நாயகன்குப்பதை சேர்ந்த ஒருவரது 3 மாத குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்தது.

    இதுபற்றி துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை ஜெகதாம்மாள், அவரது மகன்கள் வள்ளியப்பன், நாகேந்திரன், அவரது மனைவி சித்ரா (30) உள்பட 7 பேர் காரில் புறப்பட்டனர். காரை மாங்காடை சேர்ந்த சக்திவேல் (35) ஓட்டினார்.

    அதிகாலை 4 மணி அளவில் காஞ்சீபுரம் - ஓரகடம் சாலையில் கட்வாக்கம் கூட்டுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வாலாஜாபாத்தில் இருந்து ஓரகடம் நோக்கி வந்த லாரி திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன் பகுதி நசுங்கியது. காரில் இருந்த டிரைவர் சக்திவேல், ஜெகதாம்மாள், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் வள்ளியப்பன், நாகேந்திரன், அஞ்சுகம், விஜயலட்சுமி, அவரது மகள் ரபியா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொளத்தூரில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    செங்குன்றம்:

    சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் வடக்கு ஜெகநாத புரம் 8-வது தெருவைச் சேர்ந்தவர் அருண்பிரபு (வயது 29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    அருண்பிரபு ஒரு வருடத்துக்கு முன்பு வடக்கு ஜெக நாதபுரம் 2-வது பிரதான சாலையை சேர்ந்த விமலா(21) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    நேற்று முன்தினம் மாலை விமலா, தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விமலாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விமலாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


    எருமப்பட்டி அருகே டிப்ளமோ என்ஜினீயர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி கெஜக்கோம்பையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் முசிறி அருகே உள்ள முத்துடையார்பாளையத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மகன் முரளிதரன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். ஆனால் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததால், இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் முரளிதரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    பரமத்தி வேலூர் அருகே, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 5 வயது சிறுவன் பலியானான்.
    பரமத்திவேலூர்:

    பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சவுந்தர்ராஜன் (வயது 23). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்திருந்த பஞ்சபாளையத்தை சேர்ந்த தனது சகோதரியின் மகன் லோகித்தை (5) மீண்டும் பஞ்சபாளையத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளின் முன்னால் லோகித்தை அமர வைத்து அழைத்து சென்றுள்ளார்.

    பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் லோகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சவுந்தர்ராஜன் படுகாயம் அடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×