search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 21 பேர் உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

    கிளர்ச்சி படைகள் வசம் உள்ள பெரும்பாலான பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் உள்ள சில நகரங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இதற்காக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கிளர்ச்சி படை ஆதிக்கம் உள்ள இட்லிப் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் அலெப்போ புறநகர்ப்பகுதிகளில் அரசுப் படைகள் நேற்று இடைவிடாமல் வான்தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த உக்கிரமான தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக, மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், அரசுப் படைகள் மற்றும் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் 229 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிரியாவில் நடக்கும்  கொடூரமான தாக்குதல் மற்றும் பேரழிவை தடுத்து நிறுத்த வலிமை வாய்ந்த நாடுகள் எதுவும் செய்யவில்லை என ஐநா சபை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    கலசபாக்கம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள எள்ளுப்பாறையை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 41) செங்கல் சூளை நடத்தி வந்தார். பாடகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர்கள் 2 பேரும் நேற்று போளூர் செங்கம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட கமலக்கண்ணன், ரமேஷ் 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் போலீசார் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பராங்கி மாவட்டத்தில் ராணிகஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர்.

    அவர்களில் பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் ராம்நகர் சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.
    அமெரிக்காவில் வீசிய சூறாவளி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் காயம் அடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஒக்லகோமா மாகாணத்தில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவில் கடுமையாக காற்று வீசியது. அப்போது மழையும் கொட்டியது.

    இதனால் ஒக்லகோமா நகரில் பல வீடுகள் தரைமட்டமாயின. வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இங்கு சூறாவளி புயல் தாக்கும் என முன் எச்சரிக்கை விடப்பட்டதால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர்.

    அங்கு மணிக்கு 136 முதல் 165 மைல் வேகத்தில் சூறாவளி புயல் வீசியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    சூறாவளி புயல் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    கடந்த 3-ந்தேதியும் இங்கு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 300 மைல் (480 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியது. 36 பேர் உயிரிழந்தனர்.
    வீட்டின் மொட்டை மாடி சுவரில் அமர்ந்து செல்போன் பேசிய வாலிபர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.
    மதுரை:

    மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 22). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தன்னுடைய நண்பர் கார்த்திக்ராஜா என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று கார்த்திக்ராஜா வேலை தொடர்பாக வெளியூர் செல்ல இருந்தார். இதனால் அன்றைய தினம் மாலை அவரை, சரவணக்குமார் ஊருக்கு வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நண்பரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அங்கு வீட்டின் மொட்டை மாடி தடுப்புச் சுவரில் அமர்ந்தபடி சரவணக்குமார் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது. அப்போது திடீரென்று அவர் நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயமடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ரெயில் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்ற போது மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு இட்லி கடை வைத்திருந்தவர் கனகா (வயது 55). இவர் ரெயில் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ராயக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கனகா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கனகாவின் உறவினர் சந்தானபாண்டி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் கனகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து விபத்தை ஏற்படுத்திய கணவாய் பகுதியைச் சேர்ந்த சின்ன பெருமாள் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குமாரபாளையத்தில் மின் கம்பத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவர் குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை ஆறுமுகம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு ரோட்டில் மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி ஆறுமுகம் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மின் கம்பத்திலேயே பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், குமாரபாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுகத்தின் மகன் குமரவேல் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கம்பத்தில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
    பெரம்பலூர் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்த சிறுவன நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆய்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தனுஷ்(வயது 14). 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள மனோகர் என்பவருக்கு சொந்தமான கிணறு அருகே தனுஷ் சென்று கொண்டு இருந்தபோது, கால் தவறி கிணற்றில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாத தனுஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தனுஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40). இவரது மகன்கள் விஜயராஜ்(14), தர்மேந்திரன்(11). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் சிலம்பூர் பூக்குழி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட போது விஜயராஜ் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    எரியோடு அருகே பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எரியோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியை அடுத்த கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் நேற்று வயரிங் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் குறிக்கோடாங்கி பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாணிக்கம் (வயது 29) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

    இரவு மாணிக்கம் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை வீட்டை பார்க்க சென்ற தங்கவேல், மாணிக்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது பற்றி எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார், எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மின்சாரம் தாக்கி மாணிக்கம் பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குறிக்கோடாங்கி பட்டி பொதுமக்கள் திரண்டனர்.

    இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.

    வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அங்கமுத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). நாமக்கல் மாவட்டம் மோகனூர் சின்னத்தம்பி பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இருவரும் பொக்லைன் எந்திர டிரைவர்கள். நேற்று முன்தினம் இரவு இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை காரை நகர் அருகே சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற கீழையூர் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருக்குவளை தாலுகா மேல வாழக்கரை முனியன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×