search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    வலங்கைமான் அருகே வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வலங்கைமான்:

    வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி சர்வமானியம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது45). விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வலங்கைமான் அருகே வயிற்று வலி தாங்க முடியாமல் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வலங்கைமான்:

    வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் சர்வமானியம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் சேகர் வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

    இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிணத்துக்கடவில் மொபட் மீது வேன் மோதிய விபத்தில 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி வயது (49). இவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலை கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி மாசிலாமணி (35), கிணத்துக்கடவு கொண்டம்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவைசேர்ந்த ராஜன் (45), கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமி (55) ஆகிய 4 பேரும் ஒரே மொபட்டில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டியில் உள்ள ராஜன் வீட்டிற்கு கிளம்பினார்கள். மொபட்டை மாசிலாமணி ஓட்டினார்.

    கொண்டம்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரேவந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர். படுகாயம் அடைந்த ராஜன், ஆறுச்சாமி, மாசிலாமணி ஆகியோர் உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்குமார், ராஜன். ஏட்டு ரத்தினசாமி ஆகியோர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கோவை, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆறுச்சாமி, மாசிலாமணி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கிணத்து க்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் நெகமம் சேரிபாளையத்தை சேர்ந்த மகேஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உ.பி. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பஸ்சும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பரிதாபமாக கருகி பலியானார்கள்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்-பரேலி தேசிய நெடுஞ்சாலையில் கமாரியா பாலம் அருகே நேற்று காலை ஒரு சுற்றுலா பஸ்சும், ஒரு காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் கருகி பலியானார்கள். பஸ்சில் இருந்த 6 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் பலியான 5 பேரும் யார் என தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
    சோபியான்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு  பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter 
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாகரன்(வயது 40) சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இதேகடையில் உதவியாளராக உளுந்தூர் பேட்டை அன்னை சத்யா தெருபகுதியை சேர்ந்த சுரேஷ்(30) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு 2 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் சாப்பிடுவதற்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் எம்.எஸ்.தக்கா என்ற இடத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். அந்த பகுதியில் உள்ள சாலையை மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார்சைக்கிளில் இருந்து கருணாகரன், சுரேஷ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுரேஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடியில் நாட்டுவெடி தயாரிப்பு நிறுவன பட்டாசு கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியாகினர். #MannargudiFiraAccident
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னை நகர் பாமினி ஆற்றங்கரையோரம் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் பட்டாசுகளை தயாரித்து வருகிறார். இங்கு திருவிழாவிற்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கும் பணி நாள்தோறும் நடந்து வருகிறது. இதில் அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பங்குனி திருவிழா, தேர்தலையொட்டி தற்போது நாட்டு வெடிகள், பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் கிடங்கிற்கு வேலைக்காக தொழிலாளர்கள் வந்து பட்டாசுகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கிருந்த பட்டாசுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்ட பட்டாசு தயாரித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கிடங்கை விட்டு வெளியே ஓடிவர முயன்றனர்.

    இந்த வெடிச்சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிர்வை ஏற்படுத்தியது.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் வெடித்து நாலாபுறமும் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த வெடி விபத்தில் பட்டாசு கிடங்கு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பயங்கர வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பட்டாசு கிடங்கை நோக்கி வேகமாக ஓடிவந்தனர்.

    அப்போது 3 பேர் உடல் சிதறி உருக்குலைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 2 பேர் கை, கால்கள் சிதைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    பட்டாசு குடோனில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? என்று தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

    பட்டாசு குடோன் பகுதிக்கு திரண்டு வந்த கிராம மக்கள்.

    இந்த பட்டாசு தீவிபத்தில் இறந்த 5 பேரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் என கூறப்படுகிறது. அவர்கள் சேட்டு, , பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கிடங்கு முறையான அனுமதி பெற்று தான் இயங்கி வந்ததா? உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நகர பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டு 5 பேர் பலியான சம்பவம் இன்று காலை மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MannargudiFiraAccident
    ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PoisonousGas #ToxicGas
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருமாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.

    இன்று காலை அவர் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த லாரியை வரவழைத்து இருந்தார். தொழிலாளிகள் பாதி அளவு கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியை எடுத்துச் சென்றனர்.

    எவ்வளவு கழிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பதற்காக கிருஷ்ண மூர்த்தி தொட்டியை எட்டிப் பார்த்தார். அப்போது அவர் மீது வி‌ஷவாயு தாக்கியது. மயக்கம் அடைந்த அவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை கண்ட அவரது 2 மகன்களும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசித்த 3 ஆண்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்களையும் மீட்க முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி பலியானார்கள்.

    அடுத்தடுத்து 6 பேர் வி‌ஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    பரங்கிப்பேட்டை அருகே ஓட்டல் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபுதேவா (வயது 25). இவர் சென்னையில் தங்கி ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருடைய தாய் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே உனது சம்பளப் பணத்தை தா என்று பிரபுதேவாவிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் மனமுடைந்த பிரபுதேவா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி பிரபுதேவா பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து சந்திரசேகரன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன்- கார் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தென்னார் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (வயது32), அவரது மனைவி சுகன்யா (26), இவர்களது குழந்தை மோஷிதா(7), ராஜா (35), அவரது மனைவி தேவி(28), பாலமுரளி (36) ஆகியோர் ஆம்னி வேனில் திருவண்ணாமலையில் இருந்து வேளாங்கண்ணி அருகே உள்ள காடன்தேத்தி அய்யனார் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை வந்தவாசி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி ஓட்டிவந்தார்.

    அப்போது நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி எதிரே வந்த கார் திடீரென ஆம்னி வேன் மீது மோதியது.

    இதில் பாலமுரளி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஆம்னி வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரம் புதுமனை இரண்டாம் தெருவைசேர்ந்த பெரியண்ணா(51), பர்மா காலனியை சேர்ந்த கோதை (74), காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அனைவரையும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோதை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை போத்தனூரை சேர்ந்தவர் மோகன் (வயது 48). துப்புரவு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சத்திரம் அருகே குடிசை தீப்பற்றி எரிந்ததில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
    நாமக்கல்:

    புதுச்சத்திரம் அருகே உள்ள மாரநாயக்கனூரை சேர்ந்தவர் அசோகன் (வயது45). விவசாயி. இவரது மனைவி பிரியா (40). இவர் நேற்று முன்தினம் தங்களுக்கு சொந்தமான குடிசையில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது காற்று பலமாக வீசியதால், திடீரென தீ குடிசையில் பற்றிக் கொண்டது. அந்த தீ மளமளவென குடிசை முழுவதும் பரவியது. இதேபோல் அருகில் உள்ள சாத்தம்மாள் (60) என்பவரின் குடிசைக்கும் பரவியது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 குடிசையும் எரிந்து சாம்பல் ஆனது.

    இதற்கிடையே தீ விபத்தில் சிக்கிய பிரியாவை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா நேற்று காலையில் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ஆட்டுக்கொட்டகையில் கட்டி இருந்த 6 ஆடுகள் செத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×