search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முன்னர் வைத்திருந்த கண்ணிவெடியில் இன்று பஸ் சிக்கிய விபத்தில் 24 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். #ISlandmine #Syrialandmine
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் பல பகுதிகளில் முன்னர் அதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் அடித்து விரட்டப்பட்டனர். அவர்களில் சிலர் ஈராக்-சிரியா எல்லைப் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

    முன்னர் சில பகுதிகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி பொதுமக்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர்.

    அவ்வகையில், சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள சலாமியே பகுதியில் இன்று பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் கண்ணிவெடியில் சிக்கியதில் 24 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதே பகுதியில் இருவாரங்களுக்கு முன்னர் கண்ணிவெடியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். #ISlandmine #Syrialandmine
    உத்தரபிரதேசத்தின் படோகி மாவட்டத்தில் வீட்டில் செயல்பட்டு வந்த கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். #UPExplosion
    படோகி:

    உத்தரபிரதேச மாநிலம் படோகி-வாரணாசி சாலையில் உள்ள ரோதாகன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கார்பெட் தயாரிப்பு தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் பட்டாசு விற்பனையும் செய்து வருகிறார். இன்று மதியம் வழக்கம்போல் கார்பெட் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. சக்தி வாய்ந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த பண்டல் மொத்தமாக வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதனால் சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள், கார்பெட் தொழிற்கூடத்தில் வேலை செய்தவர்கள் என பலர் இடிபாடுகளில்  சிக்கிக்கொண்டனர். நெடுஞ்சாலையில் கட்டிட சிதறல்களும், மனித உடல் பாகங்களும் சிதறிக் கிடந்தன.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும்  மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.



    இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #UPExplosion
    சென்னை ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ரெயில்வே அதிகாரி திருச்சி தண்டவாளத்தில் பிணமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    மதுரை அருகே உள்ள தத்தனேரி கன்னியப்பபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 34). இவர் திருச்சி தென்னக ரெயில்வே மதுரை ஜங்சன் அலுவலகத்தில் கூடுதல் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பத்ம பிரியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று 22-ந் தேதி சென்னையில் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க மதுரையில் இருந்து நேற்று முன்தினம் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சவுந்திரபாண்டியன் புறப்பட்டு சென்றார்.

    ஆனால் நேற்று சென்னைக்கு அவர் சென்று சேரவில்லை. அவரது செல்போனுக்கு நேற்று காலை குடும்பத்தினர் தொடர்புகொண்ட போது, ரிங் போய்க்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் செல்போன் டவர் உதவியுடன் சவுந்திரபாண்டியன் இருக்கும் இடத்தை தேடினர். அப்போது திருச்சியில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளத்தூருக்கும், பூங்குடி என்ற கிராமத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் படுகாயத்துடன் சவுந்திரபாண்டியன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது செல்போனும் பிணத்தின் அருகிலேயே கிடந்தது. சவுந்திரபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை செய்த பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதற்கிடையே ரெயிலில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்த சவுந்திரபாண்டியன், தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் ரெயிலில் பயணம் செய்தபோது வாசலில் நின்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனையின் போது சவுந்திரபாண்டியன் சாவில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MaduranthakamAccident
    மதுராந்தகம்:

    மன்னார்குடியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 50). சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணம் மன்னார்குடியில் நடந்தது.

    இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக பத்மாவதி, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தார்.

    அவரை அழைத்து செல்வதற்காக மன்னார்குடியில் இருந்து பத்மாவதியின் மகன் மணிகண்டன் (25), மருமகன் வேல்முருகன் (35), பேத்தி திரிஷா (12) ஆகியோர் காரில் வந்தனர்.

    விமான நிலையத்துக்கு வந்து பத்மாவதியை 3 பேரும் காரில் ஏற்றிக் கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றனர். காரை வேல் முருகன் ஓட்டினார். மதுராந்தகம் அடுத்த திருநாகலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வேல்முருகன் திடீரென்று கண் அயர்ந்தார்.

    அப்போது கார் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. பின்னர் அந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு சாலையின் மறுபுறம் ஓடியது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது கார் வேகமாக மோதியது.

    இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த பத்மாவதி, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். திரிஷா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #MaduranthakamAccident
    சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். #FirecrackersExplosion
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்தன. குறிப்பாக பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால், ஆலை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

    வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #FirecrackersExplosion
    செஞ்சி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செஞ்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மோசவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி மகன் ராம்குமார்(வயது 21). இவர் செல்போன் கோபுரங்களை பராமரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று தன்னுடன் பணிபுரியும் வந்தவாசியை சேர்ந்த திருமாறன்(21), வந்தவாசி எறும்பூரை சேர்ந்த அன்பு(26) ஆகியோருடன் வேலை சம்பந்தமாக வந்தவாசியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை ராம்குமார் ஓட்டினார்.

    இவர்கள் 3 பேரும் நேற்று காலை செஞ்சி- விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். செஞ்சியை அடுத்த கோழிப்பண்ணை என்ற இடத்தில் சென்றபோது, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நோக்கி வந்த லாரியும், ராம்குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

    இதில் ராம்குமார், திருமாறன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குப்பன் மகன் அன்பு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 82). இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் இறவாங்குடி கடைவீதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிவலிங்கம் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சிவலிங்கம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவலிங்கம் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவலிங்கம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமாரை தேடி வருகின்றார். 
    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயிலில் இருந்து விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் சுபாஷ் (27). சொந்த ஊர் விழுப்புரம்.

    இவர் நேற்று முன்தினம் எழும்பூரில் இருந்து சேலம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாசல் அருகே நின்று பயணம் செய்தார்.

    ரெயில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், செங்கல்பட்டுக்கும் இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் கீழே தவறி விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இன்று மரணம் அடைந்தார். செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செஞ்சி அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செஞ்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மோசவாடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 21). இவரும் இவரது நண்பர்கள் மதி, அன்பு ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டனர். செஞ்சி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிகொண்டு ராணிபேட்டையை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராம் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் மற்றும் மதி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்பு படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்புவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி கார்த்தினி (31). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. தற்போது கார்த்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    ஏற்கனவே சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ரவிக்குமாரை நேற்று முன்தினம் கார்த்தினி வன்னியர்பாளையத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் விட்டு, விட்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7 தேர்வு எழுத சென்று விட்டார். தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ரவிக்குமார் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

    இதை அறிந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி கார்த்தினி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவுக்கார பெண் படுகாயமடைந்தார்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஆண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரி மகன் சிவானந்தம் (வயது 24). இவர் கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தனது உறவுக்கார பெண் சுகந்தி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டியூரில் இருந்து ஆண்டிப்பந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆண்டிப்பந்தல் ஆற்றுபாலம் அருகில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இவர்கள் சென்ற போது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சுகந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×