search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95169"

    மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.
    மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்ப டுகிறது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.

    கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்ப டும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர்கள் திரு மண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.
    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் ‘திதி’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

    ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று என்று பொருள்படும். 15 நாட்களை கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாத மொன்றில், அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசி ‘திதி’ வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கிலபட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும்.
    “காக்கும் கடவுள்” என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் உண்டு. அவை: விஷ்ணு, நாராயணன், கோவிந்தன், மதுசூதனன், ஜனார்த்தனன், பத்மநாபன், ப்ரஜாபதி, வராகன், சக்ரதாரி, வாமணன், மாதவன், நரசிம்மன், திரிவிக்ரமன், ரகுநாதன், ஜலசாயினன், ஸ்ரீதரன்.

    பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று சொல்கின்றோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.

    இவ்வாறு பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரராகி நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை வருகிற வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசித் திருநாளில் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர்.

    மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள்.

    “வைகுண்ட ஏகாதசி” என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத் திறப்பார்கள். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.

    ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா?. அந்த விழா இந்த மார்கழி மாதம் வருகின்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நுழைய லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பர்.

    அதேபோல் திருக்கோஷ்டியூர், திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், திருமோகூர் போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும்.

    ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியமும் இரவும் பலகாரம் செய்தும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொழுது, இறை தியானத்தையே மேற்கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக நீராடி பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

    அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இந்த மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் மஞ்சள் வண்ணப் பூ வைத்தால் மங்கலம் உண்டாகும். பூசணிப்பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூவும் வைப்பர். கிருமிநாசினியாக சாணத்தின் மீது அதைப் பதித்து வைத்திருப்பர்.

    இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து “ஓசோன்” என்ற காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது படுவதால் ஆரோக்கியம் மேம் படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாட்டை மேற்கொண்டால் திருமணம் கைகூடும். அதிகாலையில் இறைநாமத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து நலன்களும் நமக்குக் கிடைக்கும்.

    இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். வருங்காலம் நலமாகும்.

    விஷ்ணுவை வழிபட்டு, அவரது துணையாக விளங்கிச் செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்குச் சென்று லட்சுமி வருகைப்பதிகம் பாடினால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவார். அஷ்ட லட்சுமியின் படத்தையும் விஷ்ணு லட்சுமியோடு இணைந்திருக்கும் படத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.

    எட்டுவகை லட்சுமியால் ஏராளமாக செல்வம்

    கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே

    வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும்ஆதி லட்சுமியே!

    வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்.

    யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே

    உனைத்துதித்தால்

    காணுமொரு போகமெல்லாம் காசினியில்

    கிடைக்குமென்பார்!

    தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்த கஜ லட்சுமியே

    வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!

    அன்றைய தினம் அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் பூர்த்தியாகும். நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் அகன்று இனிய பலன் கிடைக்கும். வளர்ச்சியும் பெருமையும் வந்து சேரும். வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டும் நாளும் சந்திக்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மதியம் 1 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளி பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தை அடைகிறார்.

    அப்போது பொதுமக்கள் அரையர் சேவையுடன் நம்பெருமாளை தரிசிக்க முடியும். இரவு 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். வருகிற 26-ந்தேதி வரை நம்பெருமாள் தினமும் இதேபோல் புறப்பாடாகி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    24-ந்தேதி திருக்கைத்தல சேவை என்பதால் மாலை 3 மணிக்கும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி கண்டருள்வதற்காக மாலை 4.30 மணிக்கும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். ராப்பத்து உற்சவத்தின்போது இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.

    24-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், 26-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 27-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 25-ந்தேதி வேடுபறி நிகழ்ச்சியன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

    ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. 
    அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’
    18-12-2018 வைகுண்ட ஏகாதசி

    மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

    மாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார்கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.

    அம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.

    வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.

    தனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.

    வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.

    ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாளை வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.



    நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.

    மறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.

    ஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.

    இந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

    மார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வார். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.

    இங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.

    இராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

    மனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.
    அரையர் என்போர் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர்.
    அரையர் என்போர் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப்பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது. அரையர் என்பவர் கோவில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப் பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.

    திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களை பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டது.

    வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். திருக்கோவில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்ச கச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும், இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர்.

    காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோவில்களில் மட்டுமே காணப்படும்.

    உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப் பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக் கிக்கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சேவை. இது கதையைத் தழுவி அமையாமல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமைகிறது.
    அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அபிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அபிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.



    பலநாட்கள் பயிற்சிக்கு பின்னே அரையர்களை இச்சேவையை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நிரம்பிய மொழிப்புலமை இச்சேவைக்கு அடித்தளம் என்பதால் பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்களாகவும் உள்ளனர். அரையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பி ரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

    பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுறப்பேசி நடிக்கும் முத்தமிழ்க்கலையே அரையர் சேவையாகும்.வைகுண்டத்தைதிருநாடு என்று தமிழில் குறிப்பிடுவர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர்.

    இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

    நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இச்சேவையை தொடங்கினார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு.

    குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு.

    அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. அந்த கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கை யாழ்வாரின்பக்தியிலும், திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ரெங்கநாதர் அவர் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்.

    நம்மாழ் வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதனை ரெங்கநாதரும் ஏற்றுக்கொண்டு அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மற்றொரு தகவலும் உண்டு. என்னவென்றால், கலியுகம் பிறந்தாலும் வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள்.

    இதனை கண்ட பெருமாள் காவலர்களிடம் வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்? என்று கேட்டார். அதற்கு காவலர்கள் கலி பிறந்து விட்டது, இனிமேல் அதர்மம் தலை தூக்கும், தர்மம் நிலைகுலையும், பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்த சூழலில் இருந்து மானிடர்கள் யாரும் தப்பமுடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்றனர். உடனே பெருமாள் சொன்னார், கலியுகத்தில் பக்தி பெருகும்.

    தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில்தான். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும் வைகுண்ட ஏகாதசியன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைபிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும். இந்த வாசல் வடக்கு நோக்கி இருப்பதை காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின் தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    சொர்க்கவாசல் திறப்பு விழா

    மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அந்த வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாளாகும். வைகுண்ட ஏகாதசி அதிகாலை அன்று சொர்க்கவாசல் எனப்படும் வடக்கு வாசல் வழியாக நம்பெருமாள் (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளவர்) வருகிறார். அந்த நேரத்தை சொர்க்கவாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகிறோம்.
    இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு கிடையாது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும்.

    24-ந்தேதி திருக்கைத்தல சேவையன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும். 27-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாளன்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 
    வைகுண்ட ஏகாதசியான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, நமக்கு ஆசி வழங்குவார்கள்.
    ம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

    ‘‘உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் மன்னர்.

    ‘‘மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத் தான் தெரியும். அவரிடம் போ!” என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

    மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

    உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்: ‘‘வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’

    ‘‘நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வதர்.

    வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக்கூடிய ஏகாதசி இது.
    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
    தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி முதல் திருவிழா பகல் பத்து வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது.

    அதை தொடர்ந்து வேணு கோபாலன், காளிங்கர் நர்த்தன், சக்கரவர்த்தி திருமகள், திருக்கோலங்களில் விழா நடந்தது. இன்று ராப்பத்து திருவிழாவின் முதல் நாள் (18-ந்தேதி) தொடங்கியது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவிலில் வெளியே கூடியிருந்த பக்தர்களுக்காக பெரிய அகன்ற டிஜிட்டல் திரையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் எம்.ஜோதிலட்சுமி தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    மாமல்லபுரம் ஸ்தலசயண பெருமாள் கோவிலில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜைகள் செய்யப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    முதலில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சொர்க்கவாசலில் நுழைந்து, கோவிலில் உள்ள தங்க வாசலில் வைக்கப்பட்டார்.

    இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் கண்டாமணி மண்டபம் அருகில் உள்ள சொர்க்கவாசலில் நுழைந்து, பிரதான உண்டியல் வழியாக வெளியே சென்றனர். பின்னர் அதிகாலை 5 மணியில் இருந்து இலவச தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர்.

    இன்று காலை தங்க தேரோட்டம் நடந்தது. தங்க தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    இலவச தரிசன பக்தர்கள் திருமலையில் உள்ள எம்.பி.சி. காட்டேஜ் விடுதி அருகில் 26-வது நம்பர் கேட்டில் நுழைந்து, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட, ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சொர்க்கவாசல் மூடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனமும் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ×