என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமர்"
- விபீஷணனுக்கு ராமன் `சிரஞ்சீவி’ வரம் அளித்தார்.
- யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும்.
அனுமனுக்கு `சிரஞ்சீவி' வரம் அளித்தார் ராமன். அதேபோல ராவண வதத்திற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனான விபீஷணனுக்கு முடிசூட்டி வைத்த ராமன் அவனுக்கும் `சிரஞ்சீவி' வரம் அளித்தார். அப்போது ராமருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. `தான் மட்டும் தான் சிரஞ்சீவி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதை நினைத்து வருந்துவானோ' என்று நினைத்த ராமர், அது பற்றி அனுமனிடம் கேட்கவும் செய்தார்.
அதற்கு பதில் அளித்த அனுமன். `எங்கே நான் ஒருவன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம் தான் ராமா' என்று பணிவுடன் பதில் சொன்னார் அனுமன்.
`அதெப்படி, உனக்கு சந்தோஷம்?' என்று ராமன் கேட்டார்.
`நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனி ஒருவனாக இருந்தால், என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும் என்ற என் ஆசை, நான் தனித்து நிற்கும் போது ஈடேறாது அல்லவா? தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதால் அவர் `ராம' நாமம் உச்சரித்துக் கொண்டே இருப்பார், நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனிஆளாக இருந்தால் கிடைக்காதே" என்று பணிவுடன் சொன்னார், அனுமன்.
- குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
- அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.
ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும் அவருடைய வாலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு ஒரு வரலாறு உள்ளது.
பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.
குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லிக் கோபப்பட்டார்.
உடனே அனுமார் "வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை.
நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு" என்று சொன்னார்.
பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பலமுறை முயன்றும் முடியவில்லை.
அப்போது ஆஞ்சநேயர் தான் வாயு புத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத்தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார்.
தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும் அனுமன் வாலையும் வணங்கினார்.
பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வ சக்திகளையும் மங்களத்தையும் அளித்தீர்களே!
அதேபோல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார்.
அப்படியே அனுமாரும் வரம் அளித்தார்.
இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வழிபாட்டுச் செயல்முறை வருமாறு:
அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டு வர வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனி வரை முடிக்க வேண்டும்.
அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பூஜை செய்ய வேண்டும்.
அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.
அப்படி செய்தால் நினைத்த காரியம் பலித்துப் பூரண பலனும், பெரும்பேறும் கைகூடும்.
- மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.
- ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.
ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார்.
ஆஞ்நேயர் பொதுவாக தினமும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து ராமரை வழிபட்டு பாடல்களைத் தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பார்.
அன்று தன்னைப் பிடிக்க சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்நேயர்.
சனி பகவான் அவர் கடமையைச் செய்ய வந்துள்ளார். செய்யட்டும். நான் எனது கடடையைச் செய்கிறேன் என்று நினைத்தபடியே இருந்தார்.
மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.
வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான் ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி அமர்ந்து இறுக்கிப் பிடித்து கொண்டார்.
சனி பகவானை விரட்டுவது எப்படி என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர்.
ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார்.
அதன்படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார். இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது.
ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்திவிட மாட்டாரா.... என யோசித்த சனி பகவான் உடல் வலி அதிகமாகவே ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்துவாய்? என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் "சனி பகவானே... ஏழரை வருஷத்திற்கு துள்ளிக் குதித்துக் கொண்டே தான் இருப்பேன்" என்றார்., சனி பகவான் பயந்து போனார்.
இனிமேலும் ஆஞ்நேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் நமக்கு எந்தப்பயனும் இல்லை என யோசித்த சனி பகவான் ஆஞ்சநேயரை விட்டு விலகி விட முடிவு செய்தார் அதன்படி ஆஞ்சநேயரிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் சனி பகவான்.
ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.
"சனீஸ்வரர்... என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டு சனி பிடிக்கும் போது உன்னிடமிருந்து விலக வேண்டும் என நினைத்து என்னை வழிபடும் என் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும், சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது" எனக் கேட்டுக் கொண்டார்.
சனி பகவான் சம்மதித்தார் எனவே ஏழரை சனி, அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக ஆஞ்சநேயரை வழிபட்டால் பக்தர்கள் சனி பகவானிடமிருந்து விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்.
- மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
- பொருளாதார மேன்மை உண்டாகும்.
ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி" என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.
தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.
மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.
வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.
பொருளாதார மேன்மை உண்டாகும்.
மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர்
சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
- அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.
- வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என உள்ள பஞ்சபூத அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒடுங்குவது, ஆனால் இவ்வனைத்தும் சிவனில் ஒடுங்குவதால் வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.
அனுமனின் பெயர்கள்
பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள் படும் "பவமானர்" என்றும், கவிகளின் அரசன் என்ற பொருளில் "கபீஷர்" என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது.
மேலும் ராமபக்தர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர் ஆஞ்சனேயர், ஹனுமான் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அனுமன்.
அனுமன் தாடை நீண்டவர்
அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.
ஒரு முறை சூரியனைப் பார்த்து விண்ணில் தெரியும் கனி என நினைத்து ஆகாயத்தில் சூரியனை பிடிக்க தாவிப் பறந்து செல்கிறார் வாயு புத்திரன்.
அப்பொழுது தேவலோகத்திற்குள் வரும் இவரை இந்திரன் இந்திராயுதத்தால் தடுக்கும் போது தாடையில் பட்டு தாடை நீண்டு விடுகிறது.
எனவே அன்று முதல் ஹனுமன் என்றழைக்கப்பட்டார். எனவே அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.
- சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார்.
- உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.
சென்னை நங்கநல்லூர், ஆதி வியாதிஹரஆஞ்சநேயர் கோவில், சுசீந்திரம், நாமக்கல்லில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், திருக்கடையூர் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்,
செம்பட்டி நிலக்கோட்டை வழியில் அனைப்பட்டியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்,
சின்னாளப்பட்டி அருகில் மேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்,
தாராபுரம் காடுஅனுமந்தராய சுவாமி கோவில், புதுச்சேரி நலன்குளம் அருகில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அனுமனின் அனுக்கிரகங்களை அள்ளித் தரும் ஆலயங்கள்.
முடிந்த மட்டும் இவ்வாலயலங்களுக்கு சென்று வர மேன்மை உண்டாகும்.
அனைத்து பெருமாள், ராமர் கோவில்களிலும் எழுந்தருளும் ஆஞ்சநேயரை இந்நாளில் வழிபட அனைத்து யோகமும் கிடைக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார்.
எனவே மீனாட்சி கோவில் சென்றால் இவரை வணங்காமல் வந்துவிடாதீர்கள்.
இவரை வணங்க உங்கள் வம்சமும் வளர்ந்து வரும்.
கோவை பீளமேடு அஷ்டபுஜ ஆஞ்சநேயர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.
இங்குள்ள ஆஞ்சநேயர் சிரசில் சிவலிங்கம், நாகம், சாலிகிராமம் உள்ளன.
உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.
- ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து மகிழலாம்.
- ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.
ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து,
பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும்.
வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம்,
ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீ அனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம்,
ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி,
ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து
அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம்.
இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.
உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.
- புத்திர பாக்கியம் கிட்டும்.
- குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும்
கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும்,
நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும், தொழில் மேன்மை உண்டாகும்.
குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், பாயில் மற்றும் படுக்கையில் சிறுநீர் கழிவது நிற்கும்.
புத்திர பாக்கியம் கிட்டும், வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள்.
வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள்.
எனவே சர்வ வல்லமை படைத்த ஆஞ்சநேயரை தரிசித்து நலம் பெறுங்கள்
- துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது.
- ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம்.
துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது.
நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது.
ஆகவே துளசி இலைகளை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வணங்குகிறோம்.
பழமாலை வழிபாடு
பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும்.
எலுமிச்சம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், அன்னாசிப்பழம் மற்றும் பழங்களின் மாலை சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
படங்கள் வழிபாடு
ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம்.
வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம். இது ஆத்ம திருப்தியுடன் கூடிய ஆற்றல்களைத் தரும்.
வெற்றிலை மாலை வழிபாடு
சீதாவை அனுமார் அசோக வனத்தில் சந்தித்த போது வெற்றிலையை எடுத்து அவருடைய தலை உச்சியில் வைத்து "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.
ஆகவே வெற்றிலைய ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று ஆகவே வெற்றிலை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம்.
ராமநாத உச்சரிப்பு வழிபாடு
ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம்.
ஆகவே ராமநாம பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும்.
- அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.
- ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.
ராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்தார்.
இதனால் சிவபெருமானே ஆஞ்சநேய உருவம் எடுத்தார்.
அப்போது பார்வதி தேவி நீங்கள் மட்டும் தனியாக போகக்கூடாது.
என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். நான் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருப்பேன் என்றார்.
உடனே சிவபெருமான் அப்படியானால் "நீ எனது வாலினுள் புகுந்துவா" என்றார்.
அதன்படி அனுமானுடைய வாலாக பார்வதி தேவி உருப்பெற்றார்.
ஆகவேதான் அனுமான் வாலில் சக்தி ரூபம் மறைந்து இருப்பதால் அனுமன் வாலை கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் வணங்கி மண வாழ்க்கை பெறப் பிரார்த்திக்கின்றார்கள்.
அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.
ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.
ஆதலால் ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டு ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை செய்து வணங்கி வருவது நவக்கிரங்களை ஒரு சேர வணங்குவதற்கு ஒப்பாகும்.
- ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.
- உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவரமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.
ஆதலால் அனுமானின் தாய் அஞ்சனாதேவி தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள்.
ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.
ஆகவேதான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது.
அனுமார் ராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.
ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடைய செய்து விட்டார்.
ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்றொரு ஐதீகம் உள்ளது.
- வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார்.
- அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள்.
ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் மற்ற கடவுள்களும் சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் அளித்தார்கள்.
ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து "இந்த வெண்ணை உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார்.
ஆகவே அதேபோல நாம் வெண்ணை சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணை உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்