search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,000-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. கடந்த 1-ந்தேதி தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து 576-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,500 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60-க்கு விற்றது. தங்கம் விலையில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து சரிவு ஏற்பட்டு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் நிலை இருந்தது.

    ஆனால் அதன் பின் விலை உயர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வந்ததால் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).

    இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.

    பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.

    அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,064-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 944-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 64-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 508 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.68 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    திருமருகல் பகுதியில் வீடு-கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினக்குடி, போலகம், மானாம்பேட்டை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் அடிக்கடி திருட்டு போனது.

    திருமருகல் பகுதி கடைகளிலும் திருட்டு போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விஜய குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி நாகூர் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் தலைமையில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருமருகல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

    அப்போது சீயாத்தமங்கை கைகாட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றார். இதனால் போலீசார் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருமருகல் அருகிலுள்ள சேகல் வடக்கு தெருவைச் சேர்ந்த சட்டநாதன் (வயது 35) என்றும் இவர் திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது மேலும் விசாரணையில் அவர் திருமருகல் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சட்ட நாதனை கைது செய்து அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,722-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 5-ந் தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 96 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 416 ஆக இருந்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.16 உயர்ந்து 24 ஆயிரத்து 432-க்கு விற்றது.

    இன்றும் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 722 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.37 ஆதிகரித்து ரூ.3,091-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.40 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,416-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3-ந் தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 936 ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ.24 ஆயிரத்து 304 ஆக இருந்தது.

    இன்று மீண்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 416 ஆக உள்ளது. ஒரு கிராம் ரு.3,052-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.10 ஆகவும் உள்ளது.
    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வெளியே கடத்திச் செல்ல முயன்ற ஒப்பந்த பணியாளர் பிடிபட்டார். #10kggold #goldseized worth #Rs3croregold #Keralaairport
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் அனீஷ். விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக ஒரு பெரிய கைப்பையை இன்று அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சந்தேகப்பட்ட பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அவர்களை கண்டதும் கைப்பையை கீழே போட்டுவிட்டு அனீஷ் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற  பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து விரைந்துவந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய கைப்பையை சோதனையிட்டபோது அதனுள்ளே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அனீஷை கைது செய்த அதிகாரிகள் பிடிபட்ட கடத்தல் தங்கம் யார் மூலமாக கொண்டு வரப்பட்டது? அதை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் நபர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #10kggold #goldseized worth #Rs3croregold #Keralaairport
    தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #ADMK
    சென்னை:
     
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அ.தி.மு.க. தலைமை இன்று அறிக்கை வெளியிட்டது.

    இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினர். #AsianAthleticChampionships #Gomathi #ADMK
    இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.29 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #goldseized

    அவனியாபுரம்:

    இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர்.

    அப்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்ரகீம் ரியாஸ் என்பவர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் ஆசனவாயில் களிமண் கலவையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து அதனை எடுத்து உருக்கி பார்த்தபோது 395 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் ஆகும்.

    அதே விமானத்தில் இதே முறையில் 500 கிராம் தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் சின்னதொண்டியை சேர்ந்த பார்த்திபன் (29) என்பவரும் அதிகாரியிடம் சிக்கினார்.

    பார்த்திபன் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சத்து 4 ஆயிரம் ஆகும்.

    ஒரே நாளில் 2 பேரிடம் ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. #goldseized

    தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    சென்னை:
     
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி மாரிமுத்து கூறுகையில்,  ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றதும் நான் பயற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    ஆசிய தடகள போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார். #AsianAthleticsChampionship #PUChitra #GoldMedal
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.

    கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.


    தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்யராஜீவ் (வலமிருந்து 2-வது) உள்பட இந்திய அணியினர்.


    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

    பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.  #AsianAthleticsChampionship #PUChitra #GoldMedal
    ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
    சென்னை:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் பெற்றார். இவரது வெற்றியை கொண்டாடும் வகையில், கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



    இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கோமதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்று சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
    ×