search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். #ISSFWorldCup #ApurviChandela
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.



    இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். #ISSFWorldCup #ApurviChandela
    மண்ணடியில் 18 கிலோ கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை மண்ணடி மூர் தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் குடோனில் கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலையில் அதிகாரிகள் குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. அதனை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடத்தல் தங்கத்தை மண்ணடி குடோனுக்கு கொண்டு வந்து பதுக்கியதில் சுங்கத்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக 11 பேரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் முடிவில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.25,488-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.

    இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 25 ஆயிரத்து 488 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 3,186-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ. 43 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ. 43.50 ஆகவும் உள்ளது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு சவரன் ரூ.25,840-க்கு விற்பனையாகிறது. #Gold

    சென்னை, பிப்.20-

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 200 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப் பட்டது.

    16-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கு விற்றது. அதன்பிறகு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

    நேற்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 688 ஆக இருந்தது. இன்று அதிரடியாக மேலும் பவு னுக்கு ரூ.152 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 840 ஆக உள்ளது.

    இதன்மூலம் ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,230-க்கு விற்கிறது.

    தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக் கின்றனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.44-க்கு விற்கிறது.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று தங்கம் சவரனுக்கு ரூ.32 அதிகரித்து ஒரு சவரன் ரூ.25,600-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 520 ஆக இருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568 ஆனது. இதுவே தங்கம் வரலாற்றில் உச்சக்கட்ட விலையாக கருதப்பட்டது.

    ஆனால் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,200-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.50 ஆகவும் உள்ளது. #Gold
    தங்கம் விலை வரலாற்றிலேயே தற்போது தான் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கிறது. #Gold
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்து 384 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 14-ந் தேதி சவரன் ரூ.25 ஆயிரத்து 160 ஆனது.

    அதன்பிறகு விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 520 ஆக இருந்தது. இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 568ஆக உள்ளது.

    இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை வரலாற்றிலேயே தற்போது தான் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கிறது.



    அமெரிக்காவில் தற்போது பொருளாதாரம் மந்தநிலை உள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு பங்குசந்தையை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

    மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை தொடர்ந்து உயர காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.60-க்கு விற்கிறது. #Gold
    தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை:

    சர்வதேச பொருளாதார சூழ்நிலை, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. டிசம்பர் 1-ந் தேதி தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.23, 240 ஆக இருந்தது. டிசம்பர் 8-ந் தேதி 1 சவரன் தங்கம் ரூ.24,080 ஆக அதிகரித்தது.

    அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே காணப்பட்டது. ஜனவரி 28-ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. அன்று சவரன் விலை ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. பிப்ரவரி 2-ந் தேதி அதிகபட்சமாக ரூ.25,552-க்கு விற்பனையானது.

    அதன்பிறகு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த 14-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்தது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் மீண்டும் உச்சத்தை தொட்டு பவுன் விலை ரூ. 25,384க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ25,520-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3190 ஆகும்.



    தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அமெரிக்காவில் உற்பத்தி குறியீடு சரிவு, பொருளாதாரத்தில் பின்னடைவு, பெரும் அளவில் வேலை நிறுத்தம், அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றம் போன்ற காரணங்களால் அங்குள்ள பெரிய முதலீட்டாளர்கள் மற்ற வர்த்தகம் சார்ந்த பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கின்றனர்.

    மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகவும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்கிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது.

    இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Gold #GoldPrice
    ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.
    பொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.

    பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும் நிலை ஏற்படும்.  கீழ்கண்ட கிழமைகளில் பட்சி அரசாட்சி செய்யும் நேரம் பார்த்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது.

    எந்த ராசிக்காரர்கள் எந்த கிழைமையில் தங்கம் வாங்கலாம் என்று பார்ப்போம்…..

    மேஷம் - ஞாயிறு, வெள்ளி
    ரிஷபம் - புதன், வெள்ளி
    மிதுனம் - திங்கள், வியாழன்
    கடகம் - ஞாயிறு, திங்கள், புதன்

    சிம்மம் - புதன், வெள்ளி
    கன்னி - சனி
    துலாம் - திங்கள், வெள்ளி
    விருச்சிகம் - சனி

    தனுசு - வியாழன்
    மகரம் - புதன், வெள்ளி
    கும்பம் - புதன், வெள்ளி, ஞாயிறு
    மீனம் - வியாழன், திங்கள்

    ஆகிய நாட்களில் சித்தயோகம் சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில், ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.
    பெரம்பூர் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை அவை வைக்கப்பட்டு இருந்த லாக்கரோடு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    திரு.வி.க. நகர்:

    சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகர் கந்தசாமி சாலையில் வசித்து வருபவர் தங்கவேலு (வயது 63). இவர் தமிழக அரசின் தொழிலாளர்துறை பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

    இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தங்கவேலு மனைவி மற்றும் மகளுடன் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கவேலுவின் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் தங்கவேலுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    வீட்டின் முதல் தளத்தில் 3 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை மர்மநபர்கள் அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர். அந்த லாக்கரில் சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    மதுரையில் இருந்து தங்கவேலு வந்த பிறகு தான் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றகனர்.

    மதுரை:

    மதுரை எச்.எம்.எஸ். காலனியில் உள்ள அமிதா நகரைச் சேர்ந்தவர் மணி மாறன். இவரது மனைவி ராஜேசுவரி (வயது 45).

    இவர், சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, சன்னதி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ராஜேசுவரி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். ஆள் நடமாட்டம் பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நகை பறிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். #EGATCup #MirabaiChanu
    இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

    காயத்தினால் அவதிப்பட்ட அவர் கடந்த 9 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தொடர் சிகிச்சைக்கு பின் அவர் காயத்திலிருந்து மீண்டார்.

    இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டார்.

    இதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளிப்பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #EGATCup #MirabaiChanu
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.25,264-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.192 சரிந்தது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.24 குறைந்தது.

    இன்று காலை தங்கம் விலை கிராம் ரூ.3158-க்கும், பவுன் ரூ.25,264க்கும் விற்பனையாது.

    வெள்ளி விலை கிராம் ரூ.43,20 ஆகவும், 1 கிலோ ரூ.43, 200 ஆகவும் இருந்தது.
    ×