search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,848-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 320 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தது. உச்சக்கட்டமாக 5-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலைக்கு தான் தங்கம் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக ரூ.216 குறைந்தது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 848 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,981-க்கு விற்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்றது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,064-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    பல மாதங்களாக பவுன் ரூ.23 ஆயிரத்துக்குள் தங்கம் விலை இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கடந்த (செப்டம்பர்) மாதம் பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக இருந்தது.

    பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 4-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 792 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.112 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 904-க்கு விற்றது.

    இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3008-க்கு விற்கிறது.

    அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் தங்கம் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பங்கு சந்தையை விட தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்துள்து. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்கிறது. #Gold
    சோழிங்கநல்லூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை சந்திப்கலா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கமலேஷ். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்கம்- வைர நகைகள் கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ஒரு சவரன் ரூ.23,840-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 488 ஆக இருந்தது. மறுநாள் ரூ.56 விலை உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 504 ஆக இருந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதிரடியாக பவுனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 840 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.42 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,980-க்கு விற்கிறது.

    கடந்த 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஓரிருநாளில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு கடும் விழ்ச்சி அடைந்தது. அதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ,,1900 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் 42 ரூபாய்க்கு விற்கிறது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,232-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் 25-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை சரிந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23 ஆயிரத்து 432 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,904-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரு.40.20 ஆகவும் உள்ளது. #Gold
    வால்டாக்ஸ் சாலை மதுக்கடையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 40 பவுன் தங்க கட்டியை கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #arrest

    ராயபுரம்:

    சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் கமல் (வயது 36). நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணியளவில் 300 கிராம் தங்க கட்டியை ஒரு பையில் வைத்தபடி தனது நண்பர் ஹேமந் என்பவருடன் கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கமல் அருகில் வந்து பேசிக் கொண்டிருந்தார். கமல் மது குடித்து முடித்து வீட்டுக்கு சென்று பையை பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க கட்டியை காணவில்லை.

    இது குறித்து கமல் ஏழுகிணறு போலீசில் புகார் செய்தார். கொள்ளையனை பிடிக்க பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன், ஏழுகிணறு இன்ஸ்பெக்டர் தவமணி, உதவி கமி‌ஷனர் சீனிவாசன், ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கமலுடன் அந்த மர்ம நபர் எடுத்த செல்பி படம் இருந்தது. அதை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வாகன சோதனையின்போது வால்டாக்ஸ் சாலை வழியாக வந்த அந்த மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் இடுப்பில் தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தான். கொள்ளை நடந்த 2 மணி நேரத்தில் அவன் போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில் அவனது பெயர் கர்ணன் என்பதும், கொண்டித்தோப்பு சுந்தர முதலி தெருவை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. #arrest

    துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. #ExpensiveShoes
    துபாய்:

    ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த ‘ஷு’ என்ற பெருமை பெற்றுள்ளது. அந்த ‘ஷு’ க்களில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.


    புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு ‘டெப்பி லிங்காம்’ ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்த காலணியாக கருதப்பட்டது. அதன் மதிப்பு ரூ.110 கோடியாகும். #ExpensiveShoes
    சித்தோடு அருகே வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

    ஈரோடு:

    சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் உமா சங்கர் (வயது 30).

    மேல் வீட்டில் உமாசங்கர் தனது குடும்பத்துடனும், கீழ் வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் உமா சங்கர் மற்றும் அவரது பெற்றோர் என அனைவரும் சேர்ந்து வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று விட்டனர்.

    ஊருக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மேல் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டின் உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவின் உள்ளே இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    இந்தியாவில் தங்கம் விலை எப்போதெல்லாம் உயர்கிறதோ அப்போதெல்லாம் பெண் சிசுக்களின் கொலை அதிகரிப்பதாக மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பின் புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. #India #BabyGirls #GoldRate
    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு ஒன்று, இந்தியாவில் பெண் சிசு கொலையையும், தங்கத்தின் விலை மாறுபாட்டையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1 லட்சம் பிறப்புக்களை ஒப்பீட்டுக்கு எடுத்தது.

    அதன்படி, தங்கம் விலை அதிகரிக்கும் காலத்தில் ஒரு மாதத்துக்கு உட்பட்ட வயதுள்ள பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்தது தெரியவந்துள்ளது. அதே சமயம் தங்கம் விலை அதிகரித்த காலத்தில், ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



    1980-ம் ஆண்டுகளுக்கு பின், ஸ்கேன் வசதியால் கருவிலேயே பல பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால், திருமணத்தின்போது வரதட்சணையாக தங்கம் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. #India #BabyGirls #GoldRate
    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #ISSFWCH #AnkurMittalGold
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டபுள் டிராப்’ பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் மிட்டல், சீன வீரர் யியாங் யங், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் ஆகியோர் 150-க்கு 140 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.

    மூவருக்கும் இடையே நடந்த ஷூட்-அவுட் முடிவில் அரியானாவைச் சேர்ந்த 26 வயதான அங்குர் மிட்டல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீரர் யியாங் யங் வெள்ளிப்பதக்கமும், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் அங்குர் மிட்டல், முகமது அசாப், ஷர்துல் விஹான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 409 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றது.

    இத்தாலி அணி 411 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், சீனா அணி 410 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றன. இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 3-வது இடம் வகிக்கிறது. #ISSFWCH #AnkurMittalGold
    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க 8 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. #RBI #RupeeAllTimeLow

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக உள்ளது.

    இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ‘கிடு கிடு’ வென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. அதைதொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

    எனவே பணமதிப்பு வீழ்ச்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி 2017-2018 நடப்பு ஆண்டில் 8.46 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளது.

     


    ரிசர்வ் வங்கி இது குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 566.23 டன் தங்கம் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 557.77 டன் தங்கம் மட்டுமே இருப்பில் இருந்தது.

    9 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் போது சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து 200 டன் தங்கத்தை விலைக்கு வாங்கியது. #RBI #Gold

    ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    கவுகாத்தி:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஹீமா தாஸ் உள்ளிட்ட மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், வேகமாக ஓடி சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று நடந்த மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் ஹீமா தாஸ் உள்ளிட்ட இந்திய மகளிர் குழுவினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் ஹீமா தாஸ், மச்சித்ரா, சரிதாபென் கெய்க்வாட் மற்றும் கரோத் உள்ளிட்ட மகளிர் குழுவினர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திறமையாக செயல்பட்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    ×