search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் சமயோசிதம் மற்றும் கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    கொல்கத்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். 

    100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுகளை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது. 6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார்.

    இதற்கிடையே, பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா மற்றும் கொல்கத்தாவின் ஹெப்டத்லான் இளவரசியான ஸ்வப்னா பர்மனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இதன்மூலம் நம் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,888-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 488 ஆக இருந்தது. பின்னர் விலை அதிகரித்து நேற்று முன்தினம் பவுன் ரூ.22 ஆயிரத்து 888-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.22 ஆயிரத்து 848 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 968 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,871-க்கு விற்கிறது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதும் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.40-க்கு விற்கிறது.
    ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி புதிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க தங்கம் வென்றுள்ளீர்கள். ஆசிய விளையாட்டு போட்டியில் நீங்கள் நிகழ்த்திய சாதனையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,888-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 664-க்கு விற்றது. இன்று அதிரடியாக பவுனுக்கு மேலும் ரூ.224 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 888 ஆக உள்ளது.

    கிராமுக்கு ரூ.28 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,861-க்கு விற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, திருமண சீசன் மற்றும் தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது.
    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மஞ்சூர்:

    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் சோத்தாராம்(வயது 47). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ளது. நேற்று காலை 8.15 மணிக்கு வழக்கம்போல் சோத்தாராம் கடையை திறந்தார். அப்போது அங்கு வலதுபுற சுவரில் பெரிய அளவில் துளையிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு கடையை ஒட்டியுள்ள டீக்கடை ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் கணேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர், தனது கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் டீக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, சுவரில் துளையிட்டு அருகிலுள்ள அடகு கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடனே எமரால்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடகு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், சுவரில் துளையிட்டு கடைக்குள் நுழைவதும், கண்காணிப்பு கேமராவை சுவரை நோக்கி திருப்பி வைத்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் மில்டன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஜாரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த மோப்பநாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். 
    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. #AsiansGames2018 #BajrangPunia
    சண்டிகர்:
       
    ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற புனியாவுக்கு வாழ்த்துக்கள். அரியானா மாநில அரசு சார்பில் பஜ்ரங் புனியாவுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்க உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #BajrangPunia
    ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்போம் என்று இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #HarendraSingh #Hockeycoach
    ஜகர்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நாளை முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. வருகிற 20-ந் தேதி நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.

    போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆக்கி அணி இதுவரை தொடர்ச்சியாக 2 முறை தங்கப்பதக்கத்தை வென்றதில்லை. தங்கப்பதக்கத்தை மீண்டும் வென்று அந்த சரித்திரத்தை நாங்கள் படைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதேநேரத்தில் அதீத நம்பிக்கை கொள்ளவில்லை. எந்தவொரு எதிரணியையும் எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது என்பது எங்களுக்கு தெரியும். இந்த போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.  #HarendraSingh #Hockeycoach
    இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னையில் வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
    சென்னை:

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இருந்து பல்வேறு அரிய பொருட்கள் கடல் மார்க்கமாகவும், விமான போக்குவரத்து மூலமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. அதனை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுப்பதற்கும், கடத்தப்பட்டவற்றை பறிமுதல் செய்வதிலும் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் 11.15 கிலோ எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.



    இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்திய 3 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 55 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    மதுரை:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்டர் விசுவாசராஜா. இவரது மனைவி ராணி (வயது 45). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக ராணி விடுமுறை நாட்களில் மதுரைக்கு வந்து செல்வார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து 55 பவுன் நகையை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு ராணி மதுரைக்கு வந்தார். மகளை பார்ப்பதற்காக சிம்மக்கல்லில் இருந்து ஷேர் ஆட்டோவில் அண்ணா நகருக்கு சென்றார்.

    ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததை பயன்படுத்திக்கொண்ட 2 பெண்கள், ராணி வைத்திருந்த பேக்கை நைசாக திருடிக் கொண்டு தப்பினான்.

    சிறிது நேரம் கழித்து நகை இருந்த பை திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை புதுவிளாங்குடி, அண்ணாதெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சித்திரைச்செல்வி (47). இவர் நேற்று முனிச்சாலையில் இருந்து கீழவாசலுக்கு ஷேர் ஆட்டோவில் வந்தார்.

    அப்போது ஷேர் ஆட்டோவில் அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் சித்திரைச்செல்வியின் பர்சை திருடிக் கொண்டு நைசாக தப்பினார். அதில் ரூ.1,500 ரொக்கம், ஏ.டி.எம். கார்டு, வீட்டு சாவி இருந்தது.

    இது குறித்து விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை முத்துப்பட்டி, பாரதியார் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஈஸ்வர்லால் (வயது 67). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வைர மூக்குத்தி, 150 கிராம் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    கடந்த 22-ந் தேதி வீடு திரும்பிய ஈஸ்வர்லால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். #LakshyaSen
    புதுடெல்லி:

    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே கவுதம் தாக்கர் (1965-ம் ஆண்டு), பி.வி.சிந்து (2012-ம் ஆண்டு) ஆகியோர் சாம்பியன் ஆகி இருக்கிறார்கள்.

    உத்தரகாண்ட்டை சேர்ந்த 16 வயதான லக்‌ஷயா சென் கூறுகையில், ‘இந்த போட்டியில் நெருக்கடியின்றி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குன்லாட்டை வீழ்த்தினேன். தங்கப்பதக்கத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் எனது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்’ என்றார்.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,792-க்கு விற்பனையாகிறது.

    சென்னை, ஜூலை. 18-

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பவுன் ரூ.23 ஆயிரத்தை கடந்து விற்று வந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக சரிந்து ரூ.23 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிந்து நேற்று பவுன் ரூ.23 ஆயிரஹ்து 16 ஆக இருந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.224 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 792 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,849-க்கு விற்கிறது.

    வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.500 குறைந் துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 700 ஆகவும் ஒரு கிராம் ரூ.41.70-க்கு விற்கப்படுகிறது.

    ×