search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95209"

    இனி வரும் நாட்களில் முட்டை விற்பனை மற்றும் இருப்பை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கோழிப் பண்னணையாளர்கள் தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.70 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் முட்டை நுகர்வு குறைந்து, முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டன.

    இதனையடுத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 70 காசுகளில் இருந்து ஒரே நாளில் 15 காசுகள் குறைக்கப்பட்டு, 4 ரூபாய் 55 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இனி வரும் நாட்களில் முட்டை விற்பனை மற்றும் இருப்பை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கோழிப் பண்னணையாளர்கள் தெரிவித்தனர்.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,216-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.36 ஆயிரத்து 112-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 216-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 527 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.69 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்கிறது.
    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வுடன் ரூ. 4.70 என நிர்ணயிக்கப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 4.65 ஆக இருந்தது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

    முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாலும், இங்கும் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வுடன் ரூ. 4.70 என நிர்ணயிக்கப்பட்டது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,328-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.464 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 40-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 328-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 541 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கிறது. தங்கம் விலை இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.752 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி மற்றும் கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த வாரம் 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.600-க்கு விற்பனையானது. 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    இன்று 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ. 900 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.1500 முதல் ரூ.1600 வரை விற்பனையானது. இதனால் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 80-க்கு விற்பனையானது.

    காய்கறி மொத்த மார்க்கெட்டிலேயே தக்காளி சில்லரை விலையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் மற்ற இடங்களில் மேலும் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,000-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. கடந்த 1-ந்தேதி தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து 576-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,500 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60-க்கு விற்றது. தங்கம் விலையில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து சரிவு ஏற்பட்டு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் நிலை இருந்தது.

    ஆனால் அதன் பின் விலை உயர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வந்ததால் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,064-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 944-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 64-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 508 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.68 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

    பால் உற்பத்தியாளர்களி டம் இருந்து இவைகள் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன.

    ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஹட்சன் (ஆரோக்கியா), ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    ஆவின் பால் புல்கிரீம் லிட்டர் ரூ.45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.37க்கு விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் ரூ.54-ல் இருந்து ரு.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-ல் இருந்து ரு.54 ஆகவும் உயருகிறது.

    இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:-

    தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வருடத்தில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும். இதனை அரசு தடுக்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் செங்குட்டுவேலு மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-


    ஆவின் பால் கொள்முதல் விலை 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்படி பசும்பால் லிட்டர் ரூ.28-க்கும், எருமை பால் ரு.32-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    தற்போது மாட்டு தீவனம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருத்துவ செலவு மற்றும் பராமரிப்பு செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    எனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.16 அதிகமாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கடந்த முறை 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டது. விற்பனை விலை ரூ.10அதிகமானது.

    5 வருடங்களாக பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை. பால் மாடு வளர்ப்பவர்கள் அதிக செலவு காரணமாக அதிக சுமையை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை குறைந்தது லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலம் மார்க்கெட்களில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த தக்காளி சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையை கேட்டு அதிர்ச்சி அடையும் பொது மக்கள் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக வாய்ப்புள்ளது என்றார்.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,722-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 5-ந் தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 96 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 416 ஆக இருந்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.16 உயர்ந்து 24 ஆயிரத்து 432-க்கு விற்றது.

    இன்றும் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 722 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.37 ஆதிகரித்து ரூ.3,091-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.40 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,416-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3-ந் தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 936 ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ.24 ஆயிரத்து 304 ஆக இருந்தது.

    இன்று மீண்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 416 ஆக உள்ளது. ஒரு கிராம் ரு.3,052-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.10 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.24,114-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்தது. 24-ந் தேதி பவுன் ரூ.24 ஆயிரத்து 656-க்கு விற்றது. அதையடுத்து விலை படிப்படியாக குறைந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24 ஆயிரத்து 392 ஆக இருந்தது. இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு மேலும் ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 144 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,018-க்கு விற்கிறது.

    பங்கு சந்தை மீதான முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தை நிலவரம் போன்றவை காரணமாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும் ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது.
    ×