search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95209"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் 24,040-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 80 ஆக இருந்தது. பின்னர் விலை சரிந்தது. நேற்று பவுன் ரூ.23 ஆயிரத்து 986-க்கு விற்கப்பட்டது.

    இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.144 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 40 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3005-க்கு விற்கிறது.

    16-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்துக்கு 80-க்கு விற்றது. தற்போது 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.40-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,704-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. கடந்த 11-ந்தேதி ஒருபவுன் ரூ.24 ஆயிரத்து 192 ஆக இருந்தது.

    பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 944-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு 56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 888 ஆக இருந்தது.

    இன்று அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 704 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,963-க்கு விற்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது திருமண சீசன் இல்லாததால் தங்கம் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.39.80-க்கு விற்கிறது.
    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது. #KoyambeduMarket
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது.

    சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாயாக குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது.

    கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட பச்சைப்பட்டானி தற்போது ரூ.35-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் சின்ன வெங்காயம், காலிபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் மிகவும் குறைந்து உள்ளன.

    தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிக அளவில் உள்ளதால் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-

    தக்காளி - ரூ.13
    பெ.வெங்காயம் -ரூ. 10
    சி.வெங்காயம் - ரூ.40
    கத்திரிக்காய்-ரூ.15
    வெண்டை- ரூ.15
    பச்சை பட்டாணி-ரூ.35
    கேரட்-ரூ.8
    பீன்ஸ்-ரூ.30
    முள்ளங்கி-ரூ.8
    முட்டைகோஸ்-ரூ.8
    கொத்தவரை- ரூ.15
    இஞ்சி- ரூ.55
    ப.மிளகாய்- ரூ.20
    காலி பிளவர்- ரூ.10
    உருளை- ரூ.25

    காய்கறி விலை குறைந்தது பற்றி கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வழக்கமாக பச்சை காய்கறிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 75 முதல் 80 லாரி லோடுகளில் விற்பனைக்குவரும். விளைச்சல் அதிகம் மற்றும் சீசன் காரணமாக தற்போது 100 முதல் 120 லோடுகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இதனால் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல் வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 50 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது. வரும் நாட்களில் காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
    பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார். #PetrolDiesel #PriceHike #Modi
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

    கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய மந்திரி காலித் அல் பாலி, ஐக்கிய அரபு மந்திரி மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



    மேலும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். எரிசக்தி துறையில், வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலைக்காக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. பணவீக்கம் உயருகிறது. இவ்விஷயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவை.

    வளரும் நாடுகளில், அதிக நிலப்பரப்பில் எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இதில், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் வளர்ந்த நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எரிவாயு துறையில் வினியோக பணியில் தனியாரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

    எண்ணெய் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி நாடுகளே தீர்மானிக்கின்றன. போதுமான உற்பத்தி இருந்தபோதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எண்ணெய் விலை குறைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மற்ற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கூட்டு நிலவுகிறது. அதுபோல், எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி நாடுகளுக்கும், நுகர்வு நாடுகளுக்கும் இடையே கூட்டு நிலவினால், மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து, விலை குறைய வாய்ப்புள்ளது.

    மேலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #PetrolDiesel #PriceHike #Modi 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,176-க்கு விற்பனையாகிறது. #gold
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உச்ச கட்டமாக கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 64-க்கு விற்றது.

    அதன்பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.248 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது.

    கிராமுக்கு ரூ.31 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,022-க்கு விற்கிறது. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. அதைதொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    அதன் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு காரணமாகவும், திருமண முகூர்த்தம் மற்றும் தீபாவளி பண்டிகை போன்றவற்றாலும் தங்கத்தின் தேவை அதிகரித்தது. அதனால் விலை உயருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ. 41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கிறது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,848-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 320 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தது. உச்சக்கட்டமாக 5-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலைக்கு தான் தங்கம் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக ரூ.216 குறைந்தது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 848 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,981-க்கு விற்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்றது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,064-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    பல மாதங்களாக பவுன் ரூ.23 ஆயிரத்துக்குள் தங்கம் விலை இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கடந்த (செப்டம்பர்) மாதம் பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக இருந்தது.

    பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 4-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 792 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.112 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 904-க்கு விற்றது.

    இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3008-க்கு விற்கிறது.

    அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் தங்கம் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பங்கு சந்தையை விட தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்துள்து. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்கிறது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ஒரு சவரன் ரூ.23,840-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 488 ஆக இருந்தது. மறுநாள் ரூ.56 விலை உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 504 ஆக இருந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதிரடியாக பவுனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 840 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.42 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,980-க்கு விற்கிறது.

    கடந்த 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஓரிருநாளில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு கடும் விழ்ச்சி அடைந்தது. அதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ,,1900 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் 42 ரூபாய்க்கு விற்கிறது. #Gold
    கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GasCylinder #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை திடீர் திடீரென்று உயர்த்தப்பட்டு மக்கள் மீது பொருளாதார சுமை ஏறுவதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நேற்றைய தினம் இந்திய ஆயில் நிறுவனம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது மானியமில்லாத கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மானிய விலை கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம், மானியம் இல்லா சிலிண்டர் என எதுவாக இருந்தாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை, மக்கள் படும் கஷ்டம், சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    எனவே, மத்திய அரசு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலாவது உடனடியாக எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறுஅவர்கூறியுள்ளார். 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,232-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் 25-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை சரிந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23 ஆயிரத்து 432 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,904-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரு.40.20 ஆகவும் உள்ளது. #Gold
    42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர். #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    கடந்த மாதத்தில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வந்து சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 41 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுகளுக்கும் விற்பனை ஆனது.

    இதில் திடீர் திருப்பமாக நேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நாள் விலையிலேயே நேற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை ஆனது. கடைசியாக கடந்த மாதம் 8-ந் தேதி பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்தது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.  #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,888-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 488 ஆக இருந்தது. பின்னர் விலை அதிகரித்து நேற்று முன்தினம் பவுன் ரூ.22 ஆயிரத்து 888-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.22 ஆயிரத்து 848 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 968 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,871-க்கு விற்கிறது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதும் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.40-க்கு விற்கிறது.
    ×